மத்திய செபராங் பிறை மாவட்டம்

மலேசியாவின் பினாங்கு மாநிலத்தில் உள்ள மாவட்டம்

மத்திய செபராங் பிறை மாவட்டம் (ஆங்கிலம்: Central Seberang Perai District; மலாய்: Daerah Seberang Perai Tengah (SPT); சீனம்: 威中县); ஜாவி: دسبرڠ ڤراي اوتارا ) என்பது மலேசியாவின் பினாங்கு மாநிலத்தில் உள்ள ஒரு மாவட்டம். பினாங்கு மாநிலத்தின் ஐந்து மாவட்டங்களில் இந்த மாவட்டமும் ஒன்றாகும்.

மத்திய செபராங் பிறை மாவட்டம்
பினாங்கு
மத்திய செபராங் பிறை மாவட்ட அலுவலகம்
மத்திய செபராங் பிறை
மாவட்ட அலுவலகம்
மத்திய செபராங் பிறை மாவட்டம்
மத்திய செபராங் பிறை மாவட்டம்
Map
மத்திய செபராங் பிறை மாவட்டம் is located in மலேசியா
மத்திய செபராங் பிறை மாவட்டம்
      மத்திய செபராங் பிறை மாவட்டம்
ஆள்கூறுகள்: 5°21′N 100°28′E / 5.350°N 100.467°E / 5.350; 100.467
நாடு மலேசியா
மாநிலம் பினாங்கு
மாவட்டம்மத்திய செபராங் பிறை
உள்ளாட்சி மன்றம்செபராங் பிறை நகராட்சி
பெரிய நகரம்புக்கிட் மெர்தாஜாம்
அரசு
 • மாவட்ட அதிகாரிஅலி செர்பான்
பரப்பளவு
 • மொத்தம்238 km2 (92 sq mi)
மக்கள்தொகை
 (2020)
 • மொத்தம்4,22,990
 • மதிப்பீடு 
(2025)
3,95,100
 • அடர்த்தி1,600/km2 (4,000/sq mi)
நேர வலயம்மலேசிய நேரம் ஒ.ச.நே + 08:00
அஞ்சல் குறியீடு
13500-14100
தொலைபேசி எண்கள்+6-043 to +6-045
வாகனப் பதிவெண்கள்P

இந்த மாவட்டம் 238 சதுர கிலோமீட்டர் பரப்பளவைக் கொண்டுள்ளது. 2010-ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி 395,100 மக்கள் தொகையைக் கொண்டு இருந்தது.

மத்திய செபராங் பிறை மாவட்டத்தின் வடக்கே இருக்கும் வடக்கு செபராங் பிறையைப் பிறை ஆறு பிரிக்கிறது. தெற்கில் இருக்கும் தெற்கு செபராங் பிறையைச் சுஞ்சோங் ஆறு (Junjong River) பிரிக்கிறது. கிழக்கில் கெடாவின் மாநில எல்லை பிரிக்கிறது. தெற்கில் பினாங்கு தீவில் இருந்து, பினாங்கு நீரிணை பிரிக்கிறது.

பொது

தொகு

ஜூரு ஆறு இந்த மாவட்டத்தின் வழியாகப் பாய்ந்து பினாங்கு நீரிணையில் கலக்கிறது. இந்த மாவட்டத்தின் தலைநகரம் புக்கிட் மெர்தாஜாம்.

கனரகத் தொழில்துறைப் பகுதிகள் மத்திய செபராங் பிறையின் பெரும்பாலான பகுதிகளை உள்ளடக்கி உள்ளது. மத்திய செபராங் பிறை மாவட்டத்தில் அமைந்து உள்ள இதர இடங்கள்:

நிர்வாகப் பிரிவுகள்

தொகு
 
புக்கிட் மெர்தாஜாம் இரயில் நிலையம்
 
புக்கிட் மெர்தாஜாம் புனித அன்னைமேரி தேவாலயம்
 
புக்கிட் மெர்தாஜாம் மலை

மத்திய செபராங் பிறை மாவட்டம் 21 முக்கிம்களாகப் பிரிக்கப்பட்டு உள்ளது. மற்றும் புக்கிட் மெர்தாஜாம்; பிறை ஆகிய இரு நகரங்களையும் உள்ளடக்கியது.[1][2][3]

முக்கிம் பகுதி முக்கிம் பகுதி
 
1 செபராங் ஜெயா 12 ஜுரு
2 சமா காகா 13 புக்கிட் மிஞ்ஞாக்
தொழில்துறை மண்டலம்
3 பெர்மாத்தாங் பாசிர் 14 பெர்மாத்தாங் திங்கி
4 பெர்மாத்தாங் பாவ் 15 அல்மா
5 குபாங் செமாங் 16 மாச்சாங் பூபோக்
6 தாமான் பாவ் 17 மெர்தாஜாம் மலை
7 பண்டார் பெர்டா 18 மெங்குவாங்
8 தானா லியாட் 19 ஆரா கூடா
9 பெராப்பிட் 20 குவார் பெராகு
10 ஜாலான் பெத்தேக்
(நிர்வாக மையம்)
21 புக்கிட் ஜெலுத்தோங்
11 புக்கிட் தெங்கா
புக்கிட் மெர்தாஜாம் நகர மையப் பகுதியில் உள்ள முக்கிம்கள் நீல நிறத்தில்

மக்கள் தொகையியல்

தொகு

கீழ்க்காணும் புள்ளிவிவரங்கள், 2010-ஆம் ஆண்டு, மலேசியாவின் புள்ளியியல் துறையால் நடத்தப்பட்ட தேசிய மக்கள் தொகைக் கணக்கெடுப்பின் அடிப்படையில் வழங்கப் படுகிறது.[4]

இனக்குழுக்கள்
இனம் விழுக்காடு
மலாய்க்காரர்கள் 45.89%
சீனர்கள் 35.99%
இந்தியர்கள் 9.45%
இதர பூமிபுத்ராக்கள் 0.38%
மலேசிய அல்லாதவர் 7.93%
மற்றவர்கள் 0.37%
மொத்தம் 100%
இனக்குழுக்கள்
இனம் மக்கள் தொகை விழுக்காடு
மலாய்க்காரர்கள் 170693 45.89%
சீனர்கள் 133863 35.99%
இந்தியர்கள் 35158 9.45%
இதர பூமிபுத்ராக்கள்' 35158 0.38%
மற்றவர்கள் 1358 0.37%
மலேசியர் அல்லாதவர்கள் 29490 7.93%
மொத்தம் 371975 100%

மலேசிய நாடாளுமன்றம்

தொகு

மலேசிய நாடாளுமன்றத்தில் மத்திய செபராங் பிறை மாவட்டத்தின் பிரதிநிதிகள் (டேவான் ராக்யாட்)

நாடாளுமன்றம் தொகுதி உறுப்பினர் கட்சி
P44 பெர்மாத்தாங் பாவ் நூருல் இசா அன்வார் பாக்காத்தான் ஹரப்பான் (பாக்காத்தான் ராக்யாட்)
P45 புக்கிட் மெர்தாஜாம் ஸ்டீபன் சிம் சி கியோங் பாக்காத்தான் ஹரப்பான் (ஜனநாயக செயல் கட்சி)
P46 பத்து காவான் கஸ்தூரி பட்டு பாக்காத்தான் ஹரப்பான் (ஜனநாயக செயல் கட்சி)

மத்திய செபராங் பிறை மாவட்டத்தின் தமிழ்ப்பள்ளிகள்

தொகு

மலேசியா; பினாங்கு; மத்திய செபராங் பிறை மாவட்டத்தில் (North Seberang Perai District); 6 தமிழ்ப்பள்ளிகள் உள்ளன. அவற்றில் 1,823 மாணவர்கள் பயில்கிறார்கள். 157 ஆசிரியர்கள் பணியாற்றுகிறார்கள். மலேசியக் கல்வியமைச்சு 2020 ஜனவரி மாதம் வெளியிட்ட புள்ளிவிவரங்கள்.[5]

பள்ளி
எண்
இடம் பள்ளியின்
பெயர்
மலாய்
பள்ளியின்
பெயர்
தமிழ்
அஞ்சல் குறியீடு வட்டாரம் மாணவர்கள் ஆசிரியர்கள்
PBD0034 பெர்மாத்தாங் திங்கி SJK(T) Permatang Tinggi பெர்மாத்தாங் திங்கி தமிழ்ப்பள்ளி 14100 சிம்பாங் அம்பாட் 812 57
PBD0035 ஜுரு SJK(T) Ldg Juru ஜுரு தோட்டத் தமிழ்ப்பள்ளி 14100 சிம்பாங் அம்பாட் 116 10
PBD0036 புக்கிட் மெர்தாஜாம் SJK(T) Bkt Mertajam புக்கிட் மெர்தாஜாம் தமிழ்ப்பள்ளி 14000 புக்கிட் மெர்தாஜாம் 327 30
PBD0037 அல்மா SJK(T) Ldg Alma அல்மா தோட்டத் தமிழ்ப்பள்ளி 14000 புக்கிட் மெர்தாஜாம் 192 22
PBD0038 பிறை SJK(T) Ladang Prye பிறை தோட்டத் தமிழ்ப்பள்ளி 13700 பிறை 134 17
PBD2080 பிறை SJK(T) Perai பிறை தமிழ்ப்பள்ளி 13600 பிறை 214 21

மேற்கோள்கள்

தொகு
  1. "Latar Belakang". spt.penang.gov.my. Archived from the original on 2020-09-28. பார்க்கப்பட்ட நாள் 2022-04-23.
  2. "UPI – Unique Parcel Identifier". myliis3.mygeoportal.gov.my. Archived from the original on 2017-12-27. பார்க்கப்பட்ட நாள் 2017-11-29.
  3. "Peta Daerah". spt.penang.gov.my. Archived from the original on 2020-12-01. பார்க்கப்பட்ட நாள் 2022-04-23.
  4. "Department of Statistics Malaysia Official Portal". www.dosm.gov.my.
  5. "Senarai Sekolah Rendah dan Menengah Jan 2020". www.moe.gov.my. பார்க்கப்பட்ட நாள் 2021-05-30.

வெளி இணைப்புகள்

தொகு
 
விக்கிமீடியா பொதுவகத்தில்,
Central Seberang Perai District
என்பதில் ஊடகங்கள் உள்ளன.