ஜுரு (மலேசியா)

ஜுரு (Juru), (சீனம்: 柔府) என்பது மலேசியா, பினாங்கு மாநிலத்தில் செபராங் பிறை மாவட்டத்தில் உள்ள ஒரு பட்ட
(ஜுரு இலிருந்து வழிமாற்றப்பட்டது)

ஜுரு (ஆங்கிலம்: Juru; மலாய்: Juru; சீனம்: 柔府); என்பது மலேசியா, பினாங்கு, மத்திய செபராங் பிறை மாவட்டத்தில் அமைந்துள்ள ஒரு நகரம். இந்த நகரத்திற்கு தென்மேற்கில் புக்கிட் மெர்தாஜாம்; பிறை நகரங்கள் உள்ளன.

ஜுரு
Juru
வான்வழிக் காட்சியில் ஜூரு நகரம்; கெடோங் தீவு; அமான் தீவு
வான்வழிக் காட்சியில் ஜூரு நகரம்; கெடோங் தீவு; அமான் தீவு
ஜுரு is located in மலேசியா
ஜுரு
ஜுரு
மலேசியாவில் அமைவிடம்
ஆள்கூறுகள்: 5°19′00″N 100°27′00″E / 5.31667°N 100.45000°E / 5.31667; 100.45000
நாடு மலேசியா
மாநிலம் பினாங்கு
மாவட்டம்மத்திய செபராங் பிறை
உருவாக்கம்1900
அரசு
 • உள்ளூராட்சிசெபராங் பிறை
 • நகராண்மைக் கழகத் தலைவர்ரொசாலி முகமட்
 • பத்து காவான் நாடாளுமன்றத் தொகுதிகஸ்தூரி பட்டு (ஜ.செ.க)
 • புக்கிட் தெங்கா சட்டமன்றத் தொகுதிகுய் சியோ லியோங் (பி.கே.ஆர்)
நேர வலயம்ஒசநே+8 (மலேசிய நேரம்)
மலேசிய அஞ்சல் குறியீடு
14000
மலேசியத் தொலைபேசி+6045
மலேசியப் போக்குவரத்து எண்P

கம்போங் ஜூரு எனும் கிராமத்தின் பெயரால் இந்த நகருக்கும் பெயரிடப்பட்டது. அதே வேளையில், கம்போங் ஜூரு கிராமத்திற்கு சுங்கை ஜூரு எனும் ஜூரு ஆற்றின் பெயரால் பெயரிடப்பட்டது.[1]

புவியியல் ரீதியாக இந்த நகரம், மத்திய செபராங் பிறை மாவட்டத்தில் உள்ள புக்கிட் மெர்தாஜாம் நகரின் ஒரு பகுதியாகும்.

பொது

தொகு

இந்த ஜுரு நகரம் பட்டர்வொர்த் நகரத்தையும்; பாயான் லெப்பாஸ் நகரத்தையும்; வடக்கு-தெற்கு விரைவுசாலை (மலேசியா) மூலமாக இணைக்கின்றது.

மலேசிய வடக்கு-தெற்கு விரைவுசாலையின் ஒரு பிரதான அமைப்பில் அமைந்து இருப்பதாலும்; பினாங்குத் தீவிற்கு மிக அருகில் இருப்பதாலும்; இந்த நகரம் பிரபலம் அடைந்தது.

இங்குள்ள ஆட்டோ சிட்டி (Auto City) எனும் குறுநகரம்; வாகன விற்பனைக்குப் புகழ்பெற்ற இடமாக விளங்குகிறது. வாகனங்கள் விற்பனைக்காகவே உருவாக்கப்பட்ட ஒரு சிறிய நகரமாக இந்த ஆட்டோ சிட்டி அறியப் படுகிறது.[2]

புக்கிட் தெங்கா

தொகு

ஜுரு நகரம் கோலாலம்பூரில் இருந்து 330 கி.மீ தொலைவிலும்; பினாங்கு, ஜார்ஜ் டவுன் நகரில் இருந்து 17 கி.மீ தொலைவிலும் உள்ளது. இங்குள்ள ஜூரு ஆறு ஒரு முக்கியமான ஆறாகும்.

புவியியல் ரீதியாக இந்த நகரம், மத்திய செபராங் பிறையில் உள்ள புக்கிட் மெர்தாஜாம் நகரின் ஒரு பகுதியாகும். பெருமளவில் தொழில் மயமாக்கப்பட்ட புக்கிட் தெங்கா (Bukit Tengah) மற்றும் புக்கிட் மின்யாக் (Bukit Minyak) போன்ற பல பகுதிகளை உள்ளடக்கி உள்ளது.

அருகாமையில் உள்ள இடங்கள்

தொகு
  • கம்போங் பாகன் நியோர் (Kampung Bagan Nyior)
  • கோலா ஜூரு (Kuala Juru)
  • கம்போங் சுங்கை செமிலாங் (Kampung Sungai Semilang)
  • கம்போங் புக்கிட் கெச்சில் (Kampung Bukit Kecil)
  • கம்போங் தோக் கங்கார் (Kampung Tok Kangar)

மேலும் பார்க்க

தொகு

மேற்கோள்கள்

தொகு
  1. "Juru is an industrial area in Seberang Perai. It was named after the village of Kampung Juru, which in turn was named after the river Sungai Juru". Penang Travel Tips (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 24 April 2022.
  2. AUTO-CITY is endorsed by the Penang State Government as a tourism destination.
"https://ta.wikipedia.org/w/index.php?title=ஜுரு_(மலேசியா)&oldid=3490480" இலிருந்து மீள்விக்கப்பட்டது