புத்ராஜெயா மருத்துவமனை

புத்ராஜெயா மருத்துவமனை (மலாய்: Hospital Putrajaya (HPj); ஆங்கிலம்: Putrajaya Hospital) என்பது மலேசிய அரசாங்கத்திற்குச் சொந்தமான ஒரு பொது மருத்துவமனை ஆகும். இந்த மருத்துவமனை மத்திய கூட்டரசு அரசாங்கத்தின் புத்ராஜெயா நிர்வாகப் பகுதியில் உள்ளது.

புத்ராஜெயா மருத்துவமனை
Putrajaya Hospital
Hospital Putrajaya
மலேசிய அரசு
அமைவிடம் Pusat Pentadbiran Kerajaan Persekutuan, Presint 7, 62250
புத்ராஜெயா,
மலேசியாவின் கூட்டாட்சிப் பகுதிகள்,
 மலேசியா
மருத்துவப்பணி பொது மருத்துவமனை
வகை முழு சேவை மருத்துவமனை
இணைப்புப் பல்கலைக்கழகம் மலாயா பல்கலைக்கழகம்
மலேசிய புத்ரா பல்கலைக்கழகம்
அவசரப் பிரிவு 24 மணி நேரச் சேவை
படுக்கைகள் 369
நிறுவல் 1998
வலைத்தளம் புத்ராஜெயா மருத்துவமனை
Putrajaya Hospital
Hospital Putrajaya
பட்டியல்கள்

1998-ஆம் ஆண்டில் உருவாக்கப்பட்ட இந்த மருத்துவமனையில் 369 படுக்கைகள் உள்ளன. மலேசிய பல்லூடகப் பெருவழியில் (Multimedia Super Corridor) இந்த மருத்துவமனை அமைந்துள்ளதால், மருத்துவமனையை நிர்வகித்து பராமரிப்பதற்கு முழு மருத்துவமனை தகவல் அமைப்பும் (Full Hospital Information System) பயன்படுத்தப்படுகிறது. அந்த மருத்துவமனை தகவல் அமைப்பு; ’மொத்த மருத்துவமனை தகவல் அமைப்பு’ (Total Hospital Information System - T.H.I.S.) என்று அழைக்கப்படுகிறது.[1]

பொது

தொகு

புத்ராஜெயா மருத்துவமனை புத்ராஜெயா வளாகம் 7-இல் (Precinct 7, Putrajaya), 27.2 ஏக்கர்கள் (11.0 ha) பரப்பளவில் அமைந்துள்ளது. இந்த மருத்துவமனை முதன்முதலில் 1998-இல் RM 283 மில்லியன் செலவில் கட்டப்பட்டது. 2000 நவம்பர் 1-ஆம் தேதி தொடங்கி கட்டம் கட்டமாகப் பயன்பாட்டிற்கு கொண்டு வரப்பட்டது.

புத்ராஜெயா மருத்துவமனையில் முதலில் 278 படுக்கைகள் மட்டுமே இருந்தன. 2012-இல் 341 படுக்கைகளாக அதிகரிக்கப்பட்டது. சனவரி 2018-இல் வளாகம் 8-இல் (Precinct 8) ஒரு மகப்பேறு மையம் (Maternity Center) நிறுவப்பட்டதன் மூலம், இந்த மருத்துவமனை இப்போது 369 படுக்கைகளைக் கொண்டுள்ளது.[2]

எதிர்கால திட்டங்கள்

தொகு

புத்ராஜெயா மருத்துவமனையில் ஓர் உட்சுரப்பு மருத்துவ வளாகத்தை (Endocrine Extension) கட்டி முடிக்க, மலேசிய அரசாங்கம் பொறியியல் நிறுவனமான ஜார்ஜ் கென்ட் நிறுவனத்திற்கு (George Kent (M) Berhad) RM 364.9 மில்லியன் ஒப்பந்தத்தை வழங்கியுள்ளது.[3]

புத்ராஜெயா மருத்துவமனை என்பது இயக்குநீர் நோய்களுக்கான (Endocrine Diseases) மூன்றாம் நிலை பரிந்துரை மையமாகும் (Tertiary Referral Centre); அதில் நீரிழிவு மற்றும் இயக்குநீர் சமனின்மை (Hormonal Disorders) மருத்துவத் துறைகளும் அடங்கும்.[4]

மேற்கோள்கள்

தொகு
  1. "Putrajaya Hospital in keeping with its location within the Multimedia Super Corridor is being managed and run based on the Total Hospital Information System (T.H.I.S.)". www.hpj.gov.my. பார்க்கப்பட்ட நாள் 12 March 2023.
  2. "Laporan" (PDF). www.hpj.gov.my. Archived from the original (PDF) on 2020-12-05. பார்க்கப்பட்ட நாள் 2021-02-17.
  3. Wednesday, 21 Dec 2016 10:14 AM MYT. "RM365m endocrine extension for Putrajaya Hospital by 2020 | Malay Mail". www.malaymail.com.{{cite web}}: CS1 maint: numeric names: authors list (link)
  4. Hubbard, Johnathan; Inabnet, William B.; Lo, Chung-Yau (2009-10-14). Endocrine Surgery: Principles and Practice - Google Books. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 9781846288814. பார்க்கப்பட்ட நாள் 2021-02-17.

மேலும் காண்க

தொகு

* மலேசிய மருத்துவமனைகளின் பட்டியல்

வெளி இணைப்புகள்

தொகு

2°55′45″N 101°40′27″E / 2.9291°N 101.6742°E / 2.9291; 101.6742

"https://ta.wikipedia.org/w/index.php?title=புத்ராஜெயா_மருத்துவமனை&oldid=4097296" இலிருந்து மீள்விக்கப்பட்டது