பகாங் மாநில சட்டமன்றம்

மலேசியா, பகாங் மாநிலத்தின் சட்டப் பேரவை

பகாங் மாநில சட்டமன்றம் அல்லது பகாங் சட்டப் பேரவை (மலாய்: Dewan Undangan Negeri Pahang; ஆங்கிலம்: Pahang State Legislative Assembly; சீனம்: 彭亨州立法议会; ஜாவி: ديوان اوندڠن نڬري ڤهڠ) என்பது மலேசியா, பகாங் மாநிலத்தின் சட்டப் பேரவையாகும்.

பகாங்
மாநில சட்டமன்றம்
Pahang State Legislative Assembly
Dewan Undangan Negeri Pahang
15-ஆவது சட்டப் பேரவை
மரபு சின்னம் அல்லது சின்னம்
பகாங் மாநில
சட்டமன்ற சின்னம்
வகை
வகை
வரலாறு
தோற்றுவிப்பு22 ஆகஸ்டு 1959
தலைமை
இளவரசர்
துங்கு அசனல் இப்ராகிம் ஆலாம் சா
(Tengku Hassanal Ibrahim Alam Shah)
15 சனவரி 2019 (2019-01-15) முதல்
(காலி)
14 அக்டோபர் 2022 (2022-10-14) முதல்
துணைப் பேரவைத் தலைவர்
(காலி)
14 அக்டோபர் 2022 (2022-10-14) முதல்
வான் ரோஸ்டி வான் இஸ்மாயில்
(Wan Rosdy Wan Ismail), பாரிசான்-அம்னோ
12 மே 2018 (2018-05-12) முதல்
எதிர்க்கட்சித் தலைவர்
துவான் இப்ராகிம் துவான் இசுமாயில்
(Tuan Ibrahim Tuan Man), பெரிக்காத்தான்பாஸ்
6 திசம்பர் 2022 (2022-12-06) முதல்
செயலாளர்
சையட் அகமட் கைருல் அன்வார்
(Syed Ahmad Khairulanwar)
கட்டமைப்பு
உறுப்பினர்கள்42+0 நியமன உறுப்பினர் (அதிகபட்சம் 47 உறுப்பினர்கள்)
குறைவெண் வரம்பு:14
எளிய பெரும்பான்மை: 22
மூன்றில் இரண்டு பெரும்பான்மை: 28
அரசியல் குழுக்கள்
ஆண்டு
07.12.2022

அரசாங்கம் (25)
     பாரிசான் (17)

     பாக்காத்தான் (8)

எதிர்க்கட்சிகள் (17)
     பெரிக்காத்தான் (17)

பேரவைத் தலைவர் (1)

     (non-MLA)
தேர்தல்கள்
அண்மைய தேர்தல்
19 நவம்பர் 2022
அடுத்த தேர்தல்
27 பிப்ரவரி 2028
கூடும் இடம்
Wisma Seri Pahang, Kuantan, Pahang
விஸ்மா ஸ்ரீ பகாங், குவாந்தான், பகாங்
வலைத்தளம்
www.pahang.gov.my
தற்போதைய பகாங் மாநில சட்டமன்றத் தொகுதிகள் (2022)

மலேசியாவின் 13 மாநிலங்களில் ஒன்றான பகாங் மாநிலத்தில், சட்டங்களை இயற்றும் அல்லது சட்டங்களைத் திருத்தும் அவையாகும். பகாங் மாநிலச் சட்டமன்றம் 36 உறுப்பினர்களைக் கொண்டுள்ளது.

பகாங், குவாந்தான் மாவட்டம், குவாந்தான், விஸ்மா ஸ்ரீ பகாங் (Wisma Seri Pahang) சட்டமன்ற வளாகத்தில் பகாங் மாநிலப் பேரவை கூடுகிறது.

பொது தொகு

பகாங் மாநில சட்டமன்றம் பகாங் மாநிலத்திற்குப் பொருத்தமான சட்டங்களை இயற்றுகிறது. ஒரு வருடத்திற்கு குறைந்த பட்சம் மூன்று அமர்வுகளை நடத்த வேண்டும். ஒவ்வோர் ஆண்டும் மார்ச் மற்றும் அக்டோபர் மாத இறுதியில் அல்லது நவம்பர் மாதத் தொடக்கத்தில் மாநில வரவு செலவு கணக்கைத் தாக்கல் செய்ய வேண்டும்.

பகாங் மாநில சட்டமன்றம் ஒரு நாடாளுமன்றத்தைப் போல இயங்குகிறது. பகாங் மாநில சட்டமன்றம், பகாங் மாநிலம் தொடர்பான சட்டங்களை நிறைவேற்றுகிறது. அதன் உறுப்பினர்கள் பொதுத் தேர்தல் அல்லது இடைத் தேர்தல் மூலமாகத் தேர்ந்தெடுக்கப் படுகின்றனர்.

சட்டமன்ற உறுப்பினர் உரிமை தொகு

மலேசிய அரசியலமைப்பு சட்டத்தின் கீழ், பொதுப் புகார்கள் போன்ற தற்போதைய பிரச்சனைகளைச் சுதந்திரமாக விவாதிக்கச் சட்டமன்ற உறுப்பினர்களுக்கு உரிமைகள் வழங்கப்பட்டு உள்ளன.

நிதி விசயங்களில், மாநில அரசாங்கத்திற்கு நிதி வழங்குவதற்கு மாநிலச் சட்டமன்றம் ஒப்புதல் அளிக்கிறது; மற்றும் வரி செலுத்துவோர் நலன் கருதி, அந்த நிதி ஒதுக்கீடு முறையாகச் செலவிடப் படுவதையும் உறுதி செய்கிறது.

ஒரு சட்டமன்ற உறுப்பினரின் பதவிக் காலம் ஐந்து ஆண்டுகள் ஆகும். ஒவ்வோர் ஐந்தாண்டுகளுக்கும் ஒரு முறை பகாங் சட்டமன்றம் கலைக்கப்பட வேண்டும்.

சபாநாயகர் தலைமை தொகு

பகாங் மாநில சட்டமன்றக் கூட்டங்களுக்கு சபாநாயகர் (Speaker) தலைமை தாங்குகிறார். தவிர விவாதங்களின் போது ஒழுங்கை உறுதிப் படுத்துகிறார். தற்போதைய சபாநாயகர் பதவி காலியாக உள்ளது.

சட்டமன்றத்தில் பெரும்பான்மை ஆதரவைப் பெற்ற கட்சி அல்லது கூட்டணி மந்திரி பெசார் தலைமையில் மாநில அரசாங்கத்தை அமைக்கிறது. பின்னர் அவர் மாநிலச் செயற்குழுவை (Majlis Mesyuarat Kerajaan) நியமிக்கிறார்.

பகாங் புவியியல் தொகு

பகாங் மாநிலம் மலேசியத் தீபகற்கத்தின் கிழக்கே உள்ள ஒரு பெரிய மாநிலம் ஆகும். பகாங் மாநிலத்தின் வடக்கே கிளாந்தான் மாநிலம்; வட மேற்கே பேராக் மாநிலம்; மேற்கே சிலாங்கூர் மாநிலம்; தெற்கே ஜொகூர் மாநிலம்; ஆகிய மாநிலங்கள் உள்ளன.

மேற்கே தென்சீனக் கடல் உள்ளது. பகாங் மாநில எல்லை மலேசியத் தலைநகர் கோலாலம்பூரில் இருந்து சுமார் 80 கிலோ மீட்டர் கிழக்கில் இருக்கின்றது.

பகாங் மாநிலம் 11 மாவட்டங்களைக் கொண்டது. குவாந்தான் நகரைத் தலைநகராகவும் பெக்கான் நகரத்தை அரச நகராகவும் கொண்டது. இந்த மாநிலம் மலேசியாவின் பல முக்கிய சுற்றுலாத் தளங்களை உள்ளடக்கி உள்ளது.[1]

அவற்றில் கேமரன் மலை, கெந்திங் மலை, பிரேசர் மலை, புக்கிட் திங்கி போன்றவை அடங்கும்.[2] பகாங் மாநிலத்தில் ரவுப் மாவட்டம் முன்பு தங்கத்திற்குப் பெயர் பெற்றது. இப்போது அங்கே தங்கம் தோண்டி எடுக்கப்படவில்லை.

பகாங் மாவட்டங்கள் தொகு

பகாங் மாநிலத்தில் 11 மாவட்டங்கள் உள்ளன. மாவட்டங்களின் பட்டியல்:

அரசாங்கமும் அரசியலும் தொகு

அரசியல் சாசனப் படி பகாங் சுல்தான்; பகாங் மாநிலத்தை ஆட்சி செய்பவராகும். அவருடைய ஆளுமைத் தகுதி பாரம்பரிய மரபு வழியாக வருகின்றது. ஆயுள் காலம் வரை அவர் ஆட்சி செய்வார். பகாங் மாநிலத்தில் இசுலாம் சமயத்தின் தலைவராகவும் இவர் செயல் படுகின்றார்.

பகாங் மாநிலத்தில் இப்போது பகாங் இளவரசர் துங்கு அசனல் இப்ராகிம் ஆலாம் சா (Tengku Hassanal Ibrahim Alam Shah) சுல்தானாக உள்ளார். 2019-ஆம் ஆண்டில் இருந்து சுல்தானின் பிரதிநிதியாக அரச பணிகளைச் செய்து வருகிறார்.

மாநிலச் செயலாட்சி மன்றம் (State Executive Council) சுல்தான் அல்லது சுல்தானின் பிரதிநிதியைத் தலைவராகக் கொண்டு செயல் பட்டு வருகின்றது. அரசாங்க நிர்வாகச் சேவைத் தலைவராக இருப்பவர் மாநில முதலமைச்சர். இவரை மந்திரி பெசார் (Menteri Besar) என்று அழைக்கிறார்கள். இவருக்கு உதவியாகப் பதின்மர் மாநிலச் செயலாட்சி உறுப்பினர்களாக உள்ளனர். இவர்கள் அனைவரும் மாநில அமைச்சர்கள் ஆவர்.

இவர்கள் மாநிலச் சட்டசபையில் இருந்து தேர்வு செய்யப் படுகின்றார்கள். மாநில முதலமைச்சரையும் மாநிலச் செயலாட்சி உறுப்பினர்களையும் சுல்தான் நியமனம் செய்கின்றார்.

தற்போதைய நெகிரி செம்பிலான் சட்டமன்றம் (2022) தொகு

அரசு எதிரணி
பாரிசான் பாக்காத்தான் பெரிக்காத்தான்
17 8 17
16 1 6 2 15 2
அம்னோ மஇகா ஜசெக பிகேஆர் பாஸ் பெர்சத்து

மேற்கோள் தொகு

  1. "Malaysia Districts". Statoids.com. பார்க்கப்பட்ட நாள் 21 December 2014.
  2. The secondary divisions of Malaysia are daerah (districts). Sabah and Sarawak states are also subdivided into entities called "divisions".

மேலும் காண்க தொகு

வெளி இணைப்புகள் தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=பகாங்_மாநில_சட்டமன்றம்&oldid=3628593" இலிருந்து மீள்விக்கப்பட்டது