மலாக்கா ஆளுநர்
மலாக்கா ஆளுநர் அல்லது யாங் டி பெர்துவா மலாக்கா (ஆங்கிலம்: Malacca Governor; மலாய்: Yang di-Pertua Negeri of Malacca) என்பவர் மலேசிய மாநிலமான மலாக்கா மாநிலத்தின் ஆளுநர் எனும் அரசத் தலைவர் ஆவார். இவரை மாண்புமிகு (ஆங்கிலம்: His Excellency; மலாய்: Tuan Yang Terutama (TYT) எனும் மரியாதை அடைமொழியில் அழைப்பது வழக்கம்.
மலாக்கா யாங் டி பெர்துவா Yang di-Pertua Negeri Malacca | |
---|---|
வாழுமிடம் | Pejabat TYT Yang di-Pertua Negeri Melaka, Jalan Seri Negeri, Ayer Keroh, 75500 Melaka |
நியமிப்பவர் | யாங் டி பெர்துவான் அகோங் |
முதலாவதாக பதவியேற்றவர் | லியோங் இயூ கோ |
உருவாக்கம் | 31 ஆகஸ்டு 1957 |
இணையதளம் | www |
மலாக்கா மாநிலத்தின் தற்போதைய ஆளுநர் அலி ருஸ்தாம் (Ali Rustam). இவர் 2020 ஜூன் 4-ஆம் தேதி பதவியேற்றார்.
பொது
தொகுயாங் டி பெர்துவா நெகிரி (ஆங்கிலம்: Yang di-Pertua Negeri; மலாய்: Yang di-Pertua Negeri) என்பவர் மலேசிய மாநிலங்களான பினாங்கு, மலாக்கா, சபா, சரவாக் ஆகிய மாநிலங்களின் ஆளுநரைக் குறிப்பிடும் பதவி.
இந்தப் பதவி நான்கு ஆண்டுகளுக்கு ஒரு முறை மலேசிய மாமன்னர் யாங் டி பெர்துவான் அகோங் அவர்களால் நியமிக்கப்படும் பதவி ஆகும். அந்தந்த மாநிலங்களின் ஆளுநர்களின் சம்மதத்தைப் பெற்ற பின்னர், யாங் டி பெர்துவா நெகிரி நியமிக்கப் படுகிறார்கள்.[1]
நிர்வாகம்
தொகுமாநிலச் சட்டமன்றத்தில் யாங் டி பெர்துவா நெகிரியின் முக்கியமான செயல்பாடுகள்:
- பெரும்பான்மை பெற்ற பிரதான கட்சியின் தலைவரை முதலமைச்சராக (ஆங்கிலம்: Ketua Menteri; மலாய்: Chief Minister) நியமிப்பது;
- மாநிலத்தின் நிர்வாகக் குழு உறுப்பினர்களை (Executive Council) நியமிப்பது; (சபா மற்றும் சரவாக் மாநிலங்களில் அமைச்சரவை (Cabinet) என அழைக்கப்படுகிறது);
- மாநில அரசாங்கத்தின் துறைத் தலைவர்களை நியமிப்பது;
- மாநிலச் சட்டமன்றம் கலைக்கப் படுவதற்கு ஒப்புதல் அளிப்பது;
- மாநிலச் சட்டமன்றம் கலைக்கப் படுதலைத் தடுத்து நிறுத்துவது;
- அரச விருதுகள்; அரச பதக்கங்கள் வழங்குவது;
- மாநிலத்தில் செய்யப்பட்ட குற்றங்களுக்கு மன்னிப்பு வழங்குவது; (இந்தக் குற்றங்களில் இராணுவக் குற்றங்கள் மற்றும் சிரியா குற்றங்களுக்கு யாங் டி பெர்துவான் அகோங் மட்டுமே மன்னிப்பு வழங்க இயலும்).
மலாக்கா யாங் டி பெர்துவா பட்டியல்
தொகு1957-ஆம் ஆண்டு தொடங்கி 2021-ஆம் ஆண்டு வரையிலான மலாக்கா மாநிலத்தின் யாங் டி பெர்துவா பட்டியல்:[2] (2022 ஆகஸ்டு மாதம், இற்றை செய்யப்பட்டது.)
நிலை | தோற்றம் | யாங் டி பெர்துவா | பதவி காலம் | ||
---|---|---|---|---|---|
பதவியேற்பு | முடிவு | சேவை செய்த காலம் | |||
1 | லியோங் இயூ கோ | 31 ஆகத்து 1957 | 30 ஆகத்து 1959 | 1 ஆண்டு, 364 நாட்கள் | |
2 | அப்துல் மாலிக் யூசுப் | 31 ஆகத்து 1959 | 30 ஆகத்து 1971 | 11 ஆண்டுகள், 364 நாட்கள் | |
3 | அப்துல் அசிஸ் அப்துல் மஜித் | 31 ஆகத்து 1971 | 9 மே 1975 | 3 ஆண்டுகள், 251 நாட்கள் | |
4 | சையத் சாகிருதீன் சையத் அசன் | 23 மே 1975 | 30 நவம்பர் 1984 | 9 ஆண்டுகள், 191 நாட்கள் | |
5 | சையத் அகமது சையத் மகமூத் சகாபுதீன் | 4 திசம்பர் 1984 | 3 சூன் 2004 | 19 ஆண்டுகள், 182 நாட்கள் | |
6 | முகமது கலீல் யாக்கோப் | 4 சூன் 2004 | 4 சூன் 2020 | 16 ஆண்டுகள், 0 நாட்கள் | |
7 | முகமது அலி ரோஸ்தாம் | 4 சூன் 2020 | இன்றும் பதவியில் | 4 ஆண்டுகள், 133 நாட்கள் |
மேற்கோள்கள்
தொகு- ↑ "Section 19A, Eighth Schedule, Federal Constitution of Malaysia" (PDF). Archived from the original (PDF) on 10 அக்டோபர் 2017. பார்க்கப்பட்ட நாள் 29 February 2020.
- ↑ "TYT Yang di-Pertua Malacca State". Malacca State Government. 24 August 2015. பார்க்கப்பட்ட நாள் 2016-06-17.
மேலும் காண்க
தொகுவெளி இணைப்புகள்
தொகு- Pejabat TYT Yang di-Pertua Negeri Melaka மலாக்கா ஆளுநரின் அதிகாரப்பூர்வ இணையத்தளம்