சிபுரி
சிபுரி அல்லது சைபுரி (ஆங்கிலம்: Sai Buri அல்லது Syburi; மலாய் மொழி: Syburi; சயாம்: ไทรบุรี) என்பது இரண்டாம் உலகப் போரில் கெடா மாநிலத்தின் அழைப்புப் பெயராகும்.
சிபுரி Syburi ไทรบุรี | |||||
சாங்வாட் மாநிலம் (Changwat Province) தாய்லாந்து | |||||
| |||||
அண்டை மாநிலங்களில் தாய்லாந்தின் பிராந்திய உரிமைகோரல்கள் | |||||
தலைநகரம் | அலோர் ஸ்டார் | ||||
வரலாறு | |||||
• | கெடாவை தாய்லாந்திடம் ஜப்பான் ஒப்படைத்தது | 18 அக்டோபர் 1943 1943 | |||
• | இணைக்கப்பட்ட பகுதிகளை பிரித்தானியாவிடம் தாய்லாந்து திரும்ப ஒப்படைத்தது | 2 செப்டம்பர் 1945 1945 | |||
தற்காலத்தில் அங்கம் | மலேசியா |
மலாயாவின் மீது ஜப்பானியர் ஆக்கிரமிப்பு செய்த போது கெடா மாநிலத்தைத் தாய்லாந்திடம் ஒப்படைத்தார்கள். அப்போது கெடா மாநிலத்திற்கு சயாமியர் சைபுரி என்று பெயர் வைத்தார்கள்.[1]
வரலாறு
தொகு1941 டிசம்பர் 14-ஆம் தேதி, தாய்லாந்து இராணுவத் தளபதி பிளேக் பிபுன்சோங்க்ராம் (General Plaek Phibunsongkhram); ஜப்பானியப் பேரரசுடன் ஓர் இரகசிய ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டார்.
மலாயாவை ஜப்பானியர் ஆக்கிரமிப்பு செய்யும் போதும் (Malayan Campaign); மற்றும் பர்மா மீது படையெடுக்கும் போதும் (Burma Campaign); தாய்லாந்து தன் ஆயுதப் படைகளை அனுப்பி ஜப்பானியருக்கு ஆதரவு வழங்கும் எனும் இரகசிய ஒப்பந்தம் செய்து கொள்ளப்பட்டது.
போர்ப் பிரகடனம்
தொகு21 டிசம்பர் 1941-இல் தாய்லாந்து மற்றும் ஜப்பான் இடையே ஒரு கூட்டணி ஒப்பந்தம் முறையாகக் கையெழுத்தானது.
25 ஜனவரி 1942 அன்று, அமெரிக்கா தலையிலான நேச நாடுகள் தோல்வி அடைந்ததாக நம்பிய தாய்லாந்து அரசாங்கம், அமெரிக்கா மற்றும் இங்கிலாந்து மீது போர்ப் பிரகடனம் செய்தது.
ஜப்பானியர்களுடன் இராணுவக் கூட்டுச் சேர்ந்து கொண்டதற்கான வெகுமதியாக, பிரித்தானியர்களிடம் இருந்து பெறப்பட்ட கெடா, பெர்லிஸ், கிளாந்தான், திராங்கானு ஆகிய நான்கு மலாயா மாநிலங்கள்; மற்றும் பிரித்தானிய பர்மாவில் உள்ள சான் மாநிலத்தின் சில பகுதிகள் (Shan State in British Burma) தாய்லாந்திற்கு வழங்கப் படும் என அறிவிக்கப்பட்டது.[2]
ஜப்பானியப் பிரதமர் இடாக்கி தோஜோ
தொகு21 டிசம்பர் 1941-இல், ஜப்பானியப் பிரதமர் இடாக்கி தோஜோ (Hideki Tojo), தாய்லாந்துக்கும் ஜப்பானுக்கும் இடையே கையெழுத்தான ஒப்பந்தத்தின் ஒரு பகுதியாக கெடா, பெர்லிஸ், கிளாந்தான், திராங்கானு ஆகிய நான்கு மலாயா மாநிலங்கள் தாய்லாந்திற்கு வழங்கப் படுவதாக அறிவித்தார்.
18 அக்டோபர் 1943 முதல், இரண்டாம் உலகப் போரின் முடிவில் ஜப்பானியர்கள் சரணடையும் வரை, கெடா, பெர்லிஸ், கிளாந்தான், திராங்கானு ஆகிய நான்கு மலாயா மாநிலங்கள் தாய்லாந்து நிர்வாகத்தின் கீழ் இருந்தன.
இரண்டாம் உலகப் போர் முடிவு அடைந்ததும், செப்டம்பர் 2, 1945-இல், அந்த நான்கு மாநிலங்களும் பிரித்தானியர்களிடமே மீண்டும் திருப்பி ஒப்படைக்கப்பட்டன.
கலப்புத் திருமணங்கள்
தொகுகெடா, பெர்லிஸ், கிளாந்தான், திராங்கானு ஆகிய நான்கு மலாயா மாநிலங்கள் தாய்லாந்து அரசாங்கத்திடம் ஒப்படைக்கப்பட்ட பின்னர், தாய்லாந்தின் புக்கெட் (Phuket); நாகோன் சி தம்மரத் (Nakhon Si Thammarat) மாநிலங்களில் வாழ்ந்த மக்கள் மலாயா வாழ் மக்களுடன் ஐக்கியமானார்கள்.[4]
இதன் விளைவாக இரு நாட்டு மக்களுக்கும் இடையே பல கலப்புத் திருமணங்கள் நடந்துள்ளன. அந்த வகையில் அந்தக் காலக் கட்டத்தில் சைபுரியில் பிறந்தவர்கள் தாய்லாந்து மன்னரின் குடிமக்களாக இன்றும் கருதப் படுகிறார்கள்.
நிர்வாகம்
தொகுஇராணுவ மேற்பார்வையில் இருந்த சைபுரி அரசாங்கம், தாய்லாந்து அரசு ஊழியர்களால் நிர்வாகம் செய்யப்பட்டன. இருப்பினும், சைபுரி அரசாங்க நிர்வாகத்தில், ஜப்பானிய அதிகாரிகள் பெரிய அளவிலான கட்டுப்பாட்டைத் தக்க வைத்துக் கொண்டனர்.[5]
ஜப்பானிய ஆளுநர்கள்
தொகு- 1941 - மார்ச் 1942 - ஓஜாமா (Ojama)
- மார்ச் 1942 - அக்டோபர் 1943 - சுகேகாவா செய்சி (Sukegawa Seiji)
தாய்லாந்து இராணுவ ஆணையர்
தொகு- அக்டோபர் 1943 - 1945? - பிரமோட் சோங் சரோயன் (Pramote Chong Charoen)
தாய்லாந்து அரசு ஆணையர்
தொகு- 20 ஆகஸ்டு 1943 - அக்டோபர் 1943 - கமோல் சரபை சரித்திகன் சோதி காசதியோன் (Kamol Saraphaisariddhikan Chotikasathion)
- அக்டோபர் 1943 - 1945? சியர்லா கமோல் ஸ்ரீபாசை ராதிகாவன் சோசி கசார்த்தியன் (Chierlah Kamol Sribhaasairadhikavan Josikasarthien)
ஆவணங்கள்
தொகுமேற்கோள்
தொகு- ↑ "THAILAND 1944 OCCUPATION OF MALAYA KEDAH, 'SYBURI' 10C". பார்க்கப்பட்ட நாள் 2 September 2021.
- ↑ [https://archive.today/20140828064225/http://2bangkokforum.com/archive/index.php/t-922.html பரணிடப்பட்டது 2014-08-28 at Archive.today Thailand in Malaya |date=2014-08-28 }}
- ↑ "สงครามมหาเอเซียบูรพา - จากวันวีรไทย ถึง วันประกาศสงคราม". samphan. I See History dot com. September 2009. Archived from the original on 25 பிப்ரவரி 2021. பார்க்கப்பட்ட நாள் 8 August 2010.
{{cite web}}
: Check date values in:|archive-date=
(help) - ↑ Timtsunami8 (2020-08-31), English: An updated version of the map, பார்க்கப்பட்ட நாள் 2021-06-21
{{citation}}
: CS1 maint: numeric names: authors list (link) - ↑ Prof. Madya Dr. Mohd. Isa Othman The Second World War and the Japanese Invasion of Kedah