மகாதீர் பின் முகமது

மலேசியப் பிரதமர்

மகாதீர் பின் முகமது (Mahathir bin Mohamad, சீனம்: 马哈迪·莫哈末; பிறப்பு: 10 சூலை 1925)[2] மலேசிய அரசியல்வாதி ஆவார். இவர் 1981 முதல் 2003 வரையும், பின்னர் 2018 முதல் 2020 வரையும் மலேசியப் பிரதமராகப் பதவி வகித்தார்.[3] இவர் லங்காவி தொகுதியின் நாடாளுமன்ற உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். முன்னர் 1981 முதல் 2003 வரை நான்காவது பிரதமராகப் பதவியில் இருந்தார். 1946 ஆம் ஆண்டில் இவர் புதிதாக உருவாக்கப்பட்ட அம்னோ கட்சியில் சேர்ந்து தீவிர அரசியலில் இறங்கினார். 2016 ஆம் ஆண்டில் இவர் மலேசிய ஐக்கிய மக்கள் கட்சி என்ற பெயரில் தனிக் கட்சி தொடங்கினார்.[4][5] 10 மே 2018 அன்று 92 வயதுடைய மகாதீர் முகமது, மலேசியா நாட்டின் பிரதம அமைச்சராக மீண்டும் பொறுப்பேற்றார்.[6][7]24 பிப்ரவரி 2020 அன்று, மகாதீர் பின் முகமது பிரதமர் பதவியை ராஜினாமா செய்தார்.

துன் மரு.
மகாதீர் முகமது
Mahathir Mohamad
马哈迪·莫哈末

நா.உ.
Malaysian Prime Minister Mahathir Mohamad (42910851015) (cropped).jpg
2019 இல் மகாதீர்
4-வது, 7-வது மலேசியப் பிரதமர்
பதவியில்
10 மே 2018 – 24 பெப்ரவரி 2020
இடைக்கால: 24 பெப்ரவரி 2020 – 1 மார்ச் 2020[1]
அரசர் கெலந்தானின் ஐந்தாம் முகம்மது
சுல்தான் அப்துல்லா
துணை வான் அசிசா வான் இஸ்மாயில்
முன்னவர் நஜீப் ரசாக்
பின்வந்தவர் முகிதீன் யாசின்
பதவியில்
16 சூலை 1981 – 31 அக்டோபர் 2003
அரசர் அகமது ஷா,
இசுக்காந்தர்,
அசுலான் ஷா,
ஜாஃபர்,
சலாகுதீன்,
சிராசுதீன்
துணை முசா இத்தாம்,
காஃபர் பாபா,
அன்வர் இப்ராகீம்,
அப்துல்லா அகுமது பதவீ
முன்னவர் உசேன் ஓன்
பின்வந்தவர் அப்துல்லா அகுமது பதவீ
21-வது பொதுச் செயலர், கூட்டுசேரா இயக்கம்
பதவியில்
20 பெப்ரவரி 2003 – 31 அக்டோபர் 2003
முன்னவர் தாபோ உம்பெக்கி
பின்வந்தவர் அப்துல்லா அகுமது பதவீ
4-வது மலேசிய துணைப் பிரதமர்
பதவியில்
5 மார்ச் 1976 – 16 சூலை 1981
பிரதமர் உசேன் ஓன்
முன்னவர் உசேன் ஓன்
பின்வந்தவர் மூசா இத்தாம்
நிதி அமைச்சர்
பதவியில்
5 சூன் 2001 – 31 அக்டோபர் 2003
முன்னவர் தயீம் சைனுதீன்
பின்வந்தவர் அப்துல்லா அகுமது பதவீ
பதவியில்
7 செப்டம்பர் 1998 – 7 சனவரி 1999
முன்னவர் அன்வர் இப்ராகீம்
பின்வந்தவர் தயீம் சைனுதீன்
உட்துறை அமைச்சர்
பதவியில்
8 மே 1986 – 8 சனவரி 1999
முன்னவர் மூசா இத்தாம்
பின்வந்தவர் அப்துல்லா அகுமது பதவீ
பாதுகாப்பு அமைச்சர்
பதவியில்
18 சூலை 1981 – 6 மே 1986
முன்னவர் அப்துல் தையீப் மகுமுது
பின்வந்தவர் அப்துல்லா அகுமது பதவீ
வர்த்தக, தொழிற்துறை அமைச்சர்
பதவியில்
1 சனவரி 1978 – 16 சூலை 1981
பிரதமர் உசேன் ஓன்
முன்னவர் அம்சா அபு சமா
பின்வந்தவர் அகமது இசுமாயில்
கல்வி அமைச்சர்
பதவியில்
5 செப்டம்பர் 1974 – 31 திசம்பர் 1977
பிரதமர் அப்துல் ரசாக் உசேன்
உசேன் ஓன்
முன்னவர் மொகமது யாக்கோபு
பின்வந்தவர் மூசா இத்தாம்
லங்காவி தொகுதியின்
நாடாளுமன்ற உறுப்பினர்
பதவியில் உள்ளார்
பதவியேற்பு
10 மே 2018
முன்னவர் நவாவி அகமது
பெரும்பான்மை 8,893 (2018)
குபாங் பாசு தொகுதியின்
நாடாளுமன்ற உறுப்பினர்
பதவியில்
24 ஆகத்து 1974 – 21 மார்ச் 2004
முன்னவர் புதிய தொகுதி
பின்வந்தவர் மோகுத் பகாரும்
கடாரம் தொகுதிக்கான மேலவை உறுப்பினர்
பதவியில்
30 திசம்பர் 1972 – 23 ஆகத்து 1974
கோட்டா சேத்தார் செலாட்டன் தொகுதியின்
நாடாளுமன்ற உறுப்பினர்
பதவியில்
25 ஏப்ரல் 1964 – 10 மே 1969
பெரும்பான்மை 4,210 (1964)
தனிநபர் தகவல்
பிறப்பு மகாதீர் பின் முகமது
10 சூலை 1925 (1925-07-10) (அகவை 97)
அலோர் ஸ்டார், மலேசியா
அரசியல் கட்சி மலேசிய ஐக்கிய மக்கள் கட்சி-பாக்காத்தான் ஹரப்பான் (2016–இன்று)
அம்னோ-தேசிய முன்னணி (1946–2016)
வாழ்க்கை துணைவர்(கள்) சித்தி அசுமா
பிள்ளைகள் 7
படித்த கல்வி நிறுவனங்கள் சிங்கப்பூர் தேசியப் பல்கலைக்கழகம்
கையொப்பம்
இணையம் இணையதளம்

இவரது பதவிக்காலத்தில் இவர் ஆசியாவின் ஒரு முக்கிய அரசியல் தலைவராகக் கருதப்பட்டார்.[8] மேற்கத்தைய வாழ்க்கை முறையைப் பெரிதும் விமர்சித்து வந்தார்.[9].

கடாரம், அலோர் ஸ்டார் என்ற இடத்தில் பிறந்து வளர்ந்தவரான மகாதீர் மருத்துவக் கல்வி படித்து மருத்துவராகப் பட்டம் பெற்றார். அம்னோ கட்சியில் இணைந்து செயற்பட்டு வந்த இவர் 1964 ஆம் ஆண்டில் நாடாளுமன்றத்திற்குத் தேர்ந்தெடுக்கப்பட்டார். அடுத்த தேர்தலில் தோல்வியடைந்த இவர் அன்றைய பிரதமர் துங்கு அப்துல் ரகுமானுடன் ஏற்பட்ட சர்ச்சை[10] காரணமாக கட்சியில் இருந்து விலக்கப்பட்டார். துங்கு அப்துல் ரகுமான் பிரதமர் பதவியில் இருந்து விலகியதை அடுத்து, மகாதீர் மீண்டும் அம்னோ கட்சியில் இணைந்து நாடாளுமன்றம் சென்றதுடன், அமைச்சரவையிலும் இணைந்தார். 1976 ஆம் ஆண்டில் துணைப் பிரதமராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். 1981 இல் பிரதமர் உசேன் ஓன் பதவியில் இருந்து விலகியதை அடுத்து மகாதீர் மலேசியாவின் 4-வது பிரதமராகத் தெரிவானார்.

2020-2021 மலேசிய அரசியல் நெருக்கடிதொகு

24 பிப்ரவரி 2020 அன்று, மகாதீர் பிரதமர் பதவியை ராஜினாமா செய்தார். அதே வேளையில், ஆளும் நம்பிக்கை கூட்டணியிலிருந்து 26 நாடாளுமன்ற உறுப்பினர்களைக் கொண்ட பிபிபிஎம் விலகியது. கூடுதலாக, நீதிக்கட்சியைச் சேர்ந்த 11 நாடாளுமன்ற உறுப்பினர்கள் நம்பிக்கை கூட்டணியைத் தாங்கள் ஆதரிக்கவில்லையெனத் தெரிவித்தனர். இதனால், நம்பிக்கை கூட்டணி அரசு கவிழ்ந்தது. மாநில அளவில், பக்காத்தான் ஹரப்பான் அரசு ஜோகூர், மலாக்கா, பேராக், கெடா ஆகிய மாநிலங்களிலும் கவிழ்ந்தது.

மேற்கோள்கள்தொகு

  1. Lim, Ida. "Agong accepts Dr M's resignation, reappoints him as interim PM | Malay Mail". www.malaymail.com (ஆங்கிலம்). February 24, 2020 அன்று பார்க்கப்பட்டது.
  2. Chin, Professor James; Dosch, Professor Joern (15 August 2015). "MALAYSIA POST-MAHATHIR: A Decade of Change". Marshall Cavendish International Asia Pte Ltd. 12 May 2018 அன்று பார்க்கப்பட்டது – Google Books வழியாக.
  3. "Malaysia's Mahathir resigns but is asked to stay as interim PM". www.aljazeera.com. 24 February 2020 அன்று பார்க்கப்பட்டது.
  4. "Malaysia's PM in danger as Mahathir quits party". https://www.reuters.com/article/us-malaysia-mahathir-idUSKLR14546620080519. 
  5. "Mahathir quits Umno, calling it 'Najib's party'". https://www.straitstimes.com/asia/se-asia/mahathir-quits-umno-calling-it-najibs-party. 
  6. "Mahathir bin Mohamad - Facts & Biography". 12 May 2018 அன்று பார்க்கப்பட்டது.
  7. Library, CNN. "Mahathir bin Mohamad Fast Facts". 12 May 2018 அன்று பார்க்கப்பட்டது.
  8. "Asia's 20 Most Influential Figures - Business Asia - Find Articles". 8 July 2012. 8 July 2012 அன்று மூலம் பரணிடப்பட்டது. 12 May 2018 அன்று பார்க்கப்பட்டது.
  9. "Commanding Heights : Dr. Mahathir bin Mohamad - on PBS". www.pbs.org. 12 May 2018 அன்று பார்க்கப்பட்டது.
  10. Abdul Rahman, Tunku (September 1969). May 13 – Before and After. Kuala Lumpur: Penerbitan Utusan Melayu. பக். 117–121. 

வெளி இணைப்புகள்தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=மகாதீர்_பின்_முகமது&oldid=3683123" இருந்து மீள்விக்கப்பட்டது