டுங்குன் மாவட்டம்
டுங்குன் மாவட்டம் (ஆங்கிலம்: Dungun District; மலாய்: Daerah Dungun; சீனம்: 龙运县; ஜாவி: دوڠون) என்பது மலேசியாவின் திராங்கானு மாநிலத்தில் உள்ள ஒரு மாவட்டம் ஆகும். திராங்கானு மாநிலத்தில் எட்டு மாவட்டங்கள் உள்ளன. அவற்றில் தென்சீனக் கடலை ஒட்டிய மாவட்டங்களில் இந்த மாவட்டமும் ஒன்றாகும்.
டுங்குன் மாவட்டம் | |
---|---|
Dungun District | |
திராங்கானு | |
ஆள்கூறுகள்: 4°15′N 103°10′E / 4.250°N 103.167°E | |
நாடு | மலேசியா |
மாநிலம் | திராங்கானு |
மாவட்டம் | டுங்குன் |
மாவட்ட தகுதி | 1 சனவரி 1974 |
நகராட்சி தகுதி | 25 சூலை 2008 |
தொகுதி | கோலா டுங்குன் |
பரப்பளவு | |
• மொத்தம் | 2,735.03 km2 (1,056.00 sq mi) |
மக்கள்தொகை (2020) | |
• மொத்தம் | 2,15,000 |
• அடர்த்தி | 79/km2 (200/sq mi) |
நேர வலயம் | மலேசிய நேரம் ஒ.ச.நே + 08:00 |
மலேசிய அஞ்சல் குறியீடு | 23000 |
இந்த மாவட்டத்தின் தலைநகரம் கோலா டுங்குன் (Kuala Dungun). 1940-ஆம் ஆண்டுகளில் டுங்குன் ஓர் இரும்புச் சுரங்க நகரமாக இருந்தது. மேற்கில் அமைந்துள்ள புக்கிட் பீசி (Bukit Besi) என்ற சிறிய நகரத்தில் இரும்புத் தாது எடுக்கப்பட்டது. அந்தக் கட்டத்தில் டுங்குன் நகரம் ஒரு துறைமுகமாகச் செயல்பட்டது. அங்கு இருந்து இரும்புத் தாதுப் பொருள்கள் கப்பல்களுக்கு மாற்றப்பட்டன.
சுரங்கத் தொழிலுக்கு பெயர் பெற்ற டுங்குன் (Dungun) மற்றும் புக்கிட் பீசி நகரங்கள், தொடருந்து பாதையால் இணைக்கப்பட்டு இருந்தன. அந்தத் தொடருந்து பாதை உள்நாட்டு கிராம மக்களுக்கும், வணிக செயல்பாடுகளுக்கும் பொது போக்குவரத்துச் சேவையை வழங்கி வந்தது.
பொது
தொகு1980-ஆம் ஆண்டுகளுடன் டுங்குன் நகரின் பொற்காலம் முடிந்தது. அங்கு இருந்த சுரங்கங்கள் படிப்படியாக மூடப்பட்டதால், சுரங்க நிறுவனம் அப்பகுதியை விட்டு வெளியேறியது; தொடருந்து சேவையும் நிறுத்தப்பட்டது. புக்கிட் பீசி இப்போது அரசாங்க நிதியுதவி பெற்ற செம்பனைத் தோட்டங்களுடன் செயல்படுகிறது.
பழைய பிரித்தானிய கட்டிடக்கலை (British Architecture) இப்போது இல்லை. இரும்புச் சுரங்கப் பகுதிக்கு பதிலாக பெல்டா (Felda Estate) தோட்ட வீடுகள் மற்றும் செம்பனைத் தோட்டங்கள் உள்ளன. டுங்குன் நகரம் இப்போது திராங்கானு மாநிலத்தில் மற்றொரு கடற்கரை நகரமாக விளங்குகிறது. ஒவ்வொரு வியாழன் தோறும் வாராந்திர இரவுச் சந்தை (Weekly Night Market) வணிகத்திற்காகத் திறக்கும் போது மட்டும் டுங்குன் நகரம் உயிர்பெறுகிறது.
டுங்குன் இரவுச் சந்தை
தொகுடுங்குன் இரவுச் சந்தை திராங்கானுவில் மிகப்பெரிய இரவு சந்தையாக அறியப்படுகிறது. ஜப்பான் மற்றும் அமெரிக்காவில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட ஆடைகள் இரவு சந்தையில் விற்கப்படுகின்றன. கிராமப் புறங்களைச் சேர்ந்தவர்கள் விலைகுறைந்த பொருட்களை வாங்குவதற்கு டுங்குன் நகரத்திற்கு வருகிறார்கள். இரவுச் சந்தை நகரின் நடுவில், பழைய தொடருந்து பாதையில் (Old Railway Line) நடைபெறுகிறது.
இப்போதைய காலக்கட்டத்தில், இன்னும் சில விவசாய குடும்பங்கள் மற்றும் சிறு தொழில்களில் ஈடுபட்டுள்ளனர். மக்கள்தொகையில் பெரும் பகுதியினர் டுங்குன் நகருக்கு அருகில் உள்ள கெர்த்தே (Kerteh) நகரத்தின் பெட்ரோலியத் தொழில்களில் ஈடுபட்டுள்ளனர்.
நிர்வாகப் பிரிவுகள்
தொகுடுங்குன் மாவட்டம் 11 முக்கிம்களாகப் பிரிக்கப்பட்டுள்ளது.
- அபாங் (Abang)[2]
- பெசோல் (Besol)
- செங்காய் (Jengai)
- செராங்காவ் (Jerangau)
- கோலா டுங்குன் (Kuala Dungun)
- கோலா பாக்கா (Kuala Paka)
- கும்பால் (Kumpal)
- பாசீர் ராஜா (Pasir Raja)
- ராசாவ் (Rasau)
- சூரா (Sura)
- உலு பாக்கா (Hulu Paka)
மேற்கோள்கள்
தொகு- ↑ 1.0 1.1 Administrator. "Pengenalan Daerah Dungun". pdtdungun.terengganu.gov.my. Archived from the original on 2019-09-17. பார்க்கப்பட்ட நாள் 2023-07-01.
- ↑ "MPD was established on 1st January 1981 under the Local Government Act 1976 (Act 171) through Terengganu State Government Gazzette No. 860 dated 18 .December 1980". mpd.terengganu.gov.my (in பிரிட்டிஷ் ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 1 July 2023.
வெளி இணைப்புகள்
தொகு- பொதுவகத்தில் Dungun District தொடர்பாக ஊடகக் கோப்புகள் உள்ளன.