மலேசியப் பொதுத் தேர்தல், 2004

மலேசியப் பொதுத் தேர்தல், 2004 (ஆங்கிலம் 2004 Malaysian General Election; மலாய்: Pilihan Raya Umum Malaysia 2004; சீனம்: 2004年马来西亚大选); என்பது மலேசியாவின் 11-ஆவது பொதுத் தேர்தலாகும். இந்தத் தேர்தல் 2008 மார்ச் 21-ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.[1]

மலேசியப் பொதுத் தேர்தல், 2004

← 1999 21 மார்ச் 2004 2008 →
← மலேசிய மக்களவை உறுப்பினர்கள், 10-ஆவது
மலேசிய மக்களவை உறுப்பினர்கள், 11-ஆவது →

219 தொகுதிகள்
மக்களவை (மலேசியா)
பதிவு செய்த வாக்காளர்கள்9,755,097
வாக்களித்தோர்72.95%
  First party Second party Third party
 
தலைவர் அப்துல்லா படாவி அடி அவாங்
Abdul Hadi Awang
லிம் கிட் சியாங்
(Lim Kit Siang)
கட்சி பாரிசான்
(Barisan Nasional)
மாற்று பாரிசான்
(Barisan Alternatif)
ஜனநாயக செயல் கட்சி
முந்தைய
தேர்தல்
56.52%, 148 இடங்கள் 40.28%, 42 இடங்கள் 12.74%, 10 இடங்கள்
வென்ற
தொகுதிகள்
198 8 12
மாற்றம் Increase 50 34 Increase 2
மொத்த வாக்குகள் 4,437,919 1,672,350 687,350
விழுக்காடு 63.82 24.05% 9.88%
மாற்றம் Increase 7.30% 16.23% 2.86%

தொகுதிகளின் முடிவு

முந்தைய பிரதமர்

அப்துல்லா அகமது படாவி
பாரிசான் நேசனல்

பிரதமர்-இடைக்காலம்

அப்துல்லா அகமது படாவி
பாரிசான் நேசனல்

மலேசியப் பொதுத் தேர்தல் மலேசிய அரசியலமைப்பு (Constitution of Malaysia) சட்ட விதிகளின்படி ஐந்தாண்டுகளுக்கு ஒருமுறை நடத்தப்பட வேண்டும். கடைசியாக, நாடாளுமன்றத்திற்கான பொதுத் தேர்தல், அதாவது மலேசியப் பொதுத் தேர்தல், 1999 (1999 Malaysian General Election), 1999-ஆம் ஆண்டில் நடைபெற்றது.[2]

மலேசியாவின் 219 நாடாளுமன்றத் தொகுதிகளிலும் வாக்குப்பதிவு நடைபெற்றது. ஒவ்வோரு நாடாளுமன்றத் தொகுதியில் இருந்தும் ஒரு நாடாளுமன்ற உறுப்பினரை (Member of Parliament)மலேசிய நாடாளுமன்றத்தின் (House of Parliament) மக்களவை (மலேசியா) எனும் டேவான் ராக்யாட்டிற்கு (Dewan Rakyat) தேர்வு செய்தன.

பொது

தொகு

2003-இல் அப்துல்லா அகமது படாவி பிரதமராக நியமிக்கப் பட்டதைத் தொடர்ந்து; அவருக்கான முதல் பொதுத் தேர்தலாக, இந்த 2004-ஆம் ஆண்டு மலேசியப் பொதுத் தேர்தல் அமைந்தது.[3]

மலேசியாவின் பதின்மூன்று மாநிலங்களில் (சரவாக் மாநிலம் தவிர) மற்ற பன்னிரண்டு மாநிலங்களில் உள்ள 505 சட்டமன்றத் தொகுதிகளிலும் மாநில சட்டமன்றத் தேர்தல்கள் நடந்தன. பாரிசான் நேசனல் 64% வாக்குகளைப் பெற்று 198 இடங்களை வென்றது. ஒருங்கிணைந்த எதிர்க்கட்சிகளுக்கு 20 இடங்கள்; மற்றும் சுயேச்சைக்கு ஓர் இடம்.

தேசிய முன்னணிக்கு பெரிய வெற்றி

தொகு

ஆனாலும் அனைத்து இடங்களிலும் பாரிசான் நேசனல் போட்டியிட்டு இருந்தால் அதிக வாக்குகளைப் பெற்று இருக்கலாம் என்றும் அறியப் படுகிறது. மலேசியப் பொதுத் தேர்தல், 1978-க்குப் பிறகு பாரிசான் நேசனல் பெற்ற மிகப்பெரிய பெரும்பான்மை இதுவாகும்.

பாரிசான் தேசிய முன்னணியில் (National Front) ஆதிக்கம் செலுத்திய கட்சியான ஐக்கிய மலாய் தேசிய அமைப்பு (United Malays National Organisation) (UMNO), 109 இடங்களை வென்றது, 37 இடங்களைப் பெற்றது. அம்னோவின் மற்ற கூட்டணிக் கட்சிகளும் நிறைவான இடங்களைப் பெற்றன.

மலேசிய இசுலாமிய கட்சியின் தலைவர் தோல்வி

தொகு

மலேசிய சீனர் சங்கம் (Malaysian Chinese Association) (MCA) 31 இடங்களை வென்றது. மலேசிய இந்திய காங்கிரசு (Malaysian Indian Congress) (MIC) ஒன்பது இடங்களைப் பெற்றது.

மலேசிய இசுலாமிய கட்சி (Pan-Malaysian Islamic Party) (PAS) போட்டியிட்ட 27 இடங்களில் 7 இடங்களை மட்டுமே தக்கவைத்துக் கொண்டது. மலேசிய இசுலாமிய கட்சி ஓர் இசுலாமிய நாட்டை உருவாக்குவோம் எனும் உறுதி மொழியுடன் தேர்தலில் களம் இயங்கியது. மலேசிய இசுலாமிய கட்சியின் தலைவர், அடி அவாங் (Abdul Hadi Awang); அவரின் நாடாளுமன்றத் தொகுதியான மாராங் மக்களவை தொகுதியில் (Marang Federal Constituency) தோல்வி அடைந்தார்.

மேற்கோள்கள்

தொகு

மேலும் பார்க்க

தொகு
  • மலேசியப் பொதுத் தேர்தல், 2008
  • மலேசியப் பொதுத் தேர்தல், 2013
  • மலேசியப் பொதுத் தேர்தல், 2018
  • மலேசியப் பொதுத் தேர்தல், 2022
  • Lim, Hong-Hai; Ong, Kiang-Min (2006). The 2004 General Election and the Electoral Process in Malaysia. Berlin: Lit. pp. 147–214. {{cite book}}: |work= ignored (help)

வெளி இணைப்புகள்

தொகு