புக்கிட் மெர்தாஜாம்

புக்கிட் மெர்தாஜாம் (ஆங்கிலம்: Bukit Mertajam; சீனம்: 大山脚; என்பது மலேசியா, பினாங்கு,செபராங் பிறை மாவட்டத்

புக்கிட் மெர்தாஜாம் (ஆங்கிலம்: Bukit Mertajam; சீனம்: 大山脚; என்பது மலேசியா, பினாங்கு, மத்திய செபராங் பிறை மாவட்டத்தில் அமைந்துள்ள நகரம். மலேசியாவில் தமிழர்கள் வரலாற்றுத் தடம் பதித்த முக்கியமான இடங்களில் இதுவும் ஒன்றாகும்.

புக்கிட் மெர்தாஜாம்
Bukit Mertajam
பினாங்கு
புக்கிட் மெர்தாஜாம் நகரம்
புக்கிட் மெர்தாஜாம் நகரம்
Map
புக்கிட் மெர்தாஜாம் is located in மலேசியா
புக்கிட் மெர்தாஜாம்
      புக்கிட் மெர்தாஜாம்
ஆள்கூறுகள்: 5°21′55.692″N 100°27′38.3898″E / 5.36547000°N 100.460663833°E / 5.36547000; 100.460663833
நாடு மலேசியா
மாநிலம் பினாங்கு
மாவட்டம்மத்திய செபராங் பிறை மாவட்டம்
அரசு
 • மலேசியா உள்ளாட்சி மன்றம்செபராங் பிறை நகராண்மைக் கழகம்
 • மேயர்ரோசாலி மொகாமட்
மக்கள்தொகை
 • மொத்தம்2,12,300
நேர வலயம்மலேசிய நேரம் ஒ.ச.நே + 08:00
மலேசிய அஞ்சல் குறியீடு
14000
மலேசியத் தொலைபேசி எண்+6045
புக்கிட் மெர்தாஜாம் தோட்டத் தமிழ்ப்பள்ளி

1900-ஆம் ஆண்டுகளில் இங்கு வாழ்ந்த தமிழர்கள் இந்த நகரத்தை சுங்குரும்பை என்று அழைத்தார்கள். சுங்கை (Sungei) என்றால் மலாய் மொழியில் ஆறு; ரும்பை (Rumbai) என்றால் உயர்ந்த வகை வாசனைச் செடி. இத்தகைய வாசனைச் செடிகள் ஆற்றங்கரை ஓரங்களில் அதிகமாக இருந்ததால் சுங்குரும்பை என்று பெயராகியது. பிரித்தானியர்களும், சீனர்களும் புக்கிட் மெர்தாஜாம் என்று அழைத்தனர்.

பொது

தொகு

செபராங் பிறை மாவட்டத்தின் நிர்வாக மையமாக விளங்கும் புக்கிட் மெர்தாஜாம்; அண்மைய காலங்களில் அபிரிதமான வளர்ச்சி கண்டு வருகிறது. அதே சமயத்தில் மக்கள் தொகையும் பெருகி வருகிறது. 2019-ஆம் ஆண்டில் அதன் மக்கள் தொகை 212,300. [1]

இங்குதான் 1845-ஆம் ஆண்டில் செரோக் தெக்குன் கல்வெட்டு நினைவுச் சின்னம் (Cherok Tok Kun Inscription) கண்டுபிடிக்கப்பட்டது. பல்லவம்; தமிழ்; சமஸ்கிருதம் ஆகிய மூன்று மொழிகளில் எழுதப்பட்ட கி.பி. 600-ஆம் ஆண்டுக் காலத்துக் கருங்கல் கல்வெட்டு. ரமணிபரன் எனும் ரமவுனிபா பல்லவ மன்னர் ஆட்சி செய்ததை அந்தக் கல்வெட்டு நினைவூட்டுகிறது. [2]

புனித அன்னம்மாள் தேவாலயம்

தொகு

19-ஆம் நூற்றாண்டில் இந்த நிலப்பகுதி ஒரு வேளாண்மைப் பகுதியாக உருவகம் கண்டது. இருப்பினும் அந்த நூற்றாண்டின் இறுதி வாக்கில் பிறை நோக்கி இரயில் பாதைகள் போடப் பட்டன. அதனால் போக்குவரத்துத் துறையின் மைய நகரமாகவும் புகழ் பெற்றது.[3]

இங்குள்ள புனித அன்னம்மாள் தேவாலயம் உலக அளவில் புகழ்பெற்றது. ஆண்டு தோறும் பெரிய அளவில் நோவெனா (Novena) திருவிழா நடைபெறும். மலேசியாவின் பல பாகங்களில் இருந்தும்; வெளிநாடுகளில் இருந்தும் கிறிஸ்துவ மக்கள் இங்கு ஒன்றுகூடி பிரார்த்தனைகள் செய்வார்கள்.[4]

சொற்பிறப்பியல்

தொகு

புக்கிட் மெர்தாஜாம் எனும் பெயர் மெர்தாஜாம் மலை எனும் பெயரில் இருந்து மருவியதாகச் சொல்லப் படுகிறது. மலாய் மொழியில் மெர்தாஜாம் என்றால் கூர்மை என்று பொருள். புக்கிட் மெர்தாஜாம் என்றால் கூர்மையான மலை என்று பொருள்.[5][6] மெர்தாஜாம் மலையின் உச்சிப் பாகம் மிக கூர்மையான நிலப்பரப்பைக் கொண்டு இருந்ததால் அதற்கு அந்தப் பெயர் வந்ததாகச் சொல்லப் படுகிறது.[5]

வரலாறு

தொகு
 
பூஜாங் வெளி நாகரிகத்தின் ஒரு பகுதியான பத்து லிந்தாங் எனும் இடத்தில் கண்டு எடுக்கப்பட்ட நடனமாதுவின் கற்சிலை
 
புக்கிட் மெர்தாஜாம் வட்டாரத்தில் ஒரு குடியிருப்புப் பகுதி

பல நூற்றாண்டுகளுக்கு முன்னர், இந்து - பௌத்த சமயங்கள் கலந்த பூஜாங் பள்ளத்தாக்கு நாகரிகத்தின் ஒரு பகுதியாக புக்கிட் மெர்தாஜாம் பிரசித்தி பெற்று விளங்கி உள்ளது. இங்குதான் 1845-ஆம் ஆண்டில் செரோக் தெக்குன் கல்வெட்டு கண்டுபிடிக்கப்பட்டது.[7] அந்தக் கல்வெட்டை ஒரு நினைவுச் சின்னமாகப் போற்றிப் பாதுகாத்து வருகிறார்கள். இப்போது கெடா என்று அழைக்கப்படும் கடாரத்தை, பூஜாங் பள்ளத்தாக்கு நாகரிகம், கி.பி 6-ஆம் நூற்றாண்டு வரை ஆட்சி செய்து உள்ளது.

1800-ஆம் ஆண்டில் பிரித்தானிய கிழக்கிந்திய நிறுவனம் செபராங் பிறை நிலப்பகுதியைக் கையகப்படுத்தியது. அதன் பின்னர் 19-ஆம் நூற்றாண்டில் தான் புக்கிட் மெர்தாஜாம் உருவானது.[3] அதற்கு முன்னர், இந்தப் பகுதியில் மலாய் மற்றும் சயாமிய விவசாயிகள் வசித்து வந்தார்கள்.[3]

வாசனை நறுமணத் தோட்டங்கள்

தொகு

வெல்லெஸ்லி (செபராங் பிறை) புதிதாகக் கையகப் படுத்தப்பட்டதும்; பிரித்தானிய அரசு அங்கு வாசனை நறுமணப் பொருள் சாகுபடியை ஊக்குவித்தது. சீனக் குடியேறிகள் பெரும்பாலும் ஹக்கா வம்சாவளியைச் சேர்ந்தவர்கள். புக்கிட் மெர்தாஜாமிற்குக் குடிபெயர்ந்தார்கள்.[3][5] அவர்கள் மெர்தாஜாம் மலையின் அடிவாரத்தில் வாசனை நறுமணத் தோட்டங்களை உருவாக்கினார்கள். தவிர கருங்கல் வெட்டி எடுக்கும் தொழிலிலும் ஈடுபட்டார்கள்.

19-ஆம் நூற்றாண்டின் நடுப்பகுதியில் இந்தப் பகுதியின் தென் புலத்தில் சர்க்கரை தோட்டங்கள் நிறுவப்பட்டன. தென்னிந்தியாவில் இருந்து ஆயிரக் கணக்கான தமிழர்கள் அந்தத் தோட்டங்களுக்குக் கொண்டு வரப்பட்டார்கள். மலாயா வரலாற்றில் இதுவும் தனி ஒரு காலச்சுவடு.

புக்கிட் மெர்தாஜாம் - பிறை இரயில் பாதை

தொகு

இந்தப் பொருளாதார வளர்ச்சி நடவடிக்கைகள் வெல்லஸ்லி மாநிலம் முழுவதும் சாலைகள் அமைப்பதற்கு வழிவகுத்தன.[3] பல சாலைகள் புக்கிட் மெர்தாஜாமில் ஒன்றிணைந்தன. அதனால் பினாங்கு துறைமுகத்திற்கு விவசாய விளைபொருட்களைக் கொண்டு செல்வதற்கான போக்குவரத்து மையமாகவும் மாறியது.

1899-ஆம் ஆண்டில் புக்கிட் மெர்தாஜாம் நகருக்கும்; பிறை கடலோரத் துறைமுகப் பகுதிக்கும் இடையில் ஓர் இரயில் பாதை போடப் பட்டது. அதன் மூலம் புக்கிட் மெர்தாஜாம் ஒரு போக்குவரத்து மையமாக முதன்மை பெற்றது.[3]

ரப்பர் மற்றும் ஈயம் போன்ற பொருட்களைப் பிறை துறைமுகத்திற்கு விரைவாக கொண்டு செல்வதில் எளிமை ஏற்பட்டது.[3] அந்தக் கட்டத்தில், பள்ளிகள், ஒரு மாஜிஸ்திரேட் நீதிமன்றம் மற்றும் ஒரு மருத்துவமனை போன்ற பொது வசதிகள் அங்கு உருவாகின. மேலும் 20-ஆம் நூற்றாண்டின் தொடக்கத்தில், வெல்லஸ்லி மாவட்டத்தின் நிர்வாக மையமாகவும் புக்கிட் மெர்தாஜாம் தேர்வு செய்யப்பட்டது.

பண்டார் பெர்டா

தொகு

புக்கிட் மெர்தாஜாம் நகராண்மைக் கழகம் 1953-ஆம் ஆண்டில் நிறுவப்பட்டது. [[8] அதே கட்டத்தில், இது வெல்லஸ்லி மாநிலத்திற்குள் உள்ள ஐந்து ஊராட்சிக் கழகங்களிலும் ஒன்றாகும். இந்த உள்ளூராட்சி அரசாங்கங்கள் 1976 வாக்கில் ஒன்றிணைக்கப் பட்டன. இன்றைய செபராங் பிறை நகராட்சி மன்றமாக மாற்றம் கண்டன. [9]

2006-ஆம் ஆண்டில், நகராட்சி மன்றத்தின் தலைமையகம் பட்டர்வர்த்தில் இருந்து புக்கிட் மெர்தாஜாமுக்கு அருகில் உள்ள பண்டார் பெர்டா (Bandar Perda) நகரத்திற்கு மாற்றம் செய்யப் பட்டது. அதுவே செபராங் பிறை ஊராட்சி நிர்வாக இடமாகவும் மாறியது. [9]

1970-ஆம் ஆண்டுகளில், புக்கிட் மெர்தாஜாமைச் சுற்றி உள்ள பகுதிகளில் குடியிருப்புச் சிறுநகரங்கள் உருவாகின. புக்கிட் மின்யாக் (Bukit Minyak); புக்கிட் தெங்கா (Bukit Tengah) போன்ற பகுதிகள் தொழில்மய வட்டாரங்களாகவும் உருவெடுத்தன. [10][11]

புவியியல்

தொகு

புக்கிட் மெர்தாஜாம் நகரம் மெர்தாஜாம் மலைக்கு அருகில் அமைந்து உள்ளது. இது வண்டல் சமவெளிகளால் சூழப்பட்டு உள்ளது. [12] புக்கிட் மெர்தாஜாம் நகரின் அண்டை மாநிலங்களாக பெர்மாத்தாங் பாவ் (Permatang Pauh); கிழக்கில் மெங்குவாங் தித்தி (Mengkuang Titi), தெற்கே அல்மா பெர்மாத்தாங் திங்கி, மேற்கில் புக்கிட் தெங்காவின் தொழில்துறை பேட்டை போன்றவை உள்ளன. [13]

சுற்றுலா தளங்கள்

தொகு
 
புக்கிட் மெர்தாஜாம், புனித அன்னாள் தேவாலயம்

மலேசியாவின் தமிழர்கள் அதிகம் வாழ்ந்த பல சிறு நகரங்களுக்குத் தமிழ் உச்சரிப்பில் பெயர்கள் இருப்பது வழக்கம். அதிகாரத்துவப் பெயர்களைவிட தமிழர் மத்தியில் அந்தப் பேச்சு வழக்குப் பெயர்தான் புழக்கத்தில் இருக்கும். அந்த வகையில், இந்தப் புக்கிட் மெர்தாஜாம் நகரத்தின் பழைய பெயர் சுங்கை ரம்பை என்பதாகும்.

பலரும் சுருக்கமாகப் பி.எம் (BM) என்று அழைப்பார்கள். 1990-ஆம் ஆண்டுகளில் இருந்த இந்த நகரத்தின் தோற்றம் இன்று வெகுவாக மாறிவிட்டது. இந்த நகரத்தின் தோற்றம் இன்று குறைந்து விட்டது. இப்போது அந்நிய நாட்டுத் தொழிலாளிகள் இங்கு தங்கள் ஆதிக்கத்தை மெல்ல மெல்ல விரிவுபடுத்தி வருகிறார்கள்.

புனித அன்னாள் தேவாலயம்

தொகு

புனித அன்னாள் தேவாலயம் 1888-ஆம் ஆண்டில் கட்டப்பட்டது. புக்கிட் மெர்தாஜாமில் மிக எளிதாக அடையாளம் காணக்கூடிய இடங்களில் ஒன்றாகும்.[5] இது பினாங்கு ரோமன் கத்தோலிக்க மறைமாவட்டத்தின் திருச் சபைகளில் ஒன்றாகச் செயல் படுகின்றது. ஒவ்வோர் ஆண்டும், தென்கிழக்கு ஆசியாவின் மிகப் பெரிய நோவெனா பண்டிகை இங்கு கொண்டாடப் படுகிறது. ஏறக்குறைய 100,000 பார்வையாளர்களை ஈர்க்கிறது.[14]

சுங்குரும்பை செட்டியார் கோயில்

தொகு

முதன்முதலில் பினாங்கு மாநிலத்திற்கு அழைத்து வரப்பட்ட தென்னிந்தியத் தொழிலாளர்கள் தான் பினாங்கு இந்துக் கோயில்களைக் கட்டினார்கள். செட்டியார்கள், சூலியாக்கள், சீக்கியர்கள் மற்றும் குஜராத்திகள் போன்றவர்களும் அவர்களின் சமயம் சார்ந்த ஆலயங்களை கட்டினார்கள்.[15]

சுங்குரும்பை நாட்டுக் கோட்டை செட்டியார் கோயில் என்பது செபராங் பிறை புக்கிட் மெர்தாஜாமில் உள்ள இந்துக் கோயிலாகும். இது புக்கிட் மெர்தாஜாம் நகரத்தில் ஜாலான் டத்தோ ஹோ சூய் செங்கில் அமைந்து உள்ளது.

இந்தக் கோயில் ஸ்ரீ தெண்டாயுதபானி கோயில் என்று இப்போது அழைக்கப் படுகிறது, ஆனால் பொதுவாக புக்கிட் மெர்தாஜாம் நாட்டுக் கோட்டை செட்டியார் கோயில் என்றே அழைக்கப் படுகிறது.

வெளி இணைப்புகள்

தொகு

மேற்கோள்கள்

தொகு
  1. Bukit Mertajam is growing rapidly into an urbanised area with a population of more than 212,300
  2. The ancient ruins of Lembah Bujang probably covers a larger area than popularly believed, from Bukit Choras in Kedah to Cherok Tok Kun in central Seberang Prai
  3. 3.0 3.1 3.2 3.3 3.4 3.5 3.6 Lees, Lynn Hollen (2017). Planting Empire, Cultivating Subjects. Cambridge: Cambridge University Press. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 9781107038400.
  4. User, Super. "BM 03. Tides of candlelight adoration at St. Anne's Feast". butterworthguide.com.my (in பிரிட்டிஷ் ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 25 March 2018. {{cite web}}: |last= has generic name (help)
  5. 5.0 5.1 5.2 5.3 "Rising from foothold in spice trade – Metro News | The Star Online". thestar.com.my. பார்க்கப்பட்ட நாள் 25 March 2018.
  6. Tham, Seong Chee (1990). A Study of the Evolution of the Malay Language: Social Change and Cognitive Development. Singapore: National University of Singapore. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 9789971691363.
  7. [Lembah Bujang covers a larger area]
  8. "The history of Bukit Mertajam, Part II:From rural board to town council". The history of Bukit Mertajam, Part II:From rural board to town council. Archived from the original on 17 ஜனவரி 2021. பார்க்கப்பட்ட நாள் 28 January 2021. {{cite web}}: Check date values in: |archive-date= (help)
  9. 9.0 9.1 Goh, Ban Lee (June 2010). "Butterworth remains the Ugly Duckling". Penang Monthly. Archived from the original on 2021-02-26. பார்க்கப்பட்ட நாள் 2021-01-28.
  10. "Bukit Mertajam hub of the north – Business News | The Star Online". thestar.com.my. பார்க்கப்பட்ட நாள் 28 January 2021.
  11. Joshua Woo (September 2016). "The Mainland Awakens" (in en-US). Penang Monthly இம் மூலத்தில் இருந்து 2021-02-28 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20210228181834/https://penangmonthly.com/article.aspx?pageid=1325&name=the_mainland_awakens. 
  12. Abd. Rahman, Abdul Hadi (2000). "Coastal Sedimentation and Recent Coastline Changes Along the Seberang Perai Coast, Pulau Pinang". Universiti Malaya. 
  13. "Executive Summary Draft District Local Plan: Central Seberang Perai 2006 – 2020". Seberang Perai Municipal Council. http://www.townplan.gov.my/download/Draft%20Local%20Plan%20for%20District%20of%20Central%20Seberang%20Perai.pdf. பார்த்த நாள்: 25 March 2018. 
  14. "More than 100,000 pilgrims celebrate the feast of St Anne at Bukit Mertajam". thesundaily.my (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 28 January 2021.
  15. [Penang Hindu Temples were first built by Indian labourers as well as prisoners brought over from South India by the British.]

மேலும் காண்க

தொகு

வெளி இணைப்புகள்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=புக்கிட்_மெர்தாஜாம்&oldid=3736753" இலிருந்து மீள்விக்கப்பட்டது