திராங்கானு மாநில சட்டமன்றம்
திராங்கானு மாநில சட்டமன்றம் அல்லது திராங்கானு சட்டப் பேரவை (மலாய்: Dewan Undangan Negeri Terengganu; ஆங்கிலம்: Terengganu State Legislative Assembly; சீனம்: 登嘉楼州立法议会) என்பது மலேசியா, திராங்கானு மாநிலத்தின் சட்டப் பேரவையாகும்.
திராங்கானு மாநில சட்டமன்றம் Terengganu State Legislative Assembly Dewan Undangan Negeri Terengganu | |
---|---|
14-ஆவது சட்டப் பேரவை | |
திராங்கானு மாநில சட்டமன்ற சின்னம் | |
வகை | |
வகை | |
வரலாறு | |
தோற்றுவிப்பு | 20 சூன் 1959 |
தலைமை | |
சுல்தான் | |
எதிர்க்கட்சித் தலைவர் | |
செயலாளர் | சுல்கிப்லி இசா (Zulkifli Isa) 2018 |
கட்டமைப்பு | |
உறுப்பினர்கள் | 32 + 1 குறைவெண் வரம்பு:11 எளிய பெரும்பான்மை: 17 மூன்றில் இரண்டு பெரும்பான்மை: 21 |
அரசியல் குழுக்கள் | திகதி (08.12.2018) அரசாங்கம் (23)
எதிர்க்கட்சிகள் (10)
சபாநாயகர் (1): |
தேர்தல்கள் | |
அண்மைய தேர்தல் | 9 மே 2018 |
அடுத்த தேர்தல் | 1 செப்டம்பர் 2023 |
கூடும் இடம் | |
Wisma Darul Iman, Kuala Terengganu, Terengganu விசுமா டாருல் ஈமான், கோலா திராங்கானு, திராங்கானு | |
வலைத்தளம் | |
dun |
மலேசியாவின் 13 மாநிலங்களில் ஒன்றான திராங்கானு மாநிலத்தில், சட்டங்களை இயற்றும் அல்லது சட்டங்களைத் திருத்தும் அவையாகும். திராங்கானு மாநிலச் சட்டமன்றம் 32 உறுப்பினர்களைக் கொண்டுள்ளது.[1]
திராங்கானு, கோலா திராங்கானு மாவட்டம், கோலா திராங்கானு, விசுமா டாருல் ஈமான், (Wisma Darul Iman) சட்டமன்ற வளாகத்தில் திராங்கானு மாநிலப் பேரவை கூடுகிறது.
பொது
தொகுதிராங்கானு மாநில சட்டமன்றம் திராங்கானு மாநிலத்திற்குப் பொருத்தமான சட்டங்களை இயற்றுகிறது. ஒரு வருடத்திற்கு குறைந்த பட்சம் மூன்று அமர்வுகளை நடத்துகிறது. ஒவ்வோர் ஆண்டும் மார்ச் மற்றும் அக்டோபர் மாத இறுதியில் அல்லது நவம்பர் மாதத் தொடக்கத்தில் மாநில வரவு செலவு கணக்குகளைத் தாக்கல் செய்கிறது.
திராங்கானு மாநில சட்டமன்றம் ஒரு நாடாளுமன்றத்தைப் போல இயங்குகிறது. திராங்கானு மாநில சட்டமன்றம், திராங்கானு மாநிலம் தொடர்பான சட்டங்களை நிறைவேற்றுகிறது. அதன் உறுப்பினர்கள் பொதுத் தேர்தல் அல்லது இடைத் தேர்தல் மூலமாகத் தேர்ந்தெடுக்கப் படுகின்றனர்.
சட்டமன்ற உறுப்பினர் உரிமை
தொகுமலேசிய அரசியலமைப்பு சட்டத்தின் கீழ், பொதுப் புகார்கள் போன்ற தற்போதைய பிரச்சனைகளைச் சுதந்திரமாக விவாதிக்கச் சட்டமன்ற உறுப்பினர்களுக்கு உரிமைகள் வழங்கப்பட்டு உள்ளன.
நிதி விசயங்களில், மாநில அரசாங்கத்திற்கு நிதி வழங்குவதற்கு மாநிலச் சட்டமன்றம் ஒப்புதல் அளிக்கிறது; மற்றும் வரி செலுத்துவோர் நலன் கருதி, அந்த நிதி ஒதுக்கீடு முறையாகச் செலவிடப் படுவதையும் உறுதி செய்கிறது.
ஒரு சட்டமன்ற உறுப்பினரின் பதவிக் காலம் ஐந்து ஆண்டுகள் ஆகும். மாநில அரசு சாசனப்படி ஐந்து ஆண்டுகளுக்கு ஒரு முறை திராங்கானு சட்டமன்றம் கலைக்கப்பட வேண்டும்.
சபாநாயகர் தலைமை
தொகுதிராங்கானு மாநில சட்டமன்றக் கூட்டங்களுக்கு சபாநாயகர் (Speaker) தலைமை தாங்குகிறார். தவிர விவாதங்களின் போது ஒழுங்கை உறுதிப் படுத்துகிறார். தற்போதைய சபாநாயகர் யகாயா அலி (Yahaya Ali).
சட்டமன்றத்தில் பெரும்பான்மை ஆதரவைப் பெற்ற கட்சி அல்லது கூட்டணி மந்திரி பெசார் தலைமையில் மாநில அரசாங்கத்தை அமைக்கிறது. பின்னர் அவர் மாநிலச் செயற்குழுவை (Majlis Mesyuarat Kerajaan) நியமிக்கிறார்.
திராங்கானு புவியியல்
தொகுதிராங்கானு மாநிலம் தீபகற்ப மலேசியாவின் கிழக்கே உள்ள ஒரு பெரிய மாநிலம். இந்த மாநிலத்தின் வடக்கே கிளாந்தான் மாநிலம்; மேற்கே பகாங் மாநிலங்கள் உள்ளன. கிழக்கே தென் சீனக் கடல் உள்ளது. திராங்கானு மாநிலம் மலேசியத் தலைநகர் கோலாலம்பூரில் இருந்து சுமார் 443 கிலோ மீட்டர் தொலைவில் இருக்கின்றது.[2]
பெர்கெந்தியான் தீவு; ரெடாங் தீவு; கப்பாஸ் தீவு போன்ற பல தீவுகள் திராங்கானு மாநிலத்தின் ஒரு பகுதியாக உள்ளன. மாநிலத்தின் மொத்த பரப்பளவு 13,035 km2 (5,033 sq mi)..[3]
கோலா திராங்கானு மாநகரம்
தொகுகோலா திராங்கானு மாநகரம் திராங்கானு மாநிலத்தின் அரச நகரமாகவும், தலைநகரமாகவும் விளங்குகின்றது. திராங்கானு மாநிலத்திற்கு ‘டாருல் ஈமான்’ எனும் நன்மதிப்பு அரபு அடைமொழியும் உண்டு. ’டாருல் ஈமான்’ என்றால் ‘புனிதமான இருப்பிடம்’ என்று பொருள். திராங்கானு ஒரு விவசாய மாநிலம் ஆகும். இங்கு நெல் வயல்கள் நிறைந்து காணப்படுகின்றன. கடற்கரைகளில் நிறைய மீனவக் கிராமங்கள் உள்ளன. பல ஆயிரம் ஆண்டுகளாகப் பூர்வீகக் குடிமக்கள், இந்த மாநிலத்தில் வாழ்ந்து வருகின்றனர்.[4]
திராங்கானு இந்தியர்கள்
தொகுதிராங்கானுவில் உள்ள இந்தியர்களில் பெரும்பாலோர் தமிழர்கள். பெரும்பான்மையினர் இந்து மதத்தைப் பின்பற்றுபவர்கள். இருப்பினும் சிறுபான்மையினர் இஸ்லாத்தையும் பின்பற்றுகிறார்கள். சீனர்களைப் போலவே, திராங்கானுவில் உள்ள இந்தியர்ச் சமூகமும் தனிச் சமூகமாகத் தனித்து வாழ்கின்றது.
இந்தியர்கள் பலர் தமிழ் மொழி, மலாய் மொழி, ஆங்கில மொழி, மற்றும் உள்ளூர்த் திராங்கானு மலாய் மொழியில் (Terengganu Malay) மிகச் சரளமாக பேசுகிறார்கள். திராங்கானுவில் உள்ள பெரும்பாலான இந்தியர்கள் கோலா திராங்கானு போன்ற நகர்ப் புறங்களில் வாழ்கின்றனர். திராங்கானுவில் மிகக் குறைந்த எண்ணிக்கையிலான மலையாளி வம்சாவழியினரும் உள்ளனர்.
அரசாங்கமும் அரசியலும்
தொகுஅரசியல் சாசனப் படி திராங்கானு சுல்தான்; திராங்கானு மாநிலத்தை ஆட்சி செய்கின்றார். திராங்கானு சுல்தானின் ஆளுமைத் தகுதி பாரம்பரிய மரபு வழியாக வருகின்றது. ஆயுள் காலம் வரை ஒரு சுல்தான் ஆட்சி செய்வார். அத்துடன் திராங்கானு மாநிலத்தில் இசுலாம் சமயத்தின் தலைவராகவும் இவர் செயல் படுகின்றார்.
திராங்கானு மாநிலத்தில் இப்போது சுல்தான் மிசான் சைனல் ஆபிதீன் (Mizan Zainal Abidin of Terengganu) என்பவர் சுல்தானாக இருக்கின்றார். இவர் 1998-ஆம் ஆண்டில் இருந்து சுல்தானாகப் பணி செய்து வருகிறார்.
மாநிலச் செயலாட்சி மன்றம்
தொகுமாநிலச் செயலாட்சி மன்றம் (State Executive Council) சுல்தானைத் தலைவராகக் கொண்டு செயல் பட்டு வருகின்றது. அரசாங்க நிர்வாகச் சேவைத் தலைவராக இருப்பவர் மாநில முதலமைச்சர். இவரை மந்திரி பெசார் (Menteri Besar) என்று அழைக்கிறார்கள். இவருக்கு உதவியாக குறைந்த பட்சம் 10 பேர் மாநிலச் செயலாட்சி உறுப்பினர்களாக உள்ளனர்.
இவர்கள் அனைவரும் மாநில அமைச்சர்கள் ஆவர். இவர்கள் மாநிலச் சட்டசபையில் இருந்து தேர்வு செய்யப் படுகின்றார்கள். மாநில முதலமைச்சரையும் மாநிலச் செயலாட்சி உறுப்பினர்களையும் சுல்தான் நியமனம் செய்கின்றார்.
தற்போதைய திராங்கானு சட்டமன்றம் (2022)
தொகுஅரசு | எதிரணி |
பெரிக்காத்தான் | பாரிசான் |
23 | 10 |
23 | 10 |
பாஸ் | அம்னோ |
நிர்வாகப் பிரிவுகள்
தொகுதிராங்கானு மாநிலம் 8 மாவட்டங்கள்; 99 முக்கிம்கள்; மற்றும் 7 உள்ளூர் ஆட்சிகளாகப் பிரிக்கப்பட்டு உள்ளது.[5][6]
திராங்கானுவின் நிர்வாகப் பிரிவுகள் | ||||||
---|---|---|---|---|---|---|
UPI குறியீடு | மாவட்டம் | மக்கள் தொகை (2017)[6] |
பரப்பளவு (km2)[6] |
இடம் | முக்கிம் | |
1101 | பெசுட் | 165,880 | 1,233.678 | கம்போங் ராஜா | 19 | |
1102 | டுங்குன் | 182,460 | 2,735.031 | கோலா டுங்குன் | 13 | |
1103 | உலு திராங்கானு | 85,520 | 3,874.626 | கோலா பெராங் | 10 | |
1104 | கெமாமான் | 204,090 | 2,535.599 | சுக்கை | 17 | |
1105 | கோலா திராங்கானு | 253,690 | 210.215 | கோலா திராங்கானு | 21 | |
1106 | மாராங் | 114,920 | 666.543 | மாராங் | 8 | |
1107 | செத்தியு | 66,007 | 1,304.363 | பண்டார் பரமேசுவரி | 7 | |
1108 | கோலா நெருஸ் | 148,950 | 397.521 | கோலா நெருஸ் | 4 | |
குறிப்பு: கோலா திராங்கானு நகர சபையின் அதிகார வரம்பிற்கு உட்பட்ட கோலா நெருஸ் மற்றும் கோலா திராங்கானுவைத் தவிர மற்ற பெரும்பாலான மாவட்டங்கள் ஒரே உள்ளூர் அரசாங்கத்தைக் கொண்டு உள்ளன. |
மேற்கோள்
தொகு- ↑ "Terengganu State Legislative Assembly 32 members". dun.terengganu.gov.my. பார்க்கப்பட்ட நாள் 31 December 2022.
- ↑ "Department of Statistics Malaysia Official Portal". www.dosm.gov.my.
- ↑ "Pulau Perhentian consists of a group of islands namely: a) Pulau Perhentian Besar b) Pulau Perhentian Kecil c) Pulau Susu Dara and other smaller islands". Official Portal of Besut District Council (MDB). பார்க்கப்பட்ட நாள் 13 April 2022.
- ↑ "Background". Kuala Terengganu City Council. பார்க்கப்பட்ட நாள் 27 December 2017.
- ↑ "Local Authorities". Government of Terengganu. பார்க்கப்பட்ட நாள் 18 October 2019.
- ↑ 6.0 6.1 6.2 "Draf RSNT 2050 (Kajian Semula)" (PDF). Government of Terengganu. 2019. Archived from the original (PDF) on 2022-05-01. பார்க்கப்பட்ட நாள் 2022-12-31.