பெர்மாத்தாங் பாவ்
பெர்மாத்தாங் பாவ் (ஆங்கிலம்: Permatang Pauh; (மலாய் Permatang Pauh; சீனம்: '峇东埔; ஜாவி: ڤرماتڠ ڤاوه) என்பது மலேசியா, பினாங்கு, மத்திய செபராங் பிறை மாவட்டத்தில் அமைந்துள்ள நகரம்.
பெர்மாத்தாங் பாவ் | |
---|---|
பினாங்கு | |
ஆள்கூறுகள்: 5°24′0″N 100°24′0″E / 5.40000°N 100.40000°E | |
நாடு | மலேசியா |
மாநிலம் | பினாங்கு |
மாவட்டம் | மத்திய செபராங் பிறை மாவட்டம் |
அரசு | |
• நகராண்மை | செபராங் பிறை நகராண்மைக் கழகம் |
நேர வலயம் | மலேசிய நேரம் ஒ.ச.நே + 08:00 |
மலேசிய அஞ்சல் குறியீடு | 13500 |
மலேசியத் தொலைபேசி எண் | +604 |
மலேசியப் போக்குவரத்துப் பதிவெண் | P |
இணையதளம் | www |
இந்த நகரம் பட்டர்வொர்த் நகரில் இருந்து கிழக்கே 5 கி.மீ. தொலைவில் உள்ளது. இது ஒரு கடலோர நிலப் பகுதியாகும். இங்கு மலேசியத் தொழில்நுட்ப மாரா பல்கலைக்கழகமும், செபராங் பிறை பல்நுட்பியல் கல்லூரியும் உள்ளன.[1]
பெர்மாத்தாங் பாவ் நகரம் மலேசியாவின் மிக நீளமான விரைவுச் சாலைக்கு அருகில் உள்ள ஒரு நகரம் ஆகும். புக்கிட் மெர்தாஜாம் மற்றும் கெப்பாலா பத்தாஸ் ஆகிய நகரங்களுக்கு நடுவில் அமைந்துள்ளது.
ஈப்போ மாநகரில் இருந்து 160 கி.மீ. தொலைவிலும்; புக்கிட் மெர்தாஜாம் நகரில் இருந்து 10 கி.மீ. தொலைவிலும் உள்ளது.
பொது
தொகுமலேசிய அரசியலில் பல தாக்கங்களை ஏற்படுத்திய நாடாளுமன்றத் தொகுதியின் தலைப் பட்டணமாக விளங்குகிறது. பல ஆன்டுகளாக மலேசிய நாடாளுமன்றத்தில் பாக்காத்தான் கூட்டணியின் வலுவான தொகுதிகளில் பெர்மாத்தாங் பாவ் மக்களவை தொகுதியும் ஒன்றாகும்.
மலேசியாவின் முன்னாள் துணைப் பிரதமரும், நிதியமைச்சரும், 2022-ஆம் ஆண்டில் இருந்து மலேசியப் பிரதமருமான அன்வர் இப்ராகீம் அவர்களின் நாடாளுமன்றத் தொகுதியாக இருந்தது.
நூருல் இசா அன்வார்
தொகு2008-ஆம் ஆண்டில் அன்வர் இப்ராகீம், இந்தத் தொகுதியின் நாடாளுமன்ற உறுப்பினராகத் தேர்வு செய்யப்பட்டார். அதற்கு முன்னர், 1982-இல் இருந்து 1999 வரையிலும், 1999-இல் இருந்து 2008 வரையிலும், அவருடைய மனைவி வான் அசிசா வான் இசுமாயில் நாடாளுமன்ற உறுப்பினராக பொறுப்பில் இருந்தார். அதன் பின்னர் தன் கணவர் அன்வர் இப்ராகீம் அவர்களுக்காக பதவி துறப்பு செய்தார். அதே ஆண்டில் ஓர் இடைத் தேர்தல் நடைபெற்றது. அந்தத் தேர்தலில் அன்வர் இப்ராகீம் 11,721 வாக்குகள் பெரும்பான்மையில் வெற்றி பெற்றார்.
2018-ஆம் ஆண்டு மலேசியப் பொதுத் தேர்தலில் அன்வர் இப்ராகீம் அவர்களின் மகள் நூருல் இசா அன்வார் (Nurul Izzah Anwar) பாக்காத்தான் கூட்டணியின் சார்பில் இந்தத் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றார்.
எனினும் 2022-ஆம் ஆண்டு மலேசியப் பொதுத் தேர்தலில் நூருல் இசா அன்வார் 5,272 வாக்குகளில் இந்தத் தொகுதியில் முகமது பாவாஸ் முகமது சான் (Muhammad Fawwaz Mohamad Jan) எனும் பெரிக்காத்தான் நேசனல் வேட்பாளரிடம் தோல்வி அடைந்தார்.
பொதுத் தேர்தல்கள் 1969 - 2008
தொகு1969-ஆம் ஆண்டில் இருந்து பெர்மாத்தாங் பாவ் தொகுதியில் நடைபெற்ற பொதுத் தேர்தல் விவரங்கள்:
- குறிப்பு (இ.தே) - இடைத் தேர்தல்