மலேசிய மக்கள் பொதுநலக் கட்சி
மலேசிய மக்கள் பொதுநலக் கட்சி (Malaysian People's Welfare Party), என்பது மேற்கு மலேசியா, சிலாங்கூர் மாநிலத்தைத் தளமாகக் கொண்ட ஒரு மதச் சார்பற்ற அரசியல் கட்சியாகும். இக்கட்சி அமைக்கப்பட்ட போது அக்கிம் என்று அழைக்கப்பட்டது. (ஆங்கில மொழி: Malaysian People Justice Front) இப்போது கித்தா என பரவலாக அழைக்கப்படுகின்றது.[4]
மலேசிய மக்கள் பொதுநலக் கட்சி Malaysian People's Welfare Party Parti Kesejahteraan Insan Tanah Air 马来西亚人民福利党 | |
---|---|
தலைவர் | சாயிட் இப்ராஹிம் |
தொடக்கம் | 1995 பிப்ரவரி 16 (அக்கிம் என பெயர்)[1] |
தலைமையகம் | பெட்டாலிங் ஜெயா, சிலாங்கூர்[2] |
உறுப்பினர் | 15,000[3] |
கொள்கை | மதச்சார்பின்மை, சமூக நீதி |
இணையதளம் | |
http://www.partikita.com |
1995 ஆம் ஆண்டு பாஸ் கட்சியில் ஏற்பட்ட சில உட்பூசல்களினால், இந்தக் கட்சி உருவாக்கம் பெற்றது. அத்துடன், 1996 இல், செமாங்காட் 46 எனும் அரசியல் அமைப்பில் ஏற்பட்ட பிரச்னைகளின் காரணமாகவும், பலர் இந்த மலேசிய மக்கள் பொதுநலக் கட்சியில் உறுப்பினர்களாகச் சேர்ந்தனர்.[5] 1999 ஆம் ஆண்டு மலேசியப் பொதுத் தேர்தலில் இக்கட்சி, கிளாந்தான் மாநிலத்தில் உள்ள பாசீர் பூத்தே, கோத்தா பாரு நாடாளுமன்றத் தொகுதிகளில் போட்டியிட்டு தோல்வி அடைந்தது.[6]
1999 ஆம் ஆண்டு மலேசியப் பொதுத் தேர்தலில், இக்கட்சியின் தலைவர் ஹனாபி மாமாட், பெர்மாத்தாங் பாவ் இடைத் தேர்தலில் கல்ந்து கொண்டார். ஆனால், 98 வாக்குகள் மட்டுமே பெற்றார். தேர்தல் வைப்புக் தொகையான 15,000 மலேசிய ரிங்கிட்டையும் இழந்தார். இருப்பினும் அத்தேர்தலின் மூலமாகக் கட்சிக்கு அறிமுகம் கிடைத்தது என்று தலைவர் ஹனாபி மாமாட் கூறினார்.[3]
கித்தா அறிமுகம்
தொகு2010 டிசம்பர் 13 ஆம் தேதி, டத்தோ சாயிட் இப்ராஹிம் கட்சியில் ஓர் உறுப்பினராகச் சேர்ந்ததாக மலேசிய மக்கள் பொதுநலக் கட்சி அறிவித்தது. டத்தோ சாயிட் இப்ராஹிம் என்பவர், மலேசிய அரசியலில் நன்கு அறிமுகமானவர். மகாதீர் பின் முகமது பிரதமராக இருந்த போது, மலேசிய அமைச்சரவையில் மூத்த அமைச்சராகச் சேவை செய்தவர்.[7]
பிரதமர் மகாதீர் பின் முகமதுவுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடுகளின் காரணமாக அவர் அமைச்சரவையில் இருந்து விலகிக் கொண்டார். பின்னர், அவர் பாக்காத்தான் ராக்யாட் கூட்டணியில் சேர்ந்தார். அங்கேயும் ஒரு சுமுக நிலை ஏற்படவில்லை. அதனால், அங்கிருந்தும் விலகி, பின்னர் மலேசிய மக்கள் பொதுநலக் கட்சியில் இணைந்து கொண்டார்.
2010 டிசம்பர் 15 இல் கட்சியின் பொதுக்கூட்டம் நடைபெற்றது. அந்தக் கூட்டத்தில், அதுவரையில் தலைவராக இருந்த ஜக்காரியா சாலே என்பவர் பதவி விலகிக் கொண்டார். டத்தோ சாயிட் இப்ராஹிம் கட்சியின் புதுத் தலைவராகத் தேர்வு செய்யப்பட்டார். கட்சிக்கு மலேசிய மக்கள் பொதுநலக் கட்சி (ஆங்கில மொழி: Parti Kesejahteraan Insan Tanah Air (KITA)) என்று புதுப் பெயரும் வைக்கப்பட்டது.[4][8]
அக்கூட்டத்தில் மலேசிய மக்கள் பொதுநலக் கட்சி ஒரு சிறிய கட்சியாக இருந்தாலும், அது பல்லின ஜனநாயகக் கட்சியாகச் செயல்படும் என்று டத்தோ சாயிட் இப்ராஹிம் அறிவித்தார்.[9] கட்சியின் புதிய சட்டதிட்டங்கள், செயல்திட்டங்கள், சின்னம் ஆகியவை 2011 ஜனவரி 19 இல் அறிவிக்கப்படும் என்றும் அறிவித்தார்.
கட்சித் தலைவர்கள்
தொகு- 1995- பிப்ரவரி 1998: மூசா சாலே
- 1998-1999: முகமட் டின் நிசாம் டின் (இடைக்காலம்)[10]
- 1999-2002: முகமட் யூசுப்[11]
- 2002-2009: ஹனாபி மாமாட்
- 2009-2010: ஜக்காரியா சாலே[12]
- 2010லிருந்து: சாயிட் இப்ராஹிம்[13]
மேற்கோள்கள்
தொகு- ↑ Pertandingan tiga penjuru
- ↑ "Small step for Akim". Archived from the original on 2008-09-16. பார்க்கப்பட்ட நாள் 2013-05-18.
- ↑ 3.0 3.1 "Surprise small fish takes on Anwar and Arif Shah". Archived from the original on 2021-11-18. பார்க்கப்பட்ட நாள் 2013-05-18.
- ↑ 4.0 4.1 "Zaid resurrects political career, appointed new party chief". Archived from the original on 2010-12-17. பார்க்கப்பட்ட நாள் 2013-05-18.
- ↑ Eur (2002). The Far East and Australasia 2003. Routledge. pp. 797. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 1-85743-133-2.
- ↑ "Calon AKIM Yakin Mampu Menang Di Permatang Pauh". Archived from the original on 2011-05-24. பார்க்கப்பட்ட நாள் 2013-05-18.
- ↑ "Zaid Ibrahim now an Akim member". Archived from the original on 2010-12-16. பார்க்கப்பட்ட நாள் 2013-05-18.
- ↑ Akim renamed to Kita, Zaid is now the Party Chief, (The Star), December 15, 2010
- ↑ Zaid: Kita not in Pakatan fold பரணிடப்பட்டது 2010-12-18 at the வந்தவழி இயந்திரம், (The Malaysian Insider), December 15, 2010
- ↑ Akibat Menentang PAS
- ↑ Gabungan Parti Tajaan BN
- ↑ Five MPs may join Zaid’s new Kita, (The Star Online), December 16, 2010
- ↑ Akim renamed Kita, Zaid’s president பரணிடப்பட்டது 2010-12-18 at the வந்தவழி இயந்திரம், (The Malaysian Insider), December 15, 2010