முகமது சாபு

முகமட் சாபு

முகமது சாபு அல்லது மாட் சாபு (மலாய்: Datuk Seri Haji Mohamad bin Sabu; ஜாவி: محمد سابو‎ ஆங்கிலம்: Mohamad Sabu) (பிறப்பு: அக்டோபர் 14, 1954) என்பவர் ஒரு மலேசிய அரசியல்வாதி ஆவார். அவர் தற்போது அமாணா (தேசிய நம்பிக்கை கட்சி)யின் தலைவர் ஆவார். முன்னதாக, அவர் மலேசிய இசுலாமிய கட்சியின் துணைத் தலைவராகப் பணியாற்றினார்.[1]

முகமது சாபு
Mohamad Sabu
محمد سابو
மலேசிய வேளாண் உணவு
பாதுகாப்புத் துறை அமைச்சர்
பதவியில் உள்ளார்
பதவியில்
3 திசம்பர் 2022
மலேசிய தற்காப்பு அமைச்சர்
பதவியில்
21 மே 2018 – 24 பிப்ரவரி 2020
1-ஆவது தலைவர் அமாணா (தேசிய நம்பிக்கை கட்சி)
பதவியில் உள்ளார்
பதவியில்
16 செப்டம்பர் 2015
கோத்தா ராஜா மக்களவைத் தொகுதி
பதவியில் உள்ளார்
பதவியில்
9 மே 2018
பெரும்பான்மை71,142 (2018)
73,998 (2022)
கோலா கெடா மக்களவைத் தொகுதி
பதவியில்
29 நவம்பர் 1999 – 21 மார்ச் 2004
பெரும்பான்மை991 (1999)
குபாங் கிரியான் மக்களவைத் தொகுதி
பதவியில்
25 ஏப்ரல் 1995 – 29 நவம்பர் 1999
பெரும்பான்மை10,125 (1995)
நீலாம்புரி மக்களவைத் தொகுதி
பதவியில்
21 அக்டோபர் 1990 – 25 ஏப்ரல்1995
பெரும்பான்மை8,139 (1990)
தனிப்பட்ட விவரங்கள்
பிறப்பு
Mohamad bin Sabu

14 அக்டோபர் 1954 (1954-10-14) (அகவை 70)
தாசேக் குளுகோர், பினாங்கு, மலாயா கூட்டமைப்பு (தற்போது மலேசியா)
குடியுரிமைமலேசியர்
தேசியம் மலேசியா
அரசியல் கட்சிபாஸ் (PAS)
(1981–2015)
அமாணா (AMANAH)
(தொடக்கம் 2015)
பிற அரசியல்
தொடர்புகள்
அங்காத்தான் பெர்பாடுவான் உம்மா (APU)
(1990–1996)
மாற்று முன்னணி (BA)
(1998–2004)
பாக்காத்தான் ராக்யாட் (PR)
(2008–2015)
பாக்காத்தான் (PH)
(since 2015)
துணைவர்நோர்மா அல்வி
பிள்ளைகள்4
வாழிடம்(s)பிரிவு 19, சா ஆலாம், சிலாங்கூர்
வேலைஅர்சியல்வாதி
இணையத்தளம்mohamadsabu.com
2018-ஆம் ஆண்டில் மலேசிய தற்காப்பு அமைச்சராக இருந்தபோது, அமெரிக்க தற்காப்பு அமைச்சர் ஜேம்ஸ் மத்தீசுடன் மாட்ச் சாபு

இவர் டிசம்பர் 2022 மலேசியப் பிரதமர் அன்வர் இப்ராகீம் தலைமையிலான பாக்காத்தான் அரப்பான் (Pakatan Harapan) (PH) நிர்வாகத்தில் மலேசிய வேளாண் உணவு பாதுகாப்புத் துறை அமைச்சராகப் பணியாற்றினார்.

இவர் தம்முடைய பொது மேடைப் பேச்சுத் திறனுக்காக நன்கு அறியப்படுகிறார்.[2] மலேசியாவின் உள்நாட்டுப் பாதுகாப்புச் சட்டத்தின் (Internal Security Act) (ISA) கீழ் அவர் இருமுறை தடுத்து வைக்கப்பட்டார்.[2]

எளிமை வாழ்க்கையை விரும்பும் இவர், நகைச்சுவையாகப் பேசும் தன்மை கொண்டவர். மலேசிய இந்தியர்களிடம் இவர் மிக அணுக்கமாகப் பழகக் கூடியவர். அவர்களின் பற்பல சமூகப் பிரசினைகளுக்குத் தீர்வு கண்டுள்ளார். மலேசிய இந்தியர்கள் பெரும்பாலோரிடம் செல்வாக்கு பெற்றுள்ள இவர், அவர்களுக்குப் மிகவும் பிடித்த அரசியல்வாதிகளில் ஒருவர் என்றும் அறியப்படுகிறார்.

பதவிகள்

தொகு

கல்வி

தொகு

மாட் சாபு, பினாங்கு புக்கிட் மெர்தாஜாம் தொடக்கப்பள்ளியில் பயின்றார். அதன் பின்னர் மாரா தொழில்நுட்பக் கல்லூரியில் (தற்போது மாரா தொழில்நுட்ப பல்கலைக்கழகம்; (UiTM) உணவுத் தொழில்நுட்பத்தில் படிப்பைத் தொடர்ந்தார்.

இருப்பினும், அவர் படிப்பை முடிக்கவில்லை. கல்லூரி மாணவர்கள் இயக்கம் (1971-1975) காரணமாகக் கல்லூரியில் இருந்து நீக்கப்பட்டார்.

பொது

தொகு

மாட் சாபுவின் அரசியல் வாழ்க்கை, 1975-இல் அவர், மலேசிய இசுலாமிய இளைஞர் இயக்கத்தில் (Angkatan Belia Islam Malaysia) (ABIM) சேர்ந்தபோது தொடங்கியது. 1981-இல் மலேசிய இசுலாமிய கட்சியில் சேர்ந்தார்.[3] பின்னர் அவர் அதே பாஸ் கட்சியின் துணைத் தலைவராகப் பொறுப்பு ஏற்றார்.

சிறை வாழ்க்கை

தொகு

லாலாங் நடவடிக்கை

தொகு

மலேசிய உள்நாட்டுப் பாதுகாப்புச் சட்டத்தின் (ISA) கீழ் இவர் இரண்டு முறை கைது செய்யப்பட்டார். நான்கு ஆண்டுகள் அரசியல் கைதியாகச் சிறைத்தண்டனை அனுபவித்து உள்ளார். தீவிரவாத இயக்கங்களில் ஈடுபட்டதாக 1984 முதல் 1986 வரை கமுந்திங் தடுப்பு மையத்தில் சிறை வைக்கப் பட்டார்.

அடுத்து 1987 முதல் 1989 வரை; மலேசிய அரசியலில் சர்ச்சைக்குரிய நடவடிக்கையான லாலாங் நடவடிக்கையின் காரணமாக மேலும் இரண்டு ஆண்டுகள் தடுத்து வைக்கப்பட்டார். இந்த நடவடிக்கையை களையெடுப்பு நடவடிக்கை (Operation Weeding) என்றும் அழைப்பது உண்டு.

மலேசியாவில் இனக் கலவரம் ஏற்படுவதைத் தவிர்ப்பதற்காக இந்த நடவடிக்கை எடுக்கப் பட்டதாகவும் சொல்லப் படுகிறது. இந்தத் கைது நடவடிக்கை 1987 அக்டோபர் 27-ஆம் தேதி தொடங்கி 1987 நவம்பர் 20-ஆம் தேதி வரையில் நீடித்தது.[4]

லிம் கிட் சியாங்

தொகு

ஜனநாயக செயல் கட்சியின் மூத்த தலைவர் லிம் கிட் சியாங்; மற்றும் அவரின் மகன் லிம் குவான் எங் (பினாங்கு மாநிலத்தின் முன்னாள் முதல்வர்) ஆகியோருடன் மாட் சாபு; கமுந்திங் தடுப்பு மையத்தில் சிறை வைக்கப் பட்டார்.

இரண்டு ஆண்டுகள் தடுப்பு மையத்தில் இருந்த போது, ​​லிம் கிட் சியாங்; லிம் குவான் எங் இருவருடன் நட்பை வளர்த்துக் கொண்டார். 2017-இல் அவர்கள் மீது சுமத்தப்பட்ட இனவெறி குற்றச்சாட்டுகளில் இருந்து இருவரையும் தற்காத்தார்; தவிர அந்தக் கட்டத்தில் ஜனநாயக செயல் கட்சியையும் பாதுகாத்தார்.[5]

புக்கிட் கெப்போங் நிகழ்ச்சி

தொகு

21 ஆகஸ்டு 2011 அன்று, பினாங்கு தாசேக் குளுகோரில் மாட் சாபு நிகழ்த்திய ஒரு மேடைப் பேச்சின் வழியாக ஒரு சர்ச்சையில் சிக்கிக் கொண்டார்.

1950-இல் நடைபெற்ற மூவார், புக்கிட் கெப்போங் நிகழ்ச்சியில் (Bukit Kepong incident) பங்கேற்ற முகமது இந்திரா (Muhammad Indera) என்பவரும்; மற்றும் 200 மலாயா பொதுவுடைமை கட்சியின் (Malayan Communist Party) போராளிகளும் தான் தேசியச் சாதனையாளர்கள் என்றும்; புக்கிட் கெப்போங் காவல் நிலையத்தின் காவலர்கள் அல்ல என்றும்; அந்த மேடைப் பேச்சில் கூறினார்.

உண்மையான தேசிய வீரர்கள்

தொகு

மேலும் அவர் உரையாற்றும் போது, புக்கிட் கெப்போங் காவல் நிலையத்தின் அதிகாரிகள் அனைவரும் பிரித்தானிய அதிகாரிகள் ஆவார்கள்; புக்கிட் கெப்போங் நிகழ்ச்சியில், மலாயா பொதுவுடைமை கட்சியின் உறுப்பினர்கள்; பிரித்தானியர்களுடன் போரிட்டதால், மலாயா பொதுவுடைமை கட்சியின் உறுப்பினர்கள்தான் உண்மையான தேசிய வீரர்கள் என்றும் கூறினார்.[6][7]

புக்கிட் கெப்போங் காவல் நிலையத்தைப் பாதுகாத்து இறந்த காவல்துறை அதிகாரிகள் தேசிய வீரர்கள் அல்ல என்றும் கூறினார். இந்த உரையின் காணொளி யூடியூப்பில் பதிவேற்றம் செய்யப்பட்டது. பின்னர் அந்தக் காணொளி எதிர்மறையான கருத்துகளையும் பெற்றது. மாட் சாபுவின் பேச்சு காவல் நிலையத்தில் இறந்த காவல்துறையினரின் குடும்ப உறுப்பினர்களையும், மற்றும் பிற தேசிய வீரர்களையும் அவமதித்ததாகக் கருதப்பட்டது.[8]

மாட் சாபுவின் வீடு எரிப்பு

தொகு

பினாங்கு தாசேக் குளுகோரில் மாட் சாபுவின் மேடைப் பேச்சிற்குப் பிறகு, ஒரு மாதம் கழித்து 20 செப்டம்பர் 2011 அன்று, சா ஆலாம், பிரிவு 19-இல் இருந்த அவரின் வீடு மண்ணெண்ணெய் தெளிக்கப்பட்டு எரிக்கப்பட்டது. அவரின் மனைவி நோர்மா அல்வி (57) பெர்லிஸ் கங்கார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

21 செப்டம்பர் 2011 அன்று, பட்டர்வொர்த் அமர்வு நீதிமன்றத்தில் குற்றவியல் சட்டத்தின் பிரிவு 500-இன் கீழ் மாட் சாபு மீது குற்றம் சாட்டப்பட்டது. ஆகஸ்டு 21, 2011 அன்று, பினாங்கு பாடாங் மெனோராவில் நடந்த ஒரு மேடைப் பேச்சில், காவல்துறை மற்றும் அவர்களின் குடும்பத்தினரின் தோற்றத்தை இழிவு படுத்தியதாகக் குற்றம் சாட்டப்பட்டது.

கோத்தா ராஜா தேர்தல் முடிவுகள்

தொகு
 
2013 கோலாலம்பூர், பிரிக்பீல்ட்ஸ் பேரணியில் மாட்ச் சாபு
மலேசியப் பொதுத் தேர்தல் 2022 கோத்தா ராஜா தொகுதி[1]
பொது வாக்குகள் %
பதிவு பெற்ற வாக்காளர்கள்
(Registered Electors)
244,712 -
வாக்களித்தவர்கள்
(Turnout)
199,878 80.81
செல்லுபடி வாக்குகள்
(Total Valid Votes)
197,740 100.00%
கிடைக்காத அஞ்சல் வாக்குகள்
(Unreturned Ballots)
552 -
செல்லாத வாக்குகள்
(Rejected Ballots)
1,586 -
பெரும்பான்மை
(Majority)
73,998 -
வெற்றி பெற்ற கட்சி பாக்காத்தான்
Source: Parliament Seat or Candidate in Selangor 15th GE

கோத்தா ராஜா வேட்பாளர் விவரங்கள்

தொகு
மலேசியப் பொதுத் தேர்தல் 2022 (கோத்தா ராஜா தொகுதி)
சின்னம் வேட்பாளர் கட்சி வாக்குப்பதிவு % ∆%
  முகமது சாபு
(Mohamad Sabu)
பாக்காத்தான் 123,306 62.36% -8.22
  முகமட் தியா பகருன்
(Mohamed Diah Baharun)
பெரிக்காத்தான் 49,308 24.94% +24.94  
  கசேந்திரன் துரைசாமி
(Kajendran Doraisamy)
பாரிசான் 22,225 11.24% -2.71
  பாமி பசுலான் மூடா
(Fahmi Bazlan Muda)
பெஜுவாங் 2,063 1.04% +1.04  
  சாரா அபிகா சைனுல் அரிப்
(Che Sara Afiqah Zainul Arif)
மக்கள் கட்சி 360 0.18% +0.18  
  ரவீந்திரன் பெரியசாமி
(P Raveentharan Periasamy)
சுயேச்சை 209 0.11% +0.11  
  குமார் கருணாநிதி
(Kumar Karananedi)
சுயேச்சை 163 0.08% +0.08  
  சுரேந்தர் செல்வராசு
(Surendhar Selvaraju)
சுயேச்சை 106 0.05% +0.05  


விருதுகள்

தொகு

மலேசிய விருதுகள்

தொகு

வெளிநாட்டு விருதுகள்

தொகு

மேற்கோள்கள்

தொகு
  1. "Mat Sabu, from renowned speaker to minister", The Sun Daily, 12 May 2018
  2. 2.0 2.1 Tan, Joceline (5 June 2011). "Uncharted road ahead for PAS". The Star (Malaysia). http://thestar.com.my/columnists/story.asp?col=joceline&file=/2011/6/5/columnists/joceline/8840618&sec=Joceline. 
  3. "[BUKU KECIL KHAS] Imbauan Separuh Abad ABIM Gerakan Ilmu dan Bakti". anyflip. பார்க்கப்பட்ட நாள் 2022-01-12.
  4. "Malaysia's Operasi Lalang: Who is telling the truth?". New Mandala. 15 February 2011. பார்க்கப்பட்ட நாள் 23 February 2022.
  5. Became friends with Kit Siang and his son in detention camp! Mohamad Sabu: I know DAP is not racist பரணிடப்பட்டது 23 சூன் 2018 at the வந்தவழி இயந்திரம், http://www.malaymail.com, 25 October 2017.
  6. "Waris tragedi Bukit Kepong tersinggung". Utusan Malaysia. 28 August 2011. பார்க்கப்பட்ட நாள் 2 September 2011.
  7. Bukit Kepong Tragedy: The 25 Policemen Were True Nationalists, Says Karpal, The Malaysian Mirror, 30 August 2011
  8. "Mat Sabu's remarks an insult, says Muhyiddin". The Star Malaysia. 28 August 2011. பார்க்கப்பட்ட நாள் 2 September 2011.
  9. "Mat Sabu kini bergelar Datuk Seri". Berita Harian. https://www.bharian.com.my/berita/nasional/2023/02/1058475/mat-sabu-kini-bergelar-datuk-seri. 
  10. "Mat Sabu receives Russia's Medal of Spiritual Unity". The Sun Daily. 17 May 2023. https://www.thesundaily.my/local/mat-sabu-receives-russia-s-medal-of-spiritual-unity-PA10987549. 

வெளி இணைப்புகள்

தொகு
 
விக்கிமீடியா பொதுவகத்தில்,
Mohamad Sabu
என்பதில் ஊடகங்கள் உள்ளன.
"https://ta.wikipedia.org/w/index.php?title=முகமது_சாபு&oldid=4093471" இலிருந்து மீள்விக்கப்பட்டது