மலேசியப் பொதுத் தேர்தல், 1999

மலேசியப் பொதுத் தேர்தல், 1999 (1999 Malaysian General Election; மலாய்: Pilihan raya umum Malaysia 1999;) என்பது 1999 நவம்பர் 29-ஆம் தேதி திங்கட்கிழமை, மலேசியாவில் நடைபெற்ற 10-ஆவது பொது தேர்தலைக் குறிப்பிடுவதாகும்.[1]

மலேசியப் பொதுத் தேர்தல், 1999

← 1995 29 நவம்பர் 1999 (1999-11-29) 2004 →

மலேசிய மக்களவையின் 193 இடங்கள்
அதிகபட்சமாக 45 தொகுதிகள் தேவைப்படுகிறது
பதிவு செய்த வாக்காளர்கள்9,546,303
வாக்களித்தோர்71.19%
  First party Second party Third party
 
தலைவர் மகாதீர் முகமது பாட்சில் நூர் ஜோசப் பைரின்
கட்சி அம்னோ பாஸ் ஐக்கிய சபா
கூட்டணி பாரிசான் மாற்று பாரிசான்  –
தலைவர்
போட்டியிட்ட
தொகுதி
குபாங் பாசு பெண்டாங் கெனிங்காவு
முந்தைய
தேர்தல்
162 இடங்கள், 65.16% 16 இடங்கள் 8 இடங்கள்
வென்ற
தொகுதிகள்
148 42 3
மாற்றம் 14 Increase 26 5
மொத்த வாக்குகள் 3,763,003 2,681,460 143,338
விழுக்காடு 56.52% 40.28% 2.15%
மாற்றம் 8.64pp Increase 10.75pp 1.18pp

முந்தைய பிரதமர்

மகாதீர் பின் முகமது
பாரிசான் நேசனல்

பிரதமர்-அமர்வு

மகாதீர் பின் முகமது
பாரிசான் நேசனல்

மலேசிய நாடாளுமன்றத்தின் அனைத்து 193 மக்களவை தொகுதிகளிலும் வாக்குப்பதிவு நடைபெற்றது. ஒவ்வொரு மக்களவைத் தொகுதியும் ஒரு நாடாளுமன்ற மக்களவை உறுப்பினரைத் தேர்ந்தெடுத்தது.

அதே நாளில் மலேசியாவின் 11 மாநிலங்களில் உள்ள 394 மாநில சட்டமன்றத் தொகுதிகளிலும் மலேசிய மாநிலங்களுக்கான சட்டமன்றத் தேர்தல்களும் நடைபெற்றன. சபா, சரவாக் மாநிலங்களில் சட்டமன்றத் தேர்தல்கள் நடைபெறவில்லை.

பொது

தொகு

1999-ஆம் ஆண்டு மலேசியப் பொதுத் தேர்தல் தான், மகாதீர் பின் முகமது பிரதமராகவும், பாரிசான் நேசனலின் தலைவராகவும் இருந்த கடைசித் தேர்தல்; மற்றும் நாடு முழுவதும் ஒரே நாளில் நடைபெற்ற முதல் தேர்தலும் ஆகும். எதிர்கட்சி மொத்தம் 113 மாநிலச் சட்டமன்ற தொகுதிகளை வென்றன.

அவற்றுள் 98 தொகுதிகள் மலேசிய இசுலாமிய கட்சிக்கும்; 11 தொகுதிகள் ஜசெககட்சிக்கும் மற்றும் 4 தொகுதிகள் கெடிலான் கட்சிக்கும் சென்றன.[2]

மலேசிய இசுலாமிய கட்சியின் வெற்றி

தொகு
 
மலேசியப் பொதுத் தேர்தல், 1999

கிளாந்தான் மாநிலத்தின், 43 இடங்களில் பாரிசான் நேசனலுக்கு எதிராக மலேசிய இசுலாமிய கட்சி 41-2 என்ற கணக்கில் பெரும் வேறுபாட்டில் வெற்றி பெற்றது. திராங்கானு மாநிலத்தின், 32 இடங்களில் 28 இடங்களை மலேசிய இசுலாமிய கட்சி கைப்பற்றியது.

கிளாந்தான், திராங்கானு மாநிலங்களில் மலேசிய இசுலாமிய கட்சி மாநில அரசாங்கங்களை அமைத்தது. கூடுதலாக, கெடா மாநிலத்தின், மாநில இடங்களில் மூன்றில் ஒரு பகுதியையும் மலேசிய இசுலாமிய கட்சி கைப்பற்றியது. மீதமுள்ள 16 இடங்களை பாரிசான் நேசனல் கூட்டணியின் அம்னோ கைப்பற்றியது. பாரிசான் நேசனல் கூட்டணியின் தோழமைக் கட்சியான மலேசிய சீனர் சங்கம் கெடாவில் 2 இடங்களைப் பெற்றது.

தேர்தல் முடிவுகள் மலேசிய இசுலாமிய கட்சிக்கு பெரும் வெற்றியாகப் பார்க்கப்பட்டது. இதற்கு முன்பு கெடாவில், அக்கட்சிக்கு மாநில இடங்கள் எதுவும் இல்லை; மற்றும் 1995 பொதுத் தேர்தலில் திராங்கானுவில் ஒரே ஓர் இடம் மட்டுமே கிடைததது. நிர்வாகத்தின் காரணமாக திராங்கானு மற்றும் கிளாந்தான் மாநிலங்களை மத்திய நடுவண் அரசாங்கம் புறக்கணித்ததே அதற்குக் காரணம் என்று பார்வையாளர்கள் கருத்துகள் தெரிவித்தனர்.[3]

மேற்கோள்கள்

தொகு
  1. "1999 General Election". electionpassport.com. பார்க்கப்பட்ட நாள் 20 February 2024.
  2. Weiss, Meredith L. (2000). "The 1999 Malaysian General Elections: Issues, Insults, and Irregularities". Asian Survey. pp. 413–435. எண்ணிம ஆவணச் சுட்டி:10.2307/3021154. பார்க்கப்பட்ட நாள் 20 February 2024.
  3. Swee-Hock Saw, K. Kesavapany (2006). Malaysia recent trends and challenges. Institute of Southeast Asian Studies. pp. 97–8. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 981-230-339-1.

மேலும் காண்க

தொகு

வெளி இணைப்புகள்

தொகு