கிந்தா பள்ளத்தாக்கு

மலேசியா, பேராக் மாநிலத்தில், கிந்தா மாவட்டம்; கம்பார் மாவட்டம்; கோலாகங்சார் மாவட்டம்; பேராக் தெ

கிந்தா பள்ளத்தாக்கு என்பது (மலாய்:Lembah Kinta; ஆங்கிலம்:Kinta Valley; சீனம்:金塔谷) என்பது மலேசியா, பேராக் மாநிலத்தில், கிந்தா மாவட்டம்; கம்பார் மாவட்டம்; கோலாகங்சார் மாவட்டம்; பேராக் தெங்கா மாவட்டம் ஆகிய நான்கு மாவட்டங்களில் அமைந்து உள்ள ஒரு பள்ளத்தாக்குப் பகுதி ஆகும். 2018-ஆம் ஆண்டில் கிந்தா பள்ளத்தாக்கு மலேசியாவின் இரண்டாவது தேசியப் புவியல் பூங்கா எனஅறிவிக்கப்பட்டது. [1]

கிந்தா பள்ளத்தாக்கு
பள்ளத்தாக்கு
கிந்தா பள்ளத்தாக்கில் பத்து காஜா
கிராமட் பூலாய் ஈயச் சுரங்கம்
1916-ஆம் ஆண்டு படம்.
நாடு மலேசியா
மாநிலம் பேராக்
பகுதி ஈப்போ
மாவட்டம் கிந்தா மாவட்டம்
மாநகரசபை ஈப்போ நகராண்மை
கம்பார் நகராண்மை
Range தித்திவாங்சா
கிளேடாங்
ஆறு பேராக் ஆறு
கிந்தா ஆறு
மிகவுயர் புள்ளி
 - அமைவிடம் கொர்பு மலை
மிகத்தாழ் புள்ளி
 - அமைவிடம் கிளேடாங் மலை
நீளம் 48 மைல் (77 கிமீ)
அகலம் 24 மைல் (39 கிமீ)
Easiest access வடக்கு-தெற்கு விரைவுசாலை
கூட்டரசு சாலை 1
கிந்தா ஆறு

பேராக் ஆற்றின் துணை ஆறான கிந்தா ஆறு; கிளேடாங் மலைத் தொடருக்கு இடையில் பாய்ந்து செல்கிறது. அந்த இடத்தில் தான் இந்தக் கிந்தா பள்ளத்தாக்கு உள்ளது.

பழங்காலத்தில் இருந்தே பழங்குடி மக்களால் இங்கு ஈயம் தோண்டி எடுக்கப்பட்டது. ஆனால் பத்தொன்பதாம் நூற்றாண்டின் இறுதியில் சீனர் மற்றும் ஐரோப்பியர்களின் வருகையினால் மேலும் தீவிரமாகத் தோண்டப்பட்டது.

வரலாறு

தொகு

உலகிலேயே மிகப் பெரிய ஈயப் பள்ளத்தாக்கு பேராக் மாநிலத்தில் உள்ள இந்தக் கிந்தா பள்ளத்தாக்கு ஆகும். 1820-ஆம் ஆண்டுகளில் கிந்தா நிலப் பகுதியில் ஈயம் இருப்பது கண்டுபிடிக்கப் பட்டதும், உலக மக்களின் பார்வை இங்கே திரும்பியது.[2]

கிந்தா பள்ளத்தாக்கில் துரித வளர்ச்சி

தொகு

ஆயிரக்கணக்கான மக்கள் அந்தப் பள்ளத்தாக்கில் குவியத் தொடங்கினார்கள். பலர் பெரும் பணக்காரர்கள் ஆனார்கள். அந்தக் காலக் கட்டத்தில் கிந்தா பள்ளத்தாக்கில் இருந்த ஈப்போ; தைப்பிங்; பத்து காஜா; கோப்பேங்; கம்பார்; தஞ்சோங் ரம்புத்தான்; தம்பூன்; செரி இசுகந்தர்; துரோனோ; ஜெலாப்பாங் போன்ற நகரங்கள் துரித வளர்ச்சி அடைந்தன.[3]

1824-ஆம் ஆண்டில் ஈய உற்பத்தி

தொகு

1872-ஆம் ஆண்டில், மலேசியாவில் சுமார் 40,000 தொழிலாளர்கள் ஈயச் சுரங்கத் தொழிலில் ஈடுபட்டு இருந்தனர். பெரும்பாலும் சீன வம்சாவளியைச் சேர்ந்த கான்டோனீஸ் (Cantonese) மற்றும் ஹக்கா (Hakka) பிரிவினர். சிலாங்கூர் மாநிலத்தைப் பொறுத்த வரையில் ஈய உற்பத்தி 1824-ஆம் ஆண்டில் தொடங்கியது. அப்போது அந்த மாநிலத்தில் சுமார் 10,000 சீனர்கள் இருந்தனர்

எஞ்சியவர்கள் 30,000 பேரில் பெரும்பாலோர் கிந்தா பள்ளத்தாக்கில் இருந்த ஈயச் சுரங்கங்களில் வேலை செய்தனர். சீனர்கள் கடினமான உழைப்பாளிகள். கோலாலம்பூரின் உருவாக்கத்தில் இவர்களின் உழைப்பு போற்றத் தக்கது.

உலக உற்பத்தியில் 31 விழுக்காடு

தொகு

ஒரு காலத்தில் மலேசியப் பொருளாதாரத்திற்கு ஈயச் சுரங்கத் தொழில் பெரும் பங்களிப்பாக இருந்தது. உண்மையில் கோலாலம்பூரின் தோற்றம் ஈய உற்பத்தியில்தான் உருவகம் பெற்றது. 1979-ஆம் ஆண்டில், மலேசியா கிட்டத்தட்ட 63,000 டன் ஈயத்தை உற்பத்தி செய்தது.

உலகின் முன்னணி ஈய உற்பத்தியாளராக விளங்கியது. உலக உற்பத்தியில் 31 விழுக்காடு. தவிர 41,000-க்கும் மேற்பட்டவர்களுக்கு வேலை வாய்ப்புகளையும் வழங்கியது.

ஈயத் தொழிலில் சரிவு

தொகு

1980-களில் ஈயத்தின் விலைகள் குறைந்தது. 300 க்கும் மேற்பட்ட ஈயச் சுரங்கங்கள் மூடப் பட்டன. இருந்தாலும் உலகின் பாதிக்கும் மேற்பட்ட ஈயத்தை வழங்கி வந்தது. 1994 வாக்கில், நாட்டின் உற்பத்தி 6,500 டன்களாகக் குறைந்தது. 3,000 பேர் மட்டுமே இந்தத் தொழிலில் பணியாற்றினர். கடந்த 15 ஆண்டுகளில் மலேசியாவின் உற்பத்தி 90 விழுக்காடு சரிந்தது.

தற்சமயம் உள்நாட்டு மின் தொழில் துறைகளில் உள்நாட்டு ஈய உற்பத்தி பயன்படுத்தப் படுகிறது. வெளிநாடுகளுக்கு ஈயத்தை ஏற்றுமதி செய்யவில்லை. குறைந்த ஈய விலை; உற்பத்தி செய்வதில் அதிகச் செலவுகள்; இவற்றால் ஈயத் தொழிலில் சரிவு ஏற்பட்டு வருகிறது.

அரசியல்

தொகு

கிந்தா பள்ளத்தாக்கு ஈப்போ தீமோர் மக்களவைத் தொகுதி; ஈப்போ பாராட் மக்களவைத் தொகுதி; தம்புன் மக்களவைத் தொகுதி; பத்து காஜா மக்களவைத் தொகுதி; கோப்பேங் மக்களவைத் தொகுதி; மற்றும் கம்பார் மக்களவைத் தொகுதிகளை உள்ளடக்கியது. கிந்தா பள்ளத்தாக்கில் உள்ள உள்ளூராட்சிகள்; வடக்கில் இருந்து தெற்கு நோக்கி:

  • கம்பார் மாவட்ட மன்றம் (Majlis Daerah Kampar, MDKp); கம்பார் நகரம்; கோப்பேங் உள்ளடக்கியது.

புத்த வெண்கலக் கலைப்பொருட்கள்

தொகு

கிந்தா பள்ளத்தாக்கு ஆயிரக் கணக்கான ஆண்டுகளாக ஒராங் அஸ்லி பழங்குடி மக்களின் வாழ்விடமாக இருந்து வந்துள்ளது. அதற்குத் தம்பூன் பாறை ஓவிய வடிவங்கள் தக்கச் சான்றுகளாக அமைகின்றன.

பண்டைய காலங்களில் இருந்து இந்திய வர்த்தகர்கள் ஈயத்திற்காகக் கிந்தா பள்ளத்தாக்கிற்கு வருகை தந்துள்ளனர். 1931-ஆம் ஆண்டில் அது தொடர்பாக புத்த வெண்கல கலைப்பொருட்கள் கிடைத்து உள்ளன.[4]

மேற்கோள்கள்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=கிந்தா_பள்ளத்தாக்கு&oldid=3995864" இலிருந்து மீள்விக்கப்பட்டது