மஞ்சோய்

ஈப்போவில் மலாய்க்காரர்கள் அதிகமாக வாழும் மிகப் பெரிய கிராமப் புறம்

மஞ்சோய் அல்லது மஞ்சோய் கூட்டமைப்பு (மலாய்:Manjoi; Gugusan Manjoi; ஆங்கிலம்:Manjoi; Cluster Manjoi; சீனம்:满城) என்பது மலேசியா, பேராக் மாநிலத்தில், கிந்தா மாவட்டத்தில் உள்ள ஒரு பெரும் கிராமக் கூட்டமைப்பு. ஈப்போ மாநகரத்தின் துணை நகரம் (Satellite Town). அதே வேளையில் ஈப்போவில் மலாய்க்காரர்கள் அதிகமாக வாழும் மிகப் பெரிய கிராமப் புறமாகவும் அறியப் படுகிறது.

மஞ்சோய்
Manjoi
பேராக்
கிந்தா மாவட்டம் - மஞ்சோய்
கிந்தா மாவட்டம் - மஞ்சோய்
Map
மஞ்சோய் is located in மலேசியா
மஞ்சோய்
      மஞ்சோய்
ஆள்கூறுகள்: 4°37′N 101°6′E / 4.617°N 101.100°E / 4.617; 101.100
நாடு மலேசியா
மாநிலம் பேராக்
உருவாக்கம்கி.பி.1900
நேர வலயம்மலேசிய நேரம் ஒ.ச.நே + 08:00

மலேசியாவில் மலாய்க்காரர்களின் மிகப் பெரிய கிராமப் புறம், கோலாலம்பூர் தலைநகரத்தில் ஈப்போ சாலை கம்போங் பாருவில் உள்ளது. அதற்கு அடுத்த பெரியது இந்த மஞ்சோய் கிராமப் புறம் ஆகும். [1]

வரலாறு

தொகு

இந்தக் கிராமம் 1900-ஆம் ஆண்டில் பேராக், போத்தா பகுதியைச் சேர்ந்த உடா கிடால் (Uda Kidal) என்பவரால் நிறுவப்பட்டது. அவரும் அவரின் நண்பர்கள் சிலரும் நல்ல வாழ்வாதாரத்தைக் காண ஈப்போவுக்கு வெளியே இருந்த இந்தப் பகுதிக்குக் குடிபெயர்ந்தனர்.[2]

உடா கிடாலின் பேரன், அப்துல் மாட் தேசா என்பவர் இன்னும் மஞ்சோய் பகுதியில் வாழ்கிறார். அவரின் கூற்றுப்படி, உடா கிடாலின் தாத்தா தோக் மன்ஜோய் என்பவரின் பெயர் மஞ்சோய் கிராமத்திற்கு வைக்கப் பட்டது.[3]

உடா கிடாலின் தாத்தா தோக் மன்ஜோய் அந்தப் பகுதியைக் கவனித்துக் கொள்ளவும்; குடியேறியவர்கள் ஒருவருக்கு ஒருவர் சண்டையிடாமல் பார்த்துக் கொள்ளவும் அறிவுறுத்தி உள்ளார்.[4]

மஞ்சோய் அமைவு

தொகு

மஞ்சோய் 560.8 ஹெக்டர் பரப்பளவு கொண்டது. 6,409 வீடுகள் உள்ளன. 31,000 க்கும் மேற்பட்ட குடியிருப்பாளர்கள் உள்ளனர். மஞ்சோயில் உள்ள துணைக் கிராமங்கள்.

கம்போங் மஞ்சோய் (Kampung Manjoi)
கம்போங் துங்கு உசைன் (Kampung Tengku Hussein)
கம்போங் சுங்கை தாப்பா (Kampung Sungai Tapah)
கம்போங் டத்தோ அகமத் சாயிட் (Kampung Dato Ahmad Said)
கம்போங் ஜெலப்பாங் பாரு (Kampung Jelapang Baru)

மேற்கோள்கள்

தொகு

வெளி இணைப்புகள்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=மஞ்சோய்&oldid=3995418" இலிருந்து மீள்விக்கப்பட்டது