ரிஞ்சனி மலை

ரிஞ்சனி மலை (Mount Rinjani; அல்லது ரிஞ்சனி குனுங் (Gunung Rinjani) இது தென்கிழக்காசியா, மற்றும் ஓசியானியா என இரு கண்ட நாடான இந்தோனேசியாவின் மேற்கு நுசா டென்காரா மாகாணத்தில், உள்ள லொம்போத் தீவில் அமைந்துள்ள ஒரு எரிமலையாகும். 3.726 மீட்டர் (12,224 அடி) உயரமுடைய இது, இந்தோனேசியாவின் இரண்டாவது மிக உயர்ந்த எரிமலையாக விளங்குகிறது.[2] மேலும் இம்மலை நிர்வாக ரீதியாக, மேற்கு நுசா டென்காரா பகுதியின் வட லொம்போ (இந்தோனேசியன்: நுசா டென்காரா பாராட், NTB). ஆட்சியின் கீழ் உள்ளது.[3]

ரிஞ்சனி மலை
Mount Rinjani
பருசரி மலை
1995 வெடிப்பு
உயர்ந்த புள்ளி
உயரம்3,726 m (12,224 அடி)[1]
புடைப்பு3,726 m (12,224 அடி)முக்கியத்துவம் மூலம் சிகரங்களின்த, ரவரிசையில் 38 வது
பட்டியல்கள்அல்ட்ரா
ரிபு
ஆள்கூறு8°24′52″S 116°27′35″E / 8.414414°S 116.459767°E / -8.414414; 116.459767[1]
பெயரிடுதல்
தாயகப் பெயர்ரிஞ்சனி குனுங் Error {{native name checker}}: parameter value is malformed (help)
புவியியல்
அமைவிடம்ரிஞ்சனி குனுங் தேசிய பூங்கா
லொம்போ,  இந்தோனேசியா
மூலத் தொடர்சுந்தா சிறு தீவுகள்
நிலவியல்
பாறையின் வயதுஉரிய காலம் கடந்த (இடையூழிக் காலம்)
மலையின் வகைசொம்மா எரிமலை
Volcanic arcசுந்தா பரிதி
கடைசி வெடிப்பு29 செப்டம்பர் 2016 (2016-09-29)
ஏறுதல்
எளிய வழிசேணுறு (Senaru)
இயல்பு அணுகு வழிசெம்பலுன் (Sembalun)
அணுக்கம்வரம்பிட்டுள்ளனர்

இந்த எரிமலையின் மேற்கூரையில், 6-8.5 கிலோ மீட்டர் (3.7 மைல் - 5.3) அகன்ற எரிமலைவாய் ஒரு ஏரியாக அமைந்துள்ளது. "செகரா அனாக்" அல்லது "அனாக் லாட்" (Segara Anak or Anak Laut) (கடலின் குழந்தை (Child of the Sea) என்றழைக்கப்படும் இந்த எரிமலைமுகடு ஏரியின் ஒரு பகுதி நிறைந்துள்ள நீரின் நிறம் காரணமாக, கடல் போன்ற நீல நிறமாக மிளிர்கிறது.[4] மேலும் அகன்ற எரிமலைவாய் வெந்நீர் ஊற்றுகள் உள்ள இந்த ஏரி, கடல் மட்டத்திலிருந்து சுமார் 2,000 மீட்டர் (6,600 அடி) உயரத்திலும், மற்றும் சுமார் 200 மீட்டர் (660 அடி)[5] ஆழமானதாகவும் இருக்கும் என்று மதிப்பிடப்பட்டுள்ளது.[6] சாசாக் (Sasak people) பழங்குடிகள் மற்றும் இந்து சமய மக்கள் என ஏரி மலையில் உள்ள இரண்டு பகுதிகளில் எப்பொழுதாவது புனிதமான சில சமய செயல்பாடுகள் செய்கின்றனர்.[4] மேலும் சமீபத்திய நிகழ்வாக, 2016, செப்டம்பர் 29 அன்று, ரிஞ்சனி வெடித்தது குறிப்பிடக்கூடியதாகும்.[7]

நிலவியல்

தொகு

லொம்போத் தீவிலுள்ள சிறிய தீவுகளில் ஒன்றான சுந்தா சிறு தீவுகள், ஒரு சிறிய தீவுக்கூட்டம் ஆகும். இது, மேற்கிலிருந்து கிழக்காக, பாலி, சும்பாவா, சும்பா தீவுகள், மற்றும் திமோர் தீவுகள் போன்ற இவையனைத்தும் ஆத்திரேலிய கண்டத்தின் முனையில் அமைந்துள்ள சிறுசிறு தீவுத் தொகுப்புகளாகும்.[8] மேலும் இந்தப் பகுதியிலுள்ள எரிமலைகள் காரணமாக, பெருங்கடல் மேலோடுகளின் நடவடிக்கை மற்றும் அதன் அடுக்கம் நகர்தல் அல்லது அசைவுகள் உருவாகின்றன.[9] இந்தோனேசியாவில் உள்ள குறைந்தது 129 எரிமலைகளில் ஒன்றான ரிஞ்சனி எரிமலை, யப்பான் மற்றும் தென் கிழக்கு ஆசியாவின் மேற்கத்திய அரைக்கோளத்தில் இருந்து அகன்று, அபாயக் கோடுகளைக் கொண்டுள்ள ஒரு பிரிவாகும். இது நான்கு பசிபிக் நெருப்பு வளைய பகுதியாக உருவான சுந்தா பரிதி (Sunda Arc) அகழி அமைப்பின் எரிமலைகளை சேர்ந்தவை.[10]

இந்தத் தீவுக்கூட்டங்களில் லொம்போ மற்றும் சும்பாவா போன்றத் தீவுகள், சுந்தா பரிதியின் நடுப்பகுதியில் உள்ளது. சுந்தா பரிதி, உலகின் மிக ஆபத்தான மற்றும் வெடிக்கும் எரிமலைகளில் ஒன்றாக திகழ்கிறது. மேலும் சும்பாவா தீவில் அமைந்துள்ள சுழல்வடிவ எரிமலையான தம்போரா எரிமலை, 1815 ஆம் ஆண்டு ஏப்ரல் 15 அன்று சரித்திரத்திலேயே மிக உக்கிரமான எரிமலை வெடிப்பு குறியீடு (VEI) 7 என்ற அளவீட்டில் வெடித்ததாக அறியப்படுகிறது.[11] இப்பகுதியின் உயர்நிலக் காடுகளின் மேலுறை அற்றும், மற்றும் பெரும்பாலான பகுதிகள் வளர்ச்சி அடையாமலும் உள்ளன. அதேவேளையில் இங்குள்ள வளமான மண்கள் கொண்டுள்ள தாழ்நிலப் பகுதிகளில், அரிசி, சோயா அவரை, குளம்பி, புகையிலை, பருத்தி, கறுவா, 'கோகோ அவரை' (Cocoa bean), கிராம்பு, மரவள்ளி, மக்காச்சோளம், தென்னை, கொப்பரை, வாழை மற்றும் வெனிலா போன்ற மிகவும் முக்கிய பயிர்களாக சாகுபடி செய்யப்படுகின்றன.[12] ரிஞ்சனி மலைச் சரிவுகளில் உள்நாட்டு சாசாக் மக்கள் வாழ்கின்றனர். முதன்மையாக செநாறு கிராமத்தில் (Senaru village) ரிஞ்சனியில் நிறுவப்பட்ட இது, சில அடிப்படை சுற்றுலாத் தொடர்பான செயல்பாடுகளாக உள்ளன.[13]

மேற்கோள்கள்

தொகு
  1. 1.0 1.1 "Rinjani". Global Volcanism Program. சிமித்சோனிய நிறுவனம். பார்க்கப்பட்ட நாள் 2010-03-10.
  2. Rinjani
  3. "NTB MUSEUM, THE HISTORICAL AND CULTURAL MUSEUM IN LOMBOK". www.lombokindonesia.org (ஆங்கிலம்) - 2014-2019. பார்க்கப்பட்ட நாள் 2016-11-28.
  4. 4.0 4.1 "Datang dan Nikmatilah Danau di Puncak Rinjani!". jabar.tribunnews.com (ஆங்கிலம்) - 18 Januari 2014 17:32. பார்க்கப்பட்ட நாள் 2016-11-28.
  5. Langston-Able, Nick (2007). Playing with Fire. United Kingdom: Freak Ash Books. p. 184. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 9780955340345. பார்க்கப்பட்ட நாள் 28 Nov 2016.
  6. "Mt. Rinjani is the 2nd highest volcano". sempiakvillas.com (ஆங்கிலம்) - September 8, 2016. பார்க்கப்பட்ட நாள் 2016-11-28.
  7. "Indonesia evacuates tourists after Mount Barujari eruption". www.foxnews.com (ஆங்கிலம்) - September 28, 2016. பார்க்கப்பட்ட நாள் 2016-11-28.
  8. "Information Lombok Rinjani Mountain Indonesia,3726m". www.lombokrinjani.com (ஆங்கிலம்) - 2016 - 2017. பார்க்கப்பட்ட நாள் 2016-11-29.
  9. H. A. Brouwer (July 1939). "Exploration in the Lesser Sunda Islands". The Geographical Journal 94 (1): 1–10. doi:10.2307/1788584. https://archive.org/details/sim_geographical-journal_1939-07_94_1/page/1. 
  10. "Pacific Ring of Fire, circum-Pacific belt". nationalgeographic.org (ஆங்கிலம்) - 1996-2016. பார்க்கப்பட்ட நாள் 2016-11-29.
  11. Stothers, Richard B. (1984). "The Great Tambora Eruption in 1815 and Its Aftermath". Science 224 (4654): 1191–1198. doi:10.1126/science.224.4654.1191. பப்மெட்:17819476. Bibcode: 1984Sci...224.1191S. 
  12. "Mount Rinjani". www.rinjaniecotrekking.com (ஆங்கிலம்) - 2011. Archived from the original on 2017-03-30. பார்க்கப்பட்ட நாள் 2016-11-30. {{cite web}}: Unknown parameter |dead-url= ignored (help)
  13. "Senaru Village and Rinjani Lodge Activities". www.rinjanilodge.com (ஆங்கிலம்) - 2016. பார்க்கப்பட்ட நாள் 2016-11-30.
 
விக்கிமீடியா பொதுவகத்தில்,
ரிஞ்சனி மலை
என்பதில் ஊடகங்கள் உள்ளன.
"https://ta.wikipedia.org/w/index.php?title=ரிஞ்சனி_மலை&oldid=3867554" இலிருந்து மீள்விக்கப்பட்டது