சாமா மலை (மலாய் மொழி: Gunung Chamah; ஆங்கிலம்: Mount Chamah) என்பது மலேசியாவின் கிளாந்தான் மாநிலத்தின் வடமேற்கு குவா மூசாங் மாவட்டத்தில் பேராக் எல்லைக்கு அருகில் உள்ள ஒரு மலையாகும்.

சாமா மலை
Mount Chamah
Gunung Chamah
மலை உச்சியில் சூரிய உதயம்
உயர்ந்த புள்ளி
உயரம்2,172 m (7,126 அடி)[1]
புடைப்பு1,041 m (3,415 அடி)
பட்டியல்கள்ரீபு மலைகள்
ஆள்கூறு5°13′43.34″N 101°34′24.41″E / 5.2287056°N 101.5734472°E / 5.2287056; 101.5734472
புவியியல்
சாமா மலை is located in மலேசியா
சாமா மலை
சாமா மலை
மலேசியாவில் அமைவிடம்
அமைவிடம்குவா மூசாங் மாவட்டம், கிளாந்தான்
மூலத் தொடர்தித்திவாங்சா மலைத்தொடர்
ஏறுதல்
எளிய வழிரெகோம் டிரெய்ல் (கிழக்கு)

தித்திவாங்சா மலைகளின் வடக்குப் பகுதிக்குள் அமைந்திருக்கும் இது, கிளாந்தான் மாநிலத்தில் இரண்டாவது உயரமான மலையாகவும், மலாய் தீபகற்பத்தில் ஐந்தாவது உயரமான மலையாகவும் உள்ளது. இந்த மலையின் உயரமானது கடல் மட்டத்திலிருந்து 2,172 மீ (7,126 அடி) என்ற அளவில் உள்ளது.

வரலாறு

தொகு

கம்யூனிச கிளர்ச்சி காலத்தில், இந்தப் பகுதி சாதாரண குடிமக்களுக்கு வரம்பற்றதாக இருந்தது. இருப்பினும், 1980-களில் அட் யாயில் கையெழுத்திடப்பட்ட மலேசிய அரசாங்கத்திற்கும் கம்யூனிஸ்டுகளுக்கும் இடையிலான சமாதான ஒப்பந்தத்திற்குப் பிறகு, அதிகாரிகள் தித்திவாங்சா மலைத்தொடரில் காட்டில் மலையேற்றம் குறித்த தங்கள் விதிகளைத் தளர்த்தத் தொடங்கினர்.[ மேற்கோள் தேவை ] [2]

நடைபயணம்

தொகு

சாமா மலை, G7 மலைகளில் ஒன்றாக இருப்பதால், அதன் வரையறுக்கப்பட்ட அணுகல் புள்ளிகளால் ஏறுவதற்கு ஒரு சவாலான மலையாக நிபுணர்களால் கருதப்படுகிறது.

இப்பகுதி பெரும்பாலும் பெயரிடப்படாததாகவும் மற்றும் மலேசியப் புலிகளின் மக்கள்தொகையைக் கொண்ட இடமாக இருக்கிறது. இந்த காரணிகளின் காரணமாக, எந்த மலையேற்ற முயற்சியிலும் ஈடுபடுவோர் கவனமாக இருக்க வேண்டும்.

ஏழு மலைகள்=

தொகு

தீபகற்ப மலேசியாவின் G7 எனும் (G என்பது Gunung எனும் மலாய்ச் சொல்: மலை என பொருள்படும்) மலைகளில் இதுவும் ஒன்றாகும். தீபகற்ப மலேசியாவின் மிக உயர்ந்த 7 மலைகளை ஜி7 மலைகள் என அழைக்கிறார்கள்.

மலேசிய தீபகற்பத்தில் உள்ள ஏழு உயரமான மலைகள் ஜி7 என அழைக்கப்படுகின்றன.[3]

  1. G1 தகான் மலை – 2187மீ
  2. G2 கொர்பு மலை – 2183மீ
  3. G3 யோங் பெலார் மலை – 2181மீ
  4. G4 காயோங் மலை – 2173மீ
  5. G5 சாமா மலை – 2171மீ
  6. G6 யோங் யாப் மலை – 2168மீ
  7. G7 உலு செப்பாட் மலை – 2161மீ

கினபாலு மலை (4095 மீ) போன்ற நன்கு அறியப்பட்ட மலைகளுடன் ஒப்பிடும்போது, மேற்காணும் ஜி7 மலைகளின் உயரம் மிகவும் குறைவாக இருக்கலாம். ஆனாலும் இந்த மலைகளின் உயரத்தைக் கொண்டு அவற்றைக் குறைவாக மதிப்பிட்டுவிடக் கூடாது. இவை ஒவ்வொன்றும் 4000 மீட்டர் கொண்ட மலைகளை விட கடினமான கரடுமுரடான மலைகளாகும். இவற்றை மலைகளின் விலங்குகள் என அழைப்பதும் உண்டு.

மேலும் பார்க்கவும்

தொகு

மேற்கோள்கள்

தொகு
  1. Malayan Nature Society (2001). Malaysian Naturalist. Malaysian Nature Society. p. 14. பார்க்கப்பட்ட நாள் 2022-11-01.
  2. Boon Kheng, Cheah (2009). "The Communist Insurgency in Malaysia, 1948-90: Contesting the Nation-State and Social Change". New Zealand Journal of Asian Studies. 
  3. "G7 or the seven mountains above 7,000 feet are Tahan (7,186 feet), Korbu (7,162 feet), Yong Belar (7,156 feet), Gayong (7,129 feet), Chamah (7,210 feet), Yong Yap (7,110 feet) and Ulu Sepat (7,089 feet)". Medium (in ஆங்கிலம்). 14 November 2015. பார்க்கப்பட்ட நாள் 11 April 2024.
"https://ta.wikipedia.org/w/index.php?title=சாமா_மலை&oldid=3933172" இலிருந்து மீள்விக்கப்பட்டது