பெர்லிஸ் சிராஜுதீன்
பெர்லிஸ் சிராஜுதீன் அல்லது பெர்லிஸ் இராஜா சையத் சிராஜுதீன்; (ஆங்கிலம்: Sirajuddin of Perlis அல்லது Tuanku Syed Sirajuddin Tuanku Syed Putra Jamalullail; மலாய்: Tuanku Syed Sirajuddin ibni Almarhum Tuanku Syed Putra Jamalullail); (பிறப்பு: 17 மே 1943) என்பவர் 2000-ஆம் ஆண்டில் இருந்து பெர்லிஸ் இராஜா பதவியை வகிப்பவர் ஆவார்.
பெர்லிஸ் சிராஜுதீன் Sirajuddin of Perlis سراج الدين பெர்லிஸ் | |||||||||
---|---|---|---|---|---|---|---|---|---|
பெர்லிஸ் இராஜா | |||||||||
2018-இல் பெர்லிஸ் இராஜா சிராஜுதீன் | |||||||||
12-ஆவது மலேசிய மாமன்னர்[சான்று தேவை] | |||||||||
ஆட்சிக்காலம் | 13 திசம்பர் 2001 – 12 திசம்பர் 2006 | ||||||||
மலேசியா | 25 ஏப்ரல் 2002 | ||||||||
முன்னையவர் | சிலாங்கூர் சுல்தான் சலாவுதீன் | ||||||||
பின்னையவர் | திராங்கானு சுல்தான் மிசான் சைனல் ஆபிதீன் | ||||||||
பெர்லிஸ் இராஜா | |||||||||
ஆட்சிக்காலம் | 17 ஏப்ரல் 2000 – தற்போது | ||||||||
நிறுவல் | 7 மே 2001 | ||||||||
முன்னையவர் | புத்ரா | ||||||||
பிறப்பு | 17 மே 1943 ஆராவ், பெர்லிஸ், மலேசியா | ||||||||
துணைவர் | பெர்லிஸ் அரசியார் பவுசியா (தி. 1967) | ||||||||
| |||||||||
மரபு | சமாலுலாயில் அரச குடும்பம் | ||||||||
தந்தை | பெர்லிஸ் இராஜா துவாங்கு சையத் புத்ரா | ||||||||
தாய் | தெங்கு புட்ரியா தெங்கு இசுமாயில் | ||||||||
மதம் | இசுலாம் |
அத்துடன் 2001-ஆம் ஆண்டில் இருந்து 2006-ஆம் ஆண்டு வரை மலேசியாவின் 12-ஆவது பேரரசராகவும்[சான்று தேவை] பதவி வகித்தவர் ஆகும்.
பெர்லிஸ் இராஜா
தொகுதுவாங்கு சையத் சிராஜுதீன், 1943-ஆம் ஆண்டில் பெர்லிஸ், ஆராவ் அரச நகரில் பிறந்தார். அவர் ஆராவ் மலாய் பள்ளியில் இரண்டாம் வகுப்பு வரை படித்தார். பின்னர் 5 சனவரி 1950 முதல் பினாங்கில் உள்ள வெல்லசுலி தொடக்கப் பள்ளியில் (Wellesley Primary School) தன் ஆரம்பக் கல்வியைத் தொடர்ந்தார். அதைத் தொடர்ந்து 1955-ஆம் ஆண்டின் இறுதி வரை வெசுட்லேண்ட் தொடக்கப் பள்ளியில் (Westland Primary School) தன் படிப்பைத்தொடர்ந்தார்.
அதன் பின்னர் இவர் தன் இடைநிலைக் கல்வியை பினாங்கு பிரி ஸ்கூல் பள்ளியில் (Penang Free School) தொடங்கினார். 9 சனவரி 1956 தொடங்கி 1963 வரை நான்கு ஆண்டுகள் வெலிங்பரோ பள்ளியில் படிக்க இங்கிலாந்துக்குச் சென்றார். சனவரி 1964 முதல் டிசம்பர் 1965 வரை இங்கிலாந்தின் சாண்ட்ஹர்ஸ்ட் அரச இராணுவக் கல்லூரியில் ஒரு பயிற்சி அதிகாரியாகப் பயிற்சி பெற்றார்.
தொடக்கக் கால வாழ்க்கை
தொகுஇங்கிலாந்தில் இருந்து திரும்பியதும், மலேசிய தற்காப்பு அமைச்சில் பணியாற்றினார். 1965-ஆம் ஆண்டு டிசம்பர் 12 ஆம் தேதி மலேசிய உளவுப் படையின் 2-ஆவது படைப்பிரிவில் இரண்டாவது லெப்டினன்ட் அதிகாரியாக அவரின் முதல் பதவி இருந்தது.
1966-இல், அவர் சபாவிற்கு அனுப்பப்பட்டார். பின்னர் 1967-இல் சரவாக்கிற்கு மாற்றப்பட்டார். அதன் பின்னர் இரண்டு ஆண்டுகள் பகாங்கில் பணியாற்றினார். 1969-இல் பெர்லிஸ் மாநிலத்திற்கு மாற்றப்பட்டு டிசம்பர் 1967-இல் லெப்டினன்ட் பதவிக்கு உயர்த்தப்பட்டார். தற்போது, பெர்லிஸ் இராணுவ சேமப் பிரிவின் 504-ஆவது படைப்பிரிவின் உயர் அதிகாரியாக உள்ளார்.
வாழ்க்கை வரலாறு
தொகுஅக்டோபர் 1960-இல், அவர் மாணவராக இருக்கும்போதே பெர்லிஸ் மாநிலத்தின் ராஜா மூடா எனும் மகுட இளவரசராக நியமிக்கப்பட்டார். 1945-ஆம் ஆண்டு முதல் பெர்லிஸ் இராஜாவாக இருந்த அவரின் தந்தை துவாங்கு சையத் புத்ரா இப்னி அல்மர்கும் சையத் அசன் சமாலுல்லைல் இறந்த மறுநாள், 17 ஏப்ரல் 2000 அன்று, பெர்லிஸ் மாநிலத்தின் பன்னிரண்டாவது ஆட்சியாளராக நியமிக்கப்பட்டார்.
சமூகப் பங்களிப்புகள்
தொகுஇவர் தன் மக்கள் மீதான அர்ப்பணிப்பிற்காகப் புகழ் பெற்றவர்; மற்றும் கல்வியில் மிகுந்த ஆர்வம் கொண்டவர். 1986-இல், இவரின் பெயரில் துவாங்கு சையத் புத்ரா அறக்கட்டளை நிறுவப்பட்டதன் மூலம், பெர்லிஸ் மாணவர்கள் பலர் உள்நாட்டிலும் வெளிநாட்டிலும் தங்கள் படிப்பைத் தொடர முடிந்தது. இவர் இந்த அறக்கட்டளையின் தலைவராக உள்ளார்.
விருதுகள்
தொகுபெர்லிஸ் சமலுலாயில் விருதுகள்
தொகுபெர்லிஸ் :
மலேசிய விருதுகள்
தொகு- மலேசியா (மலேசிய பேரரசர்) :
- (DKM) (2002) - Order of the Royal House of Malaysia| (DKM) (2001)
- Order of the Crown of the Realm : (DMN) (2001) - (2006)
- - Order of the Defender of the Realm (SMN) (2001 – 2006)
- - Order of Loyalty to the Crown of Malaysia (SSM) (2001 – 2006)
- - Order of Merit of Malaysia (DB) (2001 – 2006)
- - (PJN) (2001 – 2006)
- - (PSD) (2001 – 2006)
- Malaysian Service Medal (PJM) (2009)
மலேசிய மாநிலங்கள் விருதுகள்
தொகு- ஜொகூர் :
- - Order of the Crown of Johor (SPMJ) – Dato'
- கெடா :
- - Royal Family Order of Kedah (DK) (2002)
- கிளாந்தான் :
- நெகிரி செம்பிலான் :
- பகாங் :
- - Family Order of the Crown of Indra of Pahang (DK I) (2005)
- பேராக் :
- - Royal Family Order of Perak (DK)
- (SPCM) – Dato' Seri
- சிலாங்கூர் :
- - Royal Family Order of Selangor (DK I) (2002)
- திராங்கானு :
- - Family Order of Terengganu (DK II)
- - Order of Sultan Mahmud I of Terengganu (SSMT) – Dato' Seri (1998)
பன்னாட்டு விருதுகள்
தொகு- புரூணை : - Royal Family Order of the Crown of Brunei (DKMB) (2002)
- கம்போடியா :
- Grand Collar of the National Order of Independence (2002)
- Grand Cross of the Royal Order of Cambodia (2002)
- குரோவாசியா : - Grand Order of King Tomislav
- பிரான்சு : - National Order of the Legion of Honour (2004)
- பின்லாந்து : - Order of the White Rose of Finland (2005)
- இத்தாலி : - Order of Merit of the Italian Republic (9 June 2003)[1]
- சப்பான் :
- Order of the Chrysanthemum (2005)
- Order of the Sacred Treasure (1970)
- சவூதி அரேபியா : Collar of Badr Chain
- சிங்கப்பூர் : - Order of Temasek (DUT) (2005)
- சுவீடன் : - Royal Order of the Seraphim (2005)
- சிரியா : - Order of Umayyad (2004)
பேரரசர்கள் பட்டியல்
தொகுபின்வரும் ஆட்சியாளர்கள் யாங் டி பெர்துவான் அகோங்காகப் பணியாற்றி உள்ளனர்:
# | படிமம் | பெயர் | நிலை | ஆட்சி | பிறப்பு | இறப்பு | ஆட்சியின் காலம் |
---|---|---|---|---|---|---|---|
1 | துவாங்கு அப்துல் ரகுமான் | நெகிரி செம்பிலான் | 31 ஆகஸ்டு 1957 – 1 ஏப்ரல் 1960 | 24 ஆகத்து 1895 | 1 ஏப்ரல் 1960 | (அகவை 64)2 ஆண்டுகள், 214 நாட்கள் | |
2 | சுல்தான் இசாமுடின் ஆலாம் ஷா | சிலாங்கூர் | 14 ஏப்ரல் 1960 – 1 செப்டம்பர் 1960 | 13 மே 1898 | 1 செப்டம்பர் 1960 | (அகவை 62)0 ஆண்டுகள், 140 நாட்கள் | |
3 | துவாங்கு சையத் புத்ரா | பெர்லிஸ் | 21 செப்டம்பர்1960 – 20 செப்டம்பர் 1965 | 25 நவம்பர் 1920 | 16 ஏப்ரல் 2000 | (அகவை 79)4 ஆண்டுகள், 364 நாட்கள் | |
4 | சுல்தான் இசுமாயில் நசிருதீன் ஷா | திராங்கானு | 21 செப்டம்பர் 1965 – 20 செப்டம்பர் 1970 | 24 சனவரி 1907 | 20 செப்டம்பர் 1979 | (அகவை 72)4 ஆண்டுகள், 364 நாட்கள் | |
5 | சுல்தான் அப்துல் அலீம் முவாட்சாம் ஷா 1st term |
கெடா | 21 செப்டம்பர் 1970 – 20 செப்டம்பர் 1975 | 28 நவம்பர் 1927 | 11 செப்டம்பர் 2017 | (அகவை 89)4 ஆண்டுகள், 364 நாட்கள் | |
6 | சுல்தான் யாகயா பெட்ரா | கிளாந்தான் | 21 செப்டம்பர் 1975 – 29 மார்ச் 1979 | 10 திசம்பர் 1917 | 29 மார்ச்சு 1979 | (அகவை 61)3 ஆண்டுகள், 189 நாட்கள் | |
7 | சுல்தான் அகமது ஷா | பகாங் | 26 ஏப்ரல் 1979 – 25 ஏப்ரல் 1984 | 24 அக்டோபர் 1930 | 22 மே 2019 | (அகவை 88)4 ஆண்டுகள், 365 நாட்கள் | |
8 | சுல்தான் இசுகந்தர் | ஜொகூர் | 26 ஏப்ரல் 1984 – 25 ஏப்ரல் 1989 | 8 ஏப்ரல் 1932 | 22 சனவரி 2010 | (அகவை 77)4 ஆண்டுகள், 364 நாட்கள் | |
9 | சுல்தான் அசுலான் ஷா | பேராக் | 26 ஏப்ரல் 1989 – 25 ஏப்ரல் 1994 | 19 ஏப்ரல் 1928 | 28 மே 2014 | (அகவை 86)4 ஆண்டுகள், 364 நாட்கள் | |
10 | துவாங்கு சாபர் | நெகிரி செம்பிலான் | 26 ஏப்ரல் 1994 – 25 ஏப்ரல் 1999 | 19 சூலை 1922 | 27 திசம்பர் 2008 | (அகவை 86)4 ஆண்டுகள், 364 நாட்கள் | |
11 | சுல்தான் சலாவுதீன் அப்துல் அசீஸ் ஷா | சிலாங்கூர் | 26 ஏப்ரல் 1999 – 21 நவம்பர் 2001 | 8 மார்ச்சு 1926 | 21 நவம்பர் 2001 | (அகவை 75)2 ஆண்டுகள், 209 நாட்கள் | |
12 | துவாங்கு சையத் சிராசுதீன் | பெர்லிஸ் | 13 டிசம்பர் 2001 – 12 டிசம்பர் 2006 | 17 மே 1943 | 4 ஆண்டுகள், 364 நாட்கள் | ||
13 | சுல்தான் மிசான் சைனல் அபிதீன் | திராங்கானு | 13 டிசம்பர் 2006 – 12 டிசம்பர் 2011 | 22 சனவரி 1962 | 4 ஆண்டுகள், 364 நாட்கள் | ||
14 | சுல்தான் அப்துல் அலீம் முவாட்சாம் ஷா 2nd term |
கெடா | 13 டிசம்பர் 2011 – 12 டிசம்பர் 2016 | 28 நவம்பர் 1927 | 11 செப்டம்பர் 2017 | (அகவை 89)4 ஆண்டுகள், 365 நாட்கள் | |
15 | சுல்தான் முகமது V | கிளாந்தான் | 13 டிசம்பர் 2016 – 6 சனவரி 2019 | 6 அக்டோபர் 1969 | 2 ஆண்டுகள், 24 நாட்கள் | ||
16 | அல் சுல்தான் அப்துல்லா | பகாங் | 31 சனவரி 2019 – இன்று வரையில் | 30 சூலை 1959 | 5 ஆண்டுகள், 333 நாட்கள் |
மேற்கோள்கள்
தொகு- BBC News – country profile for Malaysia
- UiTM Chancellor – Chancellor of Universiti Teknologi MARA
மேலும் காண்க
தொகுவெளி இணைப்புகள்
தொகு- Official Web Portal of the royal family of Perlis (in Malay and English)
- பொதுவகத்தில் Sirajuddin of Perlis தொடர்பாக ஊடகக் கோப்புகள் உள்ளன.