கொர்பு மலை

கொர்பு மலை (மலாய் மொழி: Gunung Korbu; ஆங்கிலம்: Mount Korbu) என்பது மலேசியா, பேராக் மாநிலத்தில் அமைந்து உள்ளது. தித்திவாங்சா மலைத் தொடரில் மிக உயர்ந்த மலை.[1] 1885-ஆம் ஆண்டு, பிரித்தானிய நில அளவாய்வாளர் வில்லியம் கேமரன் என்பவர் கொர்பு மலை இருப்பதைக் கண்டுபிடித்தார். இவர்தான் கேமரன் மலையையும் வெளியுலகிற்கு அறிமுகம் செய்தவர்.[2]

கொர்பு மலை
Mount Korbu
குனோங் கொர்பு
Mount Korbu.jpg
உயர்ந்த இடம்
உயரம்2,183 m (7,162 ft)
ஆள்கூறு4°41′0.00″N 101°18′0.00″E / 4.6833333°N 101.3000000°E / 4.6833333; 101.3000000ஆள்கூறுகள்: 4°41′0.00″N 101°18′0.00″E / 4.6833333°N 101.3000000°E / 4.6833333; 101.3000000
புவியியல்
அமைவிடம்பேராக், தீபகற்ப மலேசியா
மலைத்தொடர்தித்திவாங்சா மலைத்தொடர்
Climbing
Easiest routeஈப்போவில் இருந்து தஞ்சோங் ரம்புத்தான் நகருக்குச் செல்லும் வழி

தீபகற்ப மலேசியாவில் இரண்டாவது உயரமான மலை. இதன் உயரம் 2,183 மீட்டர்கள். இந்த மலையில் ஏறுபவர்களுக்கு நல்ல உடல் நலத்தகுதி இருக்க வேண்டும். முதன்முறையாக மலை ஏறுபவர்கள் இந்த மலையைத் தவிர்ப்பது நல்லது.[3] மலேசியாவில் இருந்து சென்று, இமயமலை ஏறிச் சாதனை படைத்தவர்களில் பெரும்பாலோர், முதலில் இந்த கொர்பு மலையில் ஏறி தான் பயிற்சி, அனுபவம் பெற்றார்கள்.

விளக்கம்Edit

இந்த மலையில் ஏறுவதற்கு முறையான பாதைகள் இல்லை. வழி நெடுகிலும் கரடு முரடான பாறைகள். பல ஆறுகளைக் கடந்து செல்ல வேண்டும். உள்ளூர் வழிகாட்டியை நியமித்துக் கொள்ள வேண்டும். பல இடங்களில் செங்குத்தான பாறைக் குன்றுகள் உள்ளன. பெரும்பாலான நாட்களில் மழை பெய்து கொண்டே இருக்கும். ஆறுகளில் வெள்ளம் அடிக்கடி பெருக்கெடுக்கும்.

35 கி.மீ. நீளம் கொண்ட கொர்பு மலைப் பாதையில் அடையாளக் குறியீடுகள் இல்லை. அதனால் மலையேறிகள் காணாமல் போவது அடிக்கடி நடைபெறும் நிகழ்ச்சிகளாகும்.[4] கொர்பு மலைக்கு அருகில் இன்னும் ஒரு மலை உள்ளது. அதன் பெயர் காயோங் மலை. இதன் உயரம் 2,173 மீட்டர்கள். கொர்பு மலையின் உச்சியில் இருந்து ஒரு மணி நேரத்தில் காயோங் மலையைச் சென்று அடையலாம்.

பேராக், ஈப்போ, தஞ்சோங் ரம்புத்தான் நகர் வழியாக கொர்பு மலைக்குச் செல்லலாம். மலை உச்சியை அடைவதற்கு இரண்டு அல்லது மூன்று நாட்கள் பிடிக்கும். மேலும் ஒரு கடினமான பாதை இருக்கிறது. பகாங், கேமரன் மலை, தானா ராத்தா வழியாக யோங் பெலார் மலை, காயோங் மலை ஆகிய மலைகளைக் கடந்து கொர்பு மலை உச்சியை அடையலாம்.[5]

தஞ்சோங் ரம்புத்தான் பாதையில் உள்ள இடங்கள்Edit

  1. கம்போங் ஒராங் அஸ்லி - மலேசியப் பூர்வீக குடிமக்களின் இருப்பிடம்.
  2. டாத்தாரான் பாச்சாட் - இரத்தம் குடிக்கும் அட்டைகளின் இருப்பிடம்
  3. கேம் சரோஜா - சரோஜா முகாம்
  4. கேம் கிஜாங் - கிஜாங் கேம்
  5. லாஸ்ட் வாட்டர் பாயிண்ட் - கடைசியாக தண்ணீர் கிடைக்கும் இடம்
  6. போத்தாக் - மொட்டைத் திடல்
  7. கொர்பு மலை உச்சி

இவற்றையும் பார்க்கEdit

சான்றுகள்Edit