ஜெராண்டுட் மாவட்டம்

மலேசியாவின் பகாங் மாநிலத்தில் உள்ள மாவட்டம்

ஜெராண்டுட் மாவட்டம் (ஆங்கிலம்: Jerantut District; மலாய்: Daerah Jerantut; சீனம்: 而连突县; ஜாவி: ﺟﺮﻧﺘﻮﺕ ); என்பது மலேசியா, பகாங் மாநிலத்தில் உள்ள ஒரு மாவட்டம். இதன் தலைப் பட்டணம் ஜெராண்டுட்.

ஜெராண்டுட் மாவட்டம்
Jerantut District
Daerah Jerantut
ஜெராண்டுட் நகரம்
ஜெராண்டுட் நகரம்
ஜெராண்டுட் மாவட்டம்
ஜெராண்டுட் மாவட்டம்
ஜெராண்டுட் மாவட்டம் is located in மலேசியா
ஜெராண்டுட் மாவட்டம்
ஜெராண்டுட் மாவட்டம்
      ஜெராண்டுட் மாவட்டம்       மலேசியா
ஆள்கூறுகள்: 3°56′N 102°22′E / 3.933°N 102.367°E / 3.933; 102.367
நாடு மலேசியா
மாநிலம் பகாங்
மாவட்டம்ஜெராண்டுட்
தொகுதிஜெராண்டுட்
உள்ளூராட்சிஜெராண்டுட் நகராண்மைக் கழகம்
பரப்பளவு
 • மொத்தம்7,207.6 km2 (2,782.9 sq mi)
மக்கள்தொகை
 (2010)
 • மொத்தம்86,840
நேர வலயம்ஒசநே+8 (மலேசிய நேரம்)
மலேசிய அஞ்சல் குறியீடு
27xxx
மலேசியத் தொலைபேசி+6-09
மலேசியப் போக்குவரத்து எண்C

ஜெராண்டுட் மாவட்டம் பகாங் மாநிலத்தின் மிகப் பெரிய மாவட்டமாகும். இந்த மாவட்டத்தின் வட எல்லையில் கிளாந்தான், திராங்கானு மாநிலங்கள் உள்ளன. தெற்கே தெமர்லோ மாவட்டம், மாரான் மாவட்டம்; மேற்கே லிப்பிஸ் மாவட்டம், ரவுப் மாவட்டம்; கிழக்கே குவாந்தான் மாவட்டம் ஆகிய மாவட்டங்கள் உள்ளன. ஜெராண்டுட் மாவட்டத்தில் தெம்பிலிங் ஆறு ஓடுகிறது.

வரலாறு

தொகு

பகாங் மாநிலத்தின் முதல் அரசரான சுல்தான் அகமட் வான் அகமட் காலத்திலேயே, ஜெராண்டுட் எனும் பெயர் புழக்கத்தில் இருந்ததாக வரலாற்றுச் சான்றுகள் கூறுகின்றன.

ஜெராண்டுட் மாவட்டத்தின் பழைய பெயர் சிம்பாங் அம்பாட் (Simpang Empat). பிரித்தானியர்களின் ஆட்சி காலத்தில் ஜெராண்டுட் நகரத்திற்கு சங்சன் 4 (Junction 4) என்று பெயர் வைத்தார்கள்.

சுற்றுலா இடங்கள்

தொகு

பகாங் ஆற்றின் ஜெராண்டுட் பகுதியில் நீர் பெருக்கம் ஏற்படுவது உண்டு. மீன் பிடிப்பவர்கள் அதை ‘அவாங் துட்’ (Awang Tut) என்று அழைத்தார்கள். அந்தப் பெயரே, காலப் போக்கில் ஜெராண்டுட் என்று பெயர் மாற்றம் கண்டது.

சுற்றுலா பயணிகளை ஈர்க்கும் இடங்களாக லதா மெராவுங் நீர்வீழ்ச்சி (Lata Meraung Waterfall), மலேசியப் பழங்குடியினர் குடியிருப்புகள், குனோங் தகான், குனோங் பெனோம், ராபிள்சியா பாதுகாப்பு மையம் (ஆங்கிலம்: Rafflesia Conservation Center) போன்றவை அமைகின்றன. பகாங் மாநிலத்தின் பெரிய மாவட்டமான ஜெராண்டுட், அண்மைய காலங்களில் மிகத் துரிதமான வளர்ச்சியைக் கண்டு வருகிறது.

துணை மாவட்டங்கள்

தொகு

ஜெராண்டுட் மாவட்டம் 10 துணை மாவட்டங்களைக் கொண்டது. இந்த மாவட்டத்தில் 125 கிராமங்கள் உள்ளன.[1]

  • உலு தெம்பிலிங் - Hulu Tembeling
  • தெம்பிலிங் தெங்ஙா - Tembeling Tengah
  • புலாவ் தாவர் - Pulau Tawar
  • தெபிங் திங்கி - Tebing Tinggi
  • உலு செக்கா - Hulu Cheka
  • பெடா - Pedah
  • புராவ் - Burau
  • கோலா தெம்பிலிங் - Kuala Tembeling
  • தே - Teh
  • கெலோலா - Kelola

அரசியல்

தொகு

நாடாளுமன்ற மக்களவைத் தொகுதி

தொகு
நாடாளுமன்றம் தொகுதி நாடாளுமன்ற உறுப்பினர் கட்சி
P81 ஜெராண்டுட் செகு அகமட் நாஸ்லான் பாரிசான் நேசனல்

மாநிலச் சட்டமன்றம்

தொகு
நாடாளுமன்றம் மாநிலச்
சட்டமன்றம்
தொகுதி சட்டமன்ற
உறுப்பினர்
கட்சி
P81 N9 தகான் வான் அமீசா வான் அப்துல் ரசாக் பாரிசான் நேசனல்
P81 N10 டாமாக் லாவ் லீ பாரிசான் நேசனல்
P81 N11 புலாவ் தாவார் அகமட் சுக்ரி இஸ்மாயில் பாரிசான் நேசனல்

ஜெராண்டுட் தமிழ்ப்பள்ளி

தொகு

ஜெராண்டுட் மாவட்டத்தில் ஒரு தமிழ்ப்பள்ளி மட்டுமே உள்ளது. அப்பள்ளியில் 144 மாணவர்கள் பயில்கிறார்கள். 15 ஆசிரியர்கள் பணியாற்றுகிறார்கள்.[2]

பள்ளி
எண்
இடம் பள்ளியின்
பெயர்
மலாய்
பள்ளியின்
பெயர்
தமிழ்
அஞ்சல் குறியீடு மாணவர்கள் ஆசிரியர்கள்
CBD2037 ஜெராண்டுட் SJK(T) Jerantut ஜெராண்டுட் தமிழ்ப்பள்ளி[3] 27000 144 15

மேற்கோள்

தொகு
  1. The population in Jerantut district is approximately 83,699 in 125 villages in 10 sub-districts.
  2. "Senarai Sekolah Rendah dan Menengah Jan 2020". www.moe.gov.my. பார்க்கப்பட்ட நாள் 2020-02-19.
  3. "ஜெராண்டுட் தமிழ்ப்பள்ளி". Facebook (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 5 June 2021.

வெளி இணைப்புக்கள்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=ஜெராண்டுட்_மாவட்டம்&oldid=3441231" இலிருந்து மீள்விக்கப்பட்டது