பெந்தோங் மாவட்டம்

மலேசியாவின் பகாங் மாநிலத்தில் உள்ள மாவட்டம்

பெந்தோங் மாவட்டம் (ஆங்கிலம்: Bentong District; மலாய்: Daerah Bentong; சீனம்: 文冬县; ஜாவி: ﺑﻨﺘﻮڠ ); என்பது மலேசியா, பகாங் மாநிலத்தில் உள்ள ஒரு மாவட்டம். கோலாலம்பூரில் இருந்து சுமார் 80 கி.மீ. தூரத்தில் அமைந்து உள்ளது.

பெந்தோங் மாவட்டம்
Daerah Bentong
பெந்தோங் மாவட்டம்
பெந்தோங் மாவட்டம்
பெந்தோங் மாவட்டம் is located in மலேசியா
பெந்தோங் மாவட்டம்
      பெந்தோங் மாவட்டம்
ஆள்கூறுகள்: 3°25′N 101°55′E / 3.417°N 101.917°E / 3.417; 101.917
நாடு மலேசியா
மாநிலம் பகாங்
மாவட்டம் பெந்தோங்
தொகுதிபெந்தோங்
உள்ளூராட்சிபெந்தோங் நகராட்சி
அரசு
 • மாவட்ட அதிகாரிசுல்கிப்லி அசீம்[1]
பரப்பளவு
 • மொத்தம்1,831.12 km2 (707.00 sq mi)
மக்கள்தொகை
 (2020)
 • மொத்தம்1,68,960
 • அடர்த்தி92/km2 (240/sq mi)
நேர வலயம்மலேசிய நேரம் ஒ.ச.நே + 08:00
அஞ்சல் குறியீடு
28xxx, 69xxx (கெந்திங் மலை)
தொலைபேசி+6-09, +6-03-6 (கெந்திங் மலை)
வாகனப் பதிவெண்கள்C

இந்த மாவட்டத்தின் மேற்கில் சிலாங்கூர் மாநிலம்; தெற்கில் நெகிரி செம்பிலான்; மாநிலம்; எல்லைகளாக உள்ளன. 1,831 கி.மீ² பரப்பளவில், கெந்திங் மலை மற்றும் புக்கிட் திங்கி மலைப் பகுதிகளையும் உள்ளடக்கியது. தித்திவாங்சா மலைத்தொடர் கிழக்குப் பகுதியில் படர்ந்து செல்கிறது.

வரலாறு

தொகு

தொடக்கத்தில் ரவுப் மாவட்ட நிர்வாகத்தின் கீழ் பெந்தோங் மாவட்டம் ஒரு துணை மாவட்டமாக இருந்தது. 1919-இல் மாவட்டத்தின் பெரிய அளவு காரணமாக நிர்வாகம் பிரிக்கப்பட்டது. பெந்தோங் மாவட்டம் 183,112.35 ஹெக்டேர் பரப்பளவைக் கொண்டுள்ளது.

இது கோலாலம்பூரின் வடகிழக்கில், முக்கிய மலைத்தொடரான தித்திவாங்சா மலைகளுக்கு குறுக்கே அமைந்துள்ளது. பெந்தோங் நகரத்திற்குள் செல்லும் அசல் பிரதான சாலை, இரட்டைச் சாலையாக மாற்றி அமைக்கப் பட்டுள்ளது. இருப்பினும், இப்போது ரவுப் மற்றும் கோலா லிப்பிஸ் நகரங்களுக்குச் செல்லும் சாலையின் ஒரு பகுதி மேம்படுத்தப் பட்டுள்ளது.

பெந்தோங் நகராட்சி

தொகு

பெந்தோங் மாவட்டம், பெந்தோங் நகராண்மைக் கழகத்தால் நிர்வகிக்கப் படுகிறது மற்றும் பகாங்கில் வேகமாக வளர்ந்து வரும் நகரங்களில் பெந்தோங் நகரமும் ஒன்றாகும். இந்த நகரம் ரவுப் நகரத்தின் அளவைப் போன்றது.

பெந்தோங்கில் மரத் தொழிற்சாலைகள், உணவுத் தொழில்கள் மற்றும் மின்னியல் பொருட்களின் உற்பத்தித் தொழிற்சாலைகள் உட்பட பல இலகுரக மற்றும் நடுத்தரத் தொழில்கள் உள்ளன. இந்த மாவட்டம் நாட்டிலேயே மிகப் பெரிய செப்பு கம்பித் தொழிற்சாலை ஒன்றையும் கொண்டு உள்ளது.

நிர்வாகம்

தொகு
 
பெந்தோங் மாவட்டத்தின் வரைபடம்.

பெந்தோங் மாவட்டம் 3 முக்கிம்களாக பிரிக்கப்பட்டுள்ளது, அவை:[3]

நவீனக் குடியிருப்புப் பகுதிகளைத் தவிர, 55 பாரம்பரிய கிராமங்கள், 8 பெல்டா கிராமங்கள், 15 புதிய கிராமங்கள் மற்றும் 14 ஓராங் அஸ்லி பூர்வீகக் கிராமங்கள் உள்ளன.

மக்கள்தொகையியல்

தொகு
மக்கள்தொகை வளர்ச்சி
ஆண்டும.தொ.±%
1991 83,965—    
2000 96,689+15.2%
2010 1,14,397+18.3%
2020 1,16,799+2.1%
ஆதாரம்: [4]

பின்வரும் புள்ளி விவரங்கள், 2019-ஆம் ஆண்டு மலேசியப் புள்ளியியல் துறையின் மக்கள் தொகை கணக்கெடுப்பின் புள்ளி விவரங்கள்.[5]

பெந்தோங் மாவட்டத்தின் இனக் குழுக்கள்: 2010 மக்கள் தொகை கணக்கெடுப்பு
இனம் மக்கள் தொகை விழுக்காடு
மலாய்க்காரர்கள் 71,000 57.2%
சீனர்கள் 44,000 33.4%
இந்தியர்கள் 19,000 9.0%
இதர மக்கள் 1,000 0.3%
மொத்தம் 135,000 100%

போக்குவரத்து

தொகு

பொதுவாக, பெந்தோங் மாவட்டத்தில் 837.26 கி.மீ. அளவிற்குச் சாலைகள் உள்ளன. இதில் 311.22 கி.மீ. கூட்டரசு சாலைகள்; 224.51 கி.மீ. மாநிலச் சாலைகள்; 124.05 கி.மீ. நகர்ப்புறச் சாலைகள்; மற்றும் 177.48 கி.மீ. பெல்டா சாலைகள் உள்ளன.

மூன்று முக்கிய வழித்தடங்கள் - கூட்டரசு சாலை 8 (மலேசியா), கிழக்கு கடற்கரை விரைவுச்சாலை  ; மற்றும் கூட்டரசு சாலை 68 (மலேசியா) பெந்தோங்கில் சங்கமிக்கின்றன.

காராக் நெடுஞ்சாலை

தொகு

பழைய கோம்பாக் - பெந்தோங் சாலை   பாதையின் கிழக்கு முனையில் பெந்தோங் உள்ளது. நெடுஞ்சாலை  , பெந்தோங்கில் தொடங்கி, கிளாந்தான் மாநிலத்தில் உள்ள கோத்தா பாரு வரை செல்கிறது.

கோலாலம்பூர் – காராக் விரைவுச்சாலை என்பது; கிழக்கு கடற்கரை விரைவுச்சாலை  -இன் ஒரு பகுதி ஆகும். அதுவே கோலாலம்பூர் மற்றும் மாநிலத் தலைநகர் குவாந்தானுக்கான முக்கிய இணைப்பாகவும் திகழ்கின்றது.

அரசியல்

தொகு

நாடாளுமன்றத் தொகுதி

தொகு

டேவான் ராக்யாட் மக்களவையில் பெந்தோங் மாவட்டப் பிரதிநிதி:

நாடாளுமன்றம் தொகுதி உறுப்பினர் கட்சி
P89 பெந்தோங் ஓங் தெக் பாக்காத்தான் ஹரப்பான் (ஜ.செ.க)

சட்டமன்றத் தொகுதிகள்

தொகு

பகாங் சட்டமன்றத்தில் பெந்தோங் மாவட்டப் பிரதிநிதிகள்:

நாடாளுமன்றம் மாநிலம் தொகுதி உறுப்பினர் கட்சி
P89 N33 பிலுட் லீ சின் சென் பாக்காத்தான் ஹரப்பான் (ஜ.செ.க)
P89 N34 கெதாரி யாங் சய்துரா ஒசுமான் பாக்காத்தான் ஹரப்பான் (ஜ.செ.க)
P89 N35 சபாய் காமாட்சி துரை ராஜு பாக்காத்தான் ஹரப்பான் (ஜ.செ.க)
P89 N36 பெலங்காய் அட்னான் யாக்கோப் பெரிக்காத்தான் நேசனல் (அம்னோ)

கல்வி

தொகு

பெந்தோங் மாவட்டத்தில் தேசியப் பள்ளிகள்; சீனப் பள்ளிகள் மற்றும் தமிழ்ப் பள்ளிகள் என 49 தொடக்கப் பள்ளிகள் உள்ளன. மொத்தம் 12,272 மாணவர்கள் பயில்கிறார்கள். மற்றும் 869 ஆசிரியர்கள் பணியாற்றுகிறார்கள்.

மேல்நிலைப் பள்ளிகளைப் பொறுத்தவரையில், 14 தொழிற்கல்வி மற்றும் தொழில்நுட்பப் பள்ளிகள் உள்ளன. அந்தப் பள்ளிகளில் மொத்தம் 9,901 மாணவர்கள் மற்றும் 755 ஆசிரியர்கள் உள்ளனர். நான்கு அரசுப் பல்கலைக்கழகங்கள் உள்ளன. மற்றும் ஒரு தனியார் பல்கலைக்கழகமும் உள்ளது.

பெந்தோங் மாவட்டத்தின் தமிழ்ப்பள்ளிகள்

தொகு

பகாங், பெந்தோங் மாவட்டத்தில் 5 தமிழ்ப்பள்ளிகள் உள்ளன. அவற்றில் 519 மாணவர்கள் பயில்கிறார்கள். 71 ஆசிரியர்கள் பணியாற்றுகிறார்கள். மலேசியக் கல்வியமைச்சு 2020 ஜனவரி மாதம் வெளியிட்ட புள்ளிவிவரங்கள்.[6]

பள்ளி
எண்
இடம் பள்ளியின்
பெயர்
மலாய்
பள்ளியின்
பெயர்
தமிழ்
அஞ்சல் குறியீடு வட்டாரம் மாணவர்கள் ஆசிரியர்கள்
CBD0038 பெந்தோங் SJK(T) Bentong பெந்தோங் தமிழ்ப்பள்ளி[7] 28700 பெந்தோங் 145 15
CBD0039 கம்போங் ஸ்ரீ தெலிமோங்
Kampung Sri Telemong
SJK(T) Sri Telemong ஸ்ரீ தெலிமோங் தமிழ்ப்பள்ளி (காராக்)[8] 28620 காராக் 27 10
CBD0040 தெலிமோங்
Telemong
SJK(T) Ladang Renjok ரெஞ்சோக் தோட்டத் தமிழ்ப்பள்ளி (காராக்)[9] 28620 காராக் 45 11
CBD0041 காராக் SJK(T) Karak காராக் தமிழ்ப்பள்ளி[10] 28600 காராக் 264 25
CBD0042 பெல்டா லூரா பீலூட்
Felda Lurah Bilut
SJK(T) Lurah Bilut லூரா பீலூட் தமிழ்ப்பள்ளி[11] 28800 பெந்தோங் 38 10

சேவைகள்

தொகு

பெந்தோங் மாவட்ட மருத்துவமனை (Bentong District Hospital), இப்போது ஒரு சிறிய சிறப்பு மருத்துவமனையாக (Minor Specialist Hospital) மாற்றம் கண்டுள்ளது. 152 படுக்கைகள் உள்ளன.

பெந்தோங் மாவட்டத்தில் சுகாதார மேம்பாடு மற்றும் நோய் தடுப்புக்காக 19 கிராமப்புற மருத்துவகங்கள் உட்பட 22 சுகாதார மருத்துவகங்கள் உள்ளன. 6 அரசு பல் மருத்துவ மனைகள், 22 தனியார் மருத்துவ மனைகள் மற்றும் 3 தனியார் பல் மருத்துவமனைகள் உள்ளன.

மாவட்டத்தில் ஏழு காவல் நிலையங்கள் மற்றும் ஒன்பது காவல் மையங்கள் உள்ளன. இதில் 355 காவலர்கள், பணியாளர்கள் உள்ளனர். மேலும் 111 பணியாளர்களுடன் மூன்று தீயணைப்பு நிலையங்களும் உள்ளன.

மேற்கோள்கள்

தொகு
  1. "Pejabat Setiausaha Negeri Pahang". www.pahang.gov.my.
  2. primuscoreadmin (5 January 2016). "Latar Belakang".
  3. "காப்பகப்படுத்தப்பட்ட நகல்" (PDF). Archived from the original (PDF) on 2020-03-31. பார்க்கப்பட்ட நாள் 2022-05-07.
  4. "TABURAN PENDUDUK MENGIKUT PBT & MUKIM 2010". Department of Statistics, Malaysia. பார்க்கப்பட்ட நாள் 15 December 2017.
  5. "Population Distribution and Basic Demographic Characteristics, 2010" (PDF). Department of Statistics, Malaysia. Archived from the original (PDF) on 22 May 2014. பார்க்கப்பட்ட நாள் 19 April 2012.
  6. "Senarai Sekolah Rendah dan Menengah Jan 2020". www.moe.gov.my. பார்க்கப்பட்ட நாள் 2020-02-19.
  7. "SJKT BENTONG". sjktbentong.blogspot.com (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 5 June 2021.
  8. "SJKT Sri Telemong". www.facebook.com (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 5 June 2021.
  9. "SJKT Ladang Renjok, 28620 Karak,Pahang". www.facebook.com (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 5 June 2021.
  10. Karak, Sjkt. "Sekolah Jenis Kebangsaan Tamil Karak". பார்க்கப்பட்ட நாள் 5 June 2021.
  11. Bilut, Lurah (3 April 2014). "SJKT LURAH BILUT: pictures of school sctivities". SJKT LURAH BILUT. பார்க்கப்பட்ட நாள் 5 June 2021.

வெளி இணைப்புகள்

தொகு
 
விக்கிமீடியா பொதுவகத்தில்,
பெந்தோங்
என்பதில் ஊடகங்கள் உள்ளன.

மேலும் காண்க

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=பெந்தோங்_மாவட்டம்&oldid=4045912" இலிருந்து மீள்விக்கப்பட்டது