பி. பட்டு

மலேசிய மூத்த அரசியல்வாதி. மனித உரிமைப் போராட்டவாதி. பல மொழிகளில் திறன் பெற்றவர். கோப்பேங் புலி;

பி.பட்டு (பிறப்பு: 10 திசம்பர் 1946 - இறப்பு: 12 சூலை 1995); (மலாய்: P. Patto; ஆங்கிலம்: P. Patto; சீனம்: P.帕托) மலேசிய மூத்த அரசியல்வாதியும், மனித உரிமைப் போராட்டவாதியும், பல மொழிகளில் திறன் பெற்றவரும் ஆவார். கோப்பேங் புலி (Gopeng Tiger); ஈப்போ சிறுத்தை (Ipoh Leopard) என்று அழைக்கப் பட்டவர்.

மாண்புமிகு
பி.பட்டு
P. Patto
பேராக் மாநில சட்டமன்றம்
கோப்பேங் தொகுதி
பதவியில்
1972–1974
Malaysian நாடாளுமன்றம்
மலேசியா, பேராக், மெங்லெம்பு
பதவியில்
1978–1982
Malaysian நாடாளுமன்றம்
மலேசியா, பேராக், ஈப்போ
பதவியில்
1986–1990
Malaysian நாடாளுமன்றம்
மலேசியா, பினாங்கு, பாகன்
பதவியில்
1995 – சூலை 1995
தனிப்பட்ட விவரங்கள்
பிறப்பு10.12.1946
பாகன் செராய், பேராக், மலேசியா
அரசியல் கட்சிஜனநாயக செயல் கட்சி (ஜ.செ.க)
துணைவர்மேரி
பிள்ளைகள்கஸ்தூரி பட்டு
வேலைஅரசியல்வாதி, மனித உரிமை போராட்டவாதி

மலேசிய உள்நாட்டுக் பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் பி. பட்டு இருமுறை கைது செய்யப்பட்டார். முதல் முறை 1978-ஆம் ஆண்டு, கமுந்திங் சிறையில் 18 மாதங்கள் சிறைவாசம்.[1] இரண்டாவது முறை 1987-ஆம் ஆண்டு, மீண்டும் அதே கமுந்திங் சிறையில் 22 மாதங்கள் சிறைவாசம்.[2]

வாழ்க்கைக் குறிப்பு

தொகு

பேராக் பாகன் செராய் பகுதியில் 1946 டிசம்பர் 10-ஆம் தேதி ஓர் ஏழ்மையான குடும்பத்தில் பிறந்தவர். பத்து வயதாக இருக்கும் போது தந்தையார் காலமானார்.

அவருடைய தாத்தாவின் பார்வையில் வளர்ந்தார். ஆசிரியர் பயிற்சி பெற்றார். இருந்தாலும் அந்தத் தொழிலை விட்டுவிட்டு 1971-ஆம் ஆண்டு அரசியலுக்கு வந்தார். மனைவியின் பெயர் மேரி.

சீன மொழியில் பேசும் ஆற்றல்

தொகு
 
பட்டு சட்டமன்ற உறுப்பினராக இருந்த கோப்பேங் நகரம்.

தமிழ், சீனம், ஆங்கிலம், மலாய் மொழிகளில் நன்றாகப் பேசக் கூடியவர். ஜனநாயக செயல் கட்சியின் மூத்தத் தலைவர்களில் ஒருவராக வலம் வந்தவர். [3]

மலேசிய இந்தியர்களின் உரிமைகளுக்காகப் போராடியவர். சிம்மக் குரலோன் பட்டு எனும் சிறப்பையும் பெற்றவர். இவருடைய மகள் கஸ்தூரி ராணி பட்டு இப்போதைய பத்து காவான் தொகுதியின் நாடாளுமன்ற உறுப்பினர்.

தாய்மொழிப் பள்ளிகளின் உரிமைகளுக்காகப் போராடியவர்

தொகு

மலேசியாவில் தமிழ், சீனம் தாய்மொழிப் பள்ளிகள் மூடப்பட வேண்டும் என்பதற்கு எதிராக மலேசிய நாடாளுமன்றத்தில் அடிக்கடி குரல் கொடுத்தவர். ஒருமுறை நாடாளுமன்றக் கூட்டத்தில் எச்சரிக்கை செய்யப் பட்டார். இன்னொரு முறை நாடாளுமன்றத்தில் இருந்து வெளியேற்றப் பட்டார்.

பி. பட்டு, மலேசிய நாடாளுமன்றத்தில், பலருக்குச் சிம்ம சொப்பனமாய் விளங்கியவர். ஈப்போ சீனிவாசகம் சகோதரர்களுக்குப் பின்னர் மக்களவையில் சொல்லின் வீரராய் வலம் வந்தவர். [4]

1972 அதிகாரப்பூர்வ இரகசியச் சட்டத்தின் கீழ் கைது

தொகு

1978-ஆம் ஆண்டு அரச மலேசிய கப்பல்படை சுவீடன் நாட்டில் இருந்து 90 இலட்சம் ரிங்கிட்டிற்கு சுபீக்கா (Missile - Spica - M - 4 ASM) எரிபடை குண்டுகளை வாங்கியது. அதில் சில பிரச்னைகள் உள்ளன என்று குரல் கொடுத்தார். அதிகாரப்பூர்வ இரகசியச் சட்டம் 1972 (Official Secrets Act 1972); சட்டத்தின் கீழ் பட்டு கைது செய்யப் பட்டார்.[5]

ஈப்போவில் இருக்கும் பேராக் மாநிலப் போலீஸ் தலைமையகத்தில் 18 மாதங்கள் தனிமைச் சிறை. அடுத்த 16 மாதங்களுக்குத் தைப்பிங் கமுந்திங் தடுப்பு மையத்தில் சிறைவாசம்.[6] துன் மகாதீர் பின் முகமது மலேசியாவின் பிரதமராக இருந்த காலக் கட்டத்தில் நடந்த நிகழ்ச்சி. அப்போதைக்கு அனைவரையும் ஈர்த்த செய்தி.[7]

பட்டுவின் வாழ்க்கையில் கசப்பான வேதனைகள்

தொகு

அதைப் போலவே 1987-இல் லாலாங் நடவடிக்கை (Operation Lalang) மூலமாகக் கைது செய்யப்பட்டார். அதில் பட்டு, கர்பால் சிங், லிம் குவான் எங், லாவ் டாக் கீ, வி. டேவிட் போன்றவர்கள் கைது செய்யப் பட்டனர்.

கமுந்திங் சிறையில் இரண்டு ஆண்டுகளுக்குத் தடுப்புக் காவலில் வைக்கப் பட்டனர். இரண்டாவது முறை கைது செய்யப் பட்டது பட்டுவின் வாழ்க்கையில் கசப்பான வேதனைகள்.

1974-ஆம் ஆண்டு முதன்முறையாக சுங்கை சிப்புட் தொகுதியில், அரசியல் சிங்கமான (துன்) சாமிவேலுவை எதிர்த்து நின்றார். 644 வாக்குகளில் தோல்வி கண்டார்.

கோப்பேங் சட்டமன்ற உறுப்பினர் பதவி

தொகு

1982-இல் இருந்து 1986 வரையில் ஈப்போ, மெங்லெம்பு தொகுதியின் நாடாளுமன்ற உறுப்பினர். 1986-இல் இருந்து 1990 வரையில் பினாங்கு பாகான் தொகுதியின் நாடாளுமன்ற உறுப்பினர்.

1990-இல் சுங்கை சிப்புட் தொகுதியில் துன் ச. சாமிவேலுவை மீண்டும் எதிர்த்து நின்றார். 1763 வாக்குகளில் தோல்வி. பட்டுவிற்கு 12,664 வாக்குகளும் சாமிவேலுவிற்கு 14,427 வாக்குகளும் கிடைத்தன.

துன் சாமிவேலு

தொகு

தேர்தல் முடிவு அறிவிக்கப்பட்ட போது பட்டுவைப் பார்த்து துன் சாமிவேலு சொன்னது:.

"நீ ஜெயித்தால் நம் இந்தியர்களுக்கு ஒரு நாடாளுமன்ற இடம் மட்டும் தான் கிடைக்கும். ஆனால் நான் தோற்றுப் போனால் ஓர் அமைச்சர் பதவியே பறிபோய்விடும். திரும்பக் கிடைக்குமா. சந்தேகம்."[8]

நகராண்மைக் கழக ஊழியர்கள் நெருங்கிய தோழர்கள்

தொகு

பேராக் வாழ் மக்களுக்கு அமரர் பட்டு நிறைய உதவிகளைச் செய்து இருக்கிறார். அங்காடிக்காரர்கள், தொழிலாளர்கள், சாலையோரச் சாப்பாட்டுக் கடைக்காரர்கள், நகராண்மைக் கழக ஊழியர்கள் போன்றவர்கள் தான் அவருக்கு நெருங்கிய தோழர்கள்.

பள்ளிப் பிள்ளைகளுக்கு கைச் செலவுகளுக்கு காசு கொடுக்கும் ஒரு நல்ல பழக்கமும் அவரிடம் இருந்து உள்ளது. பள்ளிப் பிள்ளைகளுக்குக் காசு கொடுப்பதில் அவருக்கு ஓர் அலாதிப் பிரியம்.

நூற்றுக்கணக்கான இந்தியர்களுக்கு வேலை வாய்ப்புகள்

தொகு

ஈப்போ நகராட்சி மன்றத்தின் தலைவர்களில் ஒருவராக பதவி வகிக்கும் காலத்தில், நூற்றுக் கணக்கான இந்தியர்களுக்கு வேலை வாய்ப்புகளை வழங்கி இருக்கிறார். அவரிடம் உதவி பெற்றவர்களில் சிலர், ’பட்டு’ என்று சொன்னால் கண்கலங்கிப் போகிறார்கள்.

பல நூறு தமிழர்களுக்கு குடியுரிமைகளைப் பெற்றுத் தருவதில் பட்டு முன்னோடியாகத் திகழ்ந்து உள்ளார். பட்டுவின் அலுவலகத்தில் யார் எப்பொழுது வேண்டும் என்றாலும் போகலாம். உதவிகள் கேட்கலாம்.

சீன மொழியில் உணர்ச்சிகரமான உரைகள்

தொகு

கோப்பேங் நகரின் லாவான் கூடா (Lawan Kuda) பகுதியில் உள்ள காப்பிக் கடைகளுக்கு பி. பட்டு செல்வது வழக்கம். திடீரென்று மேஜைகள் மீது ஏறி நின்று சீன மொழியில் உணர்ச்சிகரமான உரைகளை நிகழ்த்துவார்.

மனித உரிமை அத்துமீறல்கள் பற்றியும்; தாய்மொழிப் பள்ளிகளின் உரிமைகளைப் பற்றியும் ஆவேசமாகப் பேசுவார். அப்போது அவரைச் சுற்றி நிற்கும் பொது மக்கள் கைதட்டி ஆரவாரம் செய்வார்கள். அந்தக் காட்சிகள் என்றும் மறக்க முடியாதவை என்று கோப்பேங் மக்கள் இன்றும் சொல்கிறார்கள்.

ஜ.செ.க. கட்சியின் துணைப் பொதுச் செயலாளர்

தொகு

பி. பட்டு அவர்கள், சில ஆண்டுகள் ஜ.செ.க. கட்சியின் துணைப் பொதுச் செயலாளராகவும்; ‘ராக்கெட்’ இதழின் ஆசிரியராகவும் சேவை செய்தார். அதன் பின்னர் 1995 ஜூலை 12-ஆம் தேதி மாரடைப்பு ஏற்பட்டு ஈப்போ பொது மருத்துவமனையில் காலமானார். அப்போது அவருக்கு வயது 45. அந்த இழப்பு அவருடைய குடும்பத்திற்கு மட்டும் அல்ல; நாட்டிற்கே பெரிய இழப்பாகும். மலேசிய இந்தியச் சமுதாயத்திற்கு மாபெரும் இழப்பாகும்.

அமரர் பட்டு ஆற்றிய அரிய சேவைகளுக்காக ஈப்போ சிலிபின் சாலைக்கு அவருடைய பெயரை வைக்கலாம் என்று பேராக் மாநிலத்தின் முன்னாள் மந்திரி பெசார் டத்தோ ஸ்ரீ முகமட் நிஜார் கருத்து தெரிவித்தார். இருப்பினும், பல்வேறு தரப்புகளில் இருந்து எதிர்ப்புகள் வந்தன. அதனால் அந்தத் திட்டம் கைவிடப்பட்டது.

பினாங்கில் பி. பட்டு சாலை

தொகு

அதன் பின்னர் பினாங்கு மாநிலத்தில் பட்டுவின் பெயரில் ஒரு சாலைக்குப் பெயர் வைத்தார்கள். அதே போல பட்டர்வொர்த் நகரில் ராஜா ஊடா எனும் சாலைக்கு பி. பட்டு சாலை (Jalan P. Patto) என்று பெயர் மாற்றம் செய்து இருக்கிறார்கள்.[9]

பட்டு அரசியல் சுதந்திரத்திற்காக உழைத்தவர். மனித உரிமைகளுக்காகப் போராடியவர். சமயம், இனம், மொழி கடந்த மனிதச் சம உரிமைகளின் போராட்டவாதியாகப் பயணித்தவர். அதையும் தாண்டிய நிலையில் மக்களின் தோழனாக, மக்களின் தொண்டனாகப் பற்பல நிலைகளில் பயணித்து உள்ளார்.

இளம் வயதில் மரணம்

தொகு

அவரின் உடல்நலத்தில் அதிகம் அக்கறை செலுத்தவில்லை என்றும்; நீண்ட காலம் சிறை வாழ்க்கை; அதனால் அவர் 45-ஆவது இளம் வயதிலேயே இறந்து விட்டார் எனும் கருத்தும் நிலவுகிறது.

மலேசியத் தமிழர்களின் மனதில் என்றும் வாழும் தமிழ்த் தலைவர்களில் அமரர் பட்டு அவர்களும் ஒருவராவார்.

வெளி இணைப்புகள்

தொகு

மேற்கோள்கள்

தொகு
  1. My father, the late P. Patto served 18 months under this draconian law in the infamous Kem Tahanan Perlindungan Kamunting, Taiping.
  2. May 20, The Editor / TheEdge (20 May 2013). "Scions of their political fathers - Patto was detained without trial under the Internal Security Act during the government's Operasi Lalang sweep in 1987, among other ordeals he had to encounter. He passed away at the age of 48 in 1995". The Edge Markets. பார்க்கப்பட்ட நாள் 8 March 2022. {{cite web}}: |first1= has generic name (help)CS1 maint: numeric names: authors list (link)
  3. "P.Patto the peoples man". dapmalaysia.org. பார்க்கப்பட்ட நாள் 8 March 2022.
  4. "P. Patto, former DAP MP and state assemblyperson, national stalwart, a firebrand orator, husband, father, comrade and son of the land, defender of justice, freedom and democracy. -". The Leaders Online. 12 July 2019. பார்க்கப்பட்ட நாள் 8 March 2022.
  5. Wu, Min Aun & Hickling, R. H. (2003). Hickling's Malaysian Public Law, pp. 91–92. Petaling Jaya: Pearson Malaysia. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 983-74-2518-0.
  6. Patto, Kasthuri (12 July 2016). "What my father P Patto taught me". Malaysiakini. பார்க்கப்பட்ட நாள் 8 March 2022.
  7. Karpal Singh, Tiger of Jelutong: The Full Biography. Marshall Cavendish International Asia Pte Ltd,. 15 Jul 2014. பார்க்கப்பட்ட நாள் 8 March 2022. {{cite book}}: |first1= missing |last1= (help)CS1 maint: extra punctuation (link)
  8. "கஸ்தூரி பட்டு" (in அமெரிக்க ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 8 March 2022. {{cite web}}: |first1= missing |last1= (help)
  9. "Jalan P. Patto is a major road in Butterworth, Seberang Perai. It was completed and officially opened by the then Chief Minister of Penang, Lim Guan Eng, on 31 July, 2011. Jalan P. Patto connects Lorong Bunga Tanjung 7 in the north with Jalan Mak Mandin in the south. The road was named after the late Democratic Action Party member of parliament P. Patto". Penang Travel Tips (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 8 March 2022.
"https://ta.wikipedia.org/w/index.php?title=பி._பட்டு&oldid=3700382" இலிருந்து மீள்விக்கப்பட்டது