யாங் டி பெர்துவா நெகிரி

பினாங்கு, மலாக்கா, சபா, சரவாக் ஆகிய மாநிலங்களின் (கவர்னர்) ஆளுநரைக் குறிப்பிடும் பதவி.
(யாங் டி பெர்துவா இலிருந்து வழிமாற்றப்பட்டது)

யாங் டி பெர்துவா நெகிரி (ஆங்கிலம்: Yang di-Pertua Negeri; மலாய்: Yang di-Pertua Negeri) என்பது மன்னர்களின் ஆளுமை இல்லாத மலேசிய மாநிலங்களான பினாங்கு, மலாக்கா, சபா, சரவாக் ஆகிய மாநிலங்களின் (கவர்னர்) ஆளுநரைக் குறிப்பிடும் பதவி.

இவரை மாநில ஆளுநர் (Yang di-Pertua Negeri) என்று அழைப்பார்கள். 1957-ஆம் ஆண்டு, மலேசியா சுதந்திரம் அடைவதற்கு முன்பு, மலாக்கா, பினாங்கு, சரவாக், சபா மாநிலங்களின் ஆளுநரை கவர்னர் என்று அழைத்தார்கள்.[1]

பொது

தொகு

சிலாங்கூர், திரங்கானு, கெடா, கிளாந்தான், பகாங், ஜொகூர், பேராக் மாநிலங்களின் அரசர்களைச் சுல்தான்கள் என்று அழைக்கிறார்கள். நெகிரி செம்பிலான் மாநிலத்தின் அரசரை யாங் டி பெர்துவான் பெசார் (Yang di-Pertuan Besar) என்றும், பெர்லிஸ் மாநிலத்தின் அரசரை ராஜா (Raja) என்றும் அழைப்பது வழக்கம்.

ஒரு மாநிலத்தின் யாங் டி பெர்துவாவை, மலேசியாவின் மாமன்னர் யாங் டி பெர்துவான் அகோங் அவர்கள் நியமனம் செய்வார். மலேசியப் பிரதமருடன் கலந்தாலோசித்த பிறகு, அந்த நியமனத்தைச் செய்வார். ஒரு மாநிலத்தின் யாங் டி பெர்துவா, நான்கு ஆண்டு காலம் பதவி வகிப்பார். இவரை மாண்புமிகு Tuan (Yang Terutama (T.Y.T.) என்று அழைக்க வேண்டும்.

மக்களாட்சி முறைமை

தொகு

இந்தப் பதவி நான்கு ஆண்டுகளுக்கு ஒரு முறை மலேசிய மாமன்னர் யாங் டி பெர்துவான் அகோங் அவர்களால் நியமிக்கப்படும் பதவி ஆகும். அந்தந்த மாநிலங்களின் முதல்வர்களின் சம்மதத்தைப் பெற்ற பின்னர், யாங் டி பெர்துவா நெகிரி நியமிக்கப் படுகிறார்கள்.[2]

பினாங்கு, மலாக்கா, சபா, சரவாக் ஆகிய மாநிலங்களில், யாங் டி பெர்துவா நெகிரி என்பவர்; நாடாளுமன்ற மக்களாட்சி முறைமையில் மாநிலத் தலைவராகச் செயல் படுகிறார்.

செயல்பாடுகள்

தொகு

மாநிலச் சட்டமன்றத்தில் யாங் டி பெர்துவா நெகிரியின் முக்கியமான செயல்பாடுகள்:

  • பெரும்பான்மை பெற்ற பிரதான கட்சியின் தலைவரை முதலமைச்சராக (ஆங்கிலம்: Ketua Menteri; மலாய்: Chief Minister) நியமிப்பது;
  • மாநிலத்தின் நிர்வாகக் குழு உறுப்பினர்களை (Executive Council) நியமிப்பது; (சபா மற்றும் சரவாக் மாநிலங்களில் அமைச்சரவை (Cabinet) என அழைக்கப்படுகிறது);
  • மாநில அரசாங்கத்தின் துறைத் தலைவர்களை நியமிப்பது;
  • மாநிலச் சட்டமன்றம் கலைக்கப் படுவதற்கு ஒப்புதல் அளிப்பது;
  • மாநிலச் சட்டமன்றம் கலைக்கப் படுதலைத் தடுத்து நிறுத்துவது;
  • அரச விருதுகள்; அரச பதக்கங்கள் வழங்குவது;
  • மாநிலத்தில் செய்யப்பட்ட குற்றங்களுக்கு மன்னிப்பு வழங்குவது; (இந்தக் குற்றங்களில் இராணுவக் குற்றங்கள் மற்றும் சிரியா குற்றங்களுக்கு யாங் டி பெர்துவான் அகோங் மட்டுமே மன்னிப்பு வழங்க இயலும்).

விளக்கம்

தொகு

யாங் டி பெர்துவா நெகிரி பட்டியல்

தொகு

யாங் டி பெர்துவாக்களின் பட்டியல்:

மாநிலம் யாங் டி பெர்துவா பதவி அமர்வு பட்டியல்
  மலாக்கா அலி ரோஸ்தாம் 04.06.2020 யாங் டி பெர்துவா மலாக்கா
  பினாங்கு அகமது பூசி அப்துல் ரசாக் 01.05.2021 யாங் டி பெர்துவா பினாங்கு
  சபா ஜுஹார் மகிருடின் 01.01.2011 யாங் டி பெர்துவா சபா
  சரவாக் அப்துல் தாயிப் முகமட் 01.03.2014 யாங் டி பெர்துவா சரவாக்

மேற்கோள்கள்

தொகு
  1. "Peranan Tuan Yang Terutama Yang di-Pertua Negeri Melaka" (in Malay). பார்க்கப்பட்ட நாள் 10 ஜனவரி 2015. {{cite web}}: Check date values in: |accessdate= (help)CS1 maint: unrecognized language (link)
  2. "Section 19A, Eighth Schedule, Federal Constitution of Malaysia" (PDF). Archived from the original (PDF) on 10 அக்டோபர் 2017. பார்க்கப்பட்ட நாள் 29 February 2020.

மேலும் காண்க

தொகு

வெளி இணைப்புகள்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=யாங்_டி_பெர்துவா_நெகிரி&oldid=3629569" இலிருந்து மீள்விக்கப்பட்டது