மலேசிய நிதி அமைச்சர்

மலேசிய நிதி அமைச்சர் (ஆங்கிலம்: Minister of Finance of Malaysia; மலாய்: Menteri Kewangan Malaysia) என்பவர் மலேசிய அரசாங்கத்தின் நிதி அமைச்சின் தலைமைப் பொறுப்பில் உள்ள அமைச்சர் ஆவார்.

மலேசிய நிதி அமைச்சர்
Minister of Finance of Malaysia
Menteri Kewangan Malaysia
தற்போது
அன்வார் இப்ராகிம்
(Anwar Ibrahim)

திசம்பர் 3, 2022 (2022-12-03) முதல்
மலேசிய நிதி அமைச்சு
சுருக்கம்MOF
உறுப்பினர்மலேசிய அமைச்சரவை
அறிக்கைகள்{மலேசிய நாடாளுமன்றம்
அலுவலகம்புத்ராஜெயா
நியமிப்பவர்மலேசிய பேரரசர்; (மலேசியப் பிரதமரின் பரிந்துரை)
உருவாக்கம்1957 (1957)
முதலாமவர்என்றி லீ ஆவ் சிக்
(Henry Lee Hau Shik)
இணையதளம்www.mof.gov.my

மலேசிய அமைச்சரவையின் மூத்த அமைச்சர்களில் ஒருவரான நிதியமைச்சர், அரசாங்கத்தின் நிதிக் கொள்கையை நிர்ணயிப்பதற்கும்; அரசாங்கத்தின் தேசிய வரவு செலவுத் திட்டத்தை நிர்வகிப்பதற்கும் பொறுப்பானவர் ஆவார். 3 டிசம்பர் 2022 முதல் பிரதமர் அன்வார் இப்ராகிம் நிதி அமைச்சராகப் பதவி வகித்து வருகிறார். அவர் இதற்கு முன் 1991 முதல் 1998 வரை மலேசிய நிதி அமைச்சர் பதவியை வகித்துள்ளார்.

பொது

தொகு

மலேசியாவின் மிக முக்கியமான அமைச்சுகளுள் ஒன்றாகக் கருதப்படும் நிதி அமைச்சின் தலைவர் ஒவ்வோர் ஆண்டும் அக்டோபர் மாதத்தில், மலேசிய நடுவண் அரசாங்கத்தின் ஆண்டு வரவு-செலவு மதிப்பீட்டுத் திட்டத்தை நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்வார்.

மலேசிய நிதி அமைச்சு

தொகு

அரசாங்கத்தின் செலவுகள், மற்றும் அரசாங்கத்தின் வருமானத்தை அதிகரிக்கச் செய்தல் (Government Revenue Raising) போன்ற மிக முக்கியமான நிதி விவகாரங்களைக் கவனிக்கும் பொறுப்புகளை மலேசிய நிதி அமைச்சு மேற்கொள்கிறது.[1]

நிதி அமைச்சர் பதவி மிகவும் மூத்த அரசு பதவியாகக் கருதப்படுகிறது. வரலாற்று அடிப்படையில், முன்பு நிதி அமைச்சர் பதவியை வகித்தவர்களில் பலர் மலேசியப் பிரதமர் அல்லது மலேசிய துணைப் பிரதமராகவும் பணியாற்றி உள்ளார்கள்.

நிதி அமைச்சராகப் பணியாற்றுவது பிரதமராகப் பொறுப்பு ஏற்பதற்கான முக்கியத் தகுதியாகக் கருதப்பட்டாலும் அது அவசியம் அல்ல என அறியப்படுகிறது. நிதி அமைச்சர் பதவியை வகிக்காமலேயே ஒருவர் மலேசிய நாட்டின் பிரதமராகலாம். தற்போது வரையில், ஐந்து மலேசிய நிதி அமைச்சர்கள் மலேசியப் பிரதமர்களாகப் பதவி வகித்து உள்ளனர்.

அமைச்சர்களின் பட்டியல்

தொகு

நிதி அமைச்சர்கள்

தொகு

நிதி அமைச்சர்களாகப் பின்வரும் நபர்கள் பணியாற்றி உள்ளனர்.

அரசியல் கட்சிகள்:       கூட்டணி/பாரிசான்       பாக்காத்தான்       சுயேச்சை

தோற்றம் பெயர்
(பிறப்பு - இறப்பு)
கட்சி பதவி பதவியேற்பு பதவி விடுதல் # பிரதமர்
(அமைச்சரவை)
  எச். எஸ். லீ
Henry Lee Hau Shik
(1900–1988)
கூட்டணி
(மசீச)
நிதி அமைச்சர் 31 ஆகஸ்டு 1957 22 ஆகஸ்டு 1959 துங்கு அப்துல் ரகுமான்
(துங்கு 1)
  டான் சியூ சின்
(Tan Siew Sin)
(1916–1988)
22 ஆகஸ்டு 1959 8 ஏப்ரல் 1974 துங்கு 1
(துங்கு 2IIIIV)
அப்துல் ரசாக் உசேன்
(I)
உசேன் ஓன்
Hussein Onn
(1922–1990)
பாரிசான்
(அம்னோ)
1974 1976 அப்துல் ரசாக் உசேன்
(II)
  துங்கு ரசாலி அம்சா
Tengku Razaleigh Hamzah
(b. 1937)
1976 1984 உசேன் ஓன்
(III)
மகாதீர் பின் முகமது
(III)
  டாயிம் சைனுடின்
Daim Zainuddin
(b. 1938)
14 சூலை 1984 15 மார்ச் 1991 மகாதீர் பின் முகமது
(II • IIIIV)
  அன்வர் இப்ராகீம்
Anwar Ibrahim
(b. 1947)
15 மார்ச் 1991 2 செப்டம்பர் 1998 மகாதீர் பின் முகமது
(IV • V)
  மகாதீர் பின் முகமது
Mahathir Mohamad
(b. 1925)
2 செப்டம்பர் 1998 7 சனவரி 1999 மகாதீர் பின் முகமது
(V)
  முசுதபா முகமது
Mustapa Mohamed
(b. 1950)
இரண்டாம் நிதி அமைச்சர் 2 செப்டம்பர் 1998 14 டிசம்பர் 1999 மகாதீர் பின் முகமது
(V)
  டாயிம் சைனுடின்
Daim Zainuddin
(b. 1938)
நிதி அமைச்சர் 7 சனவரி 1999 31 மே 2001 மகாதீர் பின் முகமது
(V • VI)
  மகாதீர் பின் முகமது
(Mahathir Mohamad)
(b. 1925)
5 சூன் 2001 2 நவம்பர் 2003 மகாதீர் பின் முகமது
(VI)
  சமாலுடின் சர்ஜிஸ்
Jamaluddin Jarjis
(1951–2015)
இரண்டாம் நிதி அமைச்சர் 20 நவம்பர் 2002 26 மார்ச் 2004 மகாதீர் பின் முகமது
(VI)
அப்துல்லா அகமது படாவி
(I)
  அப்துல்லா அகமது படாவி
Abdullah Ahmad Badawi
(b. 1939)
நிதி அமைச்சர் 3 நவம்பர் 2003 23 செப்டம்பர் 2008 அப்துல்லா அகமது படாவி
(I • IIIII)
  நோர் முகமது யாக்கோப்
Nor Mohamed Yakcop
(b. 1947)
இரண்டாம் நிதி அமைச்சர் 27 மார்ச் 2004 9 ஏப்ரல் 2009 அப்துல்லா அகமது படாவி
(II • III)
  நஜீப் ரசாக்
(Najib Razak)
(b. 1953)
நிதி அமைச்சர் 23 செப்டம்பர் 2008 9 மே 2018 அப்துல்லா அகமது படாவி
(III)
நஜீப் ரசாக்
(III)
  அகமது உசினி அனட்சியா
Ahmad Husni Hanadzlah
(b. 1952)
இரண்டாம் நிதி அமைச்சர் 10 ஏப்ரல் 2009 27 சூன் 2016 நஜீப் ரசாக்
(I • II)
  ஜொகரி அப்துல் கனி
Johari Abdul Ghani
(b. 1964)
27 சூன் 2016 9 மே 2018 நஜீப் ரசாக்
(II)
  லிம் குவான் எங்
(Lim Guan Eng)
(b. 1960)
பாக்காத்தான்
(ஜசெக)
நிதி அமைச்சர் 21 மே 2018 24 பிப்ரவரி 2020 மகாதீர் பின் முகமது
(VII)
  துங்கு சப்ருல் அசீஸ்
Tengku Zafrul Aziz
(b. 1973)
பாரிசான்
(அம்னோ)
10 மார்ச் 2020 24 நவம்பர் 2022 முகிதீன் யாசின்
(I)
இசுமாயில் சப்ரி யாகோப்
(I)
  அன்வார் இப்ராகிம்
(Anwar Ibrahim)
(b. 1947)
பாக்காத்தான்
(பிகேஆர்)
3 டிசம்பர் 2022 பதவியில் உள்ளார் அன்வார் இப்ராகிம்
(I)
  அமீர் அம்சா அசிசான்
Amir Hamzah Azizan
(b. 1967)
செனட்டர்
சுயேச்சை இரண்டாம் நிதி அமைச்சர் 12 டிசம்பர் 2023

மேலும் காண்க

தொகு

மேற்கோள்கள்

தொகு
  1. "Economic & Fiscal Outlook and Federal Government Revenue Estimates 2023". பார்க்கப்பட்ட நாள் 7 March 2023.

வெளி இணைப்புகள்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=மலேசிய_நிதி_அமைச்சர்&oldid=4153533" இலிருந்து மீள்விக்கப்பட்டது