பெரா மாவட்டம்
பெரா மாவட்டம் (ஆங்கிலம்: Bera District; மலாய்: Daerah Bera; சீனம்: 百乐县; ஜாவி: ﺮﺍ}}); என்பது மலேசியா, பகாங் மாநிலத்தின் தென்மேற்குப் பகுதியில் உள்ள ஒரு மாவட்டம்.
பெரா மாவட்டம் | |
---|---|
Daerah Bera | |
பெரா மாவட்டம் | |
ஆள்கூறுகள்: 3°16′N 102°27′E / 3.267°N 102.450°E | |
நாடு | மலேசியா |
மாநிலம் | பகாங் |
மாவட்டம் | பெரா |
தொகுதி | பெரா |
உள்ளூராட்சி | பெரா நகராட்சி |
அரசு | |
• மாவட்ட அதிகாரி | ரசிகான் அசாருடின் |
பரப்பளவு | |
• மொத்தம் | 2,214.44 km2 (855.00 sq mi) |
மக்கள்தொகை (2010) | |
• மொத்தம் | 90,304 |
நேர வலயம் | மலேசிய நேரம் ஒ.ச.நே + 08:00 |
அஞ்சல் குறியீடு | 28xxx |
தொலைபேசி | +6-09 |
வாகனப் பதிவெண்கள் | C |
இந்த மாவட்டத்தின் மேற்கில் நெகிரி செம்பிலான் மாநிலம்; தெற்கில் ஜொகூர்; மாநிலம்; எல்லைகளாக உள்ளன. 2,241 கி.மீ² பரப்பளவு கொண்டது. மலேசியப் புகழ் பெரா ஏரி இந்த மாநிலத்தில்தான் உள்ளது.
மலேசியாவின் பிரதமர் இஸ்மாயில் சப்ரி யாகோப் இந்த மாவட்டத்தின் பெரா தொகுதியைச் சேர்ந்தவர். இவர் 2021 ஆகஸ்டு மாதம் 21-ஆம் தேதி முதல், நாட்டின் 9-ஆவது பிரதமராகப் பதவி வகித்து வருகின்றார்.[2]
சொற்பிறப்பியல்
தொகுமலேசியாவின் மிகப் பெரிய நன்னீர் ஏரியான பெரா ஏரி (Lake Bera) இந்த மாவட்டத்தில்தான் உள்ளது. 1994 நவம்பர் மாதம் முதல் ராம்சர் உடன்படிக்கையின் கீழ் அந்த ஏரி பாதுகாக்கப் பட்டு வருகிறது.[3]
அந்த ஏரியின் பெயரே இந்த மாவட்டத்திற்கும் வைக்கப்பட்டது. பெரா ஏரிப் பகுதியில் செமலை (Semelai) எனும் ஒராங் அஸ்லி பழங்குடியினர் வாழ்கிறார்கள். அவர்களின் கூற்றுப்படி, பெரா எனும் பெயர் ரெபா (Reba) எனப்படும் ஒரு வகை கடல் பாசியில் இருந்து பெறப்பட்டது. பெரா ஏரியில் அந்த வகையான கடல்வாழ் பாசிகள் உள்ளன.[4]
பொது
தொகுபெரா மாவட்டத்தின் தலைநகரம் பெரா. இந்த நகரம் முன்பு தெமர்லோ மாவட்டத்தில் இருந்தது. 1992-ஆம் ஆண்டு பெரா மாவட்டம் உருவாக்கப் பட்டது. அதன் பின்னர் பெரா நகரம் இந்த மாவட்டத்தின் தலைநகரம் ஆனது.
பகாங் மாநிலத்தின் தென்மேற்கு பகுதியியில் அமைந்துள்ள இந்த மாவட்டத்தின் வடக்கில் தெமர்லோ மாவட்டம் மற்றும் மாரான் மாவட்டம் உள்ளன. கிழக்கில் ரொம்பின் மாவட்டம் மேற்கில் பெந்தோங் மாவட்டம் மற்றும் தென்மேற்கில் நெகிரி செம்பிலான் மாநிலத்தின் செம்போல் மாவட்டம் ஆகியவை எல்லைகளாக உள்ளன.
முக்கிம்கள்
தொகுபெரா மாவட்டத்தில் இரண்டு முக்கிம்கள் எனும் துணை மாவட்டங்கள் உள்ளன.
- பண்டார் பெரா (165,094 ஹெக்டேர்)
- திரியாங் (56,350 ஹெக்டேர்)
தெற்கில் இருந்து, மலேசிய இரயில் சேவையின் நகரிடை இயங்கும் ஊர்தி (KTM Intercity) இந்த மாவட்டத்தின் வழியாக பகாங் மாநிலத்திற்குள் நுழைகின்றது. கெமாயான்; கெராயோங்; மெங்காராக் நிலையங்களில் நின்று செல்கின்றது.
முக்கிய நகரங்கள்
தொகுபெரா மாவட்டத்தின் முக்கிய நகரங்கள்:
மக்கள்தொகையியல்
தொகுஆண்டு | ம.தொ. | ±% |
---|---|---|
2000 | 77,685 | — |
2010 | 94,105 | +21.1% |
2020 | 98,137 | +4.3% |
ஆதாரம்: [5] |
பின்வருபவை 2010-ஆம் ஆண்டு மலேசிய புள்ளியியல் துறையின் மக்கள் தொகை கணக்கெடுப்பின் புள்ளி விவரங்கள்.
பெராவில் உள்ள இனக் குழுக்கள்: 2010 மக்கள் தொகை கணக்கெடுப்பு | ||
---|---|---|
இனம் | மக்கள் தொகை | விழுக்காடு |
மலாய்க்காரர்கள் | 60,696 | 67.2% |
சீனர்கள் | 24,511 | 27.1% |
இந்தியர்கள் | 4,739 | 5.2% |
இதர மக்கள் | 358 | 0.4% |
மொத்தம் | 90,304 | 100% |
பெரா மாவட்டத்தின் தமிழ்ப்பள்ளிகள்
தொகுபெரா மாவட்டத்தில் (Bera District) 3 தமிழ்ப்பள்ளிகள் உள்ளன. அவற்றில் 73 மாணவர்கள் பயில்கிறார்கள். 31 ஆசிரியர்கள் பணியாற்றுகிறார்கள்.
பள்ளி எண் |
இடம் | பள்ளியின் பெயர் மலாய் |
பள்ளியின் பெயர் தமிழ் |
அஞ்சல் குறியீடு | வட்டாரம் | மாணவர்கள் | ஆசிரியர்கள் |
---|---|---|---|---|---|---|---|
CBDA097 | மெந்திரி தோட்டம் Ladang Menteri |
SJK(T) Ldg Menteri | மெந்திரி தோட்டத் தமிழ்ப்பள்ளி[6] | 28300 | திரியாங் | 124 | 11 |
CBDA098 | மெங்காராக் Mengkarak |
SJK(T) Ldg Karmen | கார்மென் தோட்டத் தமிழ்ப்பள்ளி[7] | 28200 | பெரா | 14 | 8 |
CBDA099 | கெமாயான் Kemayan |
SJK(T) Kemayan | கெமாயான் தமிழ்ப்பள்ளி[8] | 28380 | கெமாயான் | 81 | 12 |
மேற்கோள்கள்
தொகு- ↑ primuscoreadmin (5 January 2016). "Latar Belakang".
- ↑ "Ismail Sabri appointed 9th prime minister". Malaysiakini (in ஆங்கிலம்). 20 August 2021. பார்க்கப்பட்ட நாள் 20 August 2021.
- ↑ "Tasik Bera (Lake Bera) is located in the centre of Peninsular Malaysia, in the southwestern corner of the state of Pahang". www.ecologyasia.com. பார்க்கப்பட்ட நாள் 7 May 2022.
- ↑ Kirk Endicott (2015). Malaysia's Original People: Past, Present and Future of the Orang Asli. NUS Press. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-99-716-9861-4.
- ↑ "TABURAN PENDUDUK MENGIKUT PBT & MUKIM 2010". Department of Statistics, Malaysia. பார்க்கப்பட்ட நாள் 15 December 2017.
- ↑ "SJK(T) Ladang Menteri - The Community Chest". commchest.org.my. பார்க்கப்பட்ட நாள் 6 June 2021.
- ↑ "SJKT LADANG KARMEN". sjkt (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 6 June 2021.
- ↑ "SJKT KEMAYAN - 2 Januari 2018 Melaksanakan Program Guru Penyayang untuk mengalu-alukan kehadiran murid pada hari pertama ke sekolah". பார்க்கப்பட்ட நாள் 6 June 2021.
வெளி இணைப்புகள்
தொகு