கோலா நெருசு மாவட்டம்

மலேசியாவின் திராங்கானு மாநிலத்தில் உள்ள மாவட்டம்
(கோலா நெருஸ் மாவட்டம் இலிருந்து வழிமாற்றப்பட்டது)

கோலா நெருசு மாவட்டம் (ஆங்கிலம்: Kuala Nerus District; மலாய்: Daerah Kuala Nerus; சீனம்: 瓜拉尼鲁斯; ஜாவி: كوالا نيروس‎) என்பது மலேசியாவின் திராங்கானு மாநிலத்தில் உள்ள ஒரு மாவட்டம் ஆகும். திராங்கானு மாநிலத்தில் எட்டு மாவட்டங்கள் உள்ளன. அவற்றில் இந்த மாவட்டமும் ஒன்றாகும்.

கோலா நெருசு மாவட்டம்
Kuala Nerus District
 திராங்கானு
கோலா நெருசு பாசிர் பாஞ்சாங் தீவு
கோலா நெருசு பாசிர் பாஞ்சாங் தீவு
Map
கோலா நெருசு மாவட்டம் is located in மலேசியா
கோலா நெருசு மாவட்டம்
      கோலா நெருசு மாவட்டம்
ஆள்கூறுகள்: 5°20′N 103°00′E / 5.333°N 103.000°E / 5.333; 103.000
நாடு மலேசியா
மாநிலம் திராங்கானு
மாவட்டம் கோலா நெருசு
தொகுதிகோலா நெருசு
உள்ளூராட்சிகோலா திராங்கானு மாநகராட்சி
அரசு
 • மாவட்ட அதிகாரிஅரிபின் அப்துல்லா
பரப்பளவு
 • மொத்தம்397.52 km2 (153.48 sq mi)
மக்கள்தொகை
 (2015)
 • மொத்தம்2,26,177
நேர வலயம்மலேசிய நேரம் ஒ.ச.நே + 08:00
அஞ்சல் குறியீடு
213xx
தொலைபேசி+6-09-6
போக்குவரத்து எண்T

திராங்கானு மாநிலத்தில் மிகப் புதிதாகத் தோற்றுவிக்கப்பட்ட மாவட்டம் எனும் பெருமையும் இந்தக் கோலா நெருசு மாவட்டத்திற்கு உண்டு. 2014-ஆம் ஆண்டில் தனி மாவட்டமாக அறிவிக்கப்பட்டது. முன்பு கோலா திராங்கானு மாவட்டத்தின் ஒரு பகுதியாக இருந்தது.

இதன் தலைநகரம் கோலா நெருசு நகரம். கோங் படாக், செபெராங் தாகிர், பத்து ராகிட் மற்றும் பத்து என்னாம் ஆகியவை மற்ற முக்கிய நகரங்கள்.

பொது

தொகு

கோலா நெருசு மாவட்டத்தில் ரெடாங் தீவுக்கூட்டம (Redang archipelago) உள்ளது. ரெடாங் தீவு மற்றும் பினாங்கு தீவு (Pinang Island) ஆகியவை இரண்டும் முக்கிய தீவுகள். மக்கள் வசிக்கும் தீவுகள்.

மற்ற சிறிய தீவுகள் லிங் தீவு, எக்கோர் தெபு தீவு (Ekor Tebu Island), லீமா தீவு, பாகு தீவு, பாக்கு கெசில் தீவு, கெரெங்கா தீவு, மற்றும் கெரெங்கா கெசில் தீவு.

ரெடாங் தீவுக்கூட்டம்

தொகு

ரெடாங் தீவுக்கூட்டம் தென் சீனக் கடலில் உள்ள கோலா திராங்கானுவில் இருந்து 45 கி.மீ. தொலைவில் அமைந்து உள்ளது. இந்தத் தீவுகளில் சுமார் 500 வகையான பவளப் பாறைகள் உள்ளன. மற்றும் ஆயிரக்கணக்கான மீன் இனங்கள் மற்றும் முதுகெலும்பில்லாத உயிரினங்கள் உள்ளன.

1994-ஆம் ஆண்டு ரெடாங் தீவுக்கூட்டம் ஒரு கடல் பூங்காவாக நியமிக்கப்பட்டது. மலேசியாவில், கடல்சார் சுற்றுச்சூழல் அமைப்பைப் பாதுகாக்கவும் மற்றும் நீருக்கடியிலான இயற்கைத் தன்மையை அனுபவிக்க மக்களுக்கு வாய்ப்புகள் வழங்குவதற்காக அந்தக் கடல் பூங்கா நிறுவப்பட்டது.

ரெடாங் தீவுகள் கார்ப்படிகங்கள் மற்றும் வண்டல் பாறைகளால் ஆனவை.[2][3][4] தவிர, லாங் தெங்கா தீவு, பிடாங் தீவு, கெலுக் தீவு மற்றும் காரா தீவு ஆகியவை கோலா நெருஸ் மாவட்டத்தின் அதிகார வரம்பிற்கு உட்பட்டவை.

நிர்வாகப் பிரிவுகள்

தொகு

கோலா நெருசு மாவட்டம் நான்கு முக்கிம்களாகப் பிரிக்கப்பட்டு உள்ளது, அவை:

மேற்கோள்கள்

தொகு
  1. "Pengenalan Daerah Dungun". pdtdungun.terengganu.gov.my. பார்க்கப்பட்ட நாள் 31 January 2021.
  2. Joshua B. Fisher; Rizwan Nawaz; Rosmadi Fauzi; Faiza Nawaz; Eran Sadek Said Md Sadek; Zulkiflee Abdul Latif; Matthew Blackett (30 May 2008). "Balancing water, religion and tourism on Redang Island, Malaysia". Environmental Research Letters 3 (2): 024005. doi:10.1088/1748-9326/3/2/024005. Bibcode: 2008ERL.....3b4005F. http://josh.yosh.org/publications/Fisher%20et%20al%202008%20-%20Balancing%20water,%20religion%20and%20tourism%20on%20Redang%20Island,%20Malaysia.pdf. பார்த்த நாள்: 9 April 2015. 
  3. "Terengganu". Department of Marine Park Malaysia – Terengganu. 30 July 2012. Archived from the original on 9 April 2015. பார்க்கப்பட்ட நாள் 23 March 2015.
  4. Kamal Roslan Mohamed. "Stratigrafi Malaysia – Terengganu" (PDF). UKM Geologist. National University of Malaysia. p. 1. பார்க்கப்பட்ட நாள் 23 March 2015.

வெளி இணைப்புகள்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=கோலா_நெருசு_மாவட்டம்&oldid=4034608" இலிருந்து மீள்விக்கப்பட்டது