ச. விக்னேசுவரன்
டான் ஸ்ரீ டத்தோ ஸ்ரீ ச. விக்னேசுவரன் எனும் விக்னேசுவரன் சன்னாசி (Vigneswaran s/o Sanasee; மலாய்: Vigneswaran Sanasee; சீனம்: 维涅斯瓦兰·萨纳西); என்பவர் 2004 மார்ச் மாதம் தொடங்கி 2008 மார்ச் வரையில் சிலாங்கூர் கோத்தா ராஜா மக்களவை தொகுதியின் (Kota Raja Federal Constituency) மலேசிய நாடாளுமன்ற உறுப்பினராகச் சேவை செய்தவர்.[1]
மலேசிய மேலவையின் 17-ஆவது தலைவர் | |
---|---|
பதவியில் 26 ஏப்ரல் 2016 – 22 சூன் 2020 | |
ஆட்சியாளர்கள் | அப்துல் ஆலிம் முகமது V சுல்தான் அப்துல்லா |
மலேசிய இந்திய காங்கிரசு 10-ஆவது தலைவர் | |
பதவியில் உள்ளார் | |
பதவியில் 14 சூலை 2018 | |
Deputy | மு. சரவணன் |
முன்னையவர் | ச. சுப்பிரமணியம் |
மலேசிய இளைஞர் விளையாட்டுத்துறை அமைச்சின் நாடாளுமன்றச் செயலாளர் | |
பதவியில் 2021–2022 | |
மலேசியப் பிரதமரின் தென் ஆசிய நாடுகளுக்கான சிறப்புத் தூதர் | |
பதவியில் உள்ளார் | |
பதவியில் நவம்பர் 2021 | |
சிலாங்கூர் கோத்தா ராஜா மக்களவை மலேசிய நாடாளுமன்ற உறுப்பினர் | |
பதவியில் மார்ச் 2004 – மார்ச் 2008 | |
தனிப்பட்ட விவரங்கள் | |
பிறப்பு | Vigneswaran s/o Sanasee 16 திசம்பர் 1965 கிள்ளான், சிலாங்கூர், மலேசியா |
குடியுரிமை | மலேசியர் |
அரசியல் கட்சி | மஇகா (MIC) |
பிற அரசியல் தொடர்புகள் | பாரிசான் (BN) பெரிக்காத்தான் PN |
துணைவர் | சுசிதா பெரியசாமி |
முன்னாள் கல்லூரி | இசுடாபோர்ட்சயர் பல்கலைக்கழகம் (Staffordshire University) மலாயா பல்கலைக்கழகம் (University of Malaya) |
வேலை | அரசியல்வாதி |
தொழில் | வழக்கறிஞர் |
26 ஏப்ரல் 2016 ஏப்ரல் 26-ஆம் தேதியில் இருந்து 2020 சூன் 22-ஆம் தேதி வரையில் மலேசிய நாடாளுமன்றத்தின் மேலவை தலைவராக (President of the Senate) பதவி வகித்தவர். அத்துடன் 2021 நவம்பர் மாதம் தொடங்கி மலேசியப் பிரதமரின் தென் ஆசிய நாடுகளுக்கான சிறப்புத் தூதர் பதவியையும் (Special Envoy of the Prime Minister to South Asia) வகித்து வருகிறார்.[2]
பொது
தொகு2018 சூலை 14-ஆம் தேதி தொடங்கி, பாரிசான் கூட்டணியின் உறுப்புக் கட்சியான மலேசிய இந்திய காங்கிரசு கட்சியின் (Malaysian Indian Congress) 10-ஆவது தலைவராகப் பதவி வகித்து வரும் இவர், 2021-ஆம் ஆண்டில் மலேசிய இளைஞர் விளையாட்டுத்துறை அமைச்சின் நாடாளுமன்றச் செயலாளர் பதவியையும் (Parliamentary Secretary of Ministry of Youth and Sports) வகித்தவர் ஆகும்.[3][4]
2004 -ஆம் ஆண்டு மலேசியப் பொதுத் தேர்தலில் சிலாங்கூர் கோத்தா ராஜா மக்களவை தொகுதியில் (Kota Raja Federal Constituency) போட்டியிட்டு 8,239 வாக்குகள் பெரும்பான்மையில் வெற்றி அடைந்தார்.
எனினும் 2008-ஆம் ஆண்டு மலேசியப் பொதுத் தேர்தலில் (2008 Malaysian General Election) அதே கோத்தா ராஜா மக்களவை தொகுதியில் போட்டியிட்டு; மலேசிய இஸ்லாமிய கட்சியை (Pan-Malaysian Islamic Party) சேர்ந்த சித்தி மரியா மகமுட் (Siti Mariah Mahmud) என்பவரிடம் தோல்வி கண்டார்.[5][6]
பொது
தொகுவிக்னேசுவரனின் தந்தையார் சன்னியாசி, 1980-களில் முன்னாள் மலேசிய நாடாளுமன்ற உறுப்பினர் ஆகும். அத்துடன் மஇகாவின் மாநிலத் தலைவர் பதவியையும் வகித்தவர்.
இவரின் உறவினர் டத்தோ செல்லத்தேவன் (Sellathevan Muthusamy), முன்னாள் மஇகா இளைஞர் அணித் தலைவராகவும்; 1990-களில் சிலாங்கூர் மாநிலத்தின் நாடாளுமன்ற உறுப்பினராகவும் பொறுப்பு வகித்தவர். விக்னேசுவரனின் குடும்பம் கிள்ளான் துறைமுகப் பகுதியில் வணிக நிர்வாகங்களைக் கொண்டுள்ளது.
விருதுகள்
தொகுமலேசிய விருதுகள்
தொகுமேற்கோள்கள்
தொகு- ↑ "Ahli Parlimen". Portal Rasmi Parlimen Malaysia. Parliament of Malaysia. பார்க்கப்பட்ட நாள் 26 April 2016.
- ↑ "MIC VP Vigneswaran New Senate President". BERNAMA. 26 April 2016. http://www.bernama.com/bernama/v8/newsindex.php?id=1239343.
- ↑ "Vigneswaran is new MIC president - Nation The Star Online". www.thestar.com.my. பார்க்கப்பட்ட நாள் 2018-07-15.
- ↑ "Vigneswaran becomes MIC president uncontested" (in en-US). Free Malaysia Today. 2018-07-14. http://www.freemalaysiatoday.com/category/nation/2018/07/14/vigneswaran-becomes-mic-president-uncontested/.
- ↑ "Malaysia Decides 2008". The Star (Malaysia). பார்க்கப்பட்ட நாள் 17 January 2010.
- ↑ "Keputusan Pilihan Raya Umum Parlimen/Dewan Undangan Negeri". Election Commission of Malaysia. பார்க்கப்பட்ட நாள் 4 February 2017.
- ↑ 7.0 7.1 7.2 "SEMAKAN PENERIMA DARJAH KEBESARAN, BINTANG DAN PINGAT". Prime Minister's Department (Malaysia). பார்க்கப்பட்ட நாள் 3 February 2020.
- ↑ "51 people awarded 'Tan Sri' title in conjunction with Agong's birthday". The Star (Malaysia). 9 September 2017. பார்க்கப்பட்ட நாள் 3 February 2020.