ரீபு மலைகள்

ரீபு மலைகள் (மலாய் மொழி: Gunung Ribu; ஆங்கிலம்: Ribu) என்பது 1,000 மீ (3,300 அடி) அல்லது அதற்கும் மேற்பட்ட உயரம் கொண்ட மலைகளை வரையறுக்கும் சொல் ஆகும். [1]

இந்தோனேசியாவின் மிக உயர்ந்த மலைகளான புரோமோ, செமெரு, பாத்தோக் மலைகள்
மலேசியாவின் மிக உயர்ந்த மலையான கினபாலு மலை

"ரீபு" என்பது ஒருமலாய் மற்றும் ஓர் இந்தோனேசியச் சொல்லாகும்; அதாவது "ஆயிரம்" என பொருள்படும்.[2]இருப்பினும் இந்தச் சொல் இந்தோனேசிய அசல் சொல்லான "ரீபு" என்பதிலிருந்து வந்தது,

மேலும், ரீபு சிகரம் எனும் தகுதியைப் பெறுவதற்கு, ஒரு மலைக்கு ஆயிரம் மீட்டர் முக்கியத்துவம் இருக்க வேண்டும்.

பொது

தொகு

இந்தோனேசியா மற்றும் மலேசியா நாடுகளில், சிகரத்தின் முழுமையான உயரத்திற்கு ஏற்ப ரீபு மலைகள் மூன்று வகைகளாக அறியப்படுகின்றன.

  • மிக உயர்ந்தது (இந்தோனேசியம்: Sangat Tinggi) - 3,000 மீட்டருக்கும் அதிகமான உயரத்தைக் கொண்ட மலைகள்;
  • நடுத்தர உயரம் (இந்தோனேசியம்: Tinggi Sedang) - 2,000 முதல் 3,000 மீட்டர் வரையிலான உயரத்தைக் கொண்ட மலைகள்;
  • குறைவான உயரம் (இந்தோனேசியம்: Kurang Tinggi) - 1,000 முதல் 2,000 மீட்டர் வரையிலான உயரத்தைக் கொண்ட மலைகள்;

7,000 ரீபு மலைகள்

தொகு

தற்போது, மலேசியா மற்றும் கிழக்கு திமோர் உட்பட இந்தோனேசியத் தீவுக்கூட்டம் முழுவதும் மொத்தம் 270 ரீபு மலைகள் இருப்பதாக அறியப்படுகிறது. இந்தோனேசியாவைப் பொருத்த வரையில் ரிஞ்சனி மலை; புரோமோ மலை; ஆகூங்க் மலை; புன்சாக் ஜெயா போன்றவை மிக உயர்ந்த மலைகளின் பட்டியலில் உள்ளன.

கினபாலு மலை

தொகு

மலேசியாவில் கினபாலு மலை மட்டும் மிக உயர்ந்த மலைகளின் பட்டியலில் உள்ளது.[3]

2022-ஆம் ஆண்டில், உலகம் முழுவதும் உள்ள சுமார் 7,000 ரீபு மலைகள் அனைத்தையும் அடையாளம் காண ஒரு பன்னாட்டுத் திட்டம் நடந்து வருகிறது.[4][5]

இவற்றையும் பார்க்க

தொகு

மேற்கோள்கள்

தொகு
  1. Jardine, David (2009). "The Ascents of Dan". Tempo: (1007) p.63. 
  2. "Google Translate". translate.google.com. பார்க்கப்பட்ட நாள் 2018-07-12.
  3. "List of Indonesian and Malaysian mountains by Prominence - Gunung Bagging". gunungbagging.com. பார்க்கப்பட்ட நாள் 15 October 2018.
  4. "Worldwide Ribus Project page". பார்க்கப்பட்ட நாள் 10 January 2022.
  5. "Ribus Project map". பார்க்கப்பட்ட நாள் 10 January 2022.


"https://ta.wikipedia.org/w/index.php?title=ரீபு_மலைகள்&oldid=4084105" இலிருந்து மீள்விக்கப்பட்டது