கோ சு கூன்

கோ சு கூன்

டான் ஸ்ரீ டாக்டர் கோ சு கூன் (Koh Tsu Koon) மலேசியாவின் பினாங்கு மாநிலத்தின் மூன்றாவது முதலமைச்சர் மற்றும் மலேசிய மக்கள் இயக்கக் கட்சியின் முன்னாள் தலைவரும் ஆவார். இவர் 2008 ஆம் ஆண்டு நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தலில், இப்போதைய பினாங்கு துணை முதலமைச்சர் பேராசிரியர் இராமசாமி பழனிச்சாமியிடம் பத்து காவான் நாடாளுமன்ற தொகுதியில் போட்டியிட்டுத் தோல்வியடைந்தார்.[1] 2008ஆம் ஆண்டு நடைபெற்ற மலேசிய பொதுத் தேர்தலில் இவரின் மலேசிய மக்கள் இயக்கக் கட்சி, பினாங்கு சட்டமன்றத்தில், பாக்காத்தான் ராக்யாட்டின் ஜனநாயக செயல் கட்சியிடம் 19 இடங்களையும், மக்கள் நீதிக் கட்சியிடம் 9 இடங்களையும், மலேசிய இஸ்லாமிய கட்சியிடம் 1 இடத்தையும் பறிகொடுத்து இருபது ஆண்டு மலேசிய மக்கள் இயக்கக் கட்சி மற்றும் தேசிய முன்னணி (மலேசியா)யின் பினாங்கு ஆட்சியை இழந்தார்.[2].

கோ சு கூன்
許子根
Koh Tsu Koon.jpg
முதலமைச்சர்
பினாங்கு, மலேசியா
பதவியில்
1990–2008
பின்வந்தவர் லிம் குவான் எங்
தலைவர்
மலேசிய மக்கள் கட்சி
பதவியில்
2008–2013
தனிநபர் தகவல்
பிறப்பு 26 ஆகத்து 1949 (1949-08-26) (அகவை 73)
ஜோர்ஜ் டவுன், பினாங்கு, மலேசியா
அரசியல் கட்சி மலேசிய மக்கள் இயக்கக் கட்சி - தேசிய முன்னணி (மலேசியா)

செனட்டர்தொகு

மூத்த அரசியல்வாதியான இவரை 2008 ஆம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலுக்குப் பின் அப்போதைய மலேசிய பிரதமர் அப்துல்லா அகமது படாவி செனட்டராக்கி அவரது அமைச்சரவையில் அமைச்சர் ஆக்கினார்.

மேற்கோள்கள்தொகு

  1. "Malaysia Decides 2008". த ஸ்டார். 2010-01-11 அன்று மூலம் பரணிடப்பட்டது. 20 டிசம்பர் 2009 அன்று பார்க்கப்பட்டது.
  2. "Penang State Assembly Election Result". 2008-06-21 அன்று மூலம் பரணிடப்பட்டது. 2014-03-06 அன்று பார்க்கப்பட்டது.
"https://ta.wikipedia.org/w/index.php?title=கோ_சு_கூன்&oldid=3685759" இருந்து மீள்விக்கப்பட்டது