பண்டார் பரமேசுவரி

பண்டார் பரமேசுவரி; (ஆங்கிலம்: Bandar Permaisuri; மலாய்: Bandar Permaisuri) என்பது மலேசியா, திராங்கானு மாநிலத்தில், செத்தியூ மாவட்டத்தில் (Setiu District) உள்ள ஒரு சிறிய நகரம் ஆகும். திராங்கானு மாநிலத்தின் தலைநகரான கோலா திராங்கானு (Kuala Terengganu) மாநகரில் இருந்து 70 கி.மீ. தொலைவில் தெற்கில் உள்ளது.[1]

பண்டார் பரமேசுவரி
Bandar Permaisuri
 திராங்கானு
Map
பண்டார் பரமேசுவரி is located in மலேசியா
பண்டார் பரமேசுவரி
      பண்டார் பரமேசுவரி
ஆள்கூறுகள்: 5°31′0″N 102°45′12″E / 5.51667°N 102.75333°E / 5.51667; 102.75333
நாடு மலேசியா
மாநிலம் திராங்கானு
மாவட்டம்செத்தியூ
நகரம் பண்டார் பரமேசுவரி
தொகுதிசெத்தியூ மக்களவைத் தொகுதி
ஊராட்சிசெத்தியூ ஊராட்சி
நேர வலயம்மலேசிய நேரம் ஒ.ச.நே + 08:00
அஞ்சல் குறியீடு
22100
தொலைபேசி+6-09
போக்குவரத்து எண்T
இணையதளம்mds.terengganu.gov.my

செத்தியூ மாவட்டத்திற்குள் செத்தியூ ஆற்றங் கரையில் அமைந்துள்ள பண்டார் பரமேசுவரி நகரம்; செத்தியூ மாவட்டத்தின் தலைநகரமாகவும் செயல்படுகிறது. இருப்பினும் முன்னர் காலத்தில் திராங்கானு மாநிலத்தின் பழைய தலைநகரமாக இருந்தது. அந்த வகையில் இது ஒரு வரலாற்று நகரமாகவும் அறியப்படுகிறது.

இந்த நகரத்தின் பழைய பெயர் கம்போங் பூலோ (Kampung Buluh)[2]

பொது

தொகு

1985-இல் திராங்கானு மாநிலத்தில் செத்தியூ மாவட்டம் ஒரு புதிய மாவட்டமாக அறிவிக்கப்பட்ட பின்னர் பண்டார் பரமேசுவரி நிறுவப்பட்டது; மற்றும் அதிகாரப்பூர்வமாக மாவட்டத்தின் தலைநகராகவும் மாற்றப்பட்டது.[3]

பண்டார் பரமேசுவரி நகரத்தில் இப்போது செத்தியூ மாவட்ட நிர்வாகத்திற்கான அரசு அலுவலகங்கள் மற்றும் அரசு நிறுவனங்கள் உள்ளன. அத்துடன் செத்தியூ மாவட்டத்தின் வணிக மற்றும் நிர்வாக மையமாகவும் உள்ளது.

காலநிலை

தொகு

பண்டார் பரமேசுவரி ஒரு வெப்பமண்டல மழைக்காடு காலநிலையையும்; ஆண்டு முழுவதும் கனமான மழை பொய்வையும் கொண்டுள்ளது.

தட்பவெப்ப நிலைத் தகவல், கம்போங் பெசுட் செத்தியூ (மழை பொழிவு : 2007-2012)
மாதம் சன பிப் மார் ஏப் மே சூன் சூலை ஆக செப் அக் நவ திச ஆண்டு
பொழிவு mm (inches) 394
(15.51)
875
(34.45)
83
(3.27)
213
(8.39)
272
(10.71)
102.5
(4.035)
191
(7.52)
316
(12.44)
307
(12.09)
486
(19.13)
559.5
(22.028)
880
(34.65)
4,679
(184.21)
மழைப்பொழிவுmm (inches) 557.1
(21.933)
110.7
(4.358)
449.6
(17.701)
174.5
(6.87)
344
(13.54)
275.3
(10.839)
213.2
(8.394)
278.7
(10.972)
269.2
(10.598)
347.3
(13.673)
638
(25.12)
781
(30.75)
4,438.6
(174.748)
ஆதாரம்: Department Of Irrigation & Drainage Malaysia
வானிலை ஆய்வு நிலையம் - கம்போங் பெசுட் செத்தியூ
ஆண்டு மழை
2012
4,124 mm (162.4 அங்)
2011
4,958.5 mm (195.22 அங்)
2010
3,828 mm (150.7 அங்)
2009
5,606 mm (220.7 அங்)
2008
4,048 mm (159.4 அங்)
2007
4,066 mm (160.1 அங்)
Source Department Of Statistics Malaysia பரணிடப்பட்டது 2015-01-09 at the வந்தவழி இயந்திரம்

மேற்கோள்கள்

தொகு
  1. "The distance from Bandar Permaisuri to Kuala Terengganu is 70 kilometers by road. The road takes about 45 minutes and goes through Pekan Sungai Tong, Kampung Batu Enam, Kampung Gemuroh and Kampung Petaling". www.pandujalanterbaik.com. பார்க்கப்பட்ட நாள் 30 June 2023.
  2. "Bandar Permaisuri (GPS: 5.51626, 102.75781) is a small town in Terengganu. It is located by the banks of Sungai Setiu, within the Setiu district, and acts as the district capital". Penang Travel Tips (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 30 June 2023.
  3. Razali, Razlani. "The Setiu District Council was established on 1 June 1985 according to Terengganu State Government Gazette No. 335 dated 6 June 1985 and is the 7th local authority for the state of Terengganu". mds.terengganu.gov.my. பார்க்கப்பட்ட நாள் 30 June 2023.

மேலும் காண்க

தொகு

வெளி இணைப்புகள்

தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=பண்டார்_பரமேசுவரி&oldid=4109783" இலிருந்து மீள்விக்கப்பட்டது