மத்திய பேராக் மாவட்டம்
மத்திய பேராக் மாவட்டம் (Daerah Perak Tengah) என்பது மலேசியா, பேராக் மாநிலத்தில் உள்ள ஒரு மாவட்டம் ஆகும். இந்த மாவட்டம் செரி இசுகந்தர் நகரத்தை மையமாகக் கொண்டது. மத்திய பேராக் மாவட்ட மன்றத்தால் நிர்வகிக்கப் படுகிறது; இருப்பினும் பாரிட் நகரமே இந்தப் பகுதியில் மிகப் பெரிய குடியேற்ற இடமாகும்.[1]
மத்திய பேராக் மாவட்டம் அமைவிடம் பேராக் | |
ஆள்கூறுகள்: 4°15′N 100°55′E / 4.250°N 100.917°E | |
நாடு | மலேசியா |
மாநிலம் | பேராக் |
தொகுதி | ஸ்ரீ இசுகந்தர் |
பெரிய நகரம் | பாரிட் |
நகராட்சி | மத்திய பேராக் மாவட்ட மன்றம் |
அரசு | |
• மாவட்ட அதிகாரி | கொப்ரான் இயோப் ஹம்சா (Ghopran Bin Yeop Hamzah) |
பரப்பளவு | |
• மொத்தம் | 1,279.46 km2 (494.00 sq mi) |
மக்கள்தொகை (2010) | |
• மொத்தம் | 97,530 |
• மதிப்பீடு (2015) | 1,90,700 |
நேர வலயம் | மலேசிய நேரம் ஒ.ச.நே + 08:00 |
அஞ்சல் குறியீடு | 326xx, 328xx-329xx |
தொலைபேசி எண்கள் | +6-05 |
வாகனப் பதிவெண் | A |
நிர்வாகப் பிரிவுகள்
தொகுமத்திய பேராக் மாவட்டம் 11 முக்கிம்களாக பிரிக்கப்பட்டு உள்ளது. மாவட்டம் ஒன்றின் துணைப் பிரிவுகள் முக்கிம் (Mukim) என அழைக்கப் படுகின்றன.[2][3]
- பண்டார் (Bandar)
- பிளாஞ்சா (Blanja)
- போத்தா (Bota)
- ஜெயா பாரு (Jaya Baru)
- கம்போங் காஜா (Kampung Gajah)
- கோத்தா செத்தியா (Kota Setia)
- லம்போர் (Lambor)
- லாயாங்-லாயாங் (Layang-Layang)
- பாசிர் பாஞ்சாங் உலு (Pasir Panjang Hulu)
- பண்டார் (Pasir Salak)
- புலாவ் தீகா (Pulau Tiga)
மக்கள் தொகை புள்ளிவிவரங்கள்
தொகுபின்வரும் பேராக் தெங்ஙா மக்கள் தொகை புள்ளிவிவரங்கள் மலேசியா 2010 மக்கள் தொகை கணக்கெடுப்பை அடிப்படையாகக் கொண்டது.[4]
மஞ்சோங் இனக்குழுக்கள்: 2010-ஆம் ஆண்டு கணக்கெடுப்பு | ||
---|---|---|
இனம் | மக்கள் தொகை | விழுக்காடு |
மலாய்க்காரர்கள் | 94,664 | 97.0% |
சீனர்கள் | 1,291 | 1.3% |
இந்தியர்கள் | 1,426 | 1.5% |
மற்றவர்கள் | 149 | 0.2% |
மொத்தம் | 97,530 | 100% |
மலேசிய நாடாளுமன்றம்
தொகுமலேசிய நாடாளுமன்றத்தின் மக்களவையில் (டேவான் ராக்யாட்) மத்திய பேராக் மாவட்டத்தின் நாடாளுமன்றத் தொகுதிகள்.
நாடாளுமன்றம் | தொகுதி | நாடாளுமன்ற உறுப்பினர் | கட்சி |
---|---|---|---|
P69 | பாரிட் | முகமட் நிசார் சக்காரியா | பாரிசான் நேசனல் (அம்னோ) |
P73 | பாசிர் சாலாக் | தஜுடின் அப்துல் ரகுமான் | பாரிசான் நேசனல் (அம்னோ) |
பேராக் மாநிலச் சட்டமன்றம்
தொகுபேராக் மாநிலச் சட்டமன்றத்தில் மத்திய பேராக் மாவட்டப் பிரதிநிதிகள்; (2018-ஆம் ஆண்டு பொதுத் தேர்தல் முடிவுகள்):
நாடாளுமன்றம் | மாநிலம் | தொகுதி | சட்டமன்ற உறுப்பினர் | கட்சி |
---|---|---|---|---|
P69 | N39 | பிளாஞ்சா | கைருடின் அபு ஹனிபா | பாரிசான் நேசனல் (அம்னோ) |
P69 | N40 | போத்தா | கைருல் ஷாரில் முகமட் | பாரிசான் நேசனல் (அம்னோ) |
P73 | N50 | கம்போங் காஜா | வான் நோர்சிக்கின் வான் நோர்டின் | பாரிசான் நேசனல் (அம்னோ) |
மேலும் காண்க
தொகுமேற்கோள்கள்
தொகு- ↑ "Laman Web Pejabat Daerah Dan Tanah Perak Tengah - Pegawai Daerah". pdtseriiskandar.perak.gov.my.
- ↑ "Malaysia Districts". Statoids.com.
- ↑ "Laman Web Pejabat Daerah Dan Tanah Perak Tengah - Statistik Daerah". pdtseriiskandar.perak.gov.my.
- ↑ மலேசியா 2010 மக்கள் தொகை புள்ளிவிவரங்கள்
வெளி இணைப்புகள்
தொகு- பொதுவகத்தில் Perak Tengah தொடர்பாக ஊடகக் கோப்புகள் உள்ளன.