துங்கு முதலாம் அமைச்சரவை
துங்கு முதலாம் அமைச்சரவை அல்லது மலாயாவின் முதலாவது அமைச்சரவை (மலாய்: Kabinet Persekutuan Tanah Melayu 1955; ஆங்கிலம்: First Rahman Cabinet; சீனம்: 第一次拉曼内阁); என்பது மலேசியப் பிரதமர் துங்கு அப்துல் ரகுமான் தலைமையிலான மலாயாவின் முதலாவது அமைச்சரவை ஆகும்.[1]
துங்கு முதலாம் அமைச்சரவை First Rahman Cabinet 1955-1959 | |
---|---|
மக்களும் அமைப்புகளும் | |
அரசுத் தலைவர் | துங்கு அப்துல் ரகுமான் |
துணை அரசுத் தலைவர் | அப்துல் ரசாக் உசேன் |
நாட்டுத் தலைவர் | நெகிரி செம்பிலான் துவாங்கு அப்துல் ரகுமான் |
உறுப்புமை கட்சி | |
சட்ட மன்றத்தில் நிலை | கூட்டணி அரசு 53 / 98 |
எதிர் கட்சி | மலேசிய இசுலாமிய கட்சி |
வரலாறு | |
தேர்தல்(கள்) | மலாயா பொதுத் தேர்தல், 1955 |
Outgoing election | மலாயா பொதுத் தேர்தல், 1959 |
அடுத்த | துங்கு இரண்டாம் அமைச்சரவை |
மலாயாவின் முதலாவது பிரதமராக துங்கு அப்துல் ரகுமான் நியமிக்கப்பட்டதும், 1955 ஆகஸ்டு 1-ஆம் தேதி, இந்த முதலாவது அமைச்சரவை அறிவிக்கப்பட்டது.
1955-ஆம் ஆண்டு மலாயா பொதுத் தேர்தலை தொடர்ந்து துங்கு அப்துல் ரகுமான் ஒரு புதிய அரசாங்கத்தை அமைத்தார். மலேசிய ஆட்சியாளர்களின் ஒப்புதலைப் பெற்ற பின்னர், மலாயாவின் ஐக்கிய இராச்சிய உயர் ஆணையர் டொனால்டு மெக்லவரி அவர்களால் அந்தப் புதிய அமைச்சரவை; 4 ஆகஸ்டு 1955 அன்று கார்கோசா செரி நெகாராவில் இருந்து அறிவிக்கப்பட்டது.
அமைச்சரவை உறுப்பினர்கள் 9 ஆகஸ்டு 1955 அன்று பதவியேற்றனர். இது மலேசியாவில் அமைக்கப்பட்ட முதல் அமைச்சரவை ஆகும்.[2]
பொது
தொகுஇந்த அமைச்சரவையின் பதவிப் பிரமாணத்தில்; முதன்முறையாக பெரும்பான்மையான மலாயா மக்களால் நேரடியாகத் தேர்வு செய்யப்பட்டவர்களே பதவி ஏற்றனர். அத்துடன் இந்த அமைச்சரவைதான், பிரித்தானிய பாதுகாப்பின் கீழ் பதவி வகித்த கடைசி அமைச்சரவையும் ஆகும்.[3]
மலாயா அரசாங்கத்தின் தலைமைச் செயலாளர், மலாயா நிதிச் செயலாளர், மலாயா சட்டத்துறை அமைச்சர் மற்றும் மலாயா வெளியுறவு அமைச்சர் ஆகிய நான்கு அமைச்சர்கள் மட்டுமே மலாயாவின் ஐக்கிய இராச்சிய உயர் ஆணையரால் நியமிக்கப்பட்டனர். அந்தப் பதவிகளை பிரித்தானிய அதிகாரிகள் வழிநடத்தினர்.
1957-ஆம் ஆண்டு ஆகஸ்டு 31-ஆம் தேதி மலாயா விடுதலை பெற்ற பிறகு இந்த அமைச்சரவை தொடர்ந்தது. இருப்பினும் விடுதலைக்குப் பிறகு புதிய துறைகள் இணைக்கப்பட்டு; கூடுதலாக சில மாற்றங்களும் செய்யப்பட்டன. 1959 ஆகஸ்டு 19-ஆம் தேதி இந்த முதலாவது அமைச்சரவை கலைக்கப்பட்டது.
மலாயா கூட்டமைப்பின் முதலாம் அமைச்சரவை
தொகுமுதல் நடுவண் அமைச்சரவை
தொகுமலாயாவின் முதல் நடுவண் அமைச்சரவை 1955 ஆகஸ்டு 1-ஆம் தேதி அமைக்கப்பட்டது; பின்வரும் அமைச்சர்களைக் கொண்டிருந்தது:[4][5]
1955 ஆகஸ்டு 1-ஆம் தேதி அமைக்கப்பட்ட அமைச்சரவை
தொகுபதவி | பெயர் | கட்சி | தொகுதி | ||
---|---|---|---|---|---|
முதல்வர் உள்துறை அமைச்சு |
துங்கு அப்துல் ரகுமான் | அம்னோ | சுங்கை மூடா | ||
கல்வி அமைச்சர் | அப்துல் ரசாக் உசேன் | அம்னோ | செமந்தான் பகாங் | ||
இயற்கை வள அமைச்சர் | இசுமாயில் அப்துல் ரகுமான் | அம்னோ | ஜொகூர் தீமோர் | ||
போக்குவரத்து அமைச்சர் | துன் எச். எஸ். லீ | மசீச | பரிந்துரை | ||
விவசாயம் மீன்வளத்துறை அமைச்சர் | அப்துல் அசீஸ் இசாக் | அம்னோ | சிலாங்கூர் பாராட் | ||
சுகாதார அமைச்சர் | லியோங் இயூ கோ | மசீச | ஈப்போ மெங்லெம்பு | ||
பொதுப்பணி அமைச்சர் | சார்டோன் சூபிர் | அம்னோ | சிகாமட் | ||
தொழிலாளர் துறை அமைச்சர் | வீ. தி. சம்பந்தன் | மஇகா | கிந்தா உத்தாரா | ||
உள்ளாட்சி துறை அமைச்சர் | சுலைமான் அப்துல் ரகுமான் | அம்னோ | ஜொகூர் பாரு | ||
தொடர்பு அஞ்சல் துறை அமைச்சர் | ஒமார் யோங் யோக் லின் | மசீச | கோலாலம்பூர் பாராட் |
1957-இல் அமைக்கப்பட்ட அமைச்சரவை
தொகு1957-ஆம் ஆண்டில் மலேசியா விடுதலை அடைந்தது. அதன் பின்னர் அமைக்கப்பட்ட அமைச்சரவை பின்வரும் அமைச்சர்களைக் கொண்டிருந்தது:[5]
அமைச்சு | அமைச்சர் | கட்சி | தொகுதி | |
---|---|---|---|---|
பிரதமர் | துங்கு அப்துல் ரகுமான் | அம்னோ | சுங்கை மூடா | |
துணைப் பிரதமர் | அப்துல் ரசாக் உசேன் | அம்னோ | செமந்தான் பகாங் | |
அமைச்சர்கள் | ||||
வெளியுறவு அமைச்சர் | துங்கு அப்துல் ரகுமான் | அம்னோ | சுங்கை மூடா | |
கல்வி அமைச்சர் | கிர் ஜொகாரி | அம்னோ | கெடா தெங்கா | |
தற்காப்பு அமைச்சர் | அப்துல் ரசாக் உசேன் | அம்னோ | செமந்தான் பகாங் | |
உள்துறை அமைச்சர் | சுலைமான் அப்துல் ரகுமான் | அம்னோ | ஜொகூர் பாரு | |
நிதி அமைச்சர் | துன் எச். எஸ். லீ | மசீச | பரிந்துரை | |
இயற்கை வளங்கள் அமைச்சர் | பகமான் சம்சுடின் | அம்னோ | தெலுகான்சன் | |
போக்குவரத்து அமைச்சர் | அப்துல் ரகுமான் தாலிப் | அம்னோ | பகாங் தீமோர் | |
வேளாண் கூட்டுறவு துறை அமைச்சர் | அப்துல் அசீஸ் இசாக் | அம்னோ | சிலாங்கூர் பாராட் | |
சுகாதார அமைச்சர் | வீ. தி. சம்பந்தன் | மஇகா | கிந்தா உத்தாரா | |
பொதுப்பணி அமைச்சர் | சார்டோன் சூபிர் | அம்னோ | சிகாமட் | |
தொழிலாளர் துறை அமைச்சர் | ஒமார் யோங் யோக் லின் | மசீச | கோலாலம்பூர் பாராட் | |
வர்த்தகம் தொழில்துறை அமைச்சர் | டான் சியூ சின் | மசீச | மத்திய மலாக்கா |
மேலும் காண்க
தொகுமேற்கோள்கள்
தொகு- ↑ Arkib Negara: Pembentukan Kabinet Pertama Persekutuan Tanah Melayu (in Malay)
- ↑ "PEMBENTUKAN KABINET PERTAMA PERSEKUTUAN TANAH MELAYU - Tarikh Peristiwa: 01.08.1955 Tahun Siaran : 2000". web.archive.org. 3 March 2008. Archived from the original on 3 மார்ச் 2008. பார்க்கப்பட்ட நாள் 25 February 2024.
{{cite web}}
: Check date values in:|archive-date=
(help) - ↑ "The swearing in of this cabinet marked the first time the majority of the Executive were members directly elected by Malayans and this was also the last cabinet to hold office under the British protectorate". arkib.gov.my. பார்க்கப்பட்ட நாள் 25 February 2024.
- ↑ Malaysia, National Archives of. (n.d.). 1955 Cabinet பரணிடப்பட்டது 29 மார்ச்சு 2016 at the வந்தவழி இயந்திரம்
- ↑ 5.0 5.1 Arkib Negara: Mesyuarat Kali Pertama Kabinet Merdeka (in Malay)