சுங்கை சிப்புட் மக்களவைத் தொகுதி

சுங்கை சிப்புட் மக்களவைத் தொகுதி (மலாய்: Kawasan Persekutuan Sungai Siput; ஆங்கிலம்: Sungai Siput Federal Constituency; சீனம்: 和丰国会议席) என்பது மலேசியா, பேராக், கோலாகங்சார் மாவட்டத்தில் (Kuala Kangsar District) அமைந்துள்ள ஒரு மக்களவைத் தொகுதி (P062) ஆகும்.[7]

சுங்கை சிப்புட் (P062)
மலேசிய மக்களவைத் தொகுதி
பேராக்
Sungai Siput (P062)
Federal Constituency in Perak
பேராக் மாநிலத்தில்
சுங்கை சிப்புட் மக்களவைத் தொகுதி

(P62 Sungai Siput)
மாவட்டம்கோலாகங்சார் மாவட்டம்
பேராக்
வாக்காளர்களின் எண்ணிக்கை72,395 (2022)[1]
வாக்காளர் தொகுதிசுங்கை சிப்புட் தொகுதி[2]
முக்கிய நகரங்கள்சுங்கை சிப்புட், சிம்மோர், கோலாகங்சார், தஞ்சோங் ரம்புத்தான், தைப்பிங், பாடாங் ரெங்காஸ், சவுக், கிந்தா பள்ளத்தாக்கு
பரப்பளவு1,850 ச.கி.மீ[3]
முன்னாள்நடப்பிலுள்ள தொகுதி
உருவாக்கப்பட்ட காலம்1958
கட்சி பாக்காத்தான் அரப்பான்
மக்களவை உறுப்பினர்கேசவன் சுப்ரமணியம்
(Kesavan Subramaniam)
மக்கள் தொகை86,815 (2020) [4]
முதல் தேர்தல்மலாயா பொதுத் தேர்தல், 1959
இறுதித் தேர்தல்மலேசியப் பொதுத் தேர்தல், 2022[5]




2022-இல் சுங்கை சிப்புட் மக்களவைத் தொகுதியின் வாக்காளர்களின் இனப் பிரிவுகள்:[6]

  சீனர் (34.5%)
  மலாயர் (34.2%)
  இதர இனத்தவர் (10.1%)

சுங்கை சிப்புட் மக்களவைத் தொகுதி 1958-ஆம் ஆண்டில் உருவாக்கப்பட்டது. இந்தத் தொகுதியில், முதன்முதலாக 1959-ஆம் ஆண்டில் மக்களவைப் பொதுத் தேர்தல் நடைபெற்றது. இறுதியாக, 2022-ஆம் ஆண்டில் நடைபெற்றது.

1959-ஆம் ஆண்டில் இருந்து சுங்கை சிப்புட் மக்களவைத் தொகுதி, மலேசிய நாடாளுமன்றத்தின் மலேசிய மக்களவையில் பிரதிநிதிக்கப் படுகிறது.

சுங்கை சிப்புட்

தொகு

சுங்கை சிப்புட் நகரம் பேராக் மாநிலத்தில் கோலாகங்சார் மாவட்டத்தில் உள்ள நகரம். இந்த நகரத்திற்கு மிக அருகிலுள்ள நகரம் கோலாகங்சார் ஆகும். இதற்கு ’சங்கு நதி’ எனும் அழகிய தமிழ்ப் பெயரும் உண்டு.

இந்த நகரம் ஒரு வரலாற்றுச் சிறப்பு மிக்க நகரமாகும். மலேசிய இந்தியத் தலைவர்களில் சிலரின் அரசியல் வாழ்க்கையை உறுதி செய்த நகரம் என்றும் இதற்கு ஓர் அடைமொழி உண்டு. மலேசியா விடுதலை பெற்றதில் இருந்து இந்தத் தொகுதி இந்தியர்களின் அரசியல் கோட்டையாக இருந்து வருகிறது.

வரலாற்றுத் தலைவர்கள்

தொகு

மலேசிய அரசியலில் முக்கியமான தலைவர்கள் சிலரை உருவாக்கிக் கொடுத்த பெருமை இந்த சுங்கை சிப்புட் நகரத்தைச் சாரும். அமரர் துன் சம்பந்தன், துன் சாமிவேலு, டாக்டர் ஜெயகுமார் தேவராஜ், துன் லியோங் இயூ கோ, தோக் பாங்கு அமீட் போன்றவர்கள் இந்த நகரில் இருந்து தான் தேசிய அளவில் பிரபலம் அடைந்தனர்.

துன் வீ. தி. சம்பந்தன் அவர்கள் சுங்கை சிப்புட்டில் பிறந்து வளர்ந்தவர். இவர் ம.இ.கா எனும் மலேசிய இந்திய காங்கிரசின் 5-ஆவது தலைவர். இவர் மலேசிய அரசாங்கத்தில் பல அமைச்சுகளில் அமைச்சர் பதவியை வகித்துள்ளார். மலாயாவில் முதன்முதலில் நடைபெற்ற பொதுத் தேர்தலில் துன் வீ.தி.சம்பந்தன் பேராக் மாநிலத்தின் கிந்தா தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றார்.

இலண்டன் உடன்படிக்கை

தொகு

மலேசிய விடுதலை பெற, நாட்டின் மூன்று முதன்மைத் தலைவர்கள் இலண்டனுக்குச் சென்று விடுதலை உடன்படிக்கையில் (Merdeka Agreement) கையெழுத்திட்டனர். அந்த மூவரில் இந்தியர்களின் தலைவராக துன் சம்பந்தன் கையெழுத்திட்டார். இது மலேசிய வரலாற்றில் பொன் எழுத்துகளால் பொறிக்கப் பட வேண்டிய ஒரு நிகழ்ச்சி ஆகும்.[8][9]

1960-ஆம் ஆண்டுகளில், மலேசிய இந்தியர்களை ஒன்றுபடுத்தி அவர்களிடம் இருந்து ஒவ்வொரு மாதமும் பத்து வெள்ளி சேகரித்தார். அந்த முதலீட்டைக் கொண்டு தேசிய நில நிதி கூட்டுறவு சங்கத்தைத் தோற்றுவித்தார். தற்போது இந்தச் சங்கம் ஆசியாவிலேயே தலைசிறந்த கூட்டுறவுச் சங்கங்களில் ஒன்றாக விளங்கி வருகின்றது.[10]

சுங்கை சிப்புட் மக்களவைத் தொகுதி

தொகு
சுங்கை சிப்புட் மக்களவைத் தொகுதியின் உறுப்பினர்கள் (1986 - 2022)
மக்களவை தொகுதி ஆண்டுகள் உறுப்பினர் கட்சி
1958-ஆம் ஆண்டில் கிந்தா உத்தாரா மக்களவைத் தொகுதியில் இருந்து
சுங்கை சிப்புட் தொகுதி உருவாக்கப்பட்டது
சுங்கை சிப்புட்
மலாயா மக்களவை
1-ஆவது மலாயா மக்களவை P046 1959–1963 வீ. தி. சம்பந்தன்
(V. T. Sambanthan)
மலேசிய கூட்டணி
(மலேசிய இந்திய காங்கிரசு)
மலேசிய மக்களவை
1-ஆவது மக்களவை P046 1963–1964 வீ. தி. சம்பந்தன்
(V. T. Sambanthan)
மலேசிய கூட்டணி
(மலேசிய இந்திய காங்கிரசு)
2-ஆவது மக்களவை 1964–1969
1969–1971 நாடாளுமன்றம் இடைநிறுத்தம்[11][12]
3-ஆவது மக்களவை P046 1971–1973 வீ. தி. சம்பந்தன்
(V. T. Sambanthan)
மலேசிய கூட்டணி
(மலேசிய இந்திய காங்கிரசு)
1973–1974 பாரிசான் நேசனல்
(மலேசிய இந்திய காங்கிரசு)
4-ஆவது மக்களவை P048 1974–1978 ச. சாமிவேலு
(Samy Vellu)
5-ஆவது மக்களவை 1978–1982
6-ஆவது மக்களவை 1982–1986
சுங்கை சிப்புட்
7-ஆவது மக்களவை P056 1986–1990 ச. சாமிவேலு
(Samy Vellu)
பாரிசான் நேசனல்
(மலேசிய இந்திய காங்கிரசு)
8-ஆவது மக்களவை 1990–1995
9-ஆவது மக்களவை P059 1995–1999
10-ஆவது மக்களவை 1999–2004
11-ஆவது மக்களவை P062 2004–2008
12-ஆவது மக்களவை 2008 ஜெயக்குமார் தேவராஜ்
(Michael Jeyakumar Devaraj)
பாக்காத்தான் ராக்யாட்
(மக்கள் நீதிக் கட்சி)
2008–2013 மலேசிய சமூகக் கட்சி
13-ஆவது மக்களவை 2013 பாக்காத்தான் ராக்யாட்
(மக்கள் நீதிக் கட்சி)
2013–2018 மலேசிய சமூகக் கட்சி
14-ஆவது மக்களவை 2018–2022 கேசவன் சுப்ரமணியம்
(Kesavan Subramaniam)
பாக்காத்தான் அரப்பான்
(மக்கள் நீதிக் கட்சி)
15-ஆவது மக்களவை 2022–தற்போது வரையில்

சுங்கை சிப்புட் மக்களவைத் தேர்தல் முடிவுகள் 2022

தொகு
மலேசியப் பொதுத் தேர்தல் 2022
பொது வாக்குகள் % ∆%
பதிவு பெற்ற வாக்காளர்கள்
(Registered Electors)
72,395
வாக்களித்தவர்கள்
(Turnout)
52,725 71.34%   - 8.04%
செல்லுபடி வாக்குகள்
(Total Valid Votes)
51,802 100.00%
கிடைக்காத அஞ்சல் வாக்குகள்
(Unreturned Ballots)
85
செல்லாத வாக்குகள்
(Total Rejected Ballots)
991
பெரும்பான்மை
(Majority)
1,846 2.55%   - 10.57
வெற்றி பெற்ற கட்சி:   பாக்காத்தான்
சான்றுகள்: மலேசிய தேர்தல் ஆணையம்
[13]

சுங்கை சிப்புட் மக்களவை வேட்பாளர் விவரங்கள்

தொகு
மலேசியப் பொதுத் தேர்தல் 2022
சின்னம் வேட்பாளர் கட்சி செல்லுபடி
வாக்குகள்
கிடைத்த
வாக்குகள்
% ∆%
  கேசவன் சுப்ரமணியம்
(Kesavan Subramaniam)
பாக்காத்தான் 51,802 21,637 41.77% - 6.95%  
  ச. விக்னேசுவரன்
(Vigneswaran Sanasee)
பாரிசான் - 19,791 38.21% - 2.61 %  
  இருதயநாதன் கேப்ரியல்
(Irudhanathan Gabriel)
பெரிக்காத்தான் - 8,190 15.81% + 15.81%  
  அகமது பவுசி முகமது ஜாபர்
(Ahmad Fauzi Mohd Jaafar)
தாயக இயக்கம் - 784 1.51% + 1.51%  
  ஆர். இந்திராணி
(R. Indrani)
சுயேச்சை - 767 1.48% + 1.48%  
  பகருதீன் கமாருதீன்
(Baharudin Kamarudin)
சுயேச்சை - 598 0.15% + 0.15%  
  ராஜா நரசிம்
(Rajah Narasaim)
சுயேச்சை - 35 0.07% + 0.07%  

மேற்கோள்கள்

தொகு
  1. "Electoral Roll for the 14th Malaysian General Election Updated as of 10 April 2018" (PDF). Election Commission of Malaysia. p. 26. பார்க்கப்பட்ட நாள் 2020-01-29.
  2. "Federal Government Gazette, Notice Under Subregulation 11(5A), Polling Hours for the Fifteenth General Election" (PDF). Attorney General's Chambers. 31 October 2022.
  3. Laporan Kajian Semula Persempadanan Mengenai Syor-Syor Yang Dicadangkan Bagi Bahagian-Bahagian Pilihan Raya Persekutuan Dan Negeri Di Dalam Negeri-Negeri Tanah Melayu Kali Keenam Tahun 2018 Jilid 1 (PDF) (Report). Election Commission of Malaysia. 2018. பார்க்கப்பட்ட நாள் 2020-01-29.
  4. "Kawasanku" (in ஆங்கிலம்). Department of Statistics Malaysia. 2023-09-24. பார்க்கப்பட்ட நாள் 2023-09-24.
  5. "Electoral Roll for the 14th Malaysian General Election Updated as of 10 April 2018" (PDF). Election Commission of Malaysia. 10 April 2018. p. 21. பார்க்கப்பட்ட நாள் 2020-01-29.
  6. "15th General Election Malaysia (GE15 / PRU15) - Results Overview". oriantaldaily.com.my. பார்க்கப்பட்ட நாள் 2022-11-10.
  7. Demarcation Review Report on Proposed Recommendations for Federal and State Electoral Divisions in the States of Malaya Sixth Year 2018 Volume 1 (PDF) (Report). Election Commission of Malaysia. 2018. பார்க்கப்பட்ட நாள் 2020-01-29.
  8. "31st August, 1957 when Malaya gained independence under the 'Merdeka Agreement' and Tun Sambanthan was one of the leader who signed it". grfdt.com. பார்க்கப்பட்ட நாள் 4 June 2024.
  9. Azhar, Danial (31 August 2022). "Tun Sambanthan, signatory of the Merdeka Agreement". Free Malaysia Today (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 4 June 2024.
  10. "Plantation workers were persuaded to buy shares in the cooperative at RM 100/= per share, payable in monthly installment of RM 10/=". International Co-operative Alliance Asia-Pacific. பார்க்கப்பட்ட நாள் 4 June 2024.
  11. Ahmad Fauzi Mustafa (2012-03-12). "Hanya Yang di-Pertuan Agong ada kuasa panggil Parlimen bersidang". Utusan Online. http://ww1.utusan.com.my/utusan/info.asp?y=2012&dt=0312&pub=Utusan_Malaysia&sec=Rencana&pg=re_05.htm. 
  12. "www.parlimen.gov.my" (PDF). பார்க்கப்பட்ட நாள் 2016-05-14.
  13. "MySPRSemak". mysprsemak.spr.gov.my. பார்க்கப்பட்ட நாள் 1 June 2024.

மேலும் காண்க

தொகு

வெளி இணைப்புகள்

தொகு