கமுந்திங் தடுப்பு மையம்

கமுந்திங் தடுப்பு மையம் (ஆங்கிலம்: Kamunting Detention Centre (KEMTA); மலாய்: Kem Tahanan Perlindungan Kamunting; சீனம்: 甘文丁拘留中心) என்பது மலேசியா, பேராக், கமுந்திங், லாருட், மாத்தாங், செலாமா மாவட்டத்தில் உள்ள ஒரு தடுப்பு மையம் ஆகும். இதனை கமுந்திங் சிறை முகாம் என அழைப்பதும் உண்டு.[1]

கமுந்திங் தடுப்பு மையம்
Kamunting Detention Centre
Kem Tahanan Perlindungan Kamunting
இடம்கமுந்திங், பேராக், மலேசியா
அமைவு4°54′33″N 100°44′13″E / 4.90917°N 100.73694°E / 4.90917; 100.73694
நிலைசெயலில் உள்ளது
பாதுகாப்பு வரையறைமிகைத் தடுப்பு
(Supermax)
கொள்ளளவு-
கைதிகள் எண்ணிக்கை2,770
திறக்கப்பட்ட ஆண்டு14 நவம்பர் 1973
முந்தைய பெயர்-
நிருவாகம்மலேசிய உள்துறை அமைச்சு
இயக்குனர்சைபுதீன் நசுத்தியோன் இசுமாயில்
Map
கமுந்திங்

இந்த மையம் 93.3 எக்டர் பரப்பளவைக் கொண்டது. தைப்பிங் நகரில் இருந்து ஏறக்குறைய 8 கி.மீ. தொலைவிலும், கமுந்திங் நகரில் இருந்து 3 கி.மீ. தொலைவிலும் அமைந்துள்ளது.

மலேசியஉள்நாட்டுப் பாதுகாப்புச் சட்டத்தின் (Internal Security Act Malaysia) கீழ் கைது செய்யப்பட்ட நபர்களைக் காவலில் வைத்து விசாரிக்க அரசாங்கம் இந்தத் தடுப்பு மையத்தைப் பயன்படுத்துகிறது.[2]


பொது தொகு

இந்த தடுப்பு மையம், மலேசியாவின் மிகைத் தடுப்பு சிறை (Malaysia's Supermax Prison) அல்லது அதிகபட்ச பாதுகாப்புச் சிறை (Maximum Security Prison) என்றும் அழைக்கப்படுகிறது. அத்துடன் மலேசிய அதிகாரிகள் அரசியல் கைதிகளை அடைத்து வைக்கும் தளம் என்றும் கூறப்படுகிறது.[3]

மலேசியஉள்நாட்டுப் பாதுகாப்புச் சட்டத்தின் பரவலான பயன்பாட்டைத் தூண்டிய குறிப்பிடத்தக்க நிகழ்வுகளில் 1987-இல் லாலாங் நடவடிக்கை (Operation Lalang); மற்றும் 1999-இல் சீர்திருத்த இயக்கம் (Reformasi Movement) ஆகியவற்றைக் குறிப்பிட்டுச் சொல்லலாம்.[4]

அல்-அர்க்காம் அல்-மவுனா குழுக்கள் தொகு

பயங்கரவாதிகள் மற்றும் தவறான வழிபாட்டு முறைகள் போன்ற தேசிய பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாக அமையலாம் என அறியப்பட்ட தனி நபர்களையும்; குழுக்களையும் தடுத்து வைப்பதற்கும் இந்த மையம் பயன்படுத்தப்பட்டு உள்ளது. கமுந்திங்கில் தடுத்து வைக்கப்பட்ட சில குறிப்பிடத்தக்க குழுக்களில் அல்-அர்க்காம் (Al-Arqam) குழு மற்றும் அல்-மவுனா (Al-Ma'unah) பயங்கரவாதக் குழுவும் அடங்கும்.

முக்கிய நபர்கள் தொகு

மேற்கோள் தொகு

  1. Tempat Tahanan Perlindungan, prison.gov.my
  2. "Detention without trial against human rights, Suhakam says on Sosma". MalaysiaNow (in ஆங்கிலம்). 16 December 2022. பார்க்கப்பட்ட நாள் 24 April 2023.
  3. "Kamunting Camp Torment: Life story under ISA". பார்க்கப்பட்ட நாள் 24 April 2023.
  4. "M'sian Politicians Who Have Been Imprisoned Or Detained. Here's A Look Back At History". பார்க்கப்பட்ட நாள் 24 April 2023.

மேலும் காண்க தொகு

வெளி இணைப்புகள் தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=கமுந்திங்_தடுப்பு_மையம்&oldid=3938922" இலிருந்து மீள்விக்கப்பட்டது