மலேசிய சமூகக் கட்சி
மலேசிய சமூகக் கட்சி (பி.எஸ்.எம்), (ஆங்கிலம்: Socialist Party of Malaysia), என்பது மலேசியாவில் உள்ள ஒரு சமூக அரசியல் கட்சியாகும். இந்தக் கட்சி மலேசிய மக்கள் கட்சியின் பக்க விளைவில் உருவானது. இரு கட்சிகளும் ஒரே வகையான கொள்கைகளையும், கருத்துருவங்களையும் கொண்டவை.[1]
மலேசிய சமூகக் கட்சி | |
---|---|
தலைவர் | முகமட் நாசிர் ஹாசிம் |
செயலாளர் நாயகம் | எஸ். அச்சுதன் |
தொடக்கம் | 1 மே 1998 |
தலைமையகம் | கோலாலம்பூர், மலேசியா |
இளைஞர் அமைப்பு | சமூக இளைஞர்கள் |
கொள்கை | சமவுடமை |
நிறங்கள் | சிகப்பு வெள்ளை |
இணையதளம் | |
http://www.parti-sosialis.org/ |
1998 ஆம் ஆண்டில் உருவாக்கப்பட்ட இந்தக் கட்சியை, பதிவு செய்யப்படுவதில் இருந்து மலேசிய அரசாங்கம் பத்து ஆண்டுகளுக்கு மேல் தடுத்து வந்தது. மலேசிய சமூகக் கட்சியின் கொள்கைகள் தேசிய பாதுகாப்பிற்கு மிரட்டலாக உள்ளன என்று அரசாங்கம் காரணம் காட்டியது. இருப்பினும், 2008 ஜூன் மாதம் அந்தக் கட்சி பதிவு செய்யப்படுவதற்கு பச்சைக் கொடி காட்டப்பட்டது.[2]
மலேசிய நாடாளுமன்ற மக்களவையில் இந்தக் கட்சிக்கு ஒரே ஓர் இடம்தான் இருக்கிறது. இந்தக் கட்சி 2008 ஆம் ஆண்டு மலேசியப் பொதுத் தேர்தலில், பேராக் மாநிலத்தின் சுங்கை சிப்புட் நாடாளுமன்றத் தொகுதியில் மக்கள் நீதிக் கட்சியின் சின்னத்தில் போட்டியிட்டு வெற்றி பெற்றது. ஜெயக்குமார் தேவராஜ் என்பவர், டத்தோ ஸ்ரீ ச. சாமிவேலுவை எதிர்த்துப் போட்டியிட்டு வெற்றி பெற்றார்.[3]