பிறை (பினாங்கு)

பிறை (பினாங்கு)

பிறை (ஆங்கிலம்: Prai) (மலாய்: Perai) என்பது மலேசியாவின் பினாங்கு மாநிலத்தில் செபராங் பிறை பகுதியில் உள்ள துரிதமாக வளர்ச்சி பெற்று அவ்ரும் ஒரு தொழில்துறை நகரமாகும். 18 ஆம் நூற்றாண்டில் பிறை ஆற்றங்கரையில் சிறு குடியிருப்புப் பகுதியாக அமைந்திருந்த இப்பகுதி, நகரமாக வளர்ச்சியடைந்துள்ளது. பினாங்கு துணை முதலமைச்சரான பேராசிரியர் இராமசாமி பழனிச்சாமி ஜனநாயக செயல் கட்சியின் பிறை நகர சட்டமன்ற உறுப்பினர் ஆவார். பிறை நகரம் பத்து காவான் நாடாளுமன்றத் தொகுதியில் உள்ளது. இதன் நாடாளுமன்ற உறுப்பினராக ஜனநாயக செயல் கட்சியின் கஸ்தூரி பட்டு உள்ளார்.

பிறை
ஜோர்ஜ் டவுன் பினாங்கு பெருநகர பகுதி
நாடுமலேசியா
மாநிலம்பினாங்கு
உருவாக்கம்1800
அரசு
 • சட்டமன்ற உறுப்பினர்ஜனநாயக செயல் கட்சி
பேராசிரியர் இராமசாமி பழனிச்சாமி
ஏற்றம்4 m (13.1 ft)
நேர வலயம்MST (ஒசநே+8)
 • கோடை (பசேநே)- (ஒசநே)

பினாங்கு பாலம்தொகு

 
பினாங்கு பாலம்.

மலேசியாவின் பினாங்கு மாநிலத்தில் இருக்கும் பாலமான பினாங்கு பாலம் நிலப்பகுதியில் இருக்கும் பிறை நகரையும் கடலைத் தாண்டி இருக்கும் ஜோர்ஜ் டவுன் மாநகரையும் இணைக்கின்றது.

மேலும் பார்க்கதொகு

வெளி இணைப்புகள்தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=பிறை_(பினாங்கு)&oldid=2295801" இருந்து மீள்விக்கப்பட்டது