பாகன் டத்தோ மாவட்டம்
பாகன் டத்தோ மாவட்டம் (Bagan Datuk District) என்பது மலேசியா, பேராக் மாநிலத்தின் தென்மேற்குப் பகுதியில் அமைந்துள்ள ஒரு மாவட்டம் ஆகும். இந்த மாவட்டம் 951 சதுர கிலோமீட்டர் பரப்பளவைக் கொண்டுள்ளது. இதன் மக்கள் தொகை 70,300 ஆகும்.
பாகன் டத்தோ மாவட்டம் அமைவிடம் | |
ஆள்கூறுகள்: 3°55′N 100°55′E / 3.917°N 100.917°E | |
நாடு | மலேசியா |
மாநிலம் | பேராக் |
மாவட்டம் | பாகன் டத்தோ |
நகராட்சி | பாகன் டத்தோ நகராட்சி |
அரசு | |
• மாவட்ட அதிகாரி | அம்சா உசேன் (Hamzah Hussin)[1] |
பரப்பளவு | |
• மொத்தம் | 951.52 km2 (367.38 sq mi) |
மக்கள்தொகை (2016) | |
• மொத்தம் | 70,300 |
• மதிப்பீடு (2015) | 71,300 |
நேர வலயம் | மலேசிய நேரம் ஒ.ச.நே + 08:00 |
அஞ்சல் குறியீடு | 36100 - 36400 |
தொலைபேசி எண் | +6-05 |
இந்த மாவட்டத்தின் வடக்கில் இருக்கும் பேராக் ஆறு, மஞ்சோங் மற்றும் மத்திய பேராக் பகுதிகளைப் பிரிக்கின்றது. தெற்கில் இருக்கும் பெர்ணம் ஆறு, சிலாங்கூர் மாநிலத்தின் சபாக் பெர்ணம் நகரத்தைப் பிரிக்கின்றது. வடகிழக்கில் முவாலிம் மற்றும் ஹீலிர் பேராக் மாவட்டங்கள் அமைந்து உள்ளன.
இந்த மாவட்டத்தின் தலைநகரம் பாகன் டத்தோ நகரம். இந்த மாவட்டத்தில் அமைந்துள்ள இதர இடங்கள் ஊத்தான் மெலிந்தாங்; ருங்குப். பேராக் மாநிலத்தில் மிகப்பெரிய அளவில் தேங்காய்கள் இங்குதான் உற்பத்தியாகின்றன.[2]
வரலாறு
தொகுபாகன் டத்தோ தொடக்கக் காலத்தில் கம்போங் பாசாங் அப்பி (Kampung Pasang Api) எனும் இடத்தில் நிறுவப்பட்டது. பாகன் டத்தோ இப்போது இருக்கும் பகுதி முன்பு சுங்கை கெலிங் என்று அழைக்கப்பட்டது.[2]
2016 ஜனவரி மாதம், பேராக் சுல்தான், பேராக் முதலமைச்சர் மற்றும் பேராக் மாநிலச் செயலாளர் ஆகியோரின் ஒப்புதலுக்குப் பிறகு, பாகன் டத்தோ பகுதி பேராக் மாநிலத்தில் தன்னாட்சி பெற்ற ஒரு துணை மாவட்டமாக அறிவிக்கப்பட்டது.[3]
பின்னர் 2016 ஜூன் 15-ஆம் தேதி, ஒரு முழு மாவட்டமாகத் தகுதி உயர்த்தப் பட்டது. அடுத்து 2016 டிசம்பர் 29-ஆம் தேதி, பாகன் டத்தோ எனும் பெயர் பாகன் டத்துக் என மாற்றம் செய்யப்பட்டது.[4]
நிர்வாகப் பிரிவுகள்
தொகுபாகன் டத்தோ மாவட்டம் 4 முக்கிம்களாகப் பிரிக்கப்பட்டு உள்ளது. ஒரு மாவட்டத்தின் ஒரு துணைப் பிரிவு முக்கிம் (Mukim) என அழைக்கப் படுகின்றது.[5]
- பாகன் டத்தோ (Bagan Datuk) முன்பு (Bagan Datoh)
- ஊத்தான் மெலிந்தாங் (Hutan Melintang)
- ருங்குப் (Rungkup)
- தெலுக் பாரு (Teluk Bharu)
இந்த மாவட்டத்தில் 46 கிராமங்கள் உள்ளன. தவிர 8 சீனர் மீன்பிடி கிராமங்களும் உள்ளன.
மலேசிய நாடாளுமன்றம்
தொகுமலேசிய நாடாளுமன்றத்தின் மக்களவையில் (டேவான் ராக்யாட்) பாகன் டத்தோ மாவட்டத்தின் நாடாளுமன்றத் தொகுதிகள்.
நாடாளுமன்றம் | தொகுதி | நாடாளுமன்ற உறுப்பினர் | கட்சி |
---|---|---|---|
P75 | பாகன் டத்தோ | அகமட் சாகிடி ஹமிடி | பாரிசான் நேசனல் (அம்னோ) |
P76 | தெலுக் இந்தான் | நிகா கோர் மிங் | பாக்காத்தான் ஹரப்பான் (ஜ.செ.க) |
பேராக் மாநிலச் சட்டமன்றம்
தொகுபேராக் மாநிலச் சட்டமன்றத்தில் பாகன் டத்தோ மாவட்டப் பிரதிநிதிகள்; (2018-ஆம் ஆண்டு பொதுத் தேர்தல் முடிவுகள்):
நாடாளுமன்றம் | மாநிலம் | தொகுதி | சட்டமன்ற உறுப்பினர் | கட்சி |
---|---|---|---|---|
P75 | N53 | ருங்குப் | சாருல் சாமான் யஹ்யா | பாரிசான் நேசனல் (அம்னோ) |
P75 | N54 | ஊத்தான் மெலிந்தாங் | கைருடின் தர்மிசி | பாரிசான் நேசனல் (அம்னோ) |
P76 | N56 | சங்காட் ஜோங் | ,உகமட் அசார் ஜமாலுடின் | பாரிசான் நேசனல் (அம்னோ) |
மேலும் காண்க
தொகுமேற்கோள்கள்
தொகு- ↑ "Bagan Datoh to be known as Bagan Datuk - Nation - The Star Online". www.thestar.com.my.
- ↑ 2.0 2.1 Said, Saifullah Ahmad & Mohamad Hafizi Mohd. "Bagan Datuk mengorak langkah". http://www.sinarharian.com.my/nasional/bagan-datuk-mengorak-langkah-1.828158.
- ↑ "Bagan Datoh officially declared a sub-district - Nation - The Star Online".
- ↑ SAID, MOHAMAD HAFIZI MOHD. "Pulau Sembilan kini bawah Bagan Datoh".
- ↑ "Bagan Datoh daerah ke-12 Perak". Archived from the original on 2017-12-16. பார்க்கப்பட்ட நாள் 2021-05-06.
வெளி இணைப்புகள்
தொகு- பொதுவகத்தில் Bagan Datuk District தொடர்பாக ஊடகக் கோப்புகள் உள்ளன.