மலேசியப் பொதுத் தேர்தல், 1995

மலேசியாவின் 9-ஆவது பொது தேர்தல்


மலேசியப் பொதுத் தேர்தல், 1995 (1995 Malaysian General Election; மலாய்: Pilihan raya umum Malaysia 1995;) என்பது 1995 ஏப்ரல் 24 - 25-ஆம் தேதிகளில், மலேசியாவில் நடைபெற்ற 9-ஆவது பொது தேர்தலைக் குறிப்பிடுவதாகும். மலேசியாவில் உள்ள 192 நாடாளுமன்றத் தொகுதிகளிலும் வாக்குப்பதிவு நடைபெற்றது.

மலேசியப் பொதுத் தேர்தல், 1995

← 1990 24–25 ஏப்ரல் 1995 1999 →

மலேசிய மக்களவையின் 192 இடங்கள்
அதிகபட்சமாக 97 தொகுதிகள் தேவைப்படுகிறது
பதிவு செய்த வாக்காளர்கள்9,012,370
 
தலைவர் மகாதீர் முகமது தெங்கு ரசாலி அம்சா
பாட்சில் நூர்
லிம் கிட் சியாங்
ஜோசப் பைரின்
கூட்டணி பாரிசான் நேசனல் அங்காத்தான் பெர்பாடுவான் காகாசான் ராக்யாட்
முந்தைய
தேர்தல்
53.38%, 127 இடங்கள் 21.78%, 15 இடங்கள் 19.91%, 34 இடங்கள்
வென்ற
தொகுதிகள்
162 13 17
மாற்றம் Increase 35 2 17
மொத்த வாக்குகள் 3,881,214 1,046,687 910,769
விழுக்காடு 65.16% 17.57% 15.29%
மாற்றம் Increase11.78pp 4.21pp 4.62pp

முந்தைய பிரதமர்

மகாதீர் பின் முகமது
பாரிசான் நேசனல்

பிரதமர்-அமர்வு

மகாதீர் பின் முகமது
பாரிசான் நேசனல்

ஒவ்வொரு மக்களவைத் தொகுதியும் ஒரு நாடாளுமன்ற மக்களவை உறுப்பினரைத் தேர்ந்தெடுத்தது. அதே நாட்களில் மலேசியாவின் 11 மாநிலங்களில் உள்ள 394 மாநில சட்டமன்றத் தொகுதிகளிலும் மலேசிய மாநிலங்களுக்கான சட்டமன்றத் தேர்தல்களும் நடைபெற்றன. சபா, சரவாக் மாநிலங்களில் சட்டமன்றத் தேர்தல்கள் நடைபெறவில்லை.

இதன் விளைவாக அம்னோ தலைமையிலான பாரிசான் நேசனல் கூட்டணி, மொத்த 192 இடங்களில் 162 இடங்களை வென்றது. வாக்குப்பதிவு 68.3%.[1][1]

பொது

தொகு

மலேசியப் பொதுத் தேர்தல் இரு வகைகளாகப் பிரிக்கப்படுகிறது. தேசியத் தேர்தல் ஒரு வகை. மாநிலத் தேர்தல் மற்றொரு வகை. மலேசிய நாடாளுமன்றத்தின் மக்களவைக்கு உறுப்பினர்களைத் தேர்வு செய்வதற்காகத் தேசியப் பொதுத் தேர்தல் நடைபெறுகிறது. நாடாளுமன்றத்தின் மக்களவையை டேவான் ராக்யாட் என்று அழைக்கிறார்கள். மாநிலங்களின் சட்டப் பேரவைக்கு உறுப்பினர்களைத் தேர்வு செய்வதற்காக, மாநிலப் பொதுத் தேர்தல் நடைபெறுகிறது.[2]

தேசிய அளவில் அரசாங்கத்தை நிர்வாகம் செய்யும் தலைவரைப் பிரதமர் அல்லது பிரதம மந்திரி என்று அழைக்கிறார்கள். மாநிலச் சட்டப் பேரவைகள் அல்லது மாநிலச் சட்டமன்றங்கள் கலைக்கப்படுவதற்கு, மத்திய அரசாங்கத்தின் அனுமதி தேவை இல்லை. மாநிலச் சட்டமன்றங்கள் தனிச்சையாக இயங்கக்கூடியவை. அதனால், மாநில சுல்தான்களின் அனுமதியுடன் அவை கலைக்கப்பட முடியும்.[3]

தேசியப் பொதுத் தேர்தல்

தொகு

மலேசிய நாடாளுமன்றம், மக்களவை; மேலவை என இரு அவைகளைக் கொண்டது. மக்களவை 222 உறுப்பினர்களைக் கொண்டது. ஒரு நாடாளுமன்றத் தொகுதியில் இருந்து ஒரு நாடாளுமன்ற உறுப்பினர் தேர்ந்து எடுக்கப்படுகிறார். மக்கள் தொகையின் அடிப்படையில் நாடாளுமன்றத் தொகுதி வரையறுக்கப்படுகிறது. மக்களவையில் பெரும்பான்மை பெற்ற ஓர் அரசியல் கட்சி மத்திய அரசாங்கத்தை நிர்வாகம் செய்கிறது.

ஒவ்வோர் ஐந்து ஆண்டுகளுக்கு ஒரு முறை மலேசியப் பொதுத் தேர்தல் நடைபெற வேண்டும் என்பது சட்ட அரசியல் அமைப்பு விதியாகும். இருப்பினும், ஐந்து ஆண்டுகளுக்கு முன்னரே, மலேசிய மாமன்னரின் அனுமதியுடன் மலேசியப் பிரதமர் நாடாளுமன்றத்தைக் கலைக்க முடியும். நாடாளுமன்றம் கலைக்கப்பட்ட இரண்டே மாதங்களில், மேற்கு மலேசியாவில் பொதுத் தேர்தல் கண்டிப்பாக நடத்தப்பட வேண்டும். கிழக்கு மலேசியாவில் மூன்று மாதங்களில் பொதுத் தேர்தல் நடத்தப்பட வேண்டும்.

தேர்தல் முடிவுகள்

தொகு
 
கட்சி அல்லது கூட்டணிவாக்குகள்%இருக்கைகள்+/–
பாரிசான் நேசனல்அம்னோ38,81,21465.1689+18
மலேசிய சீனர் சங்கம்30+12
ஐக்கிய பாரம்பரிய பூமிபுத்ரா கட்சி100
சரவாக் ஐக்கிய மக்கள் கட்சி7+3
மலேசிய இந்திய காங்கிரசு7+1
கெராக்கான்7+2
சரவாக் டயாக் இனக்கட்சி5+1
சரவாக் தேசியக் கட்சி30
சபா முற்போக்கு கட்சி2புதிது
ஜனநாயக விடுதலைக் கட்சி1புதிது
சபா விடுதலை கட்சி0புதிது
மக்கள் முற்போக்கு கட்சி00
மக்கள் நீதி முன்னணி00
ஐக்கிய சபா மக்கள் கட்சி0புதிது
சுயேச்சை1புதிது
மொத்தம்162+35
அங்காத்தான் பெர்பாடுவான்செமாங்காட் 466,16,58910.356–2
மலேசிய இசுலாமிய கட்சி4,30,0987.2270
மொத்தம்10,46,68717.5713–2
காகாசான் ராக்யாட்ஜனநாயக செயல் கட்சி7,12,17511.969–11
ஐக்கிய சபா கட்சி1,98,5943.338–6
மொத்தம்9,10,76915.2917–17
மலேசிய மக்கள் பொதுநலக் கட்சி4,9570.080புதிது
மலேசிய மக்கள் கட்சி1,13,0681.9000
சுயேச்சைகள்0–4
மொத்தம்59,56,695100.00192+12
செல்லுபடியான வாக்குகள்59,56,69596.81
செல்லாத/வெற்று வாக்குகள்1,96,1143.19
மொத்த வாக்குகள்61,52,809100.00
பதிவான வாக்குகள்90,12,37068.27
மூலம்: Nohlen et al., IPU

மேற்கோள்கள்

தொகு
  1. Dieter Nohlen, Florian Grotz & Christof Hartmann (2001) Elections in Asia: A data handbook, Volume II, p157 பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-19-924959-8
  2. Rahman, Rashid A. (1994). The Conduct of Elections in Malaysia, p. 10. Kuala Lumpur: Berita Publishing. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 967-969-331-7.
  3. Chow, Kum Hor (10 August 2005). "'Third government' is ratepayers' bugbear". New Straits Times. 

மேலும் காண்க

தொகு

வெளி இணைப்புகள்

தொகு