பெக்கான் (மலாய்; ஆங்கிலம்: Pekan) என்பது மலேசியா, பகாங் மாநிலத்தின் அரச நகரம் ஆகும். பகாங் மாநிலத்தின் தலைநகரமான குவாந்தான் நகரில் இருந்து தென்கிழக்காக 45 கி.மீ. தொலைவில் உள்ளது.

பெக்கான்
Pekan
பகாங்
நகரம்
பெக்கான் பாலம்
பெக்கான் பாலம்
Map
ஆள்கூறுகள்: 3°30′N 103°25′E / 3.500°N 103.417°E / 3.500; 103.417
நாடு மலேசியா
மாநிலம் பகாங்
மாவட்டம்பெக்கான்
அரசு
 • நிர்வாகம்பெக்கான் நகராட்சி
 • மாவட்ட ஆளுநர்ரோஸ் சம்சுல் அப்துல் ரசாக்
(Rose Samsul Abdul Razak)
பரப்பளவு
 • மொத்தம்2,351.8 km2 (908.0 sq mi)
மக்கள்தொகை
 (2010)
 • மொத்தம்1,03,839
நேர வலயம்மலேசிய நேரம் ஒ.ச.நே + 08:00
அஞ்சல் குறியீடு
26600
தொலைபேசி எண்0609
வாகனப் பதிவெண்கள்C
மலாயா கூட்டரசு1895
சப்பானியர் ஆட்சி1942
மலாயா கூட்டமைப்பு1948
இணையதளம்http://www.mdpekan.gov.my

பெக்கான் நகரத்தின் அசல் பெயர் பூங்கா பெக்கான் (Bunga Pekan). பூங்கா பெக்கான் எனும் மலரின் பெயரில் இருந்து வந்தது.[1] இங்கு பகாங் சுல்தானின் அரண்மனையும், அரச பள்ளிவாசலும் உள்ளன.

பொது

தொகு

இந்த நகரம் மலேசியாவின் இரு பிரதமர்களை உருவாக்கித் தந்த பெருமையைப் பெறுகிறது.

மலேசியாவின் இரண்டாவது பிரதமர் அப்துல் ரசாக் உசேன்;[2] பிரதமர் நஜீப் துன் ரசாக்[3] ஆகிய இருவரும் இந்த நகரில் பிறந்தவர்கள். பிரதமர் நஜீப்பின் தகப்பனார்தான் அப்துல் ரசாக் உசேன்.

வரலாறு

தொகு

பெக்கான் நகரின் பழைய பெயர் இந்திராபுரா.[4] இந்தியாவில் இருந்து வந்த இந்திய வணிகர்கள் இந்திராபுரா என்று அழைத்தனர்.[5]

முன்பு காலத்தில் பகாங் ஆற்றின் இரு மருங்கிலும் பெக்கான் மலர்கள் நிறைய பூத்துக் குலுங்கின. அந்த மலர்களின் பெயர் பெக்கான் நகருக்குச் சூட்டப்பட்டதாகச் சொல்லப்படுகிறது. இந்த நகரம் 17ஆம் நூற்றாண்டில் தோற்றுவிக்கப்பட்டதாகச் சொல்லப்பட்டாலும், இதுவரையில் சரியான சான்றுகள் கிடைக்கவில்லை.

ஆனால், 18ஆம் நூற்றாண்டில் இந்தோனேசியாவில் உள்ள சுலாவாசி தீவில் இருந்து மக்கள் பெக்கான் நகரில் குடியேறியதாக சான்றுகள் உள்ளன. அப்படி குடியேறிய குடும்பங்களில் ஒன்றுதான் முன்னாள் பிரதமர் துன் அப்துல் ரசாக்கின் குடும்பம் ஆகும்.

பெக்கான் நாடாளுமன்றத் தொகுதி

தொகு
நாடாளுமன்றம் தொகுதி நாடாளுமன்ற உறுப்பினர் கட்சி
P85 பெக்கான் மக்களவைத் தொகுதி முகமது புசி அலி
(Mohmed Puzi Ali)
பாரிசான்
(அம்னோ)
நாடாளுமன்றம் தொகுதி நாடாளுமன்ற உறுப்பினர் கட்சி
P85 பெக்கான் நஜீப் துன் ரசாக் தேசிய முன்னணி

பெக்கான் சட்டமன்றத் தொகுதிகள்

தொகு

பெக்கான் நாடாளுமன்றத் தொகுதியில் நான்கு சட்டமன்றத் தொகுதிகள் உள்ளன.

நாடாளுமன்றம் மாநிலம் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் கட்சி
P85 N20 புலாவ் மானிஸ் கைருடின் முகமட் தேசிய முன்னணி
P85 N21 பெராமு ஜெயா இப்ராஹிம் அகமட் முகமட் தேசிய முன்னணி
P85 N22 பேபார் இஷாக் முகமட் தேசிய முன்னணி
P85 N23 சினி அபு பாக்கார் ஹருண் தேசிய முன்னணி

துணை மாவட்டங்கள்

தொகு

பெக்கான் மாவட்டத்தில் 11 துணை மாவட்டங்கள் அல்லது முக்கிம்கள் உள்ளன.

  • பேபார் (176,400 எக்டர்)
  • பென்யோர் (73,600 எக்டர்)
  • லேபார் (47,100 எக்டர்)
  • புலாவ் மானிஸ் (22,000 எக்டர்)
  • பெக்கான் (17,300 எக்டர்) (தலைநகர்)
  • தெமாய் (12,700 எக்டர்)
  • காஞ்சோங் (11,4000 எக்டர்)
  • லாங்கார் (9,600 எக்டர்)
  • கோலா பகாங் (3,900 எக்டர்)
  • பகாங் துவா (3,900 எக்டர்)
  • புலாவ் ரூசா (2,600 எக்டர்)

மேற்கோள்கள்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=பெக்கான்&oldid=4028383" இலிருந்து மீள்விக்கப்பட்டது