பெக்கான் மாவட்டம்
பெக்கான் மாவட்டம் (ஆங்கிலம்: Pekan District; மலாய்: Daerah Pekan; சீனம்: 北根縣; ஜாவி: ڤکن ); என்பது மலேசியா, பகாங் மாநிலத்தில் உள்ள ஒரு மாவட்டம். இதன் தலைப் பட்டணம் பெக்கான்.
பெக்கான் மாவட்டம் | |
---|---|
Pekan District | |
Daerah Pekan | |
![]() பெக்கான் மாவட்டம் | |
ஆள்கூறுகள்: 3°30′N 103°25′E / 3.500°N 103.417°E | |
நாடு | ![]() |
மாநிலம் | ![]() |
மாவட்டம் | பெக்கான் |
தொகுதி | பெக்கான் |
உள்ளூராட்சி | பெக்கான் நகராண்மைக் கழகம் |
பரப்பளவு | |
• மொத்தம் | 3,846.14 km2 (1,485.00 sq mi) |
மக்கள்தொகை (2010) | |
• மொத்தம் | 1,05,218 |
நேர வலயம் | மலேசிய நேரம் (ஒசநே+8) |
மலேசிய அஞ்சல் குறியீடு | 26xxx |
மலேசியத் தொலைபேசி | +6-09 |
மலேசியப் போக்குவரத்து எண் | C |

இந்த மாவட்டத்தின் வடக்கில் குவாந்தான் மாவட்டம், கிழக்கில் தென் சீனக் கடல், மேற்கில் மாரான் மாவட்டம் மற்றும் தெற்கில் ரொம்பின் மாவட்டம் ஆகியவை எல்லைகளாக உள்ளன.
பொது தொகு
மலேசியாவின் இரண்டாவது பிரதமர் துன் அப்துல் ரசாக் உசேன் அவர்களும்,[1] இப்போதைய பிரதமர் நஜீப் துன் ரசாக்[2] அவர்களும் இந்த நகரில் பிறந்தவர்கள். பிரதமர் நஜீப் துன் ரசாக்கின் தந்தையார்தான் துன் அப்துல் ரசாக்.
பெக்கான் நகரின் பழைய பெயர் இந்திராபுரா. இந்தியாவில் இருந்து வந்த இந்திய வணிகர்கள் இந்திராபுரா என்று அழைத்தனர்.
நிர்வாகப் பிரிவுகள் தொகு
மாரான் மாவட்டத்தில் 11 முக்கிம்கள் உள்ளன:[3]
- பெக்கான் - Pekan
- பெபார் - Bebar
- தெமாய் - Temai
- லெப்பார் - Lepar
- கோலா பகாங் - Kuala Pahang
- லாங்கார் - Langgar
- கஞ்சோங் - Ganchong
- பகாங் துவா - Pahang Tua
- புலாவ் மானிஸ் - Pulau Manis
- புலாவ் ரூசா - Pulau Rusa
- பென்யோர் - Penyor
பெக்கான் நாடாளுமன்றத் தொகுதி தொகு
பெக்கான் நாடாளுமன்றத் தொகுதியின் உறுப்பினராக பிரதமர் நஜீப் துன் ரசாக் இருக்கிறார்.
நாடாளுமன்றம் | தொகுதி | நாடாளுமன்ற உறுப்பினர் | கட்சி |
---|---|---|---|
P85 | பெக்கான் | நஜீப் துன் ரசாக் | தேசிய முன்னணி |
பெக்கான் சட்டமன்றத் தொகுதிகள் தொகு
பெக்கான் நாடாளுமன்றத் தொகுதியில் நான்கு சட்டமன்றத் தொகுதிகள் உள்ளன.
நாடாளுமன்றம் | மாநிலம் | தொகுதி | சட்டமன்ற உறுப்பினர் | கட்சி |
---|---|---|---|---|
P85 | N20 | புலாவ் மானிஸ் | கைருடின் முகமட் | தேசிய முன்னணி |
P85 | N21 | பெராமு ஜெயா | இப்ராஹிம் அகமட் முகமட் | தேசிய முன்னணி |
P85 | N22 | பேபார் | இஷாக் முகமட் | தேசிய முன்னணி |
P85 | N23 | சினி | அபு பாக்கார் ஹருண் | தேசிய முன்னணி |
மக்கள்தொகையியல் தொகு
ஆண்டு | ம.தொ. | ±% |
---|---|---|
1991 | 86,179 | — |
2000 | 97,751 | +13.4% |
2010 | 1,05,587 | +8.0% |
2020 | 1,21,158 | +14.7% |
பின் விவரங்கள் மலேசிய புள்ளியியல் துறை 2010-ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின் அடிப்படையில் அமைந்துள்ளது.
பெக்கான் இனக்குழுக்கள் 2010-ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பு | ||
---|---|---|
இனம் | மக்கள் தொகை |
விழுக்காடு |
பூமிபுத்ரா | 101,953 | 96.9% |
சீனர் | 1,373 | 1.3% |
இந்தியர் | 392 | 0.4% |
மற்றவர் | 1,500 | 1.4% |
மொத்தம் | 105,218 | 100% |
மேற்கோள் தொகு
- ↑ Office of the Prime Minister of Malaysia
- ↑ Official Biography. 1malaysia.com.my. Retrieved on 2012-05-30.
- ↑ "Peta&Keluasan". Pejabat Daerah dan Tanah Pekan இம் மூலத்தில் இருந்து 2018-03-19 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20180319231546/http://pdtpekan.pahang.gov.my/index.php?option=com_content&view=article&id=86&Itemid=471.