கோலாலம்பூர் மருத்துவமனை

கோலாலம்பூர் மருத்துவமனை (மலாய்:Hospital Besar Kuala Lumpur; ஆங்கிலம்:Kuala Lumpur Hospital) (HKL) என்பது மலேசியாவின் தலைநகரான கோலாலம்பூரில் அமைந்துள்ள மிகப்பெரிய பொது மருத்துவமனை ஆகும். மலேசிய அரசாங்கத்திற்கு சொந்தமான இந்த மருத்துவமனை கோலாலம்பூர், பகாங் சாலையில் அமைந்துள்ளது. 1870-ஆம் ஆண்டில் நிறுவப்பட்டது.

கோலாலம்பூர் மருத்துவமனை
Kuala Lumpur Hospital
Hospital Besar Kuala Lumpur
Flag of Malaysia மலேசிய அரசு
கோலாலம்பூர் மருத்துவமனை
அமைவிடம் பகாங் சாலை, கோலாலம்பூர், மலேசியா
ஆள்கூறுகள் 3°10′17.2″N 101°42′06.5″E / 3.171444°N 101.701806°E / 3.171444; 101.701806
மருத்துவப்பணி பொது மருத்துவமனை
நிதி மூலதனம் மலேசிய அரசு
வகை முழு சேவை மருத்துவமனை மற்றும் & மருத்துவக் கல்லூரி
இணைப்புப் பல்கலைக்கழகம் பெர்தானா மருத்துவப் பல்கலைக்கழக பட்டதாரிகள் பள்ளி (PUGSOM),
துங்கு அப்துல் ரகுமான் பல்கலைக்கழகம்
அவசரப் பிரிவு 24 மணி நேர சேவை
படுக்கைகள் 2,722
நிறுவல் 1870[1]
வலைத்தளம் [www.hkl.gov.my
கோலாலம்பூர் மருத்துவமனை
Kuala Lumpur Hospital
Hospital Besar Kuala Lumpur]
பட்டியல்கள்
வேறு இணைப்புகள் போக்குவரத்து:  PY18  கோலாலம்பூர் மருத்துவமனை எம்ஆர்டி நிலையம்
(Hospital Kuala Lumpur MRT station)
 AG3   SP3   MR11   PY17 
தித்திவாங்சா நிலையம்
(Titiwangsa station)
 MR10  சௌக்கிட் இலகு தொடருந்து நிலையம் (Chow Kit Monorail station)

இலாப நோக்கற்ற நிறுவனமான கோலாலம்பூர் மருத்துவமனை; மலேசிய பொது சுகாதார அமைப்பின் முதன்மை மருத்துவமனையாக செயல்படுகிறது. அத்துடன் மருத்துவப் படிப்பிற்கான கற்பித்தல் மருத்துவமனையாகவும்; மற்றும் பிற மருத்துவமனைகளின் தலைமைப் பரிந்துரை மருத்துவமனையாகவும் செயல்படுகிறது.

இது 150 ஏக்கர் பிரதான நிலத்தில், 84 மருத்துவமனைக் கூடங்கள் (வார்டுகள்); மற்றும் 2,300 படுக்கைகள் கொண்ட வளாகத்தில் அமைந்துள்ளது. இது உலகின் மிகப்பெரிய மருத்துவமனைகளில் ஒன்றாகும். இந்த மருத்துவமனையில் உள்ள படுக்கைகளில் 90 விழுக்காட்டிற்கும் அதிகமானவை வசதி குறைந்த நோயாளிகளுக்கு ஒதுக்கப்பட்டுள்ளன; இது பன்னாட்டு அளவில் தரமான மலிவு மருத்துவ சிகிச்சைகளை வழங்கி வருகிறது.[2]

பொது

தொகு

புள்ளி விவரங்கள்

தொகு

கோலாலம்பூர் மருத்துவமனை 54 வெவ்வேறு மருத்துவத் துறைகள் மற்றும் மருத்துவப் பிரிவுகளைக் கொண்டுள்ளது.

  • 29 மருத்துவத் துறைகள்
  • 5 மருத்துவ ஆதரவு சேவைகள்
  • 11,000 பணியாளர்கள்
  • 2,300 மருத்துவ வல்லுநர்கள்
  • 300 மருத்துவர் நிபுணர்கள்
  • 1,300 மருத்துவர்கள்,
  • 72 தலைமைச்செவிலியர்கள்,
  • 253 மருத்துவக்கூட மேலாளர்கள்
  • 3,500 பதிவு செய்யப்பட்ட செவிலியர்கள்
  • 258 சமூகச் செவிலியர்கள்[3]

காட்சியகம்

தொகு

மேலும் காண்க

தொகு

மேற்கோள்கள்

தொகு
  1. "What a 'great dame' of a hospital". The Star (Malaysia). பார்க்கப்பட்ட நாள் 17 May 2016.
  2. "Off the Cuff - HKL ... our finest institution". The Sun (Malaysia). பார்க்கப்பட்ட நாள் 17 May 2016.
  3. "INTRODUCTION TO HKL". Ministry of Health, Malaysia. பார்க்கப்பட்ட நாள் 17 Oct 2016.

வெளி இணைப்புகள்

தொகு