கஸ்தூரி பட்டு

கஸ்தூரி பட்டு, (Kasthuriraani Patto, பிறப்பு: 1979), மலேசிய அரசியல்வாதி ஆவார். மலேசிய நாடாளுமன்றத்தின் மக்களவைக்கு, எதிர்க்கட்சியில் தேர்வு செய்யப் பட்ட முதல் தமிழ்ப் பெண்.[1] 2018-ஆம் ஆண்டு நடைபெற்ற மலேசியாவின் 14-வது பொதுத் தேர்தலில், பினாங்கு, பத்து காவான்[2] நாடாளுமன்றத் தொகுதியில் 33,553 வாக்குகள் பெரும்பான்மையில் வெற்றி பெற்றார்.[3] சீனர்கள் மிகுதியாக வாழும் பத்து காவான் தொகுதியில், ஓர் இளம் தமிழ்ப் பெண் வெற்றி பெற்றது ஓர் அரசியல் சாதனையாகும்.

கஸ்தூரி பட்டு
Kasthuri Patto
卡斯杜丽拉妮
மலேசிய நாடாளுமன்றம்
ஜனநாயக செயல் கட்சி
பதவியில் உள்ளார்
பதவியேற்பு
மே 2013
பத்து காவான், பினாங்கு தொகுதியின்
நாடாளுமன்ற உறுப்பினர்
பதவியில்
மே 2018 – 2023
முன்னவர் இராமசாமி பழனிச்சாமி
பெரும்பான்மை 33,553
தனிநபர் தகவல்
பிறப்பு ஆகஸ்டு 09, 1979
ஈப்போ பேராக்
அரசியல் கட்சி
ஜனநாயக செயல் கட்சி
இருப்பிடம் ஈப்போ
கல்வி கான்வெண்ட் தொடக்கப்பள்ளி ஈப்போ 1987
கான்வெண்ட் உயர்நிலைப்பள்ளி ஈப்போ 1993
செயிண்ட் மைக்கல் மேல் உயர்நிலைப்பள்ளி, ஈப்போ 1997
மலேசியா நுண்ணுயிரியல்

மலாயா பல்கலைக்கழகம் 1999

பணி மலேசியா
நாடாளுமன்ற உறுப்பினர்
சமயம் இந்து
இணையம் https://www.facebook.com/kasthuripatto

அந்தத் தேர்தலில் அவர் ஜனநாயக செயல் கட்சியின் சார்பில் போட்டியிட்டார். ஆளும் பாரிசான் நேசனல் கட்சியைச் சேர்ந்த ஜெயந்தி தேவி பாலகுரு அந்தத் தேர்தலில் தோல்வி அடைந்தார். இந்தத் தொகுதியில் பதிவுபெற்ற வாக்காளர்கள் 55,479 பேர். இவர்களில் சீனர்கள் ஏறக்குறைய 62 விழுக்காட்டினர்.

கஸ்தூரி பட்டுவின் தந்தையார் அமரர் பி. பட்டு, நாடறிந்த மூத்த அரசியல்வாதியாகும்.[4] பன்மொழித் திறன் பெற்றவர். தமிழ், சீன மொழிகளில் சிறப்பாகப் பேசக் கூடியவர். ஜனநாயகச் செயல் கட்சியில் முக்கிய தலைவராக வலம் வந்தவர்.[5] அவர் பேராக், மெங்லெம்பு தொகுதியின் மலேசிய நாடாளுமன்ற மக்களவை உறுப்பினராகச் சேவை செய்தவர். மலேசிய இந்தியர்களின் உரிமைகளுக்காகப் போராடியவர். மலேசிய உள்நாட்டுக் பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு, கமுந்திங் சிறையில் 1978-ஆம் ஆண்டு சிறைவாசம் அனுபவித்தவர்.[6]

வாழ்க்கைக் குறிப்பு தொகு

கஸ்தூரி பட்டுவின் செல்லப் பெயர் கஸ்தூரி ராணி பட்டு. இவர் பேராக், ஈப்போவில் பிறந்து வளர்ந்தவர். தன் தொடக்கக் கல்வியை, 1987-ஆம் ஆண்டு, ஈப்போ கான்வெண்ட் தொடக்கப் பள்ளியில் பெற்றார்.

1993-ஆம் ஆண்டு ஈப்போ, கான்வெண்ட் உயர்நிலைப்பள்ளி; 1997-ஆம் ஆண்டு ஈப்போ, செயிண்ட் மைக்கல் மேல் உயர்நிலைப்பள்ளியில் கல்வியைத் தொடர்ந்தார். 1999-ஆம் ஆண்டு கோலாலம்பூர், மலாயா பல்கலைக்கழகத்தில் நுண்ணுயிரியல் துறையில் பட்டப் படிப்பை மேற்கொண்டார்.

நுண்ணுரியல் துறையில் ஆய்வு தொகு

பல்கலைக்கழகப் படிப்பை முடித்துக் கொண்ட பின்னர், சிலாங்கூர், பெட்டாலிங் ஜெயாவில் உள்ள கிரிபல்ஸ் நோய்க்குறியியல் நிறுவனத்தில் பணி புரிந்தார். இந்த நிறுவனம் ஆஸ்திரேலிய நிறுவனம் ஆகும். 1996-ஆம் ஆண்டு மலேசியாவில் தன் சேவையைத் தொடங்கியது.[7]

ஐந்து ஆண்டுகளுக்குப் பின்னர், மலாயா பல்கலைக்கழகத்தில் சேர்ந்து, ஊழியம் செய்தவாறு நுண்ணுரியல் துறையில் ஆய்வுகள் மேற்கொண்டார். இந்தக் கட்டத்தில் அவருக்கு அரசியலின் தாக்கம் ஏற்பட்டது.

பட்டுவிற்கு மாரடைப்பு தொகு

1995-ஆம் ஆண்டு மலேசியப் பொதுத் தேர்தல் காலத்தில் தன் தந்தை பட்டுவுடன் சேர்ந்து கொண்டு, மலேசியா முழுமையும் அரசியல் பிரசாரப் பயணம் செய்தவர் கஸ்தூரிராணி. அப்போது கஸ்தூரிராணிக்கு வயது 16. ஜ.செ.க. தேர்தல் பிரசாரத்தில் முழுமூச்சாக ஈடுபட்டார். அந்தத் தேர்தலில் ஜ.செ.க. மிக மோசமாகத் தோல்வி அடைந்தது.

அந்தச் சமயத்தில், இவருடைய தந்தையார் பட்டு, ஜ.செ.க. கட்சியின் துணைப் பொதுச் செயலாளராகவும், ‘ராக்கெட்’ இதழின் ஆசிரியராகவும் இருந்தார். அதன் பின்னர் இரண்டு மாதங்கள் கழித்து அவருக்கு மாரடைப்பு ஏற்பட்டு இறந்து போனார்.

மேற்கோள் தொகு

வெளி இணைப்புகள் தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=கஸ்தூரி_பட்டு&oldid=3662933" இருந்து மீள்விக்கப்பட்டது