துங்கு இரண்டாம் அமைச்சரவை

துங்கு இரண்டாம் அமைச்சரவை அல்லது மலாயாவின் இரண்டாவது அமைச்சரவை (மலாய்: Kabinet Rahman Kedua; ஆங்கிலம்: Second Rahman Cabinet; சீனம்: 第二次拉曼内阁); என்பது மலேசியப் பிரதமர் துங்கு அப்துல் ரகுமான் தலைமையிலான மலாயாவின் இரண்டாவது அமைச்சரவை ஆகும். [1]

துங்கு இரண்டாம் அமைச்சரவை
Second Rahman Cabinet
1955-1959
மக்களும் அமைப்புகளும்
அரசுத் தலைவர்துங்கு அப்துல் ரகுமான்
துணை அரசுத் தலைவர்அப்துல் ரசாக் உசேன்
நாட்டுத் தலைவர்நெகிரி செம்பிலான் துவாங்கு அப்துல் ரகுமான் (1959–1960)
சிலாங்கூர் சுல்தான் இசாமுடின் (1960)
பெர்லிஸ் ராஜா சையத் புத்ரா (1960–1964)
உறுப்புமை கட்சி
சட்ட மன்றத்தில் நிலைகூட்டணி அரசு
74 / 104
எதிர் கட்சிமலேசிய இசுலாமிய கட்சி
மக்கள் முற்போக்கு கட்சி
மலாயா தொழிலாளர் கட்சி
தேசிய கட்சி
மலாயா கட்சி
வரலாறு
தேர்தல்(கள்)மலாயா பொதுத் தேர்தல், 1959
Outgoing electionமலேசியப் பொதுத் தேர்தல், 1964
Legislature term(s)மலாயா கூட்டரசின் முதலாவது மக்களவை, 1955–1959
முந்தையதுங்கு முதலாம் அமைச்சரவை
அடுத்ததுங்கு மூன்றாம் அமைச்சரவை

மலாயாவின் முதலாவது பிரதமராக துங்கு அப்துல் ரகுமான் நியமிக்கப்பட்டதும், 1955 ஆகஸ்டு 1-ஆம் தேதி, மலாயாவின் முதலாவது அமைச்சரவை அறிவிக்கப்பட்டது. 1955-ஆம் ஆண்டு மலாயா பொதுத் தேர்தலை தொடர்ந்து துங்கு அப்துல் ரகுமான் ஒரு புதிய அரசாங்கத்தை அமைத்தார்.

பொது

தொகு

1957-ஆம் ஆண்டு ஆகஸ்டு 31-ஆம் தேதி மலாயா விடுதலை பெற்ற பிறகு இந்த அமைச்சரவை தொடர்ந்தது. இருப்பினும் விடுதலைக்குப் பிறகு புதிய துறைகள் இணைக்கப்பட்டு; கூடுதலாக சில மாற்றங்களும் செய்யப்பட்டன. 1959 ஆகஸ்டு 19-ஆம் தேதி இந்த முதலாவது அமைச்சரவை கலைக்கப்பட்டது.

துங்குவின் இரண்டாம் அமைச்சரவை 22 ஆகஸ்டு 1959 அன்று பதவியேற்றது. துங்குவின் முதலாம் அமைச்சரவையில் பதவி வகித்த அனைத்து அமைச்சர்களும்; இரண்டாம் அமைச்சரவையில் இடம்பெற்றனர்.

கெடா தெங்கா தொகுதி

தொகு

அவர்களில் மலேசிய சீனர் சங்கத்தை சார்ந்த துன் எச். எஸ். லீ மட்டும் 1959 தேர்தலில் போட்டியிடவில்லை. அதனால் அவர் துங்குவின் இரண்டாம் அமைச்சரவையில் சேர்த்துக் கொள்ளப்படவில்லை.

1959 செப்டம்பர் 30-க்கு தேர்தல் ஒத்திவைக்கப்பட்ட கெடா தெங்கா தொகுதியில் போட்டியிட்ட முகமது கிர் ஜொகாரி அவர்களின் பெயரும் அமைச்சரவை பட்டியலில் இருந்து தவிர்க்கப்பட்டது.

இரண்டாம் அமைச்சரவையின் அமைச்சர்கள்

தொகு

மலேசியாவின் முதல் பிரதமர் (அப்போதைய மலாயா கூட்டமைப்பின் பிரதமர்) துங்கு அப்துல் ரகுமானின் இரண்டாவது அமைச்சரவையின் உறுப்பினர்களின் பட்டியல்:

அமைச்சு அமைச்சர் கட்சி தொகுதி
பிரதமர் துங்கு அப்துல் ரகுமான் MP அம்னோ கோலா கெடா
வெளியுறவு அமைச்சு
தகவல் துறை
துணைப் பிரதமர் அப்துல் ரசாக் உசேன் MP அம்னோ பெக்கான்
தற்காப்பு அமைச்சு
கிராமப்புற வளர்ச்சி
உள்நாட்டு பாதுகாப்பு இசுமாயில் அப்துல் ரகுமான் MP அம்னோ ஜொகூர் தீமோர்
உள்துறை அமைச்சு
நிதி அமைச்சு டான் சியூ சின் MP மசீச மலாக்கா தெங்கா
பொதுப்பணி அஞ்சல் துறை வீ. தி. சம்பந்தன் MP மஇகா சுங்கை சிப்புட்
போக்குவரத்து துறை சார்டோன் சூபீர் MP அம்னோ பொந்தியான்
வேளான் துறை கிர் ஜொகாரி MP அம்னோ கெடா தெங்கா
தொழிலாளர் சமூக நலன் பகமான் சம்சுடின் MP அம்னோ கோலபிலா
சுகாதாரத் துறை அப்துல் ரகுமான் தாலிப் MP அம்னோ குவாந்தான்
தொழில்துறை லிம் சுவீ ஆன் MP மசீச லாருட் செலாத்தான்
கல்வி அமைச்சு அமீட் அப்துல் கான் MP அம்னோ பத்தாங் பாடாங்
சரவாக் விவகாரங்கள் சுகா பாரியாங் [MP பெசாக்கா
அமைச்சு இல்லை ஓங் யோக் லின் MP மசீச உலு சிலாங்கூர்
அமைச்சு இல்லை செனட்டர் காவ் காய் போ மசீச

துணை அமைச்சர்கள்

தொகு
அமைச்சு அமைச்சர் கட்சி தொகுதி
உள்துறை சியா தியாம் சுவீ MP மசீச புக்கிட் பிந்தாங்
வணிகம் தொழில்துறை அப்துல் காலிட் அவாங் ஒசுமான் MP அம்னோ கோத்தா ஸ்டார் உத்தாரா
தகவல் துறை முகமட் இசுமாயில் முகமட் யூசோப் MP அம்னோ ஜெராய்
கிராமப்புற வளர்ச்சி செனட்டர் முகமட் கசாலி சாபி அம்னோ
சரவாக் கிராமப்புறத் துறை அப்துல் ரகுமான் யாக்குப் MP பூமிபுத்ரா
தொழிலாளர் துறை வி. மாணிக்கவாசகம் MP மஇகா கிள்ளான்

மேலும் காண்க

தொகு

மேற்கோள்கள்

தொகு

வெளி இணைப்புகள்

தொகு