பேராக் மந்திரி பெசார்

மலேசிய மாநிலமான பேராக் மாநிலத்தின் அரசுத் தலைவர்

பேராக் மந்திரி பெசார் (Menteri Besar of Perak) அல்லது பேராக் முதல்வர் (First Minister of Perak) என்பது மலேசிய மாநிலமான பேராக் மாநிலத்தின் அரசுத் தலைவர் ஆகும். அத்துடன் அவர் பேராக் மாநில சட்டமன்றத்தின் (Perak State Legislative Assembly) பெரும்பான்மைக் கட்சி அல்லது மிகப்பெரிய கூட்டணிக் கட்சியின் தலைவரும் ஆவார்.

பேராக் மந்திரி பெசார்
Menteri Besar of Perak
Menteri Besar Perak
தற்போது
சராணி முகமது
(Saarani Mohamad)

10 திசம்பர் 2020 முதல்
பேராக் மாநில அரசு
உறுப்பினர்பேராக் மாநில ஆட்சிக்குழு
அறிக்கைகள்பேராக் மாநில சட்டமன்றம்
வாழுமிடம்Jalan Raja Dihilir, Ipoh, Perak
அலுவலகம்Aras 2, Bangunan Perak Darul Ridzuan, Jalan Panglima Bukit Gantang Wahab, 30000 Ipoh, Perak
நியமிப்பவர்சுல்தான் நசுரின் சா
பேராக் சுல்தான்
பதவிக் காலம்5 ஆண்டுகள் அல்லது அதற்கும் குறைவானது, ஒருமுறை புதுப்பிக்கத்தக்கது
முதலாவதாக பதவியேற்றவர்அப்துல் வகாப் தோ மூடா அப்துல் அசீஸ்
(Abdul Wahab Toh Muda Abdul Aziz)
உருவாக்கம்1 பெப்ரவரி 1948; 76 ஆண்டுகள் முன்னர் (1948-02-01)
இணையதளம்www.perak.gov.my

தற்போது பேராக் மந்திரி பெசார் பதவியில் உள்ளவர் சராணி முகமது (Saarani Mohammad). இவர் 10 திசம்பர் 2020 முதல் பதவி வகித்து வருகிறார்.

நியமனம்

தொகு

மாநில அரசமைப்புச் சட்டத்தின்படி, பேராக் சுல்தான் முதலில் மந்திரி பெசாரை நிர்வாகக் குழுவின் தலைவராக நியமிப்பார். அந்த வகையில் நியமிக்கப்படும் மந்திரி பெசார் மாநில சட்டமன்ற உறுப்பினராக இருக்க வேண்டும். அத்துடன் மாநில சட்டமன்றத்தின் பெரும்பான்மை உறுப்பினர்களின் நம்பிக்கையையும் மந்திரி பெசார் பெற்று இருக்க வேண்டும்.

பேராக் மந்திரி பெசார் இசுலாம் மதத்தைச் சார்ந்தவராகவும்; மலாய் இனத்தைச் சார்ந்தவராகவும் இருக்க வேண்டும். அவரின் குடியுரிமை, பதிவு மூலம் பெற்ற ஒரு மலேசியக் குடிமகனாக இருக்கக்கூடாது. மந்திரி பெசாரின் ஆலோசனையின் பேரில், மாநிலச் சட்டமன்ற உறுப்பினர்களில் இருந்து 10 அல்லது நான்கிற்கும் குறையாத உறுப்பினர்களை மாநில செயற்குழுவில் பேராக் சுல்தான் நியமிப்பார்.

ஆட்சிக்குழுவின் உறுப்பினர்கள் சுல்தான் முன்னிலையில் பதவி உறுதிமொழி; பற்று உறுதிமொழி மற்றும் இரகசியக் காப்பு உறுதிமொழி எடுக்கவேண்டும். மாநிலச் சட்டமன்ற நடவடிக்கைகளுக்கு ஆட்சிக்குழுவினர் கூட்டாகப் பொறுப்பு ஏற்க வேண்டும். அத்துடன் அவர்கள் வருமானம் தரும் எந்த ஒரு பதவியையும் வகிக்கக் கூடாது; அல்லது கருத்து வேற்றுமைகளை ஏற்படுத்தும் எந்த ஒரு வணிகம் அல்லது தொழிலிலும் ஈடுபடக்கூடாது.

நம்பிக்கையில்லா வாக்கெடுப்பு

தொகு

மாநில அரசாங்கம் தனது சட்டத்தைச் சட்டமன்றத்தில் நிறைவேற்ற முடியாவிட்டால்; அல்லது மாநிலச் சட்டமன்றம் அரசாங்கத்தின் மீது நம்பிக்கையில்லா வாக்கெடுப்பை நிறைவேற்றினால்; மந்திரி பெசார் உடனடியாகப் பதவிதுறப்பு செய்ய வேண்டும். மாற்று மந்திரி பெசாரைத் தேர்ந்தெடுப்பது சுல்தானின் பொறுப்பு ஆகும். சுல்தான் அனுமதிக்கும் காலம் வரையில்; அனுமதிக்கும் காலம் வரையில்; மந்திரி பெசார் பதவி வகிக்காத மாநில ஆட்சிக்குழு உறுப்பினர் ஒருவர் பதவியில் இருப்பார்.

ஒரு தேர்தலில் தோல்வி அடைந்த மந்திரி பெசார் தன் பதவியை ராஜினாமா செய்ததைத் தொடர்ந்து; அல்லது ஒரு மந்திரி பெசாரின் மரணத்தைத் தொடர்ந்து; ஆளும் கட்சியால் தேர்வு செய்யப்பட்ட ஒரு நபரை புதிய மந்திரி பெசாராகச் சுல்தான் நியமிப்பார்.

அதிகாரங்கள்

தொகு

ஒரு மந்திரி பெசாரின் அதிகாரம் பல வரம்புகளுக்கு உட்பட்டது. ஒரு மந்திரி பெசார் அவரின் கட்சியின் தலைவர் பதவியில் இருந்து நீக்கப்பட்டால் அல்லது அவருடைய அரசாங்கம் சட்ட மன்றத்தில் நம்பிக்கையில்லா வாக்கெடுப்பில் தோல்வியுற்றால்; புதிய ஒரு மாநிலத் தேர்தலுக்கு மந்திரி பெசார் பரிந்துரை செய்ய வேண்டும்; அல்லது அந்த மந்திரி பெசார் பதவிதுறப்பு செய்ய வேண்டும்; அல்லது சுல்தானால் பதவி நீக்கம் செய்யப்பட வேண்டும்.

வழங்கல் மசோதா (Supply Bill) அல்லது முக்கியமான கொள்கை தொடர்பான சட்டத்தை ஒரு மந்திரி பெசாரால் நிறைவேற்ற முடியாமல் போனால், நம்பிக்கையில்லா வாக்கெடுப்பு போன்று அரசாங்கத்தில் இருந்து அந்த மந்திரி பெசார் பதவிதுறப்பு செய்ய வேண்டும்; அல்லது அவர் மாநிலச் சட்டமன்றத்தைக் கலைக்க வேண்டும்.

தற்காலிக மாநில அரசின் மந்திரி பெசார்

தொகு

மந்திரி பெசாரின் ஆலோசனையின் பேரில் சுல்தானால் கலைக்கப்பட்ட மாநிலச் சட்டமன்றம் அதன் முதல் கூட்டத்தின் தேதியில் இருந்து ஐந்து ஆண்டுகள் வரை தொடர்ந்து செயல்படலாம். மாநிலச் சட்டமன்றம் கலைக்கப்பட்ட நாளிலிருந்து பொதுத் தேர்தலை 60 நாட்கள் வரை தாமதப்படுத்த மாநில அரசியலமைப்பு அனுமதி வழங்குகிறது.

மாநிலச் சட்டமன்றம் கலைக்கப்பட்ட நாளிலிருந்து 120 நாட்களுக்குள் மாநிலச் சட்டமன்றம் மீண்டும் கூட்டப்பட வேண்டும். வழக்கமாக, ஒரு மாநிலச் சட்டமன்றம் கலைக்கப்படுவதற்கும் அடுத்த மாநிலச் சட்டமன்றம் கூட்டப்படுவதற்கும் இடைப்பட்ட காலத்தில், மந்திரி பெசார் மற்றும் அவரின் நிர்வாகக் குழுவினரும் தான் காபந்து அரசாங்க பதவியில் (Caretaker Government) இருப்பார்கள்.

பேராக் மந்திரி பெசார் பட்டியல்

தொகு

1948 முதல் பேராக் மாநிலத்தின் மந்திரி பெசார் பட்டியல் பின்வருமாறு:[1]

அரசியல் கட்சிகள்:
      அம்னோ       பேராக் தேசிய சங்கம்       கூட்டணி /       தேசிய முன்னணி       பாக்காத்தான் ராக்யாட்       பாக்காத்தான் அரப்பான்       பெரிக்காத்தான் நேசனல்

எண். தோற்றம் பெயர்
(பிறப்பு–இறப்பு)
தொகுதி
பதவியில் கட்சி தேர்தல் கூட்டம்
பதவியேற்பு பதவி விலகல் பதவி காலம்
1   அப்துல் வகாப் தோ மூடா அப்துல் அசீஸ்
(Abdul Wahab Toh Muda Abdul Aziz)
(1905–1959)
1 பிப்ரவரி
1948
1 ஆகஸ்டு
1957
9 ஆண்டுகள், 181 நாட்கள் அம்னோ
சுயேட்சை
பேராக் தேசிய சங்கம்
2   முகமது கசாலி ஜாவி
(Mohamed Ghazali Jawi)
(1924–1982)
எம்.எல்.சி - லாருட் மாத்தாங்
1 ஆகஸ்டு
1957
16 ஏப்ரல்
1959
1 ஆண்டு, 258 நாட்கள் கூட்டணி
(தேசிய முன்னணி)
3   சாரி சாபி
(Shaari Shafie)
(1912–1966)
எம்.எல்.ஏ - செங்காங்
16 ஏப்ரல்
1959
8 மே
1964
5 ஆண்டுகள், 22 நாட்கள் கூட்டணி
(அம்னோ)
1959
4   அகமது சாயிட்
(Ahmad Said)
(1919–1974)
எம்.எல்.ஏ - லெங்கோங்
9 மே
1964
17 மார்ச்
1969
4 ஆண்டுகள், 312 நாட்கள் கூட்டணி
(அம்னோ)
1964
5   கமாருதீன் முகமது இசா
(Kamaruddin Mohd. Isa)
எம்.எல்.ஏ - லாருட்
18 மார்ச்
1969
4 செப்டம்பர்
1974
5 ஆண்டுகள், 170 நாட்கள் கூட்டணி
(அம்னோ)
1969
6   முகமது கசாலி ஜாவி
(Mohamed Ghazali Jawi)
(1924–1982)
எம்.எல்.ஏ - கெனரிங்
4 செப்டம்பர்
1974
2 அக்டோபர்
1977
3 ஆண்டுகள், 28 நாட்கள் தேசிய முன்னணி
(அம்னோ)
1974 -
7   டத்தோ ஸ்ரீ
வான் முகமது வான் தே
(Wan Mohamed Wan Teh)
(1929–1993)
எம்.எல்.ஏ - தெமாங்கூர் (1978 வரை)
எம்.எல்.ஏ - கெனரிங் (1978 தொடக்கம்)
3 அக்டோபர்
1977
1 மார்ச்
1983
5 ஆண்டுகள், 149 நாட்கள் தேசிய முன்னணி
(அம்னோ)
1978
1982 -
8   டான் ஸ்ரீ
ரம்லி நிகா தாலிப்
(Ramli Ngah Talib)
(1929–1993)
எம். எல். ஏ - கம்போங் காஜா
1 மார்ச்
1983
3 திசம்பர்
1999
16 ஆண்டுகள், 277 நாட்கள் தேசிய முன்னணி
(அம்னோ)
1986
1990
1995
9   டத்தோஸ்ரீ டி ராஜா
தாஜோல் ரோசுலி முகமது கசாலி
(Tajol Rosli Mohd Ghazali)
எம்.எல்.ஏ - கெனரிங் (2004)
எம்.எல்.ஏ - பெங்காலான் உலு (2004 தொடக்கம்)
(பிறப்பு 1946)
3 திசம்பர்
1999
17 மார்ச்
2008
8 ஆண்டுகள், 105 நாட்கள் தேசிய முன்னணி
(அம்னோ)
1999
2004
10   டத்தோ ஸ்ரீ
முகமது நிசார் சமாலுதீன்
(Mohammad Nizar Jamaluddin
(பிறப்பு 1957)
எம்.எல்.ஏ - பாசீர் பாஞ்சாங்
17 மார்ச்
2008
6 பிப்ரவரி
2009
0 ஆண்டுகள், 326 நாட்கள் பாக்காத்தான் ராக்யாட்
(பாஸ்)
2008 -
11   டத்தோஸ்ரீ டி ராஜா
சாம்ரி அப்துல் காதர்
(Zambry Abdul Kadir)
(பிறப்பு 1962)
எம்.எல்.ஏ - பங்கோர்
12 மே
2009
12 மே
2018
9 ஆண்டுகள், 0 நாட்கள் தேசிய முன்னணி
(அம்னோ)
2013
12   டத்தோ ஸ்ரீ
அகமத் பைசல் அசுமு
(Ahmad Faizal Azumu)
(பிறப்பு 1970)
எம்.எல்.ஏ - செண்டிரியாங்
12 மே
2018
10 மார்ச்
2020
1 ஆண்டு, 303 நாட்கள் பாக்காத்தான் அரப்பான்
(பெர்சத்து)
2018 -
13 மார்ச்
2020
5 திசம்பர்
2020
பெரிக்காத்தான் நேசனல்
(பெர்சத்து)
13   டத்தோ ஸ்ரீ
சராணி முகமது
(Saarani Mohamad
(பிறப்பு 1962)
எம்.எல்.ஏ - கோத்தா தாம்பான்
10 திசம்பர்
2020
பதவியில் 3 ஆண்டுகள், 358 நாட்கள் தேசிய முன்னணி
(அம்னோ)
2022

வாழும் முன்னாள் மந்திரி பெசார்கள்

தொகு
பெயர் பதவி காலம் பிறந்த தேதி
ரம்லி நிகா தாலிப் 1983–1999 16 மார்ச் 1941 (age 83)
தாஜோல் ரோசுலி முகமது கசாலி 1999–2008 6 நவம்பர் 1946 (age 78)
முகமது நிசார் ஜமாலுதீன் 2008-2009 17 மார்ச் 1957 (age 67)
சாம்ரி அப்துல் காதர் 2009–2018 22 மார்ச் 1962 (age 62)
அகமத் பைசல் அசுமு 2018–2020 10 சூன் 1970 (age 54)

மேலும் காண்க

தொகு

மேற்கோள்கள்

தொகு
  1. "Perak". WorldStatesmen.org. பார்க்கப்பட்ட நாள் 21 April 2011.

வெளி இணைப்புகள்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=பேராக்_மந்திரி_பெசார்&oldid=4042024" இலிருந்து மீள்விக்கப்பட்டது