பினாங்கு முதலமைச்சர்
பினாங்கு முதலமைச்சர் (Ketua Menteri Pulau Pinang) அல்லது பேராக் முதல்வர் (Chief Minister of Penang) என்பது மலேசிய மாநிலமான பினாங்கு மாநிலத்தின் அரசுத் தலைவர் ஆகும். அத்துடன் அவர் பினாங்கு மாநில சட்டமன்றத்தின் (Penang State Legislative Assembly) பெரும்பான்மைக் கட்சி அல்லது மிகப்பெரிய கூட்டணிக் கட்சியின் தலைவரும் ஆவார்.
பினாங்கு முதலமைச்சர் Chief Minister of Penang Ketua Menteri Pulau Pinang | |
---|---|
பினாங்கு மாநில அரசு | |
உறுப்பினர் | பினாங்கு மாநில ஆட்சிக்குழு |
அறிக்கைகள் | பினாங்கு மாநில சட்டமன்றம் |
வாழுமிடம் | செரி தெரத்தாய் (Seri Teratai) |
நியமிப்பவர் | பினாங்கு ஆளுநர் |
பதவிக் காலம் | 5 ஆண்டுகள் அல்லது அதற்கும் குறைவானது, ஒருமுறை புதுப்பிக்கத்தக்கது |
அரசமைப்புக் கருவி | Constitution of the State of Penang |
முதலாவதாக பதவியேற்றவர் | வோங் பாவ் நீ (Wong Pow Nee) |
உருவாக்கம் | 31 ஆகத்து 1957 |
இணையதளம் | cm |
தற்போது பினாங்கு முதலமைச்சர் பதவியில் உள்ளவர் சாவ் கொன் யாவ் (Chow Kon Yeow). இவர் 14 மே 2018 முதல் பதவி வகித்து வருகிறார். இவர் பினாங்கு மாநிலத்தின் 5-ஆவ்து முதலமைச்சர் ஆவார். 2008 மற்றும் 2018-க்கும் இடையில் முதலமைச்சராக இருந்த லிம் குவான் எங்கிற்குப் பின் சாவ் கொன் யாவ் பதவியேற்றார்.
முதலமைச்சரின் அதிகாரப்பூர்வ இல்லம் பினாங்கு ஜார்ஜ் டவுன் தலைநகரில் உள்ள செரி தெரத்தாய் (Seri Teratai) ஆகும்.[1]
நியமனம்
தொகுமாநில அரசமைப்புச் சட்டத்தின்படி, பினாங்கு ஆளுநர் முதலில் பினாங்கு முதலமைச்சரரை நிர்வாகக் குழுவின் தலைவராக நியமிப்பார். அந்த வகையில் நியமிக்கப்படும் முதலமைச்சர் மாநில சட்டமன்றத்தி உறுப்பினராக இருக்க வேண்டும். அத்துடன் மாநில சட்டமன்றத்தின் பெரும்பான்மை உறுப்பினர்களின் நம்பிக்கையையும் பினாங்கு முதலமைச்சர் பெற்று இருக்க வேண்டும்.
பினாங்கு முதலமைச்சர் ஒரு மலேசியக் குடிமகனாக இருக்க வேண்டும். முதலமைச்சரின் ஆலோசனையின் பேரில், மாநிலச் சட்டமன்ற உறுப்பினர்களில் இருந்து 10 அல்லது நான்கிற்கும் குறையாத உறுப்பினர்களை மாநில செயற்குழுவில் பினாங்கு ஆளுநர் நியமிப்பார்.
ஆட்சிக்குழுவின் உறுப்பினர்கள் பினாங்கு ஆளுநர் முன்னிலையில் பதவி உறுதிமொழி; பற்று உறுதிமொழி மற்றும் இரகசியக் காப்பு உறுதிமொழி எடுக்கவேண்டும். மாநிலச் சட்டமன்ற நடவடிக்கைகளுக்கு ஆட்சிக்குழுவினர் கூட்டாகப் பொறுப்பு ஏற்க வேண்டும். அத்துடன் அவர்கள் வருமானம் தரும் எந்த ஒரு பதவியையும் வகிக்கக் கூடாது; அல்லது கருத்து வேற்றுமைகளை ஏற்படுத்தும் எந்த ஒரு வணிகம் அல்லது தொழிலிலும் ஈடுபடக்கூடாது.
நம்பிக்கையில்லா வாக்கெடுப்பு
தொகுமாநில அரசாங்கம் தனது சட்டத்தைச் சட்டமன்றத்தில் நிறைவேற்ற முடியாவிட்டால்; அல்லது மாநிலச் சட்டமன்றம் அரசாங்கத்தின் மீது நம்பிக்கையில்லா வாக்கெடுப்பை நிறைவேற்றினால்; பினாங்கு முதலமைச்சர் உடனடியாகப் பதவிதுறப்பு செய்ய வேண்டும். மாற்று முதலமைச்சரைத் தேர்ந்தெடுப்பது ஆளுநரின் பொறுப்பு ஆகும். ஆளுநர் அனுமதிக்கும் காலம் வரையில்; முதலமைச்சர் பதவி வகிக்காத மாநில ஆட்சிக்குழு உறுப்பினர் ஒருவர் பதவியில் இருப்பார்.
ஒரு தேர்தலில் தோல்வி அடைந்த முதலமைச்சர் தன் பதவியைத் துறப்பு செய்ததைத் தொடர்ந்து; அல்லது ஒரு முதலமைச்சரின் மரணத்தைத் தொடர்ந்து; ஆளும் கட்சியால் தேர்வு செய்யப்பட்ட ஒரு நபரை புதிய முதலமைச்சராக ஆளுநராக நியமிப்பார்.
அதிகாரங்கள்
தொகுஒரு முதலமைச்சரின் அதிகாரம் பல வரம்புகளுக்கு உட்பட்டது. ஒரு முதலமைச்சர் அவரின் கட்சியின் தலைவர் பதவியில் இருந்து நீக்கப்பட்டால் அல்லது அவருடைய அரசாங்கம் சட்ட மன்றத்தில் நம்பிக்கையில்லா வாக்கெடுப்பில் தோல்வியுற்றால்; புதிய ஒரு மாநிலத் தேர்தலுக்கு முதலமைச்சர் பரிந்துரை செய்ய வேண்டும்; அல்லது அந்த முதலமைச்சர் பதவிதுறப்பு செய்ய வேண்டும்; அல்லது ஆளுநரால் பதவி நீக்கம் செய்யப்பட வேண்டும்.
வழங்கல் மசோதா (Supply Bill) அல்லது முக்கியமான கொள்கை தொடர்பான சட்டத்தை ஒரு முதலமைச்சரால் நிறைவேற்ற முடியாமல் போனால், நம்பிக்கையில்லா வாக்கெடுப்பு போன்று அரசாங்கத்தில் இருந்து அந்த முதலமைச்சர் பதவிதுறப்பு செய்ய வேண்டும்; அல்லது அவர் மாநிலச் சட்டமன்றத்தைக் கலைக்க வேண்டும்.
தற்காலிக மாநில அரசின் முதலமைச்சர்
தொகுமுதலமைச்சரின் ஆலோசனையின் பேரில் ஆளுநரால் கலைக்கப்பட்ட மாநிலச் சட்டமன்றம் அதன் முதல் கூட்டத்தின் தேதியில் இருந்து ஐந்து ஆண்டுகள் வரை தொடர்ந்து செயல்படலாம். மாநிலச் சட்டமன்றம் கலைக்கப்பட்ட நாளிலிருந்து பொதுத் தேர்தலை 60 நாட்கள் வரை தாமதப்படுத்த மாநில அரசியலமைப்பு அனுமதி வழங்குகிறது.
மாநிலச் சட்டமன்றம் கலைக்கப்பட்ட நாளிலிருந்து 120 நாட்களுக்குள் மாநிலச் சட்டமன்றம் மீண்டும் கூட்டப்பட வேண்டும். வழக்கமாக, ஒரு மாநிலச் சட்டமன்றம் கலைக்கப்படுவதற்கும் அடுத்த மாநிலச் சட்டமன்றம் கூட்டப்படுவதற்கும் இடைப்பட்ட காலத்தில், முதலமைச்சர் மற்றும் அவரின் நிர்வாகக் குழுவினரும் தான் காபந்து அரசாங்க பதவியில் (Caretaker Government) இருப்பார்கள்.
பினாங்கு முதலமைச்சர் பட்டியல்
தொகு1957 முதல் பினாங்கு மாநிலத்தின் முதலமைச்சர் பட்டியல் பின்வருமாறு:[2]
அரசியல் கட்சிகள்:
கூட்டணி | உறுப்புக் கட்சி | கால அளவு |
---|---|---|
– | கெராக்கான் (Gerakan) | |
மலேசிய கூட்டணி கட்சி (ALLIANCE) | அம்னோ (UMNO) | 1957–1973 |
பாரிசான் நேசனல் (BN) | 1973–தற்போது வரையில் | |
பாக்காத்தான் ராக்யாட் (PR) | பாக்காத்தான் ராக்யாட் (PKR) | 2008–2015 |
பாக்காத்தான் அரப்பான் (PH) | 2015–தற்போது வரையில் |
பெயர் | பதவியேற்பு பதவி முடிவு |
ஆண்டுகள் தவணைகள் |
கட்சி | |||
---|---|---|---|---|---|---|
1 | டான் ஸ்ரீ வோங் பாவ் நீ (Wong Pow Nee) |
31 ஆகஸ்டு 1957 11 மே 1969 |
12 ஆண்டுகள் 2 தவணைகள் |
கூட்டணி (மசீச) | ||
2 | துன் டாக்டர் லிம் சோங் இயூ (Lim Chong Eu) |
21 மே 1969 24 அக்டோபர் 1990 |
12 ஆண்டுகள் 5 தவணைகள் |
கெராக்கான் | ||
3 | டான் ஸ்ரீ டாக்டர் கோ சு கூன் (Koh Tsu Koon) |
25 அக்டோபர் 1990 10 மார்ச் 2008 |
17 ஆண்டுகள் 4 தவணைகள் |
பாரிசான் (கெராக்கான்) | ||
4 | லிம் குவான் எங் (Lim Guan Eng) |
11 மார்ச் 2008 14 மே 2018 |
10 ஆண்டுகள் 2 தவணைகள் |
ராக்யாட் (ஜசெக) | ||
5 | சாவ் கொன் யாவ் (Chow Kon Yeow) |
14 மே 2018 | தற்போது வரையில் | பாக்காத்தான் (ஜசெக) |
மேலும் காண்க
தொகுமேற்கோள்கள்
தொகு- ↑ "myPenang". www.mypenang.gov.my. பார்க்கப்பட்ட நாள் 2018-05-12.
- ↑ Penang www.worldstatesmen.org Accessed 12 June 2010