குவாந்தான் மாவட்டம்
குவாந்தான் மாவட்டம் (ஆங்கிலம்: Kuantan District; மலாய்: Daerah Kuantan; சீனம்: 关丹县; சாவி: كوانتن ); என்பது மலேசியா, பகாங் மாநிலத்தில் உள்ள ஒரு மாவட்டம். இதன் தலைப் பட்டணம் குவாந்தான். பகாங் மாநிலத்தின் வடகிழக்கில் அமைந்துள்ளது.
குவாந்தான் மாவட்டம் | |
---|---|
Kuantan District | |
Daerah Kuantan | |
குவாந்தான் மாவட்டம் | |
ஆள்கூறுகள்: 3°55′N 103°5′E / 3.917°N 103.083°E | |
நாடு | மலேசியா |
மாநிலம் | பகாங் |
மாவட்டம் | குவாந்தான் |
தொகுதி | குவாந்தான் |
உள்ளூராட்சி | குவாந்தான் நகராண்மைக் கழகம் |
அரசு | |
• மாவட்ட அதிகாரி | சிலிசா சுல்கிப்ளி[1] |
பரப்பளவு | |
• மொத்தம் | 2,960.42 km2 (1,143.02 sq mi) |
மக்கள்தொகை (2010) | |
• மொத்தம் | 4,45,695 |
நேர வலயம் | ஒசநே+8 (மலேசிய நேரம்) |
மலேசிய அஞ்சல் குறியீடு | 25xxx |
மலேசியத் தொலைபேசி | +6-09 |
மலேசியப் போக்குவரத்து எண் | C |
இந்த மாவட்டத்தின் வடக்கில் திராங்கானு மாநிலத்தின் கெமாமான் மாவட்டம்; கிழக்கில் தென்சீனக் கடல்; மேற்கில் மாரான் மாவட்டம் மற்றும் செராண்டுட்டு மாவட்டம்; தெற்கில் பெக்கான் மாவட்டம் ஆகியவை எல்லைகளாக உள்ளன.
மாவட்டத்தில் உள்ள முக்கிய நகரங்கள் குவாந்தான் மற்றும் பண்டார் இந்திரா மக்கோத்தா (Bandar Indera Mahkota). இதர நகரங்கள் பஞ்சிங், சுங்கை லெம்பிங், கம்பாங் மற்றும் பெசெரா.
நிர்வாகப் பிரிவுகள்
தொகுமாரான் மாவட்டத்தில் 6 முக்கிம்கள் உள்ளன:[3]
- பெசெரா - Beserah
- குவாந்தான் - Kuantan
- பெனோர் - Penor
- சுங்கை காராங் - Sungai Karang
- சுங்கை லெம்பிங் - Sungai Lembing
- உலு லேப்பார் - Ulu Lepar
குவாந்தான் மாவட்ட வரலாறு
தொகுமுதலாம் நூற்றாண்டில் சிது, ஆங்கிலம்: Chih-Tu; or Chihtu; or Ch-ih-t'u;; சமசுகிருதம்: Raktamaritika or Raktamrittika; சீனம்: 赤土国; மலாய்: Tanah Merah) எனும் பேரரசின் ஒரு பகுதியாக குவாந்தான் நகரம் இருந்தது. 'சிது' என்றால் 'சிகப்பு மண்' (Red Earth Kingdom) என்று பொருள்.[4][5]
11-ஆம் நூற்றாண்டில், குவாந்தான் நிலப்பகுதி, சயாமியர்களால் கையகப்படுத்தப் படுவதற்கு முன்பு, பெங்-கெங் (Pheng-Kheng) எனும் மற்றும் ஒரு சிறிய பேரரசால் ஆளப்பட்டது. 15-ஆம் நூற்றாண்டில், சிறிது காலம் மலாக்கா பேரரசாலும் ஆளப்பட்டது.
19-ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியில், சீன சுரங்கத் தொழிலாளர்கள் மற்றும் சீன வணிகர்களின் வருகையால் குவாந்தான் வளர்ச்சி பெறத் தொடங்கியது. குவாந்தான் நகரம் 1850-ஆம் ஆண்டுகளில் நிறுவப்பட்டதாகக் கூறப்படுகிறது.
மக்கள்தொகையியல்
தொகுஆண்டு | ம.தொ. | ±% |
---|---|---|
1991 | 2,55,974 | — |
2000 | 3,44,319 | +34.5% |
2010 | 4,43,796 | +28.9% |
2020 | 5,48,014 | +23.5% |
பின் விவரங்கள் மலேசிய புள்ளியியல் துறை 2010-ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின் அடிப்படையில் அமைந்துள்ளது.
பெக்கான் இனக்குழுக்கள் 2010-ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பு | ||
---|---|---|
இனம் | மக்கள் தொகை |
விழுக்காடு |
பூமிபுத்ரா | 60,696 | 67.2% |
சீனர் | 24,511 | 27.1% |
இந்தியர் | 4,739 | 5.2% |
மற்றவர் | 358 | 0.4% |
மொத்தம் | 90,304 | 100% |
தட்பவெப்ப நிலை
தொகுகுவாந்தான் மாவட்டத்தின் தட்ப வெப்ப நிலை வெப்ப மண்டல மழைக்காடு ஆகும். தட்ப வெப்ப நிலையில் அதிகமான மாற்றங்கள் இல்லை.
தட்பவெப்ப நிலைத் தகவல், குவாந்தான் | |||||||||||||
---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|
மாதம் | சன | பிப் | மார் | ஏப் | மே | சூன் | சூலை | ஆக | செப் | அக் | நவ | திச | ஆண்டு |
உயர் சராசரி °C (°F) | 28.3 (83) |
30 (86) |
30.6 (87) |
31.7 (89) |
31.7 (89) |
31.7 (89) |
31.7 (89) |
31.7 (89) |
31.1 (88) |
31.1 (88) |
29.4 (85) |
27.8 (82) |
30.6 (87) |
தாழ் சராசரி °C (°F) | 22.2 (72) |
22.2 (72) |
22.8 (73) |
23.3 (74) |
23.9 (75) |
23.3 (74) |
22.8 (73) |
23.3 (74) |
22.8 (73) |
23.3 (74) |
22.8 (73) |
22.8 (73) |
22.8 (73) |
பொழிவு mm (inches) | 300 (11.81) |
170 (6.69) |
180 (7.09) |
170 (6.69) |
190 (7.48) |
160 (6.3) |
160 (6.3) |
170 (6.69) |
230 (9.06) |
270 (10.63) |
310 (12.2) |
440 (17.32) |
2,860 (112.6) |
ஆதாரம்: http://www.weatherbase.com/weather/weather.php3?s=75684&refer=&units=metric |
மேற்கோள்
தொகு- ↑ "Pegawai Kanan". pdtkuantan.pahang.gov.my. Archived from the original on 2018-02-25. பார்க்கப்பட்ட நாள் 2022-06-05.
- ↑ "Peta & Keluasan". Pejabat Daerah dan Tanah Kuantan. Archived from the original on 2018-02-25. பார்க்கப்பட்ட நாள் 2022-06-05.
- ↑ "Peta & Keluasan". Pejabat Daerah dan Tanah Kuantan. Archived from the original on 2018-02-25. பார்க்கப்பட்ட நாள் 2022-06-05.
- ↑ Dougald J. W. O'Reilly (2007). Early Civilizations of Southeast Asia. Rowman Altamira. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-7591-0279-1.
- ↑ Geoff Wade (2007). Southeast Asia-China interactions: reprint of articles from the Journal of the Malaysian Branch, Royal Asiatic Society. Malaysian Branch of the Royal Asiatic Society. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 967-9948-38-2.
வெளி இணைப்புக்கள்
தொகு- Official website of Kuantan Municipal Council பரணிடப்பட்டது 2021-02-12 at the வந்தவழி இயந்திரம்
- Rancangan Tempatan Daerah Kuantan 2035 பரணிடப்பட்டது 2017-12-22 at the வந்தவழி இயந்திரம்