பாயான் லெப்பாஸ்
பாயான் லெப்பாஸ் (ஆங்கிலம்: Bayan Lepas; மலாய் Bayan Lepas; சீனம்: 峇六拜; ஜாவி: بيان لڤس) என்பது மலேசியா, பினாங்கு மாநிலத்தில், பினாங்குத் தீவின் தென்கிழக்கு முனையில், தென்மேற்கு பினாங்கு தீவு மாவட்டத்தில் அமைந்துள்ள நகரம்.[1]
பாயான் லெப்பாஸ் | |
---|---|
Bayan Lepas | |
ஆள்கூறுகள்: 5°17′N 100°16′E / 5.283°N 100.267°E | |
நாடு | மலேசியா |
மாநிலம் | பினாங்கு |
மாவட்டம் | தென்மேற்கு பினாங்கு தீவு |
அரசு | |
• நகராண்மை | பினாங்கு தீவு நகராண்மைக் கழகம் |
• மேயர் | இவ் துங் சியாங் |
மக்கள்தொகை (2010) | |
• மொத்தம் | 1,22,654 |
நேர வலயம் | ஒசநே+8 (மலேசிய நேரம்) |
• கோடை (பசேநே) | பயன்பாடு இல்லை |
மலேசிய அஞ்சல் குறியீடு | 11900 |
மலேசியத் தொலைபேசி எண் | +6046 |
மலேசியப் போக்குவரத்துப் பதிவெண் | P |
இணையதளம் | www |
19-ஆம் நூற்றாண்டில் நிறுவப்பட்ட இந்த நகரத்தில், பினாங்கு பன்னாட்டு வானூர்தி நிலையம் (Penang International Airport); மற்றும் இலவசத் தொழில்துறை மண்டலம் (Free Industrial Zone); ஆகியவை மிகவும் பிரசித்தி பெற்றவை. இலவசத் தொழில்துறை மண்டலத்தைக் கிழக்கின் சிலிக்கான் பள்ளத்தாக்கு (Silicon Valley of the East) என்று அழைக்கிறார்கள்.[2][3]
போஸ்ச் (Bosch), மோட்டரோலா (Motorola), டெல் (Dell), இண்டல் (Intel) மற்றும் அவ்லர்ட் பக்கார்ட் (Hewlett-Packard) போன்ற பல்வேறு பன்னாட்டு மின்னணு; பொறியியல் நிறுவனங்கள்; இந்தப் பாயான் லெப்பாஸ் நகரத்திற்குள் தொழிற்சாலைகளை அமைத்துள்ளன.
பொது
தொகுபிரித்தானிய மலாயாவில் கட்டப்பட்ட முதல் பொது விமான நிலையமான பினாங்கு அனைத்துலக விமான நிலையம் 1935-ஆம் ஆண்டில் திறக்கப்பட்டது. 1970-களில், பாயான் லெப்பாஸ் இலவசத் தொழில்துறை மண்டலம் (Bayan Lepas Free Industrial Zone) உருவாக்கப்பட்டது. அதுவே பாயான் லெப்பாஸ் நகரத்தின் துரிதமான வளர்ச்சிக்கு வழிவகுத்துக் கொடுததது.[4]
பாயான் லெப்பாஸ் மையப் பகுதியைச் சுற்றிலும் பல நகர்ப்புறக் குடியிருப்புகள் உள்ளன. வடக்கே பாயான் பாரு (Bayan Baru) மற்றும் சுங்கை ஆரா (Sungai Ara) குடியிருப்பு நகரங்கள். தென்கிழக்கில் பத்து மாவுங் (Batu Maung) குடியிருப்பு நகரம். அந்த வகையில் பினாங்கு மாநிலத்தில் மக்கள் நடமாட்டம் மிகுதியான பகுதிகளில் பாயான் லெப்பாஸ் நகரமும் ஒன்றாகக் கருதப் படுகிறது.
வரலாறு
தொகு19-ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியில், பாயான் லெப்பாஸ் பகுதியில் குடியேறிய ஒரு வசதிமிக்க சுமத்திரா குடும்பத்தின் பெயரால் பாயான் லெப்பாஸ் என பெயரிடப் பட்டதாக நம்பப் படுகிறது.[5][4] பாயான் லெப்பாஸ் என்றால் மலாய் மொழியில் தப்பித்த கிளி என்று பொருள்.
அந்தச் சுமத்திரா குடும்பத்தினர் கரைக்கு வந்ததும், அவர்களின் செல்லப் பறவையான கிளி தப்பியதால், அந்த இடத்திற்கு 'தப்பித்த கிளி' என்று பெயர் வைக்கப் பட்டதாகவும் அறியப் படுகிறது. மலாய் மொழியில் Bayan என்றால் கிளி; Lepas என்றால் விடுபடுதல் என்று பொருள்.
பினாங்கின் 'அரிசிக் கிண்ணம்'
தொகு1935-ஆம் ஆண்டில், பிரித்தானிய அரசாங்க அதிகாரிகளால் பாயான் லெப்பாஸ் விமான நிலையம் திறக்கப்பட்டது. பிரித்தானிய மலாயாவில் கட்டப்பட்ட முதல் விமான நிலையம் இதுவாகும். இந்த விமான நிலையம் 1979-இல் விரிவாக்கப்பட்டு பினாங்கு அனைத்துலக விமான நிலையமாக மேம்படுத்தப்பட்டது.[6]
1970-ஆண்டுகள் வரை, பாயான் லெப்பாஸ் ஒரு கிராமப் புறமாகத்தான் இருந்தது. அங்கு நெல் விவசாயம் முக்கியப் பொருளாதார நடவடிக்கையாக இருந்தது. இதன் விளைவாக, இந்த நகரம் ஒரு காலத்தில் பினாங்கின் 'அரிசிக் கிண்ணம்' என்றும் புகழப்பட்டது.[4]
பன்னாட்டு நிறுவனங்களுக்கு வரிச் சலுகைகள்
தொகு1972-ஆம் ஆண்டில், பினாங்கைப் பாதித்த பொருளாதார நெருக்கடி மற்றும் அதிகரித்து வரும் வேலையின்மையைப் போக்க, அப்போதைய பினாங்கின் முதலமைச்சர் லிம் சோங் யூ (Lim Chong Eu), பாயான் லெப்பாஸ் தொழில்துறை மண்டலத்தை உருவாக்கினார்.[5][4][7]
பாயான் லெப்பாஸில் தொழிற்சாலைகள் நிறுவ விரும்பும் பன்னாட்டு நிறுவனங்களுக்கு முன்னோடி வரிச் சலுகைகள் வழங்கப்பட்டன.
அந்த வகையில் பாயான் லெப்பாஸ் இலவசத் தொழில்துறை மண்டலத்தின் (Bayan Lepas Free Industrial Zone) தோற்றமானது; பினாங்கின் பொருளாதாரச் சரிவைத் தடுத்து நிறுத்தியது என்றும் சொல்லப்படுவது உண்டு. அதே நேரத்தில் அந்தத் தொழில்துறை மண்டலம் 'கிழக்கின் சிலிக்கான் பள்ளத்தாக்கு என பெயரும் பெற்றது.[2][3]
பாயான் லெப்பாஸ் தமிழ்ப்பள்ளிகள்
தொகுபினாங்கு தென்மேற்கு பினாங்குத் தீவு மாவட்டத்தின் (Southwest Penang Island District) பாயான் லெப்பாஸ் நகர்ப் பகுதியில் 2 தமிழ்ப்பள்ளிகள் உள்ளன. 200 மாணவர்கள் பயில்கிறார்கள். 28 ஆசிரியர்கள் பணியாற்றுகிறார்கள்.[8]
பள்ளி எண் |
இடம் | பள்ளியின் பெயர் மலாய் |
பள்ளியின் பெயர் தமிழ் |
அஞ்சல் குறியீடு | வட்டாரம் | மாணவர்கள் | ஆசிரியர்கள் |
---|---|---|---|---|---|---|---|
PBD3031 | பாயான் லெப்பாஸ் | SJK(T) Bayan Lepas[9][10] | பாயான் லெப்பாஸ் தமிழ்ப்பள்ளி | 11900 | பாயான் லெப்பாஸ் | 89 | 14 |
PBD3032 | சுங்கை ஆரா | SJK(T) Sungai Ara[11] | சுங்கை ஆரா தமிழ்ப்பள்ளி | 11900 | பாயான் லெப்பாஸ் | 111 | 14 |
மேற்கோள்கள்
தொகு- ↑ "George Town meliputi 'pulau', jelas Datuk Bandar". Buletin Mutiara. 1 May 2015. http://www.buletinmutiara.com/download/2015/BuletinMutiaraMay12015-BM.pdf.
- ↑ 2.0 2.1 "Penang: Malaysia's secret silicon island" (in en). BBC News. https://www.bbc.com/news/av/business-42686192/the-malaysian-region-that-became-a-hardware-hub.
- ↑ 3.0 3.1 "A Silicon Valley of the East: Penang's thriving start-up community" (in en-GB). Channel NewsAsia இம் மூலத்தில் இருந்து 2018-01-29 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20180129141207/https://www.channelnewsasia.com/news/asiapacific/a-silicon-valley-of-the-east-penang-s-thriving-start-up-communit-7576346.
- ↑ 4.0 4.1 4.2 4.3 "Transformation of Bayan Lepas into free trade area does not diminish its attractions | Wong Chun Wai". wongchunwai.com. பார்க்கப்பட்ட நாள் 2017-01-01.
- ↑ 5.0 5.1 "From padi fields to industrial zone - Community | The Star Online". www.thestar.com.my. பார்க்கப்பட்ட நாள் 2018-02-04.
- ↑ "Handy Penang airport information from Skyscanner". www.skyscanner.co.in. பார்க்கப்பட்ட நாள் 2017-01-01.
- ↑ Yeow, Teck Chai. "The Development of Free Industrial Zones–The Malaysian Experience". World Bank. https://cpb-us-east-1-juc1ugur1qwqqqo4.stackpathdns.com/share.nanjing-school.com/dist/1/43/files/2012/10/info.worldbank.org-s9hsat.pdf. பார்த்த நாள்: 2022-04-15.
- ↑ "Senarai Sekolah Rendah dan Menengah Jan 2020". www.moe.gov.my. பார்க்கப்பட்ட நாள் 2021-12-06.
- ↑ "SPBT SJKT BAYAN LEPAS - பாயான் லெப்பாஸ் தமிழ்ப்பள்ளி". பார்க்கப்பட்ட நாள் 15 April 2022.
- ↑ KumaraN, குமரன். "பினாங்கு பாயான் லெப்பாஸ் தமிழ்ப்பள்ளி மாணவர்களுக்கு சீனப் புத்தாண்டு அன்பளிப்பு - அநேகன்". பார்க்கப்பட்ட நாள் 15 April 2022.
- ↑ "BAYAN LEPAS: SJKT Sungai Ara's efforts to instill United Nations Sustainable Development Goals in its various school activities has earned it a recognition from the Education Ministry". பார்க்கப்பட்ட நாள் 15 April 2022.