பேராக் சுல்தான் அசுலான் சா

பேராக் 34-ஆவது சுல்தான்

ராஜா அசுலான் சா அல்லது பேராக் சுல்தான் ராஜா அசுலான் சா; (ஆங்கிலம்: Sultan Azlan Shah of Perak அல்லது Sultan Nazrin Muizzuddin Shah; மலாய்: Sultan Azlan Muhibbuddin Shah ibni Almarhum Sultan Yussuff Izzuddin Shah Ghafarullahu-lah); (பிறப்பு: 19 ஏப்ரல் 1928; இறப்பு: 28 மே 2014) என்பவர் 1984 முதல் 2014-இல் அவர் இறக்கும் வரையில் பேராக் மாநிலத்தின் 34-ஆவது சுல்தான் ஆவார். அத்துடன் 1989-ஆம் ஆண்டில் இருந்து 1994-ஆம் ஆண்டு வரை மலேசியாவின் 9-ஆவது பேரரசராகவும் பதவி வகித்தவர் ஆகும்.[1]

ராஜா அசுலான் சா
Sultan Azlan Muizzuddin Shah
Azlan Shah of Perak
سلطان عزلن محب الدين شاه‎
மலேசியாவின் 9-ஆவது பேரரசர்
2008-இல் அசுலான் சா
மலேசியாவின் பேரரசர்
ஆட்சிக்காலம்26 ஏப்ரல் 1989 - 25 ஏப்ரல் 1994
மலேசியா18 செப்டம்பர் 1989
முன்னையவர்ஜொகூர் சுல்தான் இசுகந்தர்
(Sultan Iskandar of Johor)
பின்னையவர்நெகிரி செம்பிலான் சுல்தான் ஜாபார்
(Sultan Ja'afar of Negeri Sembilan)
மலேசியப் பிரதமர்மகாதீர் பின் முகமது
பேராக் சுல்தான்
ஆட்சிக்காலம்3 பிப்ரவரி 1984 - 28 மே 2014
முடிசூட்டு9 டிசம்பர் 1985
முன்னையவர்பேராக் சுல்தான் இட்ரிசு சா
பின்னையவர்பேராக் சுல்தான் நசுரின் சா
பேராக் மந்திரி பெசார்
மலேசிய உச்ச நீதிமன்றத்தின்
தலைமை நீதிபதி
பேராக் சுல்தான் அசுலான் சா
பதவியில்
12 நவம்பர் 1982 – 2 பிப்ரவரி 1984
பரிந்துரைப்புமகாதீர் பின் முகமது
நியமிப்புபகாங் சுல்தான் அகமது சா
முன்னையவர்முகமட் சுபியான் முகமட் அசிம்
பின்னவர்சாலே அபாஸ்
பிறப்பு(1928-04-19)19 ஏப்ரல் 1928
கம்போங் மாங்கிஸ், பத்து காஜா, மலாயா கூட்டமைப்பு மாநிலங்கள்
இறப்பு28 மே 2014(2014-05-28) (அகவை 86)
தேசிய இருதய மருத்துவமனை, கோலாலம்பூர், மலேசியா
புதைத்த இடம்29 மே 2014
துணைவர்பேரசியார் துவாங்கு பைனுன் (1955)
குழந்தைகளின்
பெயர்கள்
பேராக் சுல்தான் நசுரின் சா
ராஜா அசுரின்
ராஜா அசுமான் சா
ராஜா எலீனா
ராஜா யோங் சோபியா
பெயர்கள்
ராஜா யூசுப் ஷா ராஜா அசுலான் சா
பட்டப் பெயர்
(Sultan Azlan Muhibbuddin Shah ibni Almarhum Sultan Yussuff Izzuddin Shah Ghafarullahu-lah)
மறைவுக்குப் பிந்தைய பெயர்
(Almarhum Sultan Azlan Muhibbuddin Shah Al-Maghfur-Lah ibni Almarhum Sultan Yussuff Izzuddin Shah Ghafarullahu-lah)
மரபுசியாக் பேராக்
(House of Siak-Perak)
தந்தைபேராக் சுல்தான் யூசுப் இசுடின் சா
தாய்தோ புவான் பெசார் அதிஜா
மதம்இசுலாம்
பேராக் சுல்தான் அசுலான் சா
தனிப்பட்ட விவரங்கள்
கல்விகோலாகங்சார் அரச மலாய் கல்லூரி
முன்னாள் கல்லூரிநாட்டிங்காம் பல்கலைக்கழகம் (இளங்கலைச் சட்டம்)
வேலைவழக்கறிஞர், நீதிபதி
இணையத்தளம்Galeri Sultan Azlan Shah

மலாயா கூட்டமைப்பு மாநிலங்கள் எனும் முந்தைய மலாயாவின் பேராக், பத்து காஜா, கம்போங் மாங்கிஸ் கிராமத்தில் 1928 ஏப்ரல் 19-ஆம் தேதி பிறந்தவர். தம்முடைய 86-ஆவது வயதில், 2014 மே 28-ஆம் தேதி கோலாலம்பூர், மலேசிய தேசிய இருதய மருத்துவமனையில் காலமானார்.

கல்வி வாழ்க்கை

தொகு

ராஜா அசுலான் சா, தம்முடைய தொடக்கக் கல்வியை பத்து காஜாவில் உள்ள அரசு ஆங்கிலப் பள்ளியிலும், கோலாகங்சார் அரச மலாய் கல்லூரியிலும் பெற்றார். பள்ளியில் படிக்கும் போது அவர் வளைதடிப் பந்தாட்டம் விளையாடில் சிறந்து விளங்கினார். அதன் காரணமாக பேராக் மாநில அணிக்காகவும் தேர்வு செய்யப்பட்டார்.[2]

அதன் பின்னர் இங்கிலாந்தின் நாட்டிங்காம் பல்கலைக்கழகத்தில் (University of Nottingham) சட்டடததுறையில் (இளங்கலைச் சட்டம்) பட்டம் பெற்றார். மலேசியாவுக்குத் திரும்பியதும், அவருக்கு பேராக் மாநில துணைச் செயலாளர் பதவி (Assistant State Secretary of Perak) வழங்கப்பட்டது. பின்னர் அவர் மலாயா கூட்டமைப்பின் நீதித்துறை மற்றும் சட்ட சேவையில் (Judicial and Legal Service of the Federation of Malaya) சேர்ந்தார். பின்னர் குற்றவியல் அமர்வு நீதிமன்றத்தின் (President of the Sessions Court) தலைவரானார்.

அதன் பின்னர் சட்ட ஆலோசகராகவும் (Federal Counsel), துணை அரசு வழக்கறிஞராகவும், பகாங் மாநிலத்தின் சட்ட ஆலோசகராகவும் (Legal Adviser of the State of Pahang), மலாயா உயர் நீதிமன்றத்தின் பதிவாளராகவும் (Registrar of the High Court of Malaya), மலேசிய கூட்டரசு நீதிமன்றத்தின் தலைமைப் பதிவாளராகவும் (Chief Registrar of the Federal Court of Malaysia) பணியாற்றினார்.[3] அவரின் சட்டத் திறமைகளினால் விரைவில் நீதிபதியானார்; சட்டப்பூர்வத் தரவரிசையில் விரைவாகவும் உயர்ந்தார்.

1965-இல், அவர் மலேசிய உயர் நீதிமன்றத்தில் (High court Malaysia) நீதிபதியாக நியமிக்கப்பட்டார். மலேசியாவில் மிக இளைய வயதில், மலேசிய உயர் நீதிமன்றத்தில் நீதிபதியானவர்களில் இவரும் ஒருவராகும். 1973-இல் கூட்டரசு நீதிமன்றத்தின் (Federal Court of Malaysia) நீதிபதியாக நியமிக்கப்பட்டார். 1979-இல், அவர் மலாயா உயர் நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாக (Chief Justice of the High Court of Malaya) நியமிக்கப்பட்டார்.

1982-இல் அவர் நாட்டின் மிக உயர்ந்த நீதித்துறை பதவியான மலேசிய உச்ச நீதிமன்றத்தின் தலைமை நீதிபதி (Lord President of the Federal Court) ஆனார். இந்த தலைமை நீதிபதி 1994-இல் ’கூட்டரசு நீதிமன்றத்தின் தலைமை நீதிபதி’ ("Chief Justice of the Federal Court") என மறுபெயரிடப்பட்டது.[3]

பேராக் சுல்தான் பதவி

தொகு

1962 ஆகஸ்டு 19-ஆம் தேதி, அசுலான் சா அவர்களின் தந்தையார் அசுலான் சா அவர்களை ராஜா கெச்சில் பொங்சுவாக (Raja Kechil Bongsu) நியமித்ததில் இருந்து பேராக் சுல்தான் ஆவதற்கான அவரின் பயணம் தொடங்கியது. பின்னர் அவர் ராஜா கெச்சில் தெங்கா (Raja Kechil Tengah) என்ற பதவிக்கு முன்னேறினார்.

பின்னர் சனவரி 1, 1978-இல், ராஜா கெச்சில் சுலோங் (Raja Kechil Sulung) பதவி; ஆகஸ்டு 1-ஆம் தேதி ராஜா கெச்சில் பெசார் (Raja Kechil Besar) பதவி; 1 ஜூலை 1983-இல் ராஜா மூடா பேராக் (Raja Muda Perak) பதவி என படிப்படியாக பதவிகள் உயர்த்தப்பட்டார்.

பேராக் சுல்தான் இட்ரிசு சா

தொகு

பேராக் சுல்தான் இட்ரிசு சாவின் நீண்டகால ஆட்சியின் போது, ராஜா அசுலான் சாவின் மூத்த சகோதரர்களில் பெரும்பாலோர் இறந்துவிட்டனர். ராஜா அசுலான் சாவின் ஒரே மூத்த சகோதரர், ராஜா பகரோம் சா (Raja Baharom Shah), பட்டத்து இளவரசரின் பதவியை மறுத்துவிட்டார். அதன் காரணமாக ராஜா அசுலான் சா அரியணைக்கு வாரிசானார்.

1984-இல் பேராக் சுல்தான் இட்ரிசு சா காலமானார். அதன் பிறகு ராஜா அசுலான் சா பேராக் சுல்தான் பதவியில் அமர்த்தப்பட்டார். அதைத் தொடர்ந்து, அவர் 1989-இல் மலேசியாவின் மலேசியாவின் 9-ஆவது பேரரசராக தேர்ந்தெடுக்கப்பட்டார். 5 ஆண்டு காலம் பேரரசராகப் பதவி வகித்த பின்னர் மீண்டும் பேராக் சுல்தான் பதவிக்கு திரும்பினார். சுல்தான் ராஜா அசுலான் சா மொத்தம் 30 ஆண்டுகள் 114 நாட்கள் பேராக் மாநிலத்தை ஆட்சி செய்தார். இது ஒரு மிக நீண்ட ஆட்சியாக அறியப்படுகிறது.

பேராக் அரசியல் சாசன நெருக்கடி 2009

தொகு
 
பேராக் மாநில சட்டமன்றம்

பேராக் அரசியல் சாசன நெருக்கடி 2009 (ஆங்கிலம்: 2009 Perak Constitutional Crisis; மலாய்: Krisis Perlembagaan Perak 2009); என்பது 2009-ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் மலேசியாவின், பேராக் மாநில அரசாங்கத்தைச் சட்டபூர்வமாக ஆட்சி செய்வதில் ஏற்பட்ட அரசியல் நெருக்கடியை குறிப்பதாகும்.

2008-ஆம் ஆண்டு மலேசியப் பொதுத் தேர்தலுக்கு பின், பேராக் மாநிலத்தை ஆட்சி செய்து வந்த மக்கள் கூட்டணியைச் சேர்ந்த மூன்று மாநில சட்டமன்ற உறுப்பினர்கள் கட்சி மாறிச் சென்றனர்[4] அதனால், மாநில ஆட்சி உடைந்தது. அதன் பின்னர், சில மாதங்கள் கழித்து மாலிம் நாவார் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் கேஷ்விந்தர் சிங் என்பவரும் கட்சி மாறினார்.

மாநில அரசாங்க சட்ட உரிமைநிலை

தொகு

பேராக் மாநில சட்டமன்றம் கலைக்கப்பட்டு, புதிய தேர்தல் நடத்தப்பட வேண்டும் எனும் பேராக் மந்திரி பெசார் முகமது நிசார் சமாலுதீன் கோரிக்கை வைத்தார். அதை பேராக் சுல்தான் பேராக் சுல்தான் அசுலான் சா நிராகரித்தார். அதற்குப் பதிலாக, கட்சி தாவல் செய்த மூன்று சட்டமன்ற உறுப்பினர்களையும் இணைத்துக் கொண்டு தேசிய முன்னணி புதிய மாநில அரசாங்கத்தை அமைத்தது.[5]

தேசிய முன்னணியின் மாநில அரசாங்க சட்ட உரிமைநிலை பற்றியும், பேராக் மாநில சட்டமன்றம் கலைக்கப்படுவதை பேராக் சுல்தான் அசுலான் சா தவிர்த்ததைப் பற்றியும், மக்கள் கூட்டணியின் அரசியல்வாதிகள் மிகக் கடுமையாக விமர்சனம் செய்தனர். முகமது நிசார் ஜமாலுடினுக்கும் புதிய முதலமைச்சர் சாம்ரி அப்துல் காதிருக்கும் இடையே அரசியல் முரண்பாடுகள் ஏற்பட்டன.[6]

இறுதியில், 2010 பிப்ரவரி மாதம், சாம்ரி அப்துல் காதர்தான் சட்டப்படியான முதலமைச்சர் என்று மலேசிய மேல்முறையீட்டு நீதிமன்றம் அறிவித்தது. 2009-இல், பேராக் மாநில சட்டமன்றம் கலைக்கப் படுவதைத் தடுக்க ராஜா அசுலான் சா தம்முடைய அரச அதிகாரத்தைப் பயன்படுத்தினார். இதுவே 2009-ஆம் ஆண்டு பேராக் அரசியல் நெருக்கடிக்கு காரணமானது. இறுதியில், சட்ட அமைப்பின்படி சுல்தான் அசுலான் சா முறையாகச் செயல்பட்டார் என முடிவு செய்யப்பட்டது.[7]

மலேசிய வளைதடி பந்தாட்டத்தின் தந்தை

தொகு

தொழில் வாழ்க்கையில், சுல்தான் அசுலான் சா பல மலேசிய மற்றும் வெளிநாட்டு கௌரவங்களைப் பெற்றுள்ளார். பூச்சிகளின் பெயர்கள் உட்பட பல கட்டிடங்கள் மற்றும் திட்டங்களுக்கும் அவரின் பெயர் சூட்டப்பட்டு உள்ளது.

உள்நாட்டிலும் வெளிநாட்டிலும் வளைதடி பந்தாட்ட விளையாட்டை மேம்படுத்தியதற்காக அவர் ’மலேசிய வளைதடிப் பந்தாட்டத்தின் தந்தை’ என்று அழைக்கப்படுகிறார். அவர் பல அமைப்புகளின் புரவலராகவும் இருந்தார். சுல்தான் அசுலானுக்கும் அவரின் மனைவி துவாங்கு பைனுன் பிந்தி முகமது அலிக்கும் ஐந்து பிள்ளைகள் உள்ளனர்.[8].[9]

இறப்பு

தொகு

சுல்தான் அசுலான் சா, தம்முடைய 86 வயதில், 28 மே 2014 மதியம் 1:30 மணிக்கு கோலாலம்பூர், மலேசிய தேசிய இருதய மருத்துவமனையில் காலமானார். அவரின் இறப்பிற்குப் பின், மர்கும் அல்-மக் புர்-லா (Marhum Al-Maghfur-Lah) என்று அவருக்கு பெயரிடப்பட்டது. பேராக், கோலாகங்சார் உபுடியா மசூதியில் (|) உள்ள அல்-குப்ரான் அரச கல்லறையில் (Al-Ghufran Royal Mausoleum), முந்தைய ஆட்சியாளர் சுல்தான் இட்ரிசு சாவின் கல்லறைக்கு அடுத்ததாக அவர் அடக்கம் செய்யப்பட்டார். புதிய சுல்தானின் பிரகடனம் மே 29 அன்று அறிவிக்கப்பட்டது.[10]

சுல்தான் அசுலான் சா இறப்பிற்குப் பிறகு, பேராக் மாநிலத்தில் 29 மே 2014 அன்று பொது விடுமுறை அறிவிக்கப்பட்டது. பேராக் மந்திரி பெசார் டத்தோஸ்ரீ சாம்ரி அப்துல் காதர் மலேசியக் கொடி 7 நாட்களுக்கும்; பேராக் மாநிலக் கொடி 100 நாட்களுக்கும்; அரைக் கம்பத்தில் பறக்கவிடப்படும் என்று அறிவித்தார். அத்துடன், மறைந்த சுல்தானுக்கு மரியாதை செய்யும் வகையில் மாநிலத்தின் அனைத்து பொழுதுபோக்கு நிகழ்வுகள் மற்றும் கொண்டாட்டங்கள் தடை செய்யப்பட்டன.[6]

அங்கீகாரங்கள்

தொகு

விருதுகள்

தொகு

பேராக் விருதுகள்

தொகு

மலேசிய விருதுகள்

தொகு

மலேசிய மாநிலங்கள் விருதுகள்

தொகு

பன்னாட்டு விருதுகள்

தொகு

சிறப்புகள்

தொகு

1982-ஆம் ஆண்டு பேராக் உள்நாட்டு சுற்றுலா கண்காட்சியில், சிறந்த தாவர விருதை வென்ற ஆர்க்கிட் மலருக்கு, டோரிடினோப்சி சுல்தான் அசுலான் சா என்று பெயரிடப்பட்டது. மலேசிய இயற்கை கழகத்தால் இவரின் நினைவாக அசுலானியா என்ற பூச்சி இனம் பெயரிடப்பட்டது.[3]

மலேசிய பேரரசர்கள் பட்டியல்

தொகு

பின்வரும் ஆட்சியாளர்கள் யாங் டி பெர்துவான் அகோங் எனும் பேரரசராகப் பணியாற்றி உள்ளனர்:[16]

# படிமம் பெயர் நிலை ஆட்சி பிறப்பு இறப்பு ஆட்சியின் காலம்
1   நெகிரி துவாங்கு அப்துல் ரகுமான்   நெகிரி செம்பிலான் 31 ஆகஸ்டு 1957 – 1 ஏப்ரல் 1960 (1895-08-24)24 ஆகத்து 1895 1 ஏப்ரல் 1960(1960-04-01) (அகவை 64) 2 ஆண்டுகள், 214 நாட்கள்
2   சிலாங்கூர் சுல்தான் இசாமுடின்   சிலாங்கூர் 14 ஏப்ரல் 1960 – 1 செப்டம்பர் 1960 (1898-05-13)13 மே 1898 1 செப்டம்பர் 1960(1960-09-01) (அகவை 62) 0 ஆண்டுகள், 140 நாட்கள்
3   பெர்லிஸ் இராஜா புத்ரா   பெர்லிஸ் 21 செப்டம்பர்1960 – 20 செப்டம்பர் 1965 (1920-11-25)25 நவம்பர் 1920 16 ஏப்ரல் 2000(2000-04-16) (அகவை 79) 4 ஆண்டுகள், 364 நாட்கள்
4   திராங்கானு சுல்தான் இசுமாயில் நசிருதீன்   திராங்கானு 21 செப்டம்பர் 1965 – 20 செப்டம்பர் 1970 (1907-01-24)24 சனவரி 1907 20 செப்டம்பர் 1979(1979-09-20) (அகவை 72) 4 ஆண்டுகள், 364 நாட்கள்
5   கெடா சுலதான் அப்துல் ஆலிம்
1-ஆம் தவணை
  கெடா 21 செப்டம்பர் 1970  – 20 செப்டம்பர் 1975 (1927-11-28)28 நவம்பர் 1927 11 செப்டம்பர் 2017(2017-09-11) (அகவை 89) 4 ஆண்டுகள், 364 நாட்கள்
6   கிளாந்தான் சுல்தான் யாகயா பெத்ரா   கிளாந்தான் 21 செப்டம்பர் 1975 – 29 மார்ச் 1979 (1917-12-10)10 திசம்பர் 1917 29 மார்ச்சு 1979(1979-03-29) (அகவை 61) 3 ஆண்டுகள், 189 நாட்கள்
7   பகாங் சுல்தான் அகமட் சா   பகாங் 26 ஏப்ரல் 1979 – 25 ஏப்ரல் 1984 (1930-10-24)24 அக்டோபர் 1930 22 மே 2019(2019-05-22) (அகவை 88) 4 ஆண்டுகள், 365 நாட்கள்
8   ஜொகூர் சுல்தான் இசுகந்தர்   ஜொகூர் 26 ஏப்ரல் 1984 – 25 ஏப்ரல் 1989 (1932-04-08)8 ஏப்ரல் 1932 22 சனவரி 2010(2010-01-22) (அகவை 77) 4 ஆண்டுகள், 364 நாட்கள்
9   பேராக் சுல்தான் அசுலான் சா   பேராக் 26 ஏப்ரல் 1989 – 25 ஏப்ரல் 1994 (1928-04-19)19 ஏப்ரல் 1928 28 மே 2014(2014-05-28) (அகவை 86) 4 ஆண்டுகள், 364 நாட்கள்
10   நெகிரி செம்பிலான் துவாங்கு சாபார்   நெகிரி செம்பிலான் 26 ஏப்ரல் 1994 – 25 ஏப்ரல் 1999 (1922-07-19)19 சூலை 1922 27 திசம்பர் 2008(2008-12-27) (அகவை 86) 4 ஆண்டுகள், 364 நாட்கள்
11   சிலாங்கூர் சுல்தான் சலாவுடின்   சிலாங்கூர் 26 ஏப்ரல் 1999 – 21 நவம்பர் 2001 (1926-03-08)8 மார்ச்சு 1926 21 நவம்பர் 2001(2001-11-21) (அகவை 75) 2 ஆண்டுகள், 209 நாட்கள்
12   பெர்லிஸ் இராஜா சிராஜுதீன்   பெர்லிஸ் 13 டிசம்பர் 2001 – 12 டிசம்பர் 2006 17 மே 1943 (1943-05-17) (அகவை 81) 4 ஆண்டுகள், 364 நாட்கள்
13   திராங்கானு சுல்தான் மிசான் சைனல்   திராங்கானு 13 டிசம்பர் 2006 – 12 டிசம்பர் 2011 22 சனவரி 1962 (1962-01-22) (அகவை 62) 4 ஆண்டுகள், 364 நாட்கள்
14   கெடா சுலதான் அப்துல் ஆலிம்
2-ஆம் தவணை
  கெடா 13 டிசம்பர் 2011 – 12 டிசம்பர் 2016 (1927-11-28)28 நவம்பர் 1927 11 செப்டம்பர் 2017(2017-09-11) (அகவை 89) 4 ஆண்டுகள், 365 நாட்கள்
15   கிளாந்தான் சுல்தான் ஐந்தாம் முகமது   கிளாந்தான் 13 டிசம்பர் 2016 – 6 சனவரி 2019 6 அக்டோபர் 1969 (1969-10-06) (அகவை 55) 2 ஆண்டுகள், 24 நாட்கள்
16   பகாங் சுல்தான் அப்துல்லா   பகாங் 31 சனவரி 2019 – 30 சனவரி 2024 30 சூலை 1959 (1959-07-30) (அகவை 65) 5 ஆண்டுகள், 328 நாட்கள்
17   சுல்தான் இப்ராகிம் இசுகந்தர்   ஜொகூர் 31 சனவரி 2024  முதல் 0 ஆண்டுகள், 328 நாட்கள் 22 நவம்பர் 1958 (1958-11-22) (அகவை 66)

மேற்கோள்

தொகு
  1. "His Royal Highness Sultan Azlan Shah - King of Malaysia, Sultan of the State of Perak, Lord President of the Federal Court (now renamed Chief Justice of Malaysia), Chief Justice of the High Court of Malaya: These are the high constitutional positions which His Royal Highness Sultan Azlan Shah held". www.sultanazlanshah.com. பார்க்கப்பட்ட நாள் 25 January 2024.
  2. "Sultan Azlan Shah of Perak dies, aged 86". The Nation. 29 May 2014. பார்க்கப்பட்ட நாள் 29 May 2014.
  3. 3.00 3.01 3.02 3.03 3.04 3.05 3.06 3.07 3.08 3.09 3.10 3.11 3.12 3.13 3.14 3.15 3.16 3.17 3.18 3.19 3.20 3.21 3.22 3.23 "His Royal Highess Sultan Perak Darul Ridzuan". Official Website Pejabat D.Y.M.M. Sultan Perak Darul Ridzuan. Archived from the original on 18 March 2014. பார்க்கப்பட்ட நாள் 4 December 2010.
  4. Three played a vital role in destabilising the elected Pakatan state government into falling into the hands of BN.
  5. Machiavellian and well-executed move that was the coup-de-grace that toppled Perak.
  6. 6.0 6.1 "Sultan Azlan Shah of Perak dies, aged 86". Malay Mail. 28 May 2014. பார்க்கப்பட்ட நாள் 29 May 2014.
  7. the suspicious "pre-emptive move" by Judge Dato Abdul Aziz and rumours on the credibility of the presiding judges, the Court of Appeal considered the whole issue presented and decided unanimously for Zambry.
  8. "Hockey pioneer Sultan Azlan Shah dies aged 86". Firstpost. PTI. 28 May 2014. http://www.firstpost.com/sports/hockey-pioneer-sultan-azlan-shah-dies-aged-86-1546997.html. 
  9. "International Hockey Federation : Executive Board". Fih.ch. பார்க்கப்பட்ட நாள் 4 December 2010.
  10. "New Sultan of Perak to be proclaimed tomorrow". The Star. 28 May 2014. பார்க்கப்பட்ட நாள் 29 May 2014.
  11. "Senarai Penuh Penerima Darjah Kebesaran, Bintang dan Pingat Persekutuan Tahun 1983" (PDF).
  12. "Senarai Penuh Penerima Darjah Kebesaran, Bintang dan Pingat Persekutuan Tahun 1987" (PDF).
  13. "彭摄政王表示当局 检讨囘敎行政法案加强州回敎事务工作". Sin Chew Jit Poh: pp. 6. 25 October 1980. https://eresources.nlb.gov.sg/newspapers/digitised/article/scjp19801025-1.2.14.7. 
  14. 14.0 14.1 List of Malay rulers (as of January 2013) with details of orders
  15. "DK I 1985". awards.selangor.gov.
  16. "List of His Majesty the Yang Di-Pertuan Agong". www.parlimen.gov.my.

நூல்கள்

தொகு

மேலும் காண்க

தொகு

வெளி இணைப்புகள்

தொகு